சண்டேன்னா மூணு! அரசியல்! கர்மா தியரி! Re Learning!

இன்றைய செய்திகளை இணையத்தில் வாசித்துக் கொண்டு இருந்த போது இந்த TOI செய்திக்கு வந்திருந்த வாசகர் கமென்ட்டிலேயே டாப் என்று எடுத்துப்  போட்டிருந்த வரிகள் இன்றைய அரசியல் நிலவரத்தை, வாக்காளர் மனநிலையை, காங்கிரசின் முடிவு காலத்தை சிம்பிளாக எடுத்துச் சொல்கிற மாதிரி இருந்ததைப் பார்த்தேன்! அதுவே இன்றைய பதிவின் opening ஆகவும்! "Simple thing is that time for Congress is up and all its past bad karmas are catching up. Everyone will pay...and it will be a hefty price for torturig Hindus." யாரோ ஒரு ஹிந்து அபிமானி அல்லது RSSஅபிமானி வெறுப்பில் உமிழ்ந்து விட்டுப் போன வார்த்தைகள் என்று ஒதுக்கிவிட்டுப் போய்விட முடியாதபடி, காங்கிரஸ் கடைப்பிடித்து வந்த pseudo secularism, மைனாரிடிகள் நலனைப் பாதுகாப்பது என்பது பெரும்பான்மை சமூகத்தை அடியோடு புறக்கணிப்பது அல்லது ஏறி மிதிப்பது என்றாகிப்போனதில் இயல்பாகவே எழுகிற அதிருப்தியின் வெளிப்பாடு! தேர்தல்கள் வருகிறது என்றால் இன்றைய காங்கிரஸ் பயந்து, பதுங்கி ஓடுகிற பரிதாபம் ஒன்றே காங்கிரஸ் தலைமையை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தின் யோக்கியதை இன்னதென்று வெளிக்காட்டிவிடுகிறதே!    
     


இங்கே தமிழக காங்கிரஸ்காரர்களுடைய standard dialogue ஆகத் தங்களுடைய பேச்சை ஆரம்பிக்கும்போது காங்கிரஸ் கட்சி என்று சொல்வதற்குப் பதிலாக, காங்கிரஸ் பேரியக்கம் என்று சொல்வார்கள்! ஆனால் காங்கிரஸ் பெரிய அளவிலோ அல்லது ஒரு இயக்கமாகவோ நேரு காலத்திலிருந்தே வளர்க்கப் படவில்லை என்பதும், தலைமை தாங்க நேரு வாரிசுகளைத் தவிர, கட்சியில் இருந்து வேறு எவரையும் தேர்ந்தெடுக்க முடியாத சவலைப்பிள்ளைகளாக அன்னை இந்திராவாலும்  அன்னை சோனியாவாலும் ஆக்கப்பட்ட ஒரு கூட்டமாகவே சுருங்கி கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?  மூன்று மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்தவேண்டியிருப்பதில் நேற்றைக்கு ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு வருகிற அக்டொபர் 21 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தேர்தலை அறிவிக்க வருகிற ஜனவரி வரை அவகாசமிருக்கிறது. கூடவே காலியாக இருக்கும் 64 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்களும்!

 
ஒரு காலத்தில் மேற்கே கத்தோலிக்கப் பாதிரிமார்கள் ரகசியமாகக் கூடி விவாதிப்பதுதான் conclave என்று இருந்தது காலப்போக்கில் வடக்கத்திய ஊடகங்கள் ஒவ்வொரு வருடமும் ஏதோவொரு theme இல் ஒரு conclave நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அதிகாரத்தில் உள்ளவர்கள், செல்வாக்கு மிகுந்த தொழிலதிபர்கள் என்று ஒரு கதம்பமான பங்கேற்பாளர்களை வைத்து ஓரிருநாள் நடத்துவது ஒருவிதமான வணிக உத்தியாக ஆகிவிட்டது. இவைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றாலும் சுத்தமாகத் தவிர்த்து விடுவதும் இல்லை.  ஆனால் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ரிஷாத் பிரேம்ஜி இனி வரும் காலத்தில் வேலைவாய்ப்புக்கள் குறித்து ராகுல் கன்வலுடன் உரையாடுவதைப் பார்த்தபோது இந்த மாதிரி conclave ஊரான் காசில் மஞ்சக்குளிப்பதுதான் என்றாலும் கொஞ்சம் உபயோகமான தகவல்களும் கிடைப்பதை மறுக்க முடியாது. இணைப்பில் வீடியோவாகப்பார்க்கலாம் 32 நிமிடங்கள்.

Over the next 5 years, 9% of India's 600 million workforce will hold jobs that do not exist yet, Rahul Kanwal cited a Nasscom report. So how is Premji thinking about bringing up a young child in a world like this? "I think the biggest skill is learnability and continuous learning, that is the most important non-technical skill you can develop," says Premji.

He says that people often fixated on one skill and he would rather teach his child on how to be always open to new skills."Those who don't have learnability get fixated on ideas and then get left behind," he adds.  

தொடர்ந்து கற்றுக்கொள்வதும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதும் தான் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஆன வழி என்பதை வலியுறுத்துகிறார் ரிஷாத். Relearning, Re skilling இல்லாமல் போனால் பின்தங்கிவிட வேண்டியதுதான் என்கிறார். வேலைவாய்ப்பு என்ற ஒரு விஷயத்துக்காக மட்டுமே அல்லாமல், அரசியல் கட்சிகளுக்கும் இந்த விஷயத்தைப் பொருத்திப் பார்த்தால் காங்கிரசுக்கு இந்திராவின் வாரிசுகளே முடிவுரை எழுதிவிட்ட மாதிரித்தான் கள நிலவரம் புலப்படுத்துகிறது. 

கர்மா துரத்துகிறது என்று சொல்வதிலும் தவறே இல்லை! விதைத்ததைத்தானே அறுவடை செய்தாக வேண்டும்!

யோசித்துப் பாருங்கள். மீண்டும் சந்திப்போம்.               

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!