முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி அடுக்க ஆரம்பித்துவிட்டார்! புரியாமல் பேசினாரா அல்லது திமுக பாரம்பரியப்படி பொய்மேல் பொய்யாக அடுக்கினாரா என்கிற குழப்பம் இந்த 43 நிமிட வீடியோ பார்க்கிற எவருக்கும் வரும்.
இந்தப் பேட்டி வேறுபல சேனல்களிலும் வந்திருக்கலாம் ரெட்பிக்ஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பக்கா மோடி எதிர்ப்பு ஆசாமிகளை நம்பிப் பிழைக்கிற சேனல் என்பது மட்டுமே அல்ல. வேறெந்த சேனலிலும் இது முழுமையாக கிடைக்கவில்லை. அமைச்சரின் ட்வீட்டரில்/ சொந்த யூட்யூப் சேனலில் தான் முழுதாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
குழலி புருஷோத்தமன் முகநூலில் நச்சென்று கேள்வி எழுப்பியிருக்கிறார்
இந்த கம்பி கட்டுற கதையெல்லாம் வேண்டாம் அமைச்சரே. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைக்கவும்.
நீங்கள் சொல்லும் சிக்கல்கள் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் இருந்தது, ஆனால் அதை சொல்லி தான் அவர்கள் அடிமை அவர்களால் முடியாததை நாங்கள் செய்கிறோம் என சொல்லி வாக்கு வாங்கி வென்று இப்போது மத்திய அரசின் மீது பழி போடும் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது.
நீட் தேர்வு நீக்க முடியாது, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க முடியாது எனில் தெரிந்தே பொய் சொல்லி உள்ளீர்கள், பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது ஏன்? கிஷோர் கே சாமியை கைது செய்யவா பொய் சொல்லி ஆட்சியை பிடித்தீர்கள்?!
ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் ஈழத்தமிழர் இயக்கத் தலைவராக வரும் சிவதாஸ் கதாபாத்திரம் கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஒன்றைப்படிக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கிறது. நம்மூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் புரட்சியாளர்களுக்கு திடீரென ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதாம்! Abhinav Surya என்பவர் முகநூலில் இப்படிப்பொங்கி இருக்கிறார்.
#ஜகமேதந்திரம் உங்க "போராளி" businessக்கு "மார்க்ஸ்" முதலீடா?
போர் நடக்கும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்று, அதிலிருந்து வரும் காசைக் கொண்டு, போரால் பாதிக்கப்பட்டவர்களை அகதிகளாக அங்கீகரிக்க "போர்" ஒன்றை நடத்துகிறார்களா? இவர்கள் தான் "இயக்கம்" ஆ? என்ன லாஜிக் இது? இது தான் "புரட்சி"யா?
ஏகாதிபத்தியம், சுரண்டல், போர்கள், அகதிகள், நெருக்கடி, இனவாதம்.. இவற்றுக்கிடையேயான இணைப்பு வரை மட்டும் "புரட்சிகர" வசனங்கள் எழுத கற்றுக்கொண்ட கார்த்திக் சுப்புராஜ், இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் "ஆயுத உற்பத்தி & விற்பனை" பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள இணைப்பைப் பற்றி கற்றுக்கொள்ள மறந்து விட்டாரா?
"ஆயுத உற்பத்தி" நிறுவனங்கள் போர்கள் நீடிப்பதன் மூலம் லாபம் அடைவதை மறந்து விட்டாரா? அப்படி என்றால் இந்த so-called "இயக்கம்" கூட இந்த ஏகாதிபத்திய அயுத விற்பனை சுழற்சியில் ஒரு இணைப்பு தானே? புரட்சியின் பாதையிலே நமக்கு ஆயுதங்கள் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை இந்த "gang"கள் "விற்பனை" செய்து தான் நாம் பெற வேண்டுமா?
கொஞ்ச நாள் முன்னாடி தான் "புலிகளின் போதை பொருள் கடத்தவில்லை" என சமூக ஊடகங்கள் அனைத்திலும் வாதிட்டு விட்டு, இன்று "புலிகள் ஆயுதம் கடத்தினார்கள்" என்று "பெருமையுடன்" காட்டும் திரைப்படத்தை பாராட்டிக் கொண்டு இருப்பது என்ன லாஜிக்? "ஆயுதம் கடத்தி விற்று அந்த காசை வைத்து இனவெறிக்கு எதிராக போராடுங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?
