Showing posts with label சுப்ரமணியன் சுவாமி. Show all posts
Showing posts with label சுப்ரமணியன் சுவாமி. Show all posts

#அரசியல்களம் பொறுப்பில்லாமல் உளறித்திரிவதற்கா அமைச்சர் பதவி?

இந்திய அரசியல்வாதிகளுக்கென்று தனித்தவொரு அடையாளம் உண்டு! எவ்வளவுக்கு எவ்வளவு கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல் உளறித்திரிகிறார்களோ அந்த அளவுக்கு அமைச்சராகவோ  மம்தா பானெர்ஜி மாதிரி மாநில முதல்வராகவோ கூட ஆகிவிடமுடியும்! சட்டசபைத் தேர்தலில் முன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தபிறகு மம்தா பானெர்ஜிக்கு மமதை தலைக்கேறி  ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தீர்த்துக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி - அமித் ஷா இருவரையும் எதிர்த்து வெல்லக் கூடிய ஒரே பெண்மணி  #BengaliPrimeMinister என்று இப்போதே துதிபாட ஆரம்பித்துவிட்டதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

"மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்வதைப் போல, மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும்"  "எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களையும், அனைத்து அதிகாரிகளையும் நான்.ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போரை நாம் ஒன்றாக நின்று சந்திப்போம்" இதெல்லாம் மம்தா பானெர்ஜியின் வீராவேசங்கள்! தனக்கு சௌகரியப் படாத போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை அலட்டிக்கொள்ளாதவர் இப்போது ஒன்றிணைவோம் வா என்று அழைக்கிறார். இதேபோல கேரள முதல்வர் பினரயி விஜயனும் கூட எதிர்க்கட்சி மாநில முதல்வர்களுக்கு ஒன்று சேர அழைத்துக் கடிதம் ஈழுதியிருக்கிறார். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவு மாநில அரசின் பொறுப்பானால் நிதிச்சுமை கூடுமே என்பது அவருடைய கவலை Kerala Chief Minister Pinarayi Vijayan, on Monday May 31, wrote to his counterparts in non-BJP states and asked them to put up a ‘united effort’ to ask the Union Government to procure COVID-19 vaccines needed by the states and distribute them free of cost. The letter has been sent to the Chief Ministers of eleven states — Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Odisha, West Bengal, Rajasthan, Chhattisgarh, Jharkhand, Delhi, Punjab and Maharashtra என்கிறது இந்தச் செய்தி. கேரள முதல்வருக்கு மம்தா பானெர்ஜிக்கு வந்த ஒற்றுமைக்கான தேவை மாதிரி வேறு ஒன்றில் கவலை லட்சத்தீவுகள்! கேரளாவுக்கு சம்பந்தமில்லாத அந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த டிசம்பரில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரஃபுல் படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். 


அங்கே என்னதான் பிரச்சினையாம்?


இந்த 42 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் மிக விரிவாகவே விளக்கியிருக்கிறார். 
நேரம் ஒதுக்கி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக இதைப் பரிந்துரை செய்கிறேன். கேரளாவுக்காவது கடத்தல், போதை மருந்து, மலையாள முஸ்லிம்கள் என்று பலவித சம்பந்தங்கள் உண்டு. 


தமிழகத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத லட்சத்தீவுகள் நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வர் இசுடாலின் அரசு முறைக் கடிதம் எழுதுவானேன்? பதிவின் தலைப்பிலேயே பதிலும் இருக்கிறது! 


இரண்டு கைகளிலும் வாட்சா? அதுவும் ஸ்மார்ட் போன் கையில் இருக்கும் இந்தக்காலத்திலுமா? டபுள் வாட்ச் டக்ளஸ், இருவாச்சி என்றழைக்கப்படுபவர் யாரு எனக் கேள்வி கேட்கும் அப்பாவிகளுக்காக :::

தேசிய நிதி கூட்டத்தில் (GST Council Meeting ) இது இந்திய ஒன்றியம், உங்கள் நன்கொடை எங்களுக்கு தேவை இல்லை என வீராவேசம் பேசியதை தவிர ஒன்றும் கிழிக்கவில்லை தமிழக நிதியமைச்சர். இவரின் சீற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்தது என்றால் ஒன்றுமில்லை, சரி இவராவது உடனே தனி நாடு கேட்டாரா என்றால் இல்லை இந்தியாவோடும் இருக்கமாட்டோம் தனிநாடும் கேட்க மாட்டோம் என்பது என்ன வகை திராவிடமோ தெரியவில்லை

