Showing posts with label எது எழுத்து. Show all posts
Showing posts with label எது எழுத்து. Show all posts

துளித்துளி மழைத்துளி! கொஞ்சம் சேத் கோடின்!

2008 இல் இந்தவலைப்பக்கத்தில் எழுக ஆரம்பித்தபோது வலையில் என்ன எழுதப்போகிறோம் என்பதைக்குறித்த ஞானம் சுத்தமாக இருந்ததில்லை. இப்போதும் கூட எனக்கு வலையெழுத்து பிடிபட்டு விட்டதா என்ன? இல்லை என்றுதான்  தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறோம், யார் வாசிப்பதற்காக எழுதுகிறோம் என்பதில் அடிக்கடி சந்தேகமாக ஒரு கேள்வி வந்து போகும். ஆனாலும் சரியான பதில் கிடைத்ததில்லை.

கொஞ்சம் இடைவெளி விட்டு இன்றைக்கு எழுத நினைத்தபோது தான் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது. தி. ஜானகி ராமன் சொன்னமாதிரி எழுத்து வாசிப்பு என்பது அவரவர் ஆத்ம திருப்திக்காக மட்டுமே! உண்மைதான் இல்லையா?!

இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ளாமல், மாற்றி யோசித்தால் நான் ஜெயமோகனுக்கோ அல்லது உண்மைத்தமிழனுக்கோ போட்டியாக இங்கே நான் எழுத வரவில்லை. அது என்னுடைய வேலையுமில்லை!  அடிப்படையில் நான் ஒரு வாசகன் மட்டுமே! நல்ல எழுத்தைக் கொண்டாடும் மனநிலையில் எழுதுவதற்கு ஆரம்பித்தது, இன்றைக்கு எல்லா விஷயங்களையும் தொட்டு எழுதுகிற அளவுக்கு 1250+ பதிவுகளைத் தாண்டி நிற்கிறது.

எனக்குப் பிடித்த பதிவர் சேத் கோடின் இங்கே சொல்கிற மாதிரி ஒவ்வொரு துளித்துளியாக, ஒரு கமிட்மென்ட்டுடன் எதையும் செய்யவேண்டும் என்பதைத்தாண்டி வேறென்ன விசேஷமாகச் சொல்ல இருக்கிறது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

இப்போது வாசிப்பில்! 

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை  புத்தகம் வெளிவந்து நீண்ட காலமாகிறது. முக்குலத்தோர் வரலாறு எனக்குப் பரிச்சயமானதுதான் என்பதால் பதிவர் குட்டி டின் என்கிற தினேஷ் ராம் இதற்கு ஒரு விரிவான விமரிசனம் எழுதியதைப் படித்த பிறகும் கூட வாசிக்கத் தோன்றியதில்லை. இப்போது தவற விட்ட நிறைய புத்தகங்களைத் தேடியெடுத்து வாசிக்க அவகாசம் கிடைத்து இருக்கிறது.   



மீண்டும் சந்திப்போம்.            
    

என்ன பாட்டுப்பாட? என்ன தாளம் போட?

சிலநாட்களாகவே ஒரு சலிப்பு. என்ன எழுதுவது? எதைப் பற்றி எழுதுவது?  என்னமோ எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டு இத்தனைநாட்களாக எழுதி வந்த மாதிரியும், இப்போது திடீரென்று ஒரு புளிய மரத்தடியிலோ தென்னை மரத்தடியிலோ ஞானோதயம் பிறந்து விட்டமாதிரி, எதற்காக இப்படி ஒரு சலிப்பு?

நாம் கேட்க விரும்புகிறவைகளை அல்ல, நாம் தெரிந்து கொள்ளவேண்டியவைகளை யாராவது நமக்குச் சொன்னால் விலைமதிப்பில்லாத ஒன்றைப் பெற்று விட்டோம் என்றே சொல்லலாம். இப்படிச் சொல்வது சேத் கோடின்This takes care, generosity and guts to achieve. என்று மேலும் சொல்கிறார். 

When you offer this gift to someone else, it might seem like it’s unappreciated. But you didn’t do it to be appreciated, you did it because you care enough to work for a deep connection, one that makes things better.

Best to devote that energy to people and causes that can run with it.  அவர் சொன்னதென்னவோ இவ்வளவு மட்டும்தான்.

நான் தான் இன்னும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டே இருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்  

நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால்....!

போராட வேண்டிய விஷயங்களுக்கு நிச்சயமாகப் போராடத் தான் வேண்டும்! தவறு இல்லை!

 சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் பேசியதைத் தொட்டு, சில பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் 11 இழையில் படித்தேன் என்று சொல்லியிருந்தேன்  இல்லையா?

