பானுமதியிருக்க பயமேன்? ஒருவழியாக சீனாதானா இன்று ஜாமீனில் வெளியே வருகிறார். வாய்க்கொழுப்பு பானாசீனாவுக்கு மட்டுமல்ல, மகன் கார்த்திக்கும் நிறையவே இருக்கிறது என்பதை அவருடைய ட்வீட்டர் செய்தியே சொல்கிறது.
Phew. At last after 106 days :)
கீச்சை மொழிபெயர்
முற்பகல் 10:40 · 4 டிச., 2019
கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார், அதில் எல்லாம் முடிந்தது. கடைசியில் 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே என தனது ட்வீட்டில் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்கிறது ஒரு செய்தி ஜாமீனில் வெளியே இருக்கும்போதே வாய் இத்தனை கிழிகிறது! இப்படி ஜாமீனில் வெளியே இருப்பதையே பெருமிதமாகச் சொல்லிக் கொள்வது காங்கிரஸ் காரனால் மட்டுமே முடியும்!
பிரதமர் ஒருவரைத்தவிர வேறெவருக்கும் இனிமேல் SPG பாதுகாப்பு இல்லை தேவைக்கேற்ப CRPF கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டது. ராஜ்யசபாவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பேசுகையில் கொடுத்த பன்ச் இருக்கிறதே, அபாரம்! வீடியோ 6 நிமிடம்.
நேற்று முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் பிறந்த நூறாவது ஆண்டு. இந்த 27 நிமிட வீடியோவில் மிகக் குறுகிய காலமே பிரதமராகப் பதவி வகிக்க முடிந்த பிரதமர்களைப் பற்றி சேகர் குப்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்கலாம். மாநிலக்கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால் நீடிக்க முடியாது என்பதன் பின்னணியில், காங்கிரசை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்பியிருந்தது மட்டும்தான் என்பதை காங்கிரஸ் சார்பு சேகர் குப்தா சொல்லமாட்டார்.
1989 டிசம்பரில் இருந்து 1997 மார்ச் வரை சுமார் எட்டேகால் ஆண்டு இடை வெளியில் நரசிம்மராவ் ஒருவர் மட்டுமே ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவியில் இருந்தார்.மீதமுள்ள மூன்றேகால் ஆண்டுகளில் காங்கிரஸ் வெளியே இருந்து ஆதரவு கொடுத்த ஐந்து பிரதமர்கள் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் இருந்தார்கள். எல்லாருமே அற்பாயுசுடன் பதவி இழந்தவர்கள். இப்படி ஐ கே குஜ்ரால் பற்றி இந்தப்பக்கங்களில் முன்னர் எழுதியிருந்த ஒருபதிவு வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதற்காக.
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
//பானுமதியிருக்க பயமேன்?// நீங்கள் யாரைச் சொல்லுகிறீர்கள்?
ReplyDeleteவேறு யாரைச் சொல்வேன் அம்மா!! :))))
Delete