Showing posts with label சீனாதானா. Show all posts
Showing posts with label சீனாதானா. Show all posts

சீனாதானாவுக்கு பெயில்! I K குஜ்ரால்! அப்புறம் அரசியல்!

பானுமதியிருக்க பயமேன்? ஒருவழியாக சீனாதானா இன்று ஜாமீனில் வெளியே வருகிறார். வாய்க்கொழுப்பு பானாசீனாவுக்கு மட்டுமல்ல, மகன் கார்த்திக்கும் நிறையவே இருக்கிறது என்பதை அவருடைய ட்வீட்டர் செய்தியே சொல்கிறது.

    

Phew. At last after 106 days :)
முற்பகல் 10:40 · 4 டிச., 2019
கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு ட்வீட் போட்டுள்ளார், அதில் எல்லாம் முடிந்தது. கடைசியில் 106 நாட்கள் கழித்தாவது ஜாமீன் கிடைத்ததே என தனது ட்வீட்டில் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்கிறது ஒரு செய்தி ஜாமீனில் வெளியே இருக்கும்போதே வாய் இத்தனை கிழிகிறது! இப்படி  ஜாமீனில் வெளியே இருப்பதையே பெருமிதமாகச் சொல்லிக் கொள்வது காங்கிரஸ் காரனால் மட்டுமே முடியும்!


பிரதமர் ஒருவரைத்தவிர வேறெவருக்கும் இனிமேல் SPG பாதுகாப்பு இல்லை தேவைக்கேற்ப CRPF கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டது. ராஜ்யசபாவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பேசுகையில் கொடுத்த பன்ச் இருக்கிறதே, அபாரம்! வீடியோ 6 நிமிடம்.


நேற்று முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் பிறந்த நூறாவது ஆண்டு. இந்த 27 நிமிட வீடியோவில் மிகக் குறுகிய காலமே பிரதமராகப் பதவி வகிக்க முடிந்த பிரதமர்களைப் பற்றி சேகர் குப்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்கலாம். மாநிலக்கட்சிகள் கூட்டுச் சேர்ந்தால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால் நீடிக்க முடியாது என்பதன் பின்னணியில், காங்கிரசை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்பியிருந்தது மட்டும்தான் என்பதை காங்கிரஸ் சார்பு சேகர் குப்தா சொல்லமாட்டார்.

1989 டிசம்பரில் இருந்து 1997 மார்ச் வரை சுமார் எட்டேகால் ஆண்டு இடை வெளியில் நரசிம்மராவ் ஒருவர் மட்டுமே ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவியில் இருந்தார்.மீதமுள்ள மூன்றேகால் ஆண்டுகளில் காங்கிரஸ் வெளியே இருந்து ஆதரவு கொடுத்த ஐந்து பிரதமர்கள் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் இருந்தார்கள். எல்லாருமே அற்பாயுசுடன் பதவி  இழந்தவர்கள். இப்படி  ஐ கே குஜ்ரால் பற்றி இந்தப்பக்கங்களில் முன்னர் எழுதியிருந்த ஒருபதிவு          வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதற்காக.

மீண்டும் சந்திப்போம்.
     

ரங்கராஜ் பாண்டே! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி! சீனாதானா!

தமிழக ஊடகங்களுக்கு நிரந்தரத் தீனி போடுவது சினிமா மற்றும் சினிமாக்காரர்கள் மட்டும்தான்!  அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் அடுத்தபடிதான்! இதில் ரங்கராஜ் பாண்டே மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே கொஞ்சம் தவறுதானோ?


தமிழக அரசியலே ஒரு நாலைந்து சினிமாநடிகர்களை நம்பியே இருக்கிற மாதிரி ஒரு பிம்பம் இங்கே தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருவதில் ரங்கராஜ் பாண்டே என்ன நினைக்கிறார்? வீடியோ 12 நிமிடம்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போங்கள்! மனிதர் நடப்பு அரசியலைக் குறித்துச் செய்கிற சுருக்' விமரிசனங்களை அடித்துக் கொள்ள வேறெவரும் இங்கே இல்லை!  இன்றைக்கு ராகுல் காண்டியும் பிரியங்கா வாத்ராவும்  திஹார் சிறைக்கு பானாசீனாவை சந்திக்க வந்தார்களாம்! News 18 செய்திக்கு சுவாமியின் ஒருவரிக் கமெண்ட் இது: (திஹார்வாசம் எப்படியென்று) பரிச்சயப் படுத்திக் கொள்ளவாம்! 