போர்க்கோடி  தூக்குகிற அளவுக்குத் தவறாக என்ன சொல்லி விட்டார் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. திருமதி சீதாலட்சுமியின் இழையில் முதல் நான்கு வரிகளும், கடைசியாக ஜேகே சொன்னதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு, சொல்கிறேன் என்றும் முடித்திருந்ததையும் சொல்லி இருந்தேன். சீதம்மா எழுதிய நான்கு வரிகளுக்கு  அதிகமாக இன்னும் ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகள், இணையத்தில் தேட இன்று தான் தெனாலிடாட்காம் என்ற தளத்தில், இது பற்றி வெளியாகியிருந்த செய்தி,
கிடைத்தது. நன்றியுடன் மீள் பதிவு செய்யப் படுகிறது


பொருள், போகம்,புகழுக்கு அடிமையாகும் பெண்கள்: எழுத்தாளர் ஜெயகாந்தன்

செவ்வாய்க்கிழமை, 29, டிசம்பர் 2009 (11:29 IST)


சென்னை:

''முன்பு பெண்கள் கணவனுக்கு அடிமையாக இருந்தார்கள்  ஆனால் தற்போது சுதந்திரம்பெற்று பொருள், போகம், புகழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். சுத்திரமான அடிமையாக ஆகிவிட்ட பெண்களுக்கு விடுதலையே கிடையாது"என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சென்னையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கிய- ஆன்மிக சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் பேசிய எழுந்தாளர் ஜெயகாந்தன் மேலும் கூறியது...'' பாரதியார்  கடவுளிடம் வேண்டும்போது சுதந்திரம் வேண்டும் என்றார் அவருக்காக அல்ல இந்த தேசத்துக்காக சுதந்திரம் வேண்டும் என்றார். 

கடவுள் உண்டா இல்லையா என்பது பிரசனையில்லை. கடவுள் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் முக்கியம்.  ஆத்மா மனிதநாக பிறந்த அனைவருக்கும் உண்டு நாத்திகனுக்கும் உண்டு, நானும் நாத்திகனே.

நான் கோவிலுக்கு செல்வதில்லை, சடங்குகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனால் எதைச்செய்தாலும் விநாயகரை நினைக்காமல் தொடங்குவதில்லை.  அந்தக்காலத்தில் படித்தவர்கள்தான் அடிமைகளாக இருந்தனர்.  பெண்கள் தங்களின் கணவருக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

ஆனால் கணவர்களோ வேறு பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்தனர்.   இப்போது பெண்கள் சுதந்திரம் பெற்று கணவர்களைபோன்றே அதற்கெல்லாம் அடிமைகளாக மாறிவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையாக இல்லை. 

பெண்கள் பொருள், போகம், புகழ் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர்.  அதுவும் சுதந்திரமான அடிமைகளாக மாறுவதுதான கொடுமை, அவர்களுக்கு அதிலிருந்து விடுதலையே கிடையாது"என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். 


இதைப் படித்த பிறகும் கூட அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டார், என்ன புள்ளி விவரத்துடன் நிரூபிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. புள்ளிவிவரத்தோடு பேச முனைந்தாலே முதலில் வருவது குழப்பமும், அடிதடியும் தான்!

மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி  எழுதிய முந்தைய பகுதிகளைப் படிக்க, தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி பக்கங்களில் பார்க்கலாம்!

தமிழ் எழுத்துலகம் சாரு-- ஜெமோ மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு ஒரு புறம், திறனாய்வு செய்கிறேன், விமரிசனம் செய்கிறேன் என்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிற இடிமன்னர்கள்
ஒரு புறமுமாக, இப்படி தமிழ் எழுத்துலகமும் வாசகர்களும் பிரிந்து கிடக்கிறார்கள். நல்ல வாசகனை உருவாக்கத் தெரியாதவர்கள் எல்லாம்  தங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு,  எழுத்தாளுமை நிறைந்த படைப்பாளியை குறை கூறுவதிலேயே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் கேவலமான காலம்  இது என்று தான் சொல்ல வேண்டும்!

இவர்கள் வழியாக நல்ல எழுத்தை, அடையாளம் கண்டு கொள்ள முடியாது! வாசகன் தானே, தனது வாசிக்கும் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டு தானே தான் எது நல்ல எழுத்து என்பதைத் தீர்மானித்தாக வேண்டும்! தன சுயபுராணத்தை பொடியே சொரிந்து கொண்டிருப்பபவர்களிடமிருந்து அல்ல!

கனிமொழியோடு, ஜெயகாந்தனின் எழுத்தாளுமை என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டதற்காக ஒரு விமரிசனம்!
கனிமொழியின் அரசியல் சார்பு வேண்டுமானால், ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம், அதற்காக, இலக்கிய  ரசனையே இல்லாதவர், பாராட்டுவதற்குக் கூடத் தகுதியற்றவர் என்று எப்படி இவர்கள் ஒரு அவசர முடிவுக்கு வருகிறார்கள்?

உடல் நலம் சரியில்லாத தருணத்தில், கலைஞருடைய உதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதாடுகிறார்கள்! அங்கே ஜேகே பிரதானமான காரணம் இல்லை, கருணாநிதி மீதான வெறுப்பு மட்டுமே!

ஆக,நல்ல எழுத்தை அங்கீகரிக்கப் பழகுகிற  வாசிப்புத் தளம் இன்னமும் விரிவடைய வேண்டும் என்று தான் தோன்றுகிறது!

இலக்கியம் என்பது வெறும் வார்த்தை அலங்காரத்தில் இல்லை, முனைவர் நா.கண்ணன் தனது பதிவில் சொல்கிற மாதிரி நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறைகள் தெரியாது! நெஞ்சம் நிறைய நேசம் வைத்துப் படிக்க வருபவருக்கும் இதமாகப் பரிமாறத் தெரிந்தவனே நல்ல எழுத்தாளன்!

அவன் எழுதுவது மட்டும் தான் எழுத்து!
கூழாங்கல்லை ஒதுக்கி விட்டு மாணிக்கத்தை மட்டும் தேடுகிற தேடல் உருவானால், வெட்டிக் கூளங்கள் தானே ஒழிந்து போகும்!

இருள் விலகி ஒளி பிறக்கட்டும்!