அன்னார் தமிழகத்தில் உற்பத்தி அதிகம் அதனால் எங்களுக்கு அதிக பணம் என கேட்க, உன் உற்பத்தி இந்தியாவில் எங்கள் மாநிலத்தில் விற்பனையாகின்றது, வேண்டுமானால் உன் உற்பத்தியினை உன் மாநிலத்திலே வைத்து கொள் என மற்ற மாநிலங்கள் சீற அத்தோடு ஓடிவந்துவிட்டார் அமைச்சர்

அரைகுறை அறிவோடும் அனுபவத்தோடும் மல்லுக்கு சென்றால் இப்படித்தான் ஆகும். மற்ற மாநிலங்களை விட இங்கு செலவுகள் அதிகம் திமுக தொடங்கி வைத்த அரசு சம்பளம் முதல் வெட்டி இலவசம் வரை செலவு மகா அதிகம், இதற்கெல்லாம் கூடுதல் நிதி என்பது எதிர்பார்க்க முடியா ஒன்று

இந்நிலையில் இந்தியாவில் மம்தா தவிர எல்லோரும் நெருக்கடி கொடுக்க நிதியமைச்சர் திராவிட வீரத்தில் சீறிகொண்டே இருந்தார் என்ன சீறல் என்றால் அதேதான் தனிநாடு கோரமாட்டார் இந்தியாவோடும் இணையமாட்டார், இந்த திரிசங்கு சொர்க்கத்தின் பெயர் திராவிடம். எல்லோரும் தியாகராஜரை சர்க்கஸ் கோமாளி போல் சீண்டிகொண்டிருக்க வானதியும் ஏதோ சொல்ல போய் அவரை டிவிட்டரில் பிளாக் செய்துவிட்டார் நிதியமைச்சர். இனி என்னாகும்?

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் பொழுது வானதி கடும் கேள்விகளை கேட்பார், அங்கு நிதியமைச்சரால் பிளாக் செய்யமுடியாது, ஆனால்  வெளிநடப்பு செய்ய முடியும்! முதன் முதலாக ஆளும் கட்சி அமைச்சர் எதிர்கட்சிக்கு பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்ய போகும் காட்சியினை அடுத்த சட்டமன்ற கூட்டம் காணப் போகின்றது என்று நக்கலாக முகநூலில் எழுதுகிறார் ஸ்டேன்லி ராஜன்  

மீண்டும் சந்திப்போம்.  

#2021பட்ஜெட் #சுப்ரமணியன்சுவாமி ஒரு பஞ்ச்சுடன் தமிழ்நாடு #ஆளுநர்உரை

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம், டில்லிக்குள் ட்ராக்டர் பேரணி அத்துமீறி வன்முறையில் இறங்கியதில், மூவர்ணக் கொடி அவமதிக்கப்பட்டதில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.பிப்ரவரி 1 (நேற்று) அன்று நாடாளு மன்றத்தை நோக்கிப் பேரணி என்று அறிவித்திருந்ததுமே பிசுபிசுத்ததில் ஜகா வாங்குகிற மாதிரியாகிப் போனதில், காங்கிரஸ், இடது சாரிகள் முதலான துண்டு துக்காணிக் கட்சிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்! அடி! நேற்றைக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததை நேரலையில் பார்த்துக் கொண்டு, ஊடகங்களில் கருத்து கந்தசாமிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டிருந்ததில் நேற்றைய பொழுது ஒருவாறாகக் கடந்தும் போய்விட்டது. உள்ளூர் சேனல்கள் என்னமாதிரிப் புலம்பிக் கொண்டிருந்தன, திமுக+ என்ன எதிர்மறையாகச் சொல்லின என்பதை இன்றுதான் கொஞ்சம் ஆற அமரப் பார்த்தேன்.

