மண்டேன்னா ஒண்ணு! அரசியல் அதிசயங்கள்!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த The Post திரைப்படம் யாருக்காவது இங்கே நினைவிருக்கிறதா? டாம் ஹாங்க்ஸ், மெரில் ஸ்ட்ரீப், நடிப்பில் வந்த இந்தத் திரைப்படம் 45 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் தலைக் குனிவுடன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்த தருணங்களை, Watergate Scandal என்று அறியப்படும் அதிகார துஷ்பிரயோகங்களை அமெரிக்க ஊடகங்கள் அம்பலப் படுத்திய கதை அது. அதன் முன்னணியில் இருந்தது The Washington Post நாளிதழ். அந்த நாளிதழ் எப்படி ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது என்பது மிக அழுத்தமாகச் சொல்லப்பட்ட நிஜக்கதை. 



ப்போது அந்தக் கதை எதற்கு என்று கேட்கிறீர்களா? அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் ஊடகங்களுக்கும் ஆரம்பநாட்களிலிருந்தே அவ்வளவாக ஒத்து வராது! மனிதர் தனது ட்வீட்டர் செய்திகள் வழியாகவே வெகுஜன தொடர்புகளை வெற்றிகரமாக நடத்தி, அமெரிக்க அதிபராகவும் ஆகிவிட்டார் என்று வெளியே சொல்லப்பட்டாலும் திரைக்குப் பின்னால் ஏகப்பட்ட உள்ளடி வேலைகள், குறிப்பாக Cambridge Analytica என்ற பிரிட்டிஷ் நிறுவனம் செய்தவை எல்லாம் இப்போது The Great Hack என்ற பெயரில் Netflix Doumentary ஒன்று சமீபத்தில் ஜனங்களுடைய கவனத்துக்கு சமீபத்தில் கொண்டு வந்திருக்கிற விஷயத்தை  சில நாட்களுக்கு முன்பு இந்தப்பக்கங்களிலேயே  பார்த்திருக்கிறோம் இல்லையா?

லகமகா அதிசயம் என்று இப்போது நடந்திருப்பது டொனால்ட் ட்ரம்ப் அதே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பாராட்டுப் பத்திரம், ட்வீட்டரிலேயே வாசித்திருப்பதுதான்! கூடவே NOT Fake News என்றும் சொல்லியிருப்பது போனஸ் அதிசயம் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்களேன்!
      


Can’t believe the
wrote a positive front page story, “Unity Issue Has Parties Pointing To Trump. GOP Goes All In, While Democrats Clash Over Ideology & Tactics. Mr. President, We Are With You The Entire Way. REPUBLICANS Have....Coalesced Around Trump.”.....

12:11 AM · Sep 16, 2019
எட்டு நிமிட இடைவெளியில் இன்னொரு ட்வீட் 


....Then, on top of it all, Kathleen Parker, of all people, wrote “In Case You Were Wondering, Trump Won The Debate.” True, but what is going on at the
? NOT Fake News!
12:19 AM · Sep 16, 2019   

து இப்போது என்றால் கொஞ்சகாலத்துக்கு முன்னால் வரை இதே ட்ரம்ப் வாஷிங்டன் போஸ்ட் என்றாலே எரிந்து விழுந்ததும் அதன் நிருபர்கள் பிலிப் ரக்கர், ஆஷ்லி பார்க்கர் இருவரையும் வெள்ளைமாளிகைக்குள்ளேயே விடக்கூடாது, “two nasty lightweight reporters” என்றதும் பொய்யா? தீர்க்கதரிசி வடிவேலு அன்றைக்கே அது வேறவாய் இது நாறவாய் என்று காமெடியாக சொல்லிவைத்துப் போயிருக்கிறார்! 


A special gesture by
, signifying the special friendship between India and USA! Delighted that President
will join the community programme in Houston on the 22nd. Looking forward to joining the Indian origin community in welcoming him at the programme.
9:42 AM · Sep 16, 2019

மெரிக்க ஹூஸ்டனில் வருகிற 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்கா வாழ் இந்தியர்களைச் சந்திக்கிற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்து கொள்வதாக இந்தச் செய்தியில் பார்க்க முடிகிறது.அதனால் என்ன? அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பரில் வருகிறது, அமெரிக்க இந்தியர்களின் வாக்குகளுக்காகத் தான் ட்ரம்ப் வருகிறார் என்பது கூட நமக்குப் புரியாதா என்ன? அதற்காக பர்கா தத் மாதிரிப் புலம்பவும் வேண்டியது இல்லை!

வூதி ஆராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைமீது டிரோகன் தாக்குதல் தொடுக்கப்பட்டதில், தாக்கியது ஈரானிலிருந்தா ஈராக்கிலிருந்தா என்ற பஞ்சாயத்து ஓடுவதாக இந்த வீடியோவில்  சொல்கிறார்கள்.



ரானையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதற்கு அங்கே நிறையக் கேள்விகளும் எழுந்திருக்கிறது. நம்மூர் திராவிடங்கள் மாதிரி  இருந்திருந்தால், சவூதி எண்ணெய் வயலே தன்னைக் கொளுத்திக்கொண்டது என்று பஞ்சாயத்தை ஒரே அடியாக முடித்திருப்பார்களோ?


திராவிடங்கள் என்றதும் தான்  கொஞ்சம் உள்ளூர் சேனல்கள் ஞாபகமும் வந்தது. காவேரி நியூஸ் சேனலில் மதன் ரவிச்சந்திரன் தலையைக் காணோம். பதிலாக கார்த்திக் மாயக்குமார் என்பவர் நேற்றைக்கு காஷ்மீரைப் பற்றிப் பேசிய வீடியோ கிடைத்தது.33 நிமிடம். பார்க்கலாம்! 

மீண்டும் சந்திப்போம்.     
                    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!