#அரசியல்களம் பொறுப்பில்லாமல் உளறித்திரிவதற்கா அமைச்சர் பதவி?

இந்திய அரசியல்வாதிகளுக்கென்று தனித்தவொரு அடையாளம் உண்டு! எவ்வளவுக்கு எவ்வளவு கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல் உளறித்திரிகிறார்களோ அந்த அளவுக்கு அமைச்சராகவோ  மம்தா பானெர்ஜி மாதிரி மாநில முதல்வராகவோ கூட ஆகிவிடமுடியும்! சட்டசபைத் தேர்தலில் முன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்தபிறகு மம்தா பானெர்ஜிக்கு மமதை தலைக்கேறி  ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தீர்த்துக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி - அமித் ஷா இருவரையும் எதிர்த்து வெல்லக் கூடிய ஒரே பெண்மணி  #BengaliPrimeMinister என்று இப்போதே துதிபாட ஆரம்பித்துவிட்டதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

"மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்வதைப் போல, மத்திய அரசுப் பணியிலிருக்கும் மேற்கு வங்கப் பிரிவு அதிகாரிகளை, என்னாலும் மாநிலப் பணிகளுக்கு அழைத்துக் கொள்ள முடியும்"  "எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களையும், அனைத்து அதிகாரிகளையும் நான்.ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போரை நாம் ஒன்றாக நின்று சந்திப்போம்" இதெல்லாம் மம்தா பானெர்ஜியின் வீராவேசங்கள்! தனக்கு சௌகரியப் படாத போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை அலட்டிக்கொள்ளாதவர் இப்போது ஒன்றிணைவோம் வா என்று அழைக்கிறார். இதேபோல கேரள முதல்வர் பினரயி விஜயனும் கூட எதிர்க்கட்சி மாநில முதல்வர்களுக்கு ஒன்று சேர அழைத்துக் கடிதம் ஈழுதியிருக்கிறார். கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவு மாநில அரசின் பொறுப்பானால் நிதிச்சுமை கூடுமே என்பது அவருடைய கவலை Kerala Chief Minister Pinarayi Vijayan, on Monday May 31, wrote to his counterparts in non-BJP states and asked them to put up a ‘united effort’ to ask the Union Government to procure COVID-19 vaccines needed by the states and distribute them free of cost. The letter has been sent to the Chief Ministers of eleven states — Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Odisha, West Bengal, Rajasthan, Chhattisgarh, Jharkhand, Delhi, Punjab and Maharashtra என்கிறது இந்தச் செய்தி. கேரள முதல்வருக்கு மம்தா பானெர்ஜிக்கு வந்த ஒற்றுமைக்கான தேவை மாதிரி வேறு ஒன்றில் கவலை லட்சத்தீவுகள்! கேரளாவுக்கு சம்பந்தமில்லாத அந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த டிசம்பரில் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரஃபுல் படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். 


அங்கே என்னதான் பிரச்சினையாம்?


இந்த 42 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் மிக விரிவாகவே விளக்கியிருக்கிறார். 
நேரம் ஒதுக்கி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக இதைப் பரிந்துரை செய்கிறேன். கேரளாவுக்காவது கடத்தல், போதை மருந்து, மலையாள முஸ்லிம்கள் என்று பலவித சம்பந்தங்கள் உண்டு. 


தமிழகத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத லட்சத்தீவுகள் நிர்வாகியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வர் இசுடாலின் அரசு முறைக் கடிதம் எழுதுவானேன்? பதிவின் தலைப்பிலேயே பதிலும் இருக்கிறது! 


இரண்டு கைகளிலும் வாட்சா? அதுவும் ஸ்மார்ட் போன் கையில் இருக்கும் இந்தக்காலத்திலுமா? டபுள் வாட்ச் டக்ளஸ், இருவாச்சி என்றழைக்கப்படுபவர் யாரு எனக் கேள்வி கேட்கும் அப்பாவிகளுக்காக :::

தேசிய நிதி கூட்டத்தில் (GST Council Meeting ) இது இந்திய ஒன்றியம், உங்கள் நன்கொடை எங்களுக்கு தேவை இல்லை என வீராவேசம் பேசியதை தவிர ஒன்றும் கிழிக்கவில்லை தமிழக நிதியமைச்சர். இவரின் சீற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்தது என்றால் ஒன்றுமில்லை, சரி இவராவது உடனே தனி நாடு கேட்டாரா என்றால் இல்லை இந்தியாவோடும் இருக்கமாட்டோம் தனிநாடும் கேட்க மாட்டோம் என்பது என்ன வகை திராவிடமோ தெரியவில்லை

அன்னார் தமிழகத்தில் உற்பத்தி அதிகம் அதனால் எங்களுக்கு அதிக பணம் என கேட்க, உன் உற்பத்தி இந்தியாவில் எங்கள் மாநிலத்தில் விற்பனையாகின்றது, வேண்டுமானால் உன் உற்பத்தியினை உன் மாநிலத்திலே வைத்து கொள் என மற்ற மாநிலங்கள் சீற அத்தோடு ஓடிவந்துவிட்டார் அமைச்சர்

அரைகுறை அறிவோடும் அனுபவத்தோடும் மல்லுக்கு சென்றால் இப்படித்தான் ஆகும். மற்ற மாநிலங்களை விட இங்கு செலவுகள் அதிகம் திமுக தொடங்கி வைத்த அரசு சம்பளம் முதல் வெட்டி இலவசம் வரை செலவு மகா அதிகம், இதற்கெல்லாம் கூடுதல் நிதி என்பது எதிர்பார்க்க முடியா ஒன்று

இந்நிலையில் இந்தியாவில் மம்தா தவிர எல்லோரும் நெருக்கடி கொடுக்க நிதியமைச்சர் திராவிட வீரத்தில் சீறிகொண்டே இருந்தார் என்ன சீறல் என்றால் அதேதான் தனிநாடு கோரமாட்டார் இந்தியாவோடும் இணையமாட்டார், இந்த திரிசங்கு சொர்க்கத்தின் பெயர் திராவிடம். எல்லோரும் தியாகராஜரை சர்க்கஸ் கோமாளி போல் சீண்டிகொண்டிருக்க வானதியும் ஏதோ சொல்ல போய் அவரை டிவிட்டரில் பிளாக் செய்துவிட்டார் நிதியமைச்சர். இனி என்னாகும்?

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் பொழுது வானதி கடும் கேள்விகளை கேட்பார், அங்கு நிதியமைச்சரால் பிளாக் செய்யமுடியாது, ஆனால்  வெளிநடப்பு செய்ய முடியும்! முதன் முதலாக ஆளும் கட்சி அமைச்சர் எதிர்கட்சிக்கு பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்ய போகும் காட்சியினை அடுத்த சட்டமன்ற கூட்டம் காணப் போகின்றது என்று நக்கலாக முகநூலில் எழுதுகிறார் ஸ்டேன்லி ராஜன்  

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. விரைவில் இவருக்கு கல்தா கிடைக்கும். இப்போதே ஸ்டாலினுக்குப் பின்னால் தான் முதலமைச்சராக வரணும் என்று காய் நகர்த்துவதுபோலப் படிக்கிறேன். எப்போதுமே குறைகுடம்தான் கூத்தாடும்.

    ReplyDelete
    Replies
    1. நடந்தால் நல்லதுதான்! ஆனால் தியாகராஜன் சபரீசனுக்கு உறவு. சபரீசனை இந்தக்குடும்பத்தின் மாப்பிள்ளையாக்கினதே அவர்தான் என்கிறபோது கல்தா கொடுப்பது சந்தேகம்தான்

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!