சேகர் குப்தாவின் ஒருபக்கச் சார்பு தெரிந்த விஷயம்! ஆனாலும் இங்கே லயோலாத்தனமான ஊடங்களைப் போல முழுப்பூசணிக்காயை ஒருசில சோற்றுப் பருக்கைக்குள் மறைக்கிற வேலை அவ..ரிடம் இல்லை. (லயோலா கல்லூரியில் திரிக்கிற வேலை படிக்காதவர் என்பதால் கூட இருக்கலாம்!) எதிர்க்கட்சிகளிடம் இருந்து வராத ஒரு பட்ஜெட் மதிப்பீட்டை, அவர்கள் இடத்தில் இருந்து சேகர் குப்தா இந்த 18 நிமிட வீடியோவில் சொல்வதை பார்க்கலாம்.


இது ஹிந்து ஆங்கில நாளிதழின் 6 நிமிட ஹைலைட்ஸ். பட்ஜெட்டை லாலிபாப் என்று சொன்ன இசுடாலின், ஆட்சி முடிவதற்குள் பொதுத்துறையை விற்று விடுவார்கள் என்று பொருமுவதையே பொருளாதார மேதைமையாகக் கருதும் பானாசீனா போன்றவர்களை இடது கையால் புறந்தள்ளிவிடலாம்! 


டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! பொருளாதாரம் தெரிந்த, போதித்த ஒருவர்.அவரிடம் வெறும் 6 மாதம் மாணவராய் இருந்ததாலேயே பானாசீனா பொருளாதார மேதை ஆகிவிடுவாரா என்ன?


சோனியா வகையறாவை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற்றிய சாதனை ஒன்று தான் இன்னமும் இவர் என்ன சொல்கிறார் என்று அவ்வப்போது  கொண்டிருப்பது! அதற்காக சுவாமி சொல்கிற எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமா? மேலே அவர் சொன்னது உண்மையிலேயே சரியான தீர்வுதானா? எந்தவொரு சித்தாந்தப் பின்னணியும், எந்தவொரு உறுதியான நிலைப்பாடும், தன்னிஷ்டம்போல கருத்துக்களைப் பொதுவெளியில் அள்ளியிறைப்பதுமே இவரை வெறும் Loose Cannon (நம்பமுடியாத பீரங்கி) ஆக வைத்திருக்கிறது. நரேந்திர மோடி இவரை ராஜ்யசபா எம்பி ஆக்கினதோடு  சரி, சுவாமி எதிர்பார்த்த நிதி அமைச்சர் பதவி கொடுக்கவேயில்லை! சரிதானென்று இப்போது புரிகிறதா? போதாக்குறைக்கு சுவாமிக்கு இப்போது 82 வயதாகிவிட்டது.


  
ஒரு பஞ்ச்சுடன் தமிழ்நாடு #ஆளுநர்உரை 😎😍  எங்கே வெளிநடப்பு வாடிக்கையை மறந்துவிடுவார்களோ என்கிற அக்கறையில் சொன்னதற்கு அதிர்ச்சி அடைவானேன்? !! இந்த பஞ்ச் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

மீண்டும் சந்திப்போம்.   


       

ரங்கராஜ் பாண்டே! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி! சீனாதானா!

தமிழக ஊடகங்களுக்கு நிரந்தரத் தீனி போடுவது சினிமா மற்றும் சினிமாக்காரர்கள் மட்டும்தான்!  அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் அடுத்தபடிதான்! இதில் ரங்கராஜ் பாண்டே மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதே கொஞ்சம் தவறுதானோ?


தமிழக அரசியலே ஒரு நாலைந்து சினிமாநடிகர்களை நம்பியே இருக்கிற மாதிரி ஒரு பிம்பம் இங்கே தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருவதில் ரங்கராஜ் பாண்டே என்ன நினைக்கிறார்? வீடியோ 12 நிமிடம்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போங்கள்! மனிதர் நடப்பு அரசியலைக் குறித்துச் செய்கிற சுருக்' விமரிசனங்களை அடித்துக் கொள்ள வேறெவரும் இங்கே இல்லை!  இன்றைக்கு ராகுல் காண்டியும் பிரியங்கா வாத்ராவும்  திஹார் சிறைக்கு பானாசீனாவை சந்திக்க வந்தார்களாம்! News 18 செய்திக்கு சுவாமியின் ஒருவரிக் கமெண்ட் இது: (திஹார்வாசம் எப்படியென்று) பரிச்சயப் படுத்திக் கொள்ளவாம்! 


