மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா அரசியல்! சீனத்துச்சண்டியர் முண்டா தட்டுகிறார்!
இட்லி வடை பொங்கல்! #68 கொரோனா களேபரங்கள்! மம்தா! சீனப்பூச்சாண்டி! பானாசீனா!
#FCC #FederalCommunicationsCommission #ChinaMobile #ChinaUnicomAmericas #ChinaTelecomAmericas #PacificNetworksCorp #ComNet
அமெரிக்காவின் FCC...அமெரிக்க தொலைத்தொடர்புக்கான நிர்வாக அமைப்பு. கடந்த வருடம் மே மாதம், சீன கம்யூனிச அரசுக்கு சொந்தமான China Mobile நிறுவனம் ...அமெரிக்காவில் இயங்குவதற்கு அனுமதி மறுத்தது FCC. காரணம்...அதன் மூலம், அமெரிக்காவிற்குள்... சீனா தன்னுடைய உளவு வேலையை நிகழ்த்தும் என்று கூறியது.கடந்த மாதம்...அமெரிக்க நீதித்துறை ...சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்குள் இயங்க அனுமதிப்பதை தடை செய்யும்படி சிபாரிசு செய்தது.
இந்த நிலையில்...அமெரிக்காவில் இயங்கி கொண்டிருக்கும் China Telecom Americas , China Unicom Americas, Pacific Networks Corp, இதன் துணை நிறுவனமான ComNet [USA] LLC ஆகிய சீன அரசு நிறுவனங்களை ...தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்காவிட்டால்..தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது..FCC.
சீன அரசு நிறுவனத்திற்கு எப்படி சீன தொடர்பு இல்லாமல் இருக்கும் ? பின் ஏன் இப்படியான அறிவிப்பு ? என்று அபத்தம் போல தோன்றினாலும் தகுந்த காரணம் உண்டு.
உலகமயமாக்கலுக்கு பின்...உலக வியாபார ஒப்பந்தங்களின் படி ...அனுமதி அளிக்கப்பட்ட பிற நாட்டு நிறுவனத்தை வெளியற்றவோ..தடை செய்யவோ ..தகுந்த காரணங்களை கூற வேண்டும்.
அந்த சீன அரசு நிறுவனங்களால்..தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்க இயலாது என்பதால் தான் அப்படியொரு கேள்வி.
தாமதமாகவேனும் அமெரிக்காவும், இந்தியாவும், இதர உலக நாடுகளும் விழித்துக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன.இதற்கான எதிர்வினைகள் தான்...'உள்நாட்டு குழப்பங்கள்' உட்பட வேறு வகைகளில்...வேறு வடிவங்களில் ..வெளிப்படுகிறது.
அருண் ஜெயிட்லியையே குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் மேலே போய்ச்சேர்ந்து விட்டார். பானாசீனா மீதான வழக்குகள், விசாரணையின் நிலையென்ன? யாருக்காவது தெரியுமா?
மீண்டும் சந்திப்போம்.
இந்தோ சீனி பாய் பாய்! இந்தமுறை கூவுவது சீனர்களாம்!
More than India, it was China which celebrated seventy years of Indo-China relations last week. Many newspapers carried an editorial written by the Chinese Ambassador to India on the event, but none from the Indian leadership. There were tweets from the Chinese ambassador and government on the growing relationship with mentions of telephonic contacts between the two foreign ministers.
The editorials praised the proximity between the leaders of the two countries and invariably had a paragraph on the two nations battling Covid-19 (Coronavirus) together. No formal event was organized on account of social distancing norms. The Chinese Ambassador also participated in the national Lighting of the Candle event on the weekend and tweeted, ‘we are standing together through thick and thin.’ என்றுஆரம்பிக்கும் கொல்கத்தா ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் செய்திக்கட்டுரை சீனர்களுடைய திடீர்க் கரிசனம், புகழ்ச்சிக்கான காரணங்களை மேலும் அடுக்குகிறது. அதுமட்டுமா? கடந்த மாதம் பாகிஸ்தான் சீனாவிடம் காஷ்மீர் பிரச்சினையை ஐநா பாதுகாப்புசபையில் எழுப்புமாறு விடுத்த கோரிக்கைக்கு சீனா செவி சாய்க்கவில்லை. அதுவும் தவிர கடந்த சிலமாதங்களாகவே சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைகிற வாடிக்கைகூட இல்லையாம்!
கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவுடன் எல்லாவகையிலும் ஒத்துழைக்கத்தயார் என்றும் உருகி இருக்கிறார்கள்! சீன அரசின் கண்ணசைப்பில் அலிபாபா பவுண்டேஷன் முகக்கவசம். டெஸ்ட் கிட் முதலான நிவாரணப் பொருட்களை டில்லிக்கு அனுப்பியிருக்கிறது. Tik Tok நிறுவனம் நூறு கோடி ரூபாய்களை நிவாரணநிதிக்கு அளித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா உண்மையை மறைத்த்து, பெரும்பாலான நாடுகளில் கடும் அதிருப்தியை, கோபத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சமளித்தாக வேண்டிய நிலையில் இருப்பதே, சீனாவின் இந்த திடீர்க்கரிசனம், புகழ்ச்சி, உதவி என்பதற்கான காரணம்.
பிரிட்டன், அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் வைரஸ் தொற்றுக்காக சீனாவிடமிருந்து இழப்பீடு பெறவேண்டும் என்ற குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் பலவும் #ChinaMustPay என்ற கருத்து வலுவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் விவகாரம் சீனாவை அவ்வளவு எளிதாகத்தப்பிக்க விட்டுவிடாது என்றே நிலவரம் முற்றிவருவதாக செய்திகள் சொல்கின்றன.
ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் செய்திக்கட்டுரையை விரிவாக எழுதியிருப்பவர் ஹர்ஷாகாகர். இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்.மேலேயே சுட்டி இருக்கிறது. வாசித்துப் பாருங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
சண்டேன்னா மூணு!நவராத்திரி! சீனா, பெருமிதமா, பூச்சாண்டியா?
ஊழலும், திறமையின்மையும், குழப்பமும் மலிந்து கிடக்கும் இந்த நேரத்தில் இந்த தேசம் தன்னுடைய இழந்த பெருமையை மீட்டெடுக்கவேண்டும், இருளில் இருந்து சோர்வுற்று சோம்பிக் கிடப்பதில் இருந்து வலிமையான பாரதமாக, விஜயபாரதமாக உருவாகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவேண்டிய தருணம் இது! இந்த தேசத்தின் இளைஞர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ துர்கையை வழிபடச் சொல்லும் இந்தப் பிரார்த்தனை, இரண்டாவதாக.
முழுவதுமாகப் படிக்க இங்கே
என்னதான் சீனா நெருப்பைக் கக்கும் டிராகனாகப் பூச்சாண்டி காட்டினாலும், மற்றைய முன்னேறிய பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒரு அசுர வேகத்தோடு சீனா முன்னேறிக் கொண்டிருந்தாலும், இது நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் இல்லை என்றே சீன விவகாரங்களைக் கூர்ந்து கவனித்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சீனா, இந்த மாதிரிக் கருத்துக் கணிப்புக்களை சட்டை செய்வதில்லை என்றாலும், ஆசியப் பகுதியில் தன்னுடைய ஆளுமையை மிக வலுவாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தவில்லை. இந்தப்பகுதியில் தன்னுடைய அரசியல், ராணுவ, பொருளாதார வலிமைக்குக் கட்டுப்பட்டதாகவே இதரநாடுகள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவருகிறது.
சீன அரசோ, நோபல் பரிசுக் குழுவின் இந்த முயற்சி, சீனாவை எரிச்சலூட்டுவதற்கான ஒன்று என்று, அலட்சியப்படுத்தி, அதே நேரம், இந்த செய்தி பரவாமல் தணிக்கையைக் கடுமையாக்கி வைத்திருக்கிறது.
இங்கே கொஞ்சம் இது தொடர்பான செய்தி , அதிலேயே வீடியோ இரண்டையும் பார்க்கலாம்.
