#தமிழகஅரசியல் இடைவெளி இல்லாத நான்-ஸ்டாப் காமெடி!

அது எந்தக்கழகமாக இருந்தாலும் சரி கழக ஆட்சியில் காமெடிக்குப் பஞ்சமிருந்ததே இல்லை! அரசியல் தெரியாத ஆசாமிகள்தான் இதுபோலக்காமெடிகளைக் கொடுமை என்றும் கிறுக்குத்தனங்கள் என்றும் பேத்துவார்கள்! இன்றைய காமெடிகளைக் கொஞ்சம் போலப் பார்த்துவிடலாமா?  மொத்தமாகப் பார்த்தால் நெஞ்சு தாங்காது என்பது வேறுவிஷயம்! 


ஹரன் பிரசன்னா போட்டிருந்த விளக்கப்படம் கீழே 


அடேய் ஒரு பயலையும் நம்பாத..
இங்க காக்கா, குருவி, அணிலுன்னு உன்ன பார்க்க வச்சிட்டு அந்த பக்கம் வண்டி வண்டியா எத கடத்துறானுகளோ யார் கண்டா?
அணில பார்த்துட்டு கடல் மாட்டு வண்டிய விட்டுராதீங்கடா....

இப்படி உஷாரையா உஷாரு என்று எச்சரிக்கை செய்து இருப்பதை எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியாது!


அடுத்த வல்லுநர் குழுவுக்கு ஆலோசனை ரெடி! 


 

அட! அப்பிராணி மன்மோகன்சிங்கை நினைக்கக்கூட இங்கே  ஆளிருக்கிறதா ? எனக்கு மயக்கமே வந்துவிட்டது! 


இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் ஆளுநர் நமது வாழ்த்துக்குரியவரே! union government என்பதைத் தமிழில் ஒன்றிய அரசு என்று போட்டிருப்பது அவருக்குத்தெரியுமோ தெரியாதோ?


பானாசீனா, ரகுராம் ராஜன் செய்த வேலை! 1.30 லட்சம் கோடிரூபாய் மதிப்புக்கு எண்ணெய்க் கடன் பத்திரங்களை  2021. 2023. 2024, 2025,2026  நிதியாண்டில் திருப்பிச்செலுத்த வேண்டியிருப்பதும் பெட்ரோல் டீசல் விலையில் சுமையாக இருக்கிறது.  


கரோனா மூன்றாவது அலையின் தாக்குதலை எப்படி தடுப்பது? மற்றும் சமாளிப்பது என்பது குறித்தும், அதற்குண்டான பல ஆயத்த பணிகளை மாநில அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நேரமிது. எனவே இரண்டாவது அலைக்கான ஊரடங்கே இன்னும் முழுமையாகத் தளர்வு செய்யப்படாத நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.என்று ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. முழு அறிக்கையையும் இங்கே வாசிக்கலாம்.

என்னதான் காமெடி என்று ஆரம்பித்தாலும் சீரியசாகத்தான் பதிவை முடிக்க வேண்டியிருப்பது தமிழக அரசியல் களத்தின் ட்ராஜெடி.

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. இப்போதுதான் எனக்கும் சந்தேகம் வருது.

    அரபு தேசங்களில், தங்கள் பெருமைக்காக வெள்ளையர்களை பெரிய வேலையில் அமர்த்தி சம்பளம் கொடுப்பாங்க (ஆனால் இந்திய சார்டர்ட் அக்கவுன்டன்டுகள், வணிகவியல் ஆட்கள்தான் ஃபைனான்சில்.. அவங்கதான் ஃப்...டு பண்ண ஐடியா தருவார்கள், சக இந்தியத் தொழிலாளர்களை ஏய்ப்பார்கள்).

    அதுபோல விலை போகாத புளி, டி.ஆர் போன்றவர்களுக்காக பொருளாதாரக் குழுவா இல்லை பிரச்சனையை திசை திருப்பி ஆறப்போட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைப்பதைப் போன்றா?

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம் வருவது இயல்புதான் நெல்லைத்தமிழன் சார்! ஆனால் அவர்களுக்கே விடை சரியாகத் தெரியவில்லை என்றல்லவா படுகிறது! ஆக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு கருக்கறுவா என்கிற சொலவடைதான் ஞாபகத்துக்கு வருகிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!