என்ன பாட்டுப்பாட? என்ன தாளம் போட?

சிலநாட்களாகவே ஒரு சலிப்பு. என்ன எழுதுவது? எதைப் பற்றி எழுதுவது?  என்னமோ எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டு இத்தனைநாட்களாக எழுதி வந்த மாதிரியும், இப்போது திடீரென்று ஒரு புளிய மரத்தடியிலோ தென்னை மரத்தடியிலோ ஞானோதயம் பிறந்து விட்டமாதிரி, எதற்காக இப்படி ஒரு சலிப்பு?

நாம் கேட்க விரும்புகிறவைகளை அல்ல, நாம் தெரிந்து கொள்ளவேண்டியவைகளை யாராவது நமக்குச் சொன்னால் விலைமதிப்பில்லாத ஒன்றைப் பெற்று விட்டோம் என்றே சொல்லலாம். இப்படிச் சொல்வது சேத் கோடின்This takes care, generosity and guts to achieve. என்று மேலும் சொல்கிறார். 

When you offer this gift to someone else, it might seem like it’s unappreciated. But you didn’t do it to be appreciated, you did it because you care enough to work for a deep connection, one that makes things better.

Best to devote that energy to people and causes that can run with it.  அவர் சொன்னதென்னவோ இவ்வளவு மட்டும்தான்.

நான் தான் இன்னும் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டே இருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்  

2 comments:

  1. நீங்கள் யோசித்து எழுதுகிற விஷயங்கள் நாங்கள் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. அதனால் நன்றாக யோசித்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Deep Connection எப்படி எதற்காக?, பதிவில் சொல்லவந்த மொத்தவிஷயமுமே இவ்வளவுதான்! ச்சும்மா கொஞ்சம் முன்னும் பின்னும் அலங்காரமாக சிலவரிகளைச் சேர்த்திருக்கிறேன்!.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!