சீனாதானா சிறையில் பொழுதைப் போக்க என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்தது! கம்பி எண்ணுவதோடு நாளையும் எண்ணிக் கொண்டு இருக்கிறார் என்பது இப்போதுதானே தெரிகிறது!

மீண்டும் சந்திப்போம். 


இன்றைக்கென்ன விசேஷம்? அட, செய்திகளில் தான்!

நவம்பர் 19 இந்த நாளுடைய விசேஷம் என்னவென்று தெரியுமா? இப்படிக்கு கேட்டுக் கொண்டே வந்தார் அண்ணாச்சி! அண்ணாச்சி வங்கி வேலையில் இருந்த நாட்களில் எனக்கு சீனியர், விவரம் தெரிந்தவர். பதிவு எழுதவந்த ஆரம்பநாட்களில் எனக்கு ஒருவிதத்தில்  உந்துசக்தியாகக்கூட இருந்திருக்கிறார்! "இன்னைக்கு யாருக்காச்சும் பொறந்த இல்லே  இறந்த நாளா? சரியா ஞாபகம் வரலியே அண்ணாச்சி." அதான் எனக்குத் தெரியுமே என்று முந்திரிக்கொட்டை மாதிரிப் பதில் சொல்லாமல் அண்ணாச்சியைப் பேச விட்டுவிட வேண்டும்! இல்லையென்றால் என்பாடு திண்டாட்டமாகி விடும் என்பது அனுபவ பாடம்!


"இன்னைக்கு உலகக்  கழிப்பறைகள் தினம்! ஐக்கிய நாடுகள் சபை இப்படி அறிவிச்சுப் பத்தொம்பது வருஷம் ஆகிப் போச்சே! நீகூட இதைப்பத்தி ஒரு பதிவு எழுதியிருந்தியே! அதுவுமா மறந்து போச்சு?" அண்ணாச்சி கொஞ்சம் சூடான மாதிரித் தெரிந்தது. ஆமாம்! உலகக் கழிப்பறை தினம்! கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் என்னென்ன கேடுகள் வரும் என்ற விழிப்புணர்வைப் பரப்புகிற நாளாக இந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறது. லிங்கைச் சொடுக்கிப் பாருங்கள்    என்று 2011 இல் எழுதியிருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. கழிவறைகள் இல்லாத வீடுகள் ஏராளமாக இருந்த இந்த நாட்டில் சமீபகாலமாகத்தான் மத்திய அரசின் பெரும் முயற்சியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது வரவேற்கப்பட வேண்டிய செய்தி.


சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூன் சில விஷயங்களைப் புட்டுவைத்திருக்கிறது என்று கருத்தை சொன்னார் அண்ணாச்சி. எனக்கென்னவோ சதீஷ் ஆசார்யா செய்திகளின் நடப்புநிலவரத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே மூன்று கட்சிகளுமே அந்தரத்தில் தொங்குகிற மாதிரி நினைத்து வரைந்தமாதிரித்தான் தெரிகிறது. தன்னுடைய மனக்கோட்டை நிறைவேறாத கடுப்போடு சிவசேனா மட்டும்தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்படுகிறது. பிஜேபியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இன்றைய சாம்னா நாளிதழ் (சிவசேனாவின் தம்பட்டம்)  பலமுறை தோற்றபிறகும் கூட பிரித்விராஜ் சவுஹானால் உயிர்பிழைத்த மொகமது கோரி கடைசியில் ஒரு போரில் ஜெயித்தவுடன் ப்ரித்விராஜைக் கொன்ற கதையைச் சொல்லிக் காட்டியிருக்கிறது. மஹாராஷ்டிராவிலும் கோரி செய்ததுபோல் பலமுறை முயற்சித்துத் தோற்றவர்கள் இப்போது சிவசேனாவின் முதுகில் குத்த முயற்சிக்கிறார்கள் என்று கதைக்கிறது சாம்னா!   கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையாக, பிஜேபியை உதறிவிட்டு வா என்று சரத் பவார் சொன்னபடி செய்வார்களாம்! அதைவைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு இடம் கொடுத்ததை, யாரைக் கேட்டு முடிவு செய்தீர்கள் என்று கேள்வியும் கேட்பார்களாம்! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் டில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் அபூர்வானந்த்.A betrayal in the offing: Why Congress should give a second thought to allying with Shiv Sena  காங்கிரசுக்கு சிவசேனாவுடன் கூட்டு வேண்டாம் என்று எச்சரிக்கிற ஒருசெய்திக் கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்!