சீனாதானா சிறையில் பொழுதைப் போக்க என்ன செய்கிறார் என்பது தெரியாமல் இருந்தது! கம்பி எண்ணுவதோடு நாளையும் எண்ணிக் கொண்டு இருக்கிறார் என்பது இப்போதுதானே தெரிகிறது!

மீண்டும் சந்திப்போம். 


பதிவு #1016 சண்டேன்னா மூணு! அரசியல்! பலவிதம்!

சீட்டுக்கிழிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதிலே இரண்டுவிதம் உண்டு! முழுப்பலன்களுடன் கௌரவமாக சீட்டுக் கிழிப்பதற்கு  compulsory retirement என்றும் benefits  எதுவுமில்லாமல் கொஞ்சம் குரூரமாக சீட்டுக் கிழிப்பதற்கு termination என்றும் சொல்வார்கள்! வீடியோ 9 நிமிடம். 


அதுபோல இங்கே அரசியலிலும் சீட்டுக்கிழிப்பதில் கொஞ்சம் மரியாதையுடன் செய்வதில் எங்கேயோ ஆளுநர் பதவி கொடுத்து அனுப்புவதும் ஒன்று இங்கே காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலிருந்தே நடப்பதுதான்! தனக்கும் அப்படி நடக்கும் என்று தமிழிசையே எதிர்பார்த்திருக்க மாட்டார்! 


ரஜனி விரும்புகிறாரோ இல்லையோ, தமிழக பிஜேபிக்கு அவர் வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிற ஒரே குரல்  ஆடிட்டர் குருமூர்த்தியுடையது! ரஜனியைப் பற்றியும், இந்த விஷயத்தில் குருமூர்த்தியையும்  நான் பெரிதாக நினைத்ததில்லை. ஆனால் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரியே ஆடிட்டர் குருமூர்த்தியும் இந்திய அரசியலுக்கு மிகவும் அவசியமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபேருமே எதிர்ப்புக்கு அஞ்சாமல் தனி ஒருவன் ஆகவே நின்று காங்கிரசுக்குச் சவால் விடுவது போல இங்கே வலிமையான கட்சிகள் கூடச் செய்ததில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! வீடியோ 46 நிமிடம். இந்த நேர்காணலின் கடைசியில் நண்பர் திண்டுக்கல் தனபாலன் எங்கள்blog பதிவொன்றில் பொங்கி இருந்ததற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார். 


டாக்டர் மன்மோஹன் சிங்! பிரிட்டனின்  Oxford  பல்கலையில் பொருளாதாரம் படித்து டாக்டரேட் வாங்கியவர்தான்! ஆனால் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து சொன்னபடி தலையாட்டிக் கொண்டு  டம்மிப்பீசாக இருந்ததில் பொருளாதாரம் மறந்து விட்டதா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. இங்கே பேசியது முழுக்க முழுக்க காங்கிரசின் ஸ்க்ரிப்ட்.  

  
இந்த 6 நிமிட வீடியோவில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்! பொருளாதாரம் பற்றிப்பேசுவதற்கான முழுத்தகுதியும் விஷயஞானமும் நிறையவே உள்ளவர் என்பதால் பரிந்துரை செய்கிறேன். இந்த இரு வீடியோக்களிலும் அரசுக்கு எதிரான கருத்தைத்தான் சொல்கிறார்கள். எது சரி என்பதை நாமாகத்தான் நன்கறிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய விஷயம் இது. 


பொருளாதார மந்தநிலை, வங்கிகள் இணைப்பு, மத்திய அரசு சரியாகத்தான் கையாள்கிறதா இப்படியான தலைப்புக்களில் அனேகமாக எல்லாச் சேனல் விவாதங்களையும் நேற்றிலிருந்து கேட்டுக்கொண்டே வருகிறேன். இங்கே காங்கிரஸ் ஆதரவு The Print தளத்தில் சேகர் குப்தா என்ன சொல்கிறார் என்பதையும் பார்த்து விட வேண்டாமா? வீடியோ 20 நிமிடம். 

