கொஞ்சம் கொசுறு செய்திகளில் #அரசியல்இன்று

ஊரடங்கில் சற்று தளர்வு கொடுக்கபடுமா? : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை என்ன தளர்வோ தெரியாது, ஆனால் நிலமை கட்டுக்குள் வராமல் செய்யப் படும் ஊரடங்கு தளர்வு என்பது பின்னால் வரபோகும் மிகபெரிய கொரொனா அலைக்கும் அதனையொட்டி வரும் ஊரடங்குக்கான திறவுகோல் என்பது பல நாடுகளில் உணரப் பட்ட உண்மை என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் அலுத்துக்கொண்ட மாதிரியே தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


மருத்துவ நிபுணர்கள் அரசியல் கட்சிகள் ஆலோசனைப் படி ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. 14 வகையான மளிகைப் பொருட்களைக் குடும்ப அட்டைகள் வாயிலாகப் பொதுமக்களுக்கு அளிக்கும் முடிவுடன் ஊரடங்கை அதே கட்டுப் பாடுகளுடன் ஜூன் 7 வரை ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை தந்தி செய்தியும் இந்து செய்தியும் கொஞ்சம் முரண்படுகிற மாதிரித் தெரிகிறதா? அவர்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அரசை நிர்வகிக்கிறவர்களே தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறுவதில் ஆலோசனை சொல்கிற அதிகாரிகளோ செய்திவெளியிடுகிற  ஊடகங்களோ கூடவே சேர்ந்து ஊசலாடாமல் இருக்க முடியுமா?   

*******

நேற்றைக்கு கோபாலபுரம் வீட்டில் மு க அழகிரி தனது தந்தை படத்துக்கு அஞ்சலி செலுத்தினார், தாயார் தயாளுவை நலம் விசாரித்தார் ஆசி பெற்றார் என்ற செய்திகள் ஒரு ஓரமாக வந்ததே தவிர அண்ணன் தம்பி இருவரும் சந்தித்துக் கொண்டதாக செய்தி எதுவும் வரவில்லை. ஆனாலும் மு க அழகிரி அசாத்தியப் பொறுமையோடு அமைதி காக்கிறார். எல்லாம் அவர் நேரம் என்பதற்குமேல் என்ன சொல்ல?

இப்படி பவனி வந்ததெல்லாம் அந்தக்காலம்! 

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இரண்டாவது வரவாக மகன் பிறந்திருப்பதை ஒட்டி சென்னைக்கு வந்திருக்கும் சமயத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்ள இன்னமும் ஒரு வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை தானே எல்லாம்.😌😢

எல்லாச் செய்திகளுமே கொசுறு என்றால் செய்திக்கான முக்கியத்துவமே இல்லாமல் போய்விடும் என்பதாவ் சில  பயனுள்ள தகவல்களுடன் கூடிய வீடியோ: 

சிலகாலமாகவே நான் தமிழக சேனல் விவாதங்களைப் பார்ப்பதில்லை. முன்கூட்டிய முடிவுகளுடன், ஒருபக்கச் சார்பாகவே நிகழ்ச்சிகளை cook up செய்கிறவர்களைக் கவனித்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. அதேநேரம் கொஞ்சம் விவஸ்தையோடு செய்திகளை அலசி அதன் மீது விமரிசனமாகச் செய்பவர்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விவாதங்கள் என்ற பெயரில் ஜனங்களை முட்டாளடிக்கிற வெட்டி அக்கப்போர்களை தவிர்ப்பது நம் மனநலத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது தான், இல்லையா?

இந்த 39 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ் ABP ஆனந்த பஜார் பத்ரிகா நிறுவனம் C Voter என்கிற கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நாடெங்கும் 543 மக்களவைத் தொகுதிகளிலும் (சில  leading questions ரகத்திலானவை, ஜனங்களிடமிருந்து என்னபதில் வர  வேண்டுமென்பதற்காக கொக்கிபோட்டுக் கேட்கப்படுபவை)மக்களுடைய அபிப்பிராயத்தில் நரேந்திர மோடி என்ன இடம் வகிக்கிறார் என்பதான கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறார்கள். ABP மோடி மீது அத்தனை  நம்பிக்கை கொண்ட ஊடகமல்ல என்பதை இங்கே  குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

ABP-C Voter கருத்துக்கணிப்பில் தெரியவந்த விவரங்கள் என்னென்ன என்பதை கோலாகல ஸ்ரீநிவாஸ் எளிதாகப் புரிந்துகொள்கிற விதத்தில் விளக்குகிறார் என்பது கூடுதல் விசேஷம். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள் என்று வேண்டுகிறேன்.    

மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!