தேவே கவிதாவின் மதசாரபற்ற ஜனதாதளம் (JDS) கட்சியின் சின்னம் புல்கட்டு சுமக்கிற பெண் என்பதை வைத்துப் பகடி செய்ய முயற்சிக்கிறார் சதீஷ் ஆசார்யா! நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு என்ற வழக்குச் சொல் அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாது என்பது அவருக்குத்தெரியாது போலிருக்கிறது!


சீனாதானா ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது நாளை புதன்கிழமை  உச்சநீதிமன்றத்தில் விசாரணை 

மீண்டும் சந்திப்போம்.                  

இந்தக் கேள்விக்கென்ன பதில்?

ங்கே திராவிடங்கள் விதைத்து வைத்திருக்கிற ஊடகக் கலாசாரத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த ஒரு கேள்விக்கும் நேர்மையான பதில் இருக்காது. தலையைச் சுற்றி சுற்றி வந்தும் கூட மூக்கைத் தொடமாட்டார்கள். குறை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி அதையே பிடித்துக் கொண்டு தொங்குவது! இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! இவர்கள் இப்படிப் பெனாத்துவதையே  அறுபது+ வருடங்களாகக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போன நமக்கு நிர்மலா சீதாராமன் மாதிரி கொஞ்சம் விஷய ஞானத்தோடு, கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்கிற விதம் கொஞ்சம் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை தான்!

    
ந்தி டிவிதானே, அவர்கள் ஒருபக்கச் சார்பாகத்தான் எப்போதும்   இருப்பார்கள் என்று ஒதுக்கிவிடாமல், ஹரிஹரன் கேட்கிற கேள்விகளை நேரடியாகவே எதிர் கொள்கிறார், பொறுமையாக  பதில்சொல்கிறார். ஆனால் அதைப் புரிந்து கொள்வதற்கு நமக்குப் பொறுமை இருக்கிறதா? இருந்தால் இந்த 39 நிமிட வீடியோவைப் பாருங்கள்!  

'எப்ப திருப்தி அடைவீங்க? பொருளாதாரம் சிரழிஞ்சிக்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டா திருப்தி படுவீங்களா? அதுதான் உங்களுக்கு திருப்தியா?'
'இல்லைங்க மேடம்...'
Clear and categorical replies...
Happy that we have a good FM 👍  

  
திராவிடங்களுடைய இயல்பே எது பொருளோ எதைப் பேசவேண்டுமோ அவைகளை விட்டுவிட்டு அர்த்தமே இல்லாத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும்,  விஷமத் தனமான பிரசாரங்களில் ஜனங்களுடைய கவனத்தை வேறெங்கோ திசை திருப்புவதும் தான்!  

  
வேலைவெட்டி இல்லாத ஒருத்தன் பூனையைப் பிடித்து ... கதையாக  வைகோ  நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா விவகாரத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்கிற ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்! இந்தச்  செய்தி மேலோட்டமாகக் காமெடியாகத் தெரிந்தாலும், அதன் பின்னே உள்ள விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கும் திராவிடங்களுக்கும் அப்படி என்ன லட்சிய உறவு? ஊழல் சம்பாத்தியம் இங்கேயும் அங்கேயும் இருக்கிறதோ என்ற சந்தேகங்களுக்கு விடை சொல்பவர் யார்?விசிகவின் எம்பி ரவிகுமார் கூட, இந்த காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கு  ஆதரவு வண்டியில் தொற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமா என்ன? ஆதாயம் தராத எதையும் நம்மூர் அரசியல் புள்ளிகள் செய்யமாட்டார்கள் என்பது தெரியாதா?


