இட்லி வடை பொங்கல்! #84 #பிரிவினைஅரசியல் #ஊழல்அரசியல் #பரஸ்பரசொறிதல்

கடந்த வியாழக்கிழமை டில்லியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் செய்து வரும் கட்சித்தலைவர்களைச் சந்தித்துப் பேசியதில், உள்ளே நடந்த மூன்று மணிநேர விவாதத்தில் என்ன நடந்தது? ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இவர்களெல்லாம் மாநில முதல்வர்களாக இருந்தவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் காஷ்மீர் பிரச்சினை என மிகைப்படுத்தப் பட்ட  ஒன்றை ஊதிப்பெரிதாக்கியவர்கள் இவர்கள்தான்! மக்களுக்காகப் பேசாமல், சுயநலங்களுக்காக ஆட்சியும் அதிகாரமும் வேறு எவர் கைக்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்பதை வெளியே வந்து ஊடகங்களிடம் வீராவேசமாகப் பேட்டி அளித்து வெளிப்படுத்தியவர்கள்.  

வீடியோ 12 நிமிடம் 

ஃபரூக் அப்துல்லா ஊர் போய்ச்சேர்ந்ததும் பொது வாக்கெடுப்பு, நேரு முதல் நரசிம்மராவ் வரை பிரதமராக இருந்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று கிளிப்பிள்ளை மோடுக்குப் போய்விட்டார். மகன் ஒமர் அப்துல்லாவோ  “It took the BJP 70 years to fulfill its political agenda for (Article) 370. Our struggle has just started. We don’t want to fool people by telling them we will get 370 back in these talks. It will be foolish to expect 370 will be back — there has been no indication it will be restored by the current government.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி கொடுக்கிறார் என்றால் எங்களிஷ்டத்துக்கு விடாவிட்டால் பிரிவினை பேசவும், துணைபோகவும்  தயங்கமாட்டோம் என்கிற தொனி அப்பா மகன் இருவருடைய பேச்சிலும் இருக்கிறது. இங்கே தமிழகத்தில் கூட 1920 நீதிக்கட்சி அரசாண்ட கதையின் நீட்சியாக அறிவித்துக் கொண்டது, ஒன்றிய சர்ச்சை முதல் ஜெய்ஹிந்த் இடம் பெறாததற்கு பாராட்டுரை என்று J & K அரசியல் வாதிகளுடைய சாயல் நிறையவே தெரிகிறதோ?


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின் கேள்வியில் நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆளுநருக்கு இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். 


சோனியா காந்தி வகையறா ஊழலின் மொத்த உருவம் என்பதை 2004-2014 வரை ஐமுகூட்டணி மன்மோகன் சிங் அரசு நிரூபித்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று சோனியா ஆரம்பித்தற்கு  மன்மோகன் சிங் அரசு 100 கோடி நிதி கொடுத்தது. அரசுநிதி பெறுகிற நிறுவனங்கள் எதுவானாலும் சில நிபந்தனைகளும், அரசின் தணிக்கையும் (audit) உண்டு. ஆனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அரசின் நிபந்தனைகள் தணிக்கை எதற்கும் உடன்படவில்லை. அதுவும்போக வருகிறவன் போகிறவனிடமெல்லாம் நிதி நன்கொடையாக வாங்கி குவித்ததில் சீனர்களின் சார்பு நிறுவனமும் உண்டு. ஜாகிர் நாயக் மாதிரி மலேசியா ஓடிப்போன இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவுப்  பிரசாரகரும் உண்டு. ஜாகிர் நாயக் எதற்காக இந்த அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை? அதுவும் சும்மாக் கொடுத்தாராமா? 


தகவல் ஒளிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த மனீஷ் திவாரிக்கு, சிறுபான்மையினர் விவகார அமைச்சர் 2013 இல் எழுதிய சிபாரிசுக்கடிதத்தின் இரு பாராக்களும் விஷயம் இன்னதென்று பல்லிளித்துச் சொல்கிறதே! 