மீண்டும் சந்திப்போம்
        

இட்லி வடை பொங்கல்! #34 BBC! அக்கப்போர்! அரசியல்!

ள்ளூர் ஊடகப் பொய்களைப் பார்த்துப் பார்த்து ரொம்பவுமே அலுக்கிறதா? வெளிநாட்டு ஊடகங்கள் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக உண்மை பேசுகிறவை அல்ல! ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான அரசியல், உள்நோக்கங்கள், விஷமத்தனங்கள் என்று ஒரு மாதிரிக் கலப்படமான பின்னணி உண்டு. வருகிற திங்கட்கிழமை இந்தியா தனது சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ இருப்பதை ரொம்பவும் கரிசனத்துடன் பிரிட்டனின் பிபிசி, ஏழ்மையில் வாடுகின்ற ஒரு நாடு ஆயிரக்கணக்கான கோடிகளை விண்வெளிப் பயணத்தில் விரையமாக்குகிறதே என்று விமரிசித்திருக்கிறதாம்!

 

சந்திரனுக்கு அனுப்பப்படும் சந்திராயன் 2 இல் 1471 கிலோ எடையுள்ள விக்ரம், வருகிற செப்டம்பர் மாதம் நிலாவில் இறங்குமாம்! இந்தவிஷயம்  BBC க்கு உறுத்துவானேன்? எப்படிக்  கட்டுப்படி  ஆகும் என்ற கேள்வி, கவலையெல்லாம் இவர்களுக்கு எதற்கு? இதைப்பற்றிய ஒரு சிறு விவாதம் 27 நிமிடங்கள்! தெரிந்துகொள்ள,பார்க்க வேண்டிய காணொளி.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு யாரையாவது வம்பிழுத்துக் கொண்டே இருக்கவேண்டும். பிரிட்டனுக்குப் போனாலும் அங்கேயும் CNN தொலைகாட்சி, நிருபரைக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்க வேண்டும். அடுத்தநாட்டுப் பிரதமரே ஆனாலும் முட்டாள் என்று அநாகரீகமாக ட்வீட்டரில் தித்தித்த தீர்க்க வேண்டும். பக்கத்திலுள்ள மெக்சிகோ முதல் எந்த ஒரு நாடு, விஷயத்தையும் இந்த அதிசயப்பிறவி சீண்டிப் பார்க்காமல் இருந்ததில்லை. இந்தியாவை மட்டும் விடுவாரா என்ன? America First என்கிற இவரது கோஷம் மிகவும் கேலிக் கூத்தாகிக் கொண்டு வருவது  நிகழ்கால அரசியல்.


17 நிமிட விவாதம்தான்! விஷயம் இன்னதென்று புரிந்து கொள்ளக்   கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!  


சேகர் குப்தா! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர். இப்போது The Print என்ற இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார். ஒரு ஊடகக்காரராக, காசுக்குக் கூவுவது ஒன்றை மட்டுமே பிரதானத் தொழிலாகக் கொண்டவர் என்பதை இங்கே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  கோவாவில் சமீபத்தில் நடந்த 10 காங்கிரஸ் MLAக்கள் பிஜேபிக்கு தாவியதை வைத்துக் கொண்டு இந்திய அரசியல் போகும் பாதை, பிஜேபி, காங்கிரஸ் என்று கலந்துகட்டி ஒரு அலசலாகச் சொல்கிறார். மாற்றுக்கருத்து என்ற வகையில் இவர் பேசுவதையும் காதுகொடுத்துக் கேட்கிறேன். நீங்களும் கேட்டுப்பார்த்துவிட்டு என்ன மாதிரி வேண்டுமானாலும் ஒரு முடிவுக்கு வாருங்களேன்! வீடியோ 16 நிமிடம்.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு யோசனை சொல்கிறார்:

  • After witnessing Goa and Kashmir, I feel that nation's democracy will weaken if we are left with BJP as a single party. Solution? Ask Italians & progeny to leav. Mamata can then be President of united Congi thereafter. NCP should also follow and merge.
    6:43 AM · Jul 12, 2019 · TweetDeck


    இதற்கென்ன சொல்வீர்கள்? யோசித்துச் சொல்லுங்களேன்!

    மீண்டும் சந்திப்போம்.