ப.சிதம்பரம்.. பெயிலுக்கு அப்ளை செய்து அது நாளை விசாரணைக்கு வருகிறது..!
அவருடைய மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது.. “தனக்கு 74 வயதாகிவிட்டது என்றும், தனக்கு டஜன் கணக்கில் வியாதிகள் ஆட்டிப் படைக்கிறது என்றும்.. அதற்கு தான் எத்தனை வருடங்களாக மருந்து சாப்பிடுகிறார்” என்கிற கணக்கும் கொடுத்துள்ளார்..!
அந்த பணத்தை... ஓவர் டைம் போட்டு.. பிள்ளையோட கம்பெனிக்கு மாற்றும் போதும்... இரண்டு துணை நடிகைகள் பார்ஸல் என்று இந்திராணியை மடியில் வைத்துக் கொண்டு ஆர்டர் செய்த போதும்.. இந்த வியாதி கணக்கு.. வயசான கணக்கையெல்லாம் மறந்து விட்டார் போலிருக்கிறது..! 😜😜😜

சீனாதானா தனக்கு ஒன்பதுவிதமான வியாதிகள் இருப்பதாக, 74 வயதாகிவிட்டதால் திஹார் சிறை வேண்டாம், ஜாமீன் வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்ததில், 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது என்பது செய்தியின் அப்டேட்.

நீதிமன்றங்களை வைத்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சால்வை அழகருக்கே இந்த நிலைமையா என்று வைகோ ஏன் ஓடி வரவில்லை?  இந்தக் கேள்விக்கென்ன பதில்?

மீண்டும் சந்திப்போம்.      
      

அம்புட்டு நல்லவனா நீயி? சீனாதானா, டொனால்ட் ட்ரம்ப் ஸ்டண்டுகள்!

சீனாதானா தான் திஹார் சிறைக்குப் போவதைப் பற்றிக் கூடக் கவலைப் படவில்லையாம்!  நாட்டின் பொருளாதாரம் பற்றித்தான் கவலை என்று சொன்னாராம்! காங்கிரஸ் ஆதரவு The Print தளத்தில் நேற்றைக்கு குமார் கேட்கர் என்கிற காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் ரொம்பவுமே உருகி உருகி எழுதியிருக்கிறார். Chidambaram won’t get bail under Modi rule. Everyone isn’t Salman Khan It is the economy, stupid. Time Modi government listens to P. Chidambaram and Manmohan Singh என்ற தலைப்பில் When former Finance Minister P. Chidambaram was being taken to prison Thursday after a CBI court rejected his bail petition in a money laundering case, a reporter asked him, “Are you not worried (that you are) going to Tihar Jail?” The veteran economist and politician’s instant response was, “I am more worried about our economy!” என்று ஆரம்பிக்கிற உருகல் இங்கே.  நேரமிருந்தால் கொஞ்சம் முழு காமெடியையும் படித்துப் பார்க்கலாமே! 



சீனாதானா அம்புட்டு நல்லவனாய்யா நீயி என்று 2013  ஜூலையில் சதீஷ் ஆசார்யா வரைந்த கார்டூன் இப்போதும் கேட்கிற மாதிரி இருக்கிறதே!  சீனாதானாவை இன்னமும்  பொருளாதாரப் புளி என்று நம்புவதில் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்கள் கட்சி என்று வெளிப்படுவதைத் தவிர வேறென்ன?


  
எங்கப்பா யார்னு தெரியுமான்னுட்டே எத்தனை நாள்தான் ஓட்ட முடியுமாம்?