நம்மூரில் அப்படி கடிதம் மூலம் எதுவும் சொல்லக் கூட வேண்டியதே இல்லை! நம்புங்கள்! இது திமுக ஆட்சி!  


இது 2009 இல் நக்கீரன் இதழில் வெளியான கொங்கு ஈ
ஸ்வரன் வாழ்க்கை வரலாறு. பெருமாள் முருகன் நாவலை விட அந்தநாட்களிலேயே பரபரப்பான செய்தியாகத் தான் இருந்திருக்கும் போல! நக்கீரனே 2பக்கச் செய்தி போட்டிருக்கிறதென்றால்! படத்தைப் பெரிதாக்கிப் படித்துப் பாருங்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்சிஸ்டுகளுக்கு ரூ. 10 கோடி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ரூ. 15 கோடி நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட்ட கதை நினைவிருக்கிறதா? பரஸ்பர சொறிதல்கள், முன்களப் பணியாளர்களுக்கு  நீண்டகாலமாகவே கிடைத்து வருகிறது என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல?

மீண்டும் சந்திப்போம்.                       

2 comments:

 1. பில்லியன் கணக்கில் சொத்து சேர்க்க சோனியா என்னதான் பிசினெஸ் செய்திருப்பார்? ஒன்றும் தெரியாத ராகுலுக்கு ஏகப்பட்ட கம்பெனியில் டைரக்டல் பொசிஷன். இந்தியாவை விற்காமலா சொத்து சேர்த்திருப்பார்கள்?

  ReplyDelete
  Replies
  1. பேராசை இருந்ததே தவிர சோனியாவுக்குத் தனிப்பட்டமுறையில் அந்த அளவுக்குக் கூறு கிடையாது என்பது உலகம் அறிந்த ரகசியம் நெல்லைத்தமிழன் சார்!

   எப்படி அரசு கஜானாவிலிருந்து காசுபார்ப்பதென்பதை , கறுப்பை வெளிநாடுகளில் சேர்த்து வைப்பதென்பதை நம்மூர் செட்டியார் சொல்லிக்கொடுத்தார். சோனியாவுக்கு இணையாக தனக்கும் சொத்தைக் குவித்துக்கொண்டார். மாறன் அமைச்சராக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் குடும்பத்துக்கு மட்டுமே ஆதாயம் பார்த்துக்'கொண்டதை விரிவுபடுத்தி, சோனியாவுக்கு, கட்சித்தலைவர் குடும்பத்துக்கு அப்புறம் தனக்கும் சேர்த்துக்கொண்ட ஒருவர் உலகமகா ஊழல் பட்டியலில் இடம்பிடித்தார் என்பது சோனியாவின் கூட்டணி தர்மம் சாதித்தது.

   நேரு நாட்களில் முந்த்ரா ஊழல் என்று அடிபட்ட விவகாரம் வெறும் 66000 ரூபாய். போஃபார்ஸ் பேரத்தில் சோனியாவை சம்பந்தப்படுத்திய ஊழல் வெறும் 64 கோடி ரூபாய்தான்! மன்மோகன்சிங் என்கிற டம்மிப்பீஸை வைத்துக்கொண்டு சோனியா அண்ட் கம்பெனி வெறும் பத்தே ஆண்டுகளில் லட்சக்கணக்கான கோடிரூபாய் ஊழல்களை சர்வசாதாரணமாகச் செய்தது . ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போல இருமடங்கு அளவிலான நிலக்கரி ஊழல் பேசப்பட்டதே தவிர விசாரிக்கப்படவே இல்லை.

   மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி கோஷம் எல்லாம் மத்தியில் கூட்டுக கொள்ளை, மாநிலத்தில் ஏகபோகக் கொள்ளை என்பதாக மாறிப்போன விஷயம் இங்கே எத்தனைபேர் நினைவு வைத்திருக்கிறார்கள்?

   இந்தப்பதிவில் சொல்ல வந்த மையமான கருத்தே எப்படி ஊழலும் , பிரிவினை வாதமும் குமரிமுனையிலிருந்து காஷ்மீர் வரை பின்னிப்பிணைந்திருக்கின்றன என்பது தான்! '

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!