இந்தக் கேள்விக்கென்ன பதில்?

ங்கே திராவிடங்கள் விதைத்து வைத்திருக்கிற ஊடகக் கலாசாரத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? எந்த ஒரு கேள்விக்கும் நேர்மையான பதில் இருக்காது. தலையைச் சுற்றி சுற்றி வந்தும் கூட மூக்கைத் தொடமாட்டார்கள். குறை கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி அதையே பிடித்துக் கொண்டு தொங்குவது! இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! இவர்கள் இப்படிப் பெனாத்துவதையே  அறுபது+ வருடங்களாகக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போன நமக்கு நிர்மலா சீதாராமன் மாதிரி கொஞ்சம் விஷய ஞானத்தோடு, கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்கிற விதம் கொஞ்சம் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை தான்!

    
ந்தி டிவிதானே, அவர்கள் ஒருபக்கச் சார்பாகத்தான் எப்போதும்   இருப்பார்கள் என்று ஒதுக்கிவிடாமல், ஹரிஹரன் கேட்கிற கேள்விகளை நேரடியாகவே எதிர் கொள்கிறார், பொறுமையாக  பதில்சொல்கிறார். ஆனால் அதைப் புரிந்து கொள்வதற்கு நமக்குப் பொறுமை இருக்கிறதா? இருந்தால் இந்த 39 நிமிட வீடியோவைப் பாருங்கள்!  

'எப்ப திருப்தி அடைவீங்க? பொருளாதாரம் சிரழிஞ்சிக்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டா திருப்தி படுவீங்களா? அதுதான் உங்களுக்கு திருப்தியா?'
'இல்லைங்க மேடம்...'
Clear and categorical replies...
Happy that we have a good FM 👍  

  
திராவிடங்களுடைய இயல்பே எது பொருளோ எதைப் பேசவேண்டுமோ அவைகளை விட்டுவிட்டு அர்த்தமே இல்லாத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும்,  விஷமத் தனமான பிரசாரங்களில் ஜனங்களுடைய கவனத்தை வேறெங்கோ திசை திருப்புவதும் தான்!  

  
வேலைவெட்டி இல்லாத ஒருத்தன் பூனையைப் பிடித்து ... கதையாக  வைகோ  நீதிமன்றத்தில் ஃபரூக் அப்துல்லா விவகாரத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்கிற ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்! இந்தச்  செய்தி மேலோட்டமாகக் காமெடியாகத் தெரிந்தாலும், அதன் பின்னே உள்ள விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கும் திராவிடங்களுக்கும் அப்படி என்ன லட்சிய உறவு? ஊழல் சம்பாத்தியம் இங்கேயும் அங்கேயும் இருக்கிறதோ என்ற சந்தேகங்களுக்கு விடை சொல்பவர் யார்?விசிகவின் எம்பி ரவிகுமார் கூட, இந்த காஷ்மீர் அரசியல் வாதிகளுக்கு  ஆதரவு வண்டியில் தொற்றிக் கொண்டிருப்பது ஆச்சரியமா என்ன? ஆதாயம் தராத எதையும் நம்மூர் அரசியல் புள்ளிகள் செய்யமாட்டார்கள் என்பது தெரியாதா?


ப.சிதம்பரம்.. பெயிலுக்கு அப்ளை செய்து அது நாளை விசாரணைக்கு வருகிறது..!
அவருடைய மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது.. “தனக்கு 74 வயதாகிவிட்டது என்றும், தனக்கு டஜன் கணக்கில் வியாதிகள் ஆட்டிப் படைக்கிறது என்றும்.. அதற்கு தான் எத்தனை வருடங்களாக மருந்து சாப்பிடுகிறார்” என்கிற கணக்கும் கொடுத்துள்ளார்..!
அந்த பணத்தை... ஓவர் டைம் போட்டு.. பிள்ளையோட கம்பெனிக்கு மாற்றும் போதும்... இரண்டு துணை நடிகைகள் பார்ஸல் என்று இந்திராணியை மடியில் வைத்துக் கொண்டு ஆர்டர் செய்த போதும்.. இந்த வியாதி கணக்கு.. வயசான கணக்கையெல்லாம் மறந்து விட்டார் போலிருக்கிறது..! 😜😜😜

சீனாதானா தனக்கு ஒன்பதுவிதமான வியாதிகள் இருப்பதாக, 74 வயதாகிவிட்டதால் திஹார் சிறை வேண்டாம், ஜாமீன் வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்ததில், 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது என்பது செய்தியின் அப்டேட்.

நீதிமன்றங்களை வைத்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சால்வை அழகருக்கே இந்த நிலைமையா என்று வைகோ ஏன் ஓடி வரவில்லை?  இந்தக் கேள்விக்கென்ன பதில்?

மீண்டும் சந்திப்போம்.      
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!