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை யாரும் அம்புட்டு நல்லவனா நீயி என்று கேட்பதில்லை. எப்போது இந்த ஏழரை பதவியை விட்டு விலகும் என்று உள்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் அத்தனையுமே சேர்ந்து  தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்! இன்றுடன்  இஸ்லாமியத் தீவீரவாதிகள் அமெரிக்காவில் தீவீரவாதத் தாக்குதல்களை நடத்தி, 18 ஆண்டுகள் நிறைகின்றன. 9/11 என்று நாளை இந்த சோகநிகழ்வின் நினைவு நாளாக அனுசரிக்கிற சமயமாகப் பார்த்து, யாராவது அந்தத் தீவீரவாதிகளையே நடுவீட்டுக்குள் அழைத்து வந்து சமாதானம் பேசுவார்களா? புத்தியுள்ள எவரும் செய்யத் துணிய மாட்டார்கள் தான்! ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அசால்ட்டாகச் செய்வார் என்றால் அமெரிக்க ஜனங்கள் பாடு எவ்வளவு பரிதாபம்  என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! அமெரிக்க அதிபர்கள் விடுமுறை நாட்களில் தங்குகிற இடம் Camp David என்றழைக்கப் படுகிறது. நேற்றைக்கு ஆப்கானிஸ்தானிய தாலிபான்களையும், Afghan  அரசையும் ரகசிய பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு,  தாலிபான்கள் தாக்குதலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்டதை அடுத்து, பேச்சுவார்த்தை செத்து விட்டது, நானேதான் அழைத்தேன் நானேதான் ரத்துசெய்தேன் என்று சர்வ சாதாரணமாக டொனால்ட் ட்ரம்ப் என்கிற ஒரே ஒரு ஆசாமியால் தான் சொல்ல முடியும். ஜனநாயகத்தில் மிகப் பெரிய சாபக்கேடே இந்த மாதிரி ஆசாமிகள் பதவிக்கு வந்து விடுவதுதான்! 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ரிபப்லிக்கன் கட்சி வேட்பாளராக ட்ரம்ப்பும் டெமாக்ரட்டுகள் வேட்பாளராக ஹிலாரி க்ளிண்டனும் என்று ஒன்றுக்கொன்று சளைக்காத மிகவும் மோசமான வேட்பாளர்கள் இறுதிக்கட்டத்துக்கு வந்த போது, ஹிலாரி க்ளிண்டனுடைய முந்தைய நாட்களின் சாதனையைக் கண்டு பயந்து, அவருக்கு இவரே தேவலை என்றுதான் டொனால்ட் ட்ரம்ப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கதையை இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்.

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதை என்று சொல்வார்கள், அதேபோல டொனால்ட் ட்ரம்ப்  என்கிற ஆசாமி சர்வதேச அளவில் இன்னும் என்னென்ன தீம்பைக் கொண்டு சேர்ப்பாரோ என்கிற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

மீண்டும் சந்திப்போம்.  
                

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! மி.பொடியில் பூச்சிக்கொல்லி?

சீனாதானாவை வெற்றிகரமாக திஹார் சிறையில் அரசு தள்ளிவிட்டதே! அதுவே மிகப்பெரிய சாதனையாகப் பேசப் படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? நம்மூர் நீதிமன்ற நடைமுறைகளில்  சின்னமீன்கள் மட்டுமே மாட்டும்; திமிங்கிலங்கள் தப்பிவிடும் என்கிற  அவல  நிலைமையை மாற்றாமல் இப்போதே சாதனை என்று தம்பட்டம் அடிப்பது உண்மையிலேயே கேலிக்குரியதுதான்! 


ந்த 21 நிமிட விவாதத்தில் காங்கிரசின் கோபண்ணா திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றைத்தான்! INX மீடியா வழக்கில்   முறை தவறி அனுமதி வழங்கியது FIPBயின் அதிகாரிகள்! அவர்களை கைது செய்யாமல், அமைச்சராக இருந்தவரைக் கைது செய்வது சரியா?  இந்த வார வெள்ளிக்கிழமைக் கேள்வியாக, கோபண்ணா சொல்வது சரிதானா என்பதற்கு உங்களால் விடை சொல்ல முடிகிறதா என்று பாருங்களேன்! சீனாதானா இன்றைக்குச் சந்திக்கும் ஒவ்வொரு வழக்கு, விசாரணை, ஊடகங்களில் கசியும் பல விதமான செய்திகளுக்குப் பின்னணியில் சால்வை அழகரின் வாய்க்கொழுப்புத்தான் முக்கியமான காரணமாக இருந்து வருகிறது என்று சொன்னால், அது சரியா? தவறா? இங்கே இன்றும் கூட,  கூட்டணி தர்மத்தில் இணைந்திருக்கும் திமுக முதற்கொண்டு, சொந்தக் கட்சி, தொகுதியில் கூட எங்கும் நீக்கமற எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பவர் சிவகங்கை சின்னப்பையன் பானாசீனா என்பது மறந்துபோய்விட்டதா என்ன?

   விடாது கருப்பு!   