அதிலும் அந்தக்கடைசி வரி என்னை அப்படியே பிடித்து உலுக்கிவிட்டது. மார்க்சீயத்தையும் மறந்து சகாவு EMS எழுதிக்குவித்த தத்துவ விளக்கங்களையும் துறந்து, மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கான செயல்திட்டத்தையும் மறந்து அங்கே சோனியா காங்கிரசுக்கும் இங்கே திமுகவுக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதையே வாழ்நாள் பயனாகக்கருதிச் செயல்படுகிறவர்களுக்கு இங்கே வந்திருப்பது ரோஷமா என்பது புரியாமல் திகைத்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். 😰😖
ராகுல் காண்டிக்கு நேற்று 51வது பிறந்தநாளாம்! பதிவர் சேட்டைக்காரன் முகநூலில் இதுகுறித்து வெளியான இரு ஆங்கிலக்கட்டுரைகளைத் துவைத்தெடுத்து இருக்கிறார். சுட்டி கொடுப்பது வாசிப்பதற்காகவே என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா? TheWire தளத்தில் நளின் வர்மா எழுதியிருப்பது கொஞ்சம் வித்தியாசமாக! அதாவது காங்கிரஸ் கெட்டுக்குட்டிச் சுவரானதுக்கு ராகுலைக் குறை சொல்லக்கூடாதாம்! ஏனென்றால் காங்கிரஸ் 1980 களிலும் 1990 களிலும் சீரழியத் தொடங்கிவிட்டது. அதற்கு ராகுல் காண்டியைக் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் என்பது அவருடைய வாதம். சிலநாட்களுக்கு முன்னால் NDTV தளத்தில் அசுதோஷ் குப்தா எழுதிய கட்டுரைக்கு லிங்க் கொடுத்து ஜூன் 14 அன்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் அசுதோஷ் கொஞ்சம் கூடததயக்கமே இல்லாமல் ராகுல் காண்டி ஒன்று தலைமைப்பொறுப்பை ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் நந்திமாதிரிக் குறுக்கே நிற்காமல் வழிவிட்டு விலக வேண்டும் என்பதைத் தலைப்பிலேயே தெளிவாகச் சொல்லி ஆரம்பித்ததுதான் சரியான பார்வையாக இருக்கமுடியும் என்று எனக்குப் படுகிறது.
சமஸ் திமுக ப்ராண்ட் ஆகிவிட்டார் போல! மனுஷ்ய புத்திரன் போல இன்னும் ஒரு பேச்சாளர் / கட்டுரையாளர் ஆகிவிடுவார்! என்ன.. திமுக வில் சேர்ந்த எவரும் பெரியதாக உருப்பட்டார் என்று சொல்ல யாரும் இல்லை!
ReplyDelete//"ஆயுதம் கடத்தி விற்று அந்த காசை வைத்து இனவெறிக்கு எதிராக போராடுங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?//
என்ன இப்படியெல்லாம் கேட்கிறார்?
"மது விற்ற காசை வைத்து அரசாங்கத்தை நடத்துங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?
" இன்னொரு கட்சி வீசி எறியும் காசை வைத்து நம் கட்சியை நடத்துங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?
"எதிர் கட்சியாக இருக்கும்போது எதிர்த்ததை ஆளுங்கட்சி நட்பு கட்சியாக இருந்தால் வாலை குழைத்துக்கொண்டு, முடிந்ததால் வாலை ஆட்டிக்கொண்டு இருங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?
என்றெல்லாம் படிப்பவர்களுக்கு தோணாதா ?
சமஸ் மாதிரியானவர்கள் கழகங்களுக்குத் துதிபாடுகிற வேலைக்குத்தான் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்,என்பது ஒருபக்கம். அவர்களும் அரசியல்ரீதியாகத் தங்களை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பதுமில்லை என்பதான இன்னொருபக்கமும் இருக்கிறதே!
Deleteமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இன்றைக்கு துதிபாடிகள் கூட்டத்தில் சேர்ந்து விட்டது என்பதைத்தாண்டி வேறென்ன சொல்ல? இப்படிச் சீரழிந்து கிடப்பதை கட்சிக்குள் எவரும் கேள்விகேட்பதாக எனக்குத் தெரியவில்லை.
வெளியே மற்றவர்களுக்கு எப்படித்தோன்றும் என்பதைப்பற்றி மார்க்சிஸ்டுகள் கவலைப்படுவார்களா என்ன? !!