கலகக்கார பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியினருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் லிலிபெட் டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்ஸர் என்று பெயர் இடப்பட்ட குழந்தை பிறந்ததாக ஹாரி - மேகன் அறிவித்து இருக்கிறார்கள். .
லிலிபெட் என்பது ராணி எலிசபெத் II இன் செல்லப் பெயர். எலிசபெத் என்ற பெயரை உச்சரிக்க முடியாத சிறுமியாக லிலிபெட் என்று சொன்னதையே செல்லப் பெயராக ராணியின் தந்தை வைத்ததாக அதற்கும் ஒரு கதை சொல்வார்கள். டயானா ஹாரியின் அம்மா அடுத்து வருகிற இரண்டும் கொள்ளுப்பாட்டன் கொள்ளுப் பாட்டியின் குடும்பப்பெயர். பிரிட்டிஷ் ஊடகங்களில் இப்போதே டிசைன் டிசைனாகக் கதைக்க ஆரம்பித்து விட்டார்கள்.The Queen will be 'desperately unhappy' that Harry and Meghan have used her 'very private' and 'special' nickname Lilibet to name their second child after they were so 'rude' about her and the Royal Family, a royal expert claimed today என்கிறது Daily Mail பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு அரசகுடும்பத்தைப் பற்றி எரிந்த கட்சி எரியாத கட்சியாக லாவணி பாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்ததில்லை என்பதுதான் இதன் சுவாரசியம்!அரசியல்!
சந்தோஷமே உன்னுடைய ரகசியம் என்ன? இந்தக் கேள்விக்கு பதிலாக அவரவருக்குத் தோன்றுவதைச் சொல்வார்கள். ஆனால் சந்தோஷத்தைத் தருபவை என்பதே உலகளாவிய வியாபாரமாக ஆகிவிட்டது. 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சந்தையாக ஆகிவிட்டது. இந்த 10 நிமிட வீடியோவைப் பாருங்கள்!சந்தோஷம் என்பதன் அளவுகோல் என்ன? உங்களுடைய கருத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கே அரசியல் வாதிகள் நிரந்தரக் கோமாளிகளாக இருப்பதை நிறுத்திவிட்டு, பொறுப்போடு இருந்தாலே நிம்மதி, அதுவே சந்தோஷம்!எப்படி என்கிறீர்களா?
ஹிந்து ராம்... பாவம்... அடுத்த அல்லக்கை உறுப்பினர்
ReplyDeleteஅடுத்த அல்ல, ஆரம்பத்திலிருந்தே...
Deleteஅச்சு ஊடகங்கள் விளம்பர வருமானத்தையே பெரிதும் நம்பியிருப்பதாக என் ராம் திமுக நில அபகரிப்பை முன்னிலைப்படுத்திய அதிமுக விளம்பரங்களை வெளியிட்ட சமயத்தில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்ததை நினைவு படுத்துகிறேன் நெல்லைத்தமிழன் சார்!
Deleteஅல்லக்கைகள் என்று என் ராமை மட்டுமல்ல வேறுசில ஊடகங்களையும் வகைப் படுத்திவிட முடியாது ஸ்ரீராம்! துதிபாடுவது சொறிந்துவிடுவதெல்லாம் ஆதாயம் இருப்பதால் மட்டுமே! ஆதாயம் குறைந்தாலோ நிறுத்தப்பட்டாலோ வெறிநாய்கள் போலக் கடித்துக் குதறவும் தயங்கமாட்டார்கள்.
நல்லவேளை...
ReplyDeleteகபசுரமே.. குடிநீரே!..
குடிசுரமே.. கபநீரே!.. - என்றெல்லாம் லாவணி பாடவில்லை...
திமுவினர் செய்வதெல்லாம் "ஒரு கை ஓசை" மட்டும்தானே துரை செல்வராஜு சார்!
Delete