  
From WhatsApp
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முக்கியமான துறையில் இருந்த மூத்த அமைச்சாின் செயல்களைக் கண்காணிப்பதற்கு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் முடிவு செய்தாா் .அந்த அமைச்சருக்கே தொியாமல் ,உளவுப் படை ஒட்டுக் கேட்புக் கருவிகளையும் , இரகசிய கேமராக்களையும் அமைத்து , கண்காணித்து வந்தாா் .இந்த சம்பவம் எப்படியோ மூத்த அமைச்சருக்குத் தொிய வர , காங்கிரஸ் கட்சிக்குள் தீப்பிழம்பாய் சண்டை வெடித்தது .
ஆனால் அப்போது மூத்த அமைச்சாின் பேச்சு சோனியாவிடம் எடுபடவில்லை .இந்த சம்பவத்தால் பயங்கரமன ளைச்சலுக்கு ஆளான அந்த மூத்த அமைச்சா் அப்போதைக்கு அமைதியாகப் போய் விட்டாா் .
ஆனால் , சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன , எத்தனை கோப்புகள் விதிமுறைகள் மீறப்பட்டன என்று ஆராயத் தொடங்கினாா் .
அப்போதே ஏராளமான ஆவணங்களைத் திரட்டி உள்ளாா் .
சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அனில் அம்பானிக்கும் , முகேஷ் அம்பானிக்கும் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையை மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளாா் .
அவா்களுடைய சொத்துக்களைப் பிாித்துக் கொடுப்பதற்கு கட்டணமாக , பொிய தொகையை மலேசியா மற்றும் சிங்கப்பூாிலுள்ள காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் மூலமாக வாங்கி உள்ளாா் .
அடுத்ததாக வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகா்வாலுக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் பண உறவு இருந்துள்ளது .வேதாந்தா குழுவின் நிா்வாக இயக்குநா் பதவியில் சிதம்பரமும் , லீகல் அட்வைஸராக சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் இருந்துள்ளனா் .
காா்த்தி சிதம்பரத்திற்கு லண்டனிலுள்ள சொத்துக்களை வாங்கிக் கொடுத்தது அனில் அகா்வால் தரப்புதான் என்பதற்கும் ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறாா் .
இது தவிர , ஸ்டொ்லைட் நிறுவனத்திற்கு அந்நியச் செலாவணி விவகாரங்களில் சிதம்பரம் உதவி செய்துள்ளாா் .கிட்டத்தட்ட ஆயிரம் கோடிகளுக்கு மேல் புரண்ட இந்த கோப்புகளை ,
மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாாிகள்தான் கையாண்டுள்ளனா்.இதில் கேரளாவைப் பூா்வீகமாகக் கொண்ட பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாாியும் ஒருவா் .ஆயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட நிதி என்பதால் , அதைப் பல்வேறு வகையில் நிறுவனங்களுக்குப் பிாித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதோடு , அரசுக்கும் பல நூறு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த கோப்பு குறித்தும் அந்த காங்கிரஸ் மூத்த தலைவா் இரகசியமாக விசாரணை செய்து தேவையான தகவல்களைச் சேகாித்து விட்டாா்.பா.ஜ.க., ஆட்சிக்கு வந்ததுமே , அந்த காங்கிரஸ் தலைவருக்கு பா.ஜ.க., தூண்டில் போட்டு , தங்கள் வசம் கொண்டு வந்து விட்டது.சிதம்பரம் மீது தீராத கோபத்தில் இருக்கும் அந்த மூத்த மாஜி தலைவா் , அவாிடம் இருந்த அத்தனை கோப்புகளையும் சி.பி.ஐ., யிடம் கொடுத்து விட்டாா் .இந்தக் கோப்புகள் சி.பி.ஐ., வசம் வந்து விட்டன . இதனைக் காட்டி சிதம்பரத்தின் நட்பு வட்டாரங்களை அப்ரூவராக மாற்றும் வேலையில் சி.பி.ஐ., தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது .
லண்டனில் உள்ள வீடுகள் , பண்ணை வீடுகள் , பிளாட்டுகள் , நிறுவனங்கள் போன்றவற்றை சிதம்பரத்திற்கு அனில் அகா்வாலுக்கு நெருக்கமான லண்டன் நபா்தான் வாங்கிக் கொடுத்துள்ளாா் அவரும் இப்போது ரா மற்றும் சி.பி.ஐ., கண்காணிப்பில் இருக்கிறாா் .
இவை தவிர , இருசக்கர வாகன முன்னணி நிறுவனத்தின் பணப் பாிவா்த்தனையிலும் சிதம்பரத்தின் தலையீடு இருந்துள்ளது .கட்டணமாக சில நூறு கோடிகளை காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு வழங்கியதாக அந்த நிறுவனம் அவா்களது ஆடிட்டிங் கணக்கில் காட்டியுள்ளது .
இந்த கோப்பை எடுத்து மாா்க் செய்து , 'இதில் இவ்வளவு கைமாறி உள்ளது . தீவிரமாக விசாாிக்கவும்' என்று நோட் போட்டு அந்த மாஜி அனுப்பியுள்ளாா் .
இப்படி பத்துக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு அதிபா்களின் பணப் பாிமாற்ற விவகாரங்களில், மறைமுகமாக காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடா்புள்ள 300 க்கும் மேற்பட்ட கோப்புகளை மாஜி அனுப்பி உள்ளாா் .இவா் அனுப்பிய கோப்பில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் , அதையும் உடனுக்குடன் விாிவாக விளக்கித் தீா்த்து வைக்கிறாராம் அந்த மாஜி .காங்கிரஸ் கட்சியில் இருவருக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முன்பு சிதம்பரம் அவரை வீழ்த்தியிருந்தாா் .
சந்தா்ப்பம் பாா்த்துக் காத்திருந்து இப்போது அவா் சிதம்பரத்தை வீழ்த்துவதற்கு சி.பி.ஐ.,க்கு உதவி செய்கிறாா் .
அதனால் இனியும் சிதம்பரம் தப்பிக்க முடியாது " என்றனா் .
மாஜி அமைச்சா் கொடுத்திருக்கும் கோப்புகள் குறித்த விவகாரம் எப்படியோ சிதம்பரம் தரப்புக்கும் கசிந்துள்ளதாம் .
அதனால் , இனி தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் சமாதானக் கொடி பறக்கவிட சிதம்பரம் தயாராகி வருகிறாராம்.சிதம்பரம் சமாதானத்தை விரும்பினாலும் , இன்றைய சூழ்நிலை அருக்குச் சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை.
இந்தச் செய்தியில் புதிதாக ஒன்றுமில்லை. யார் அந்த மாஜி என்பதை ஊகிப்பது கூடக் கடினமானதில்லை. எட்டு வருடத்துக்கு முன் எழுதிய பதிவுகளில் இந்த #இருவர் அதிகார விளையாட்டு, பற்றி எழுதிய பதிவுகள் இன்னமும் இருக்கின்றன.

