அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏகப்பட்ட குழப்பங்களை, குளறுபடிகளை உருவாக்கிய BigTech நிறுவனங்கள், இங்கேயும் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன என்பது கொஞ்சம் பழைய செய்தி தான்! ஆனால் இந்திய அரசு பூனைக்கு மணிகட்டுகிற வேலையை இப்போதுதான் செய்திருக்கிறது. கூகிள், முகநூல், ட்வீட்டர் முதலான சமூக ஊடகங்கள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடந்தாகவேண்டும் என்ற நிலையை மத்திய அரசு திட்டவட்டமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவந்து விட்டது.
இந்த 19 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீநிவாஸ், என்ன திருத்தங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்பதை விரிவாகச் சொல்கிறார்.இதுநாள் வரை இந்த ஊடகங்கள் தாங்கள் வெறும் intermediary மட்டும்தான் என்ற சாக்கில் தப்பித்துவந்ததை, புதிய விதிகள் மாற்றி இருப்பதில், இந்த ஊடகங்கள் தங்கள் தளத்தில் வெளியான தகவல்களுக்குப் பொறுப்பேற்றாக வேண்டும். கிரிமினல் வழக்குகளையும் எதிர் கொண்டாக வேண்டும்.Google. முகநூல் நிறு,வனங்கள் ஒப்புக் கொண்ட நிலையில் வாட்சப் ட்வீட்டர் இரண்டு மட்டும் முரண்டு பிடித்துப் பார்த்தன. ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் மத்திய அரசு திருட்டுப்பூனைகளுக்கு மணி கட்டிவிட்டது.
மே 2ஆம் தேதியே முடிவுகள் வெளியான 5 மாநில சட்ட சபைத்தேர்தல்களில் பாண்டிச்சேரியில் மட்டும் புதிய அமைச்சரவை பதவியேற்பதில் இழுபறி இருந்து வந்தது. ஒருவழியாக பிஜேபிக்கு சபாநாயகர் பதவி மற்றும் இரு அமைச்சர்கள் என்று என் ஆர் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதை அடுத்து இழுபறி முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன 140 இல் 99 இடங்களில் ஜெயித்த கேரள இடதுசாரிகளே மந்திரி சபையை முடிவுசெய்ய மூன்றுவாரங்களுக்குமேல் எடுத்துக் கொண்ட போது, என் ஆர் காங்கிரசோடு ஏற்படுத்திக் கொண்ட புதிய கூட்டணி கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டதில் என்ன குறை சொல்லமுடியும்?
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும் என்பதெல்லாம் போயே போச்சு போல! இசுடாலினே நம்ப முடியாத அளவுக்குப் பொய்சொல்வதுதான் புதிய விடியலின் அடையாளமாகி வருகிறதே, தமிழகம் தாக்குப் பிடிக்குமா?
நாளை ஊழலோ ஊழல் என்று வாழ்ந்து மறைந்தவர் பிறந்தநாளாம்! சமாதியில் தயிர்வடை வைத்துப் படையல் வைக்கிறார்களா? எ வ வேலு பஜனை நிகழ்ச்சி இருக்குமா? வேறென்ன எல்லாம் அரங்கேறும்?
நாளையதினத்தை நினைத்தாலே கொஞ்சம் திகிலாகத் தான் இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!