பதிவு #1016 சண்டேன்னா மூணு! அரசியல்! பலவிதம்!

சீட்டுக்கிழிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிலே இரண்டுவிதம் உண்டு! முழுப்பலன்களுடன் கௌரவமாக சீட்டுக் கிழிப்பதற்கு  compulsory retirement என்றும் benefits  எதுவுமில்லாமல் கொஞ்சம் குரூரமாக சீட்டுக் கிழிப்பதற்கு termination என்றும் சொல்வார்கள்! வீடியோ 9 நிமிடம். 


அதுபோல இங்கே அரசியலிலும் சீட்டுக்கிழிப்பதில் கொஞ்சம் மரியாதையுடன் செய்வதில் எங்கேயோ ஆளுநர் பதவி கொடுத்து அனுப்புவதும் ஒன்று இங்கே காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலிருந்தே நடப்பதுதான்! தனக்கும் அப்படி நடக்கும் என்று தமிழிசையே எதிர்பார்த்திருக்க மாட்டார்! 


ரஜனி விரும்புகிறாரோ இல்லையோ, தமிழக பிஜேபிக்கு அவர் வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிற ஒரே குரல்  ஆடிட்டர் குருமூர்த்தியுடையது! ரஜனியைப் பற்றியும், இந்த விஷயத்தில் குருமூர்த்தியையும்  நான் பெரிதாக நினைத்ததில்லை. ஆனால் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரியே ஆடிட்டர் குருமூர்த்தியும் இந்திய அரசியலுக்கு மிகவும் அவசியமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபேருமே எதிர்ப்புக்கு அஞ்சாமல் தனி ஒருவன் ஆகவே நின்று காங்கிரசுக்குச் சவால் விடுவது போல இங்கே வலிமையான கட்சிகள் கூடச் செய்ததில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வீடியோ 46 நிமிடம். இந்த நேர்காணலின் கடைசியில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் எங்கள்blog பதிவொன்றில் பொங்கி இருந்ததற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். 


டாக்டர் மன்மோஹன் சிங்! பிரிட்டனின்  Oxford  பல்கலையில் பொருளாதாரம் படித்து டாக்டரேட் வாங்கியவர்தான்! ஆனால் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து சொன்னபடி தலையாட்டிக் கொண்டு  டம்மிப்பீசாக இருந்ததில் பொருளாதாரம் மறந்து விட்டதா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. இங்கே பேசியது முழுக்க முழுக்க காங்கிரசின் ஸ்க்ரிப்ட்.  

  
இந்த 6 நிமிட வீடியோவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்! பொருளாதாரம் பற்றிப்பேசுவதற்கான முழுத்தகுதியும் விஷயஞானமும் நிறையவே உள்ளவர் என்பதால் பரிந்துரை செய்கிறேன். இந்த இரு வீடியோக்களிலும் அரசுக்கு எதிரான கருத்தைத்தான் சொல்கிறார்கள். எது சரி என்பதை நாமாகத்தான் நன்கறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய விஷயம் இது. 


பொருளாதார மந்தநிலை, வங்கிகள் இணைப்பு, மத்திய அரசு சரியாகத்தான் கையாள்கிறதா இப்படியான தலைப்புக்களில் அனேகமாக எல்லாச் சேனல் விவாதங்களையும் நேற்றிலிருந்து கேட்டுக்கொண்டே வருகிறேன். இங்கே காங்கிரஸ் ஆதரவு The Print தளத்தில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விட வேண்டாமா? வீடியோ 20 நிமிடம். 

மீண்டும் சந்திப்போம்
        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!