முந்தைய பதிவொன்றில் அல்லது பின்னூட்டத்தில் ஒரு தகவலை தவறாகச் சொல்லிவிட்டதை, திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது! நண்பர் திருப்பூர் ஜோதிஜிக்கு குறிப்பாகச் சொல்லவேண்டும்.

Replying to and
O.P.Saini's 26 year old businessman son is a Cong MLA, CJI K.G.Balakrishnan's son-in-law is Kerala Cong MLA & after retirement Balki became head of NHRC. No wonder Cong gets favorable judgments. Your every single court victory is a miracle.
2
28
32

பாட்டியாலா சிபிஐ சிறப்புநீதிமன்ற நீதிபதி OP சைனி, இந்த செப்டெம்பர் மாதம் ஒய்வு பெறவிருப்பதாகச் சொல்லி இருந்தது தவறு! அவர்  வருகிற நவம்பரில் தான் ஒய்வு பெறுகிறாராம். நேற்றைக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் செட்டிநாட்டு ஜாமீன் வாரிசுகள் தகப்பன் மகன் இருவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்டுக் கொஞ்சம் காட்டமாக அந்த நீதிபதி சொல்லியிருந்ததைப் பார்த்தபிறகுதான் சந்தேகம் வந்து சரிபார்த்தபோது நான்கு மாதத்துக்கு முந்தைய இந்த ட்வீட்டர் உரையாடல் கண்ணில் பட்டது. 
உபயோகிப்பாளர்கள் நலன் கருதி இன்னொரு ட்வீட் 

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடை
8:19 AM · Sep 6, 2019Twitter Web App

மீண்டும் சந்திப்போம்