இங்கே இந்தியாவில், நம்முடைய அரசியல்வாதிகள் என்னடா என்றால் ஊழல் செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டிகள் உட்பட புதுப் புது உத்திகளைக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஜனங்களும் எங்கேயோ மழை பெய்கிறது என்று மானாட மயிலாட, அல்லது விஜய் டீவீயில் நீயா நானாவை இலவசத் தொலைகாட்சியில் காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
அசமந்தத்தனத்தில் இருந்தும் திறமையில்லாத காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் இந்த தேசத்தைக் காப்பாற்றுவாய்!
தேடியுனைச் சரணடைந்தேன்! தேசமுத்து மாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்!
என்று பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழி?!
மன்னிக்க வேண்டுகிறேன்! மந்திரிப் பதவி தொடரவும் வேண்டுகிறேன்!
காங்கிரஸ் கட்சிக்கு என்று மட்டும் அல்ல, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இப்போது சோதனைக்கு மேல் சோதனையான நேரம் போல இருக்கிறது! அமைச்சரவையில் எப்படியாவது மேடம் கண்பார்வைக் கடாட்சத்தில் வந்து விட்டால் மட்டும் போதுமா? என்னத்தையாவது பேசிவிட வேண்டியது, அது பெரிய சர்ச்சைக்கு உள்ளான உடனேயே, நான் அப்படிச் சொல்லவே இல்லையே, பத்திரிகைகள் தான் திரித்துச் சொல்லிவிட்டன என்கிற மாதிரி மழுப்ப வேண்டியது. மேடம் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, சமாதானம், சால்ஜாப்புச் சொல்லி, மன்னிப்புக் கேட்டு, மேடமும் போனால் போகிறது என்று மந்திரிப் பதவியில் தொடர அனுமதிக்க வேண்டியது என்று காங்கிரஸ் அமைச்சர்கள் ஒருவர் மாற்றி மாற்றிப் பாடாய்ப் படுத்திக் கொண்டு இருந்தால், டம்மிப் பீஸ் மன்மோகன் சிங் தான் என்ன செய்வார், மேடமும் தான் என்ன செய்வார்?
சசி தரூர் விவகாரத்தில் கிளம்பிய சுனந்தா புஷ்கர் வாடையே இன்னமும் போகவில்லை! சரத் பவார் விவகாரம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சீனாவில் போய் இந்த அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சர் மிகவும் சந்தேகக் கண்ணோடு சீன நிறுவனங்களை நடத்துவது சரியில்லை என்று நேரடியாகவே உள்துறை அமைச்சகத்தைக் கையைக் காட்டிப் பேசியது பிரச்சினையாகிவிட்டது! இருக்காதா பின்னே?!
அவர் சீண்டியது மேடத்தின் முழு நம்பிக்கைக்குரியவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சால்வை அழகர் பானா சீனாவை அல்லவா!
பானா சீனாவும் கண்ணைக் கசக்கிக் கொண்டு, கடுமையான அழுகையில் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டாராம்! ஏற்கெனெவே, மாவோயிஸ்டுகள் பிரச்சினையில் பானா சீனா எடுத்த நிலைபாட்டை விமரிசித்து உனவுபதப்படுத்துதல் துறை ராஜாங்க அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் பேசியதை, மே(லி)டம் ரசிக்கவில்லை. உள்ளே நடப்பதை வெளியே தெரியும்படி பேச வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டார். காபினெட் செக்ரட்டரி ஜிகே பிள்ளை வாயை மூடிக் கொண்டிருக்கும்படி பொதுவாக எல்லா அமைச்சர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்ததும் பயனில்லாமல் போனது போல!அமைச்சரவையிலேயே மாவோயிஸ்டுகள் பிரச்சினையைக் கையாளும் விதத்தைக் குறித்து பானா சீனா ஒரு மாதிரியாகவும், இன்னொரு தரப்பு வேறு மாதிரியாகவும் கருத்துக்களைக் கொண்டிருப்பது பூனைக் குட்டி வெளியே வந்த மாதிரி, வெளியே தெரிய வந்தது, வந்தது தான்!
பானா சீனாவுக்கும் நேரம் இப்போது சரியில்லை போலத் தான் தெரிகிறது! மேற்கு வங்க முதலமைச்சரிடம் மாநில அரசு, முதலமைச்சர் தான் தீவீரவாதத்துக்கேல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அல்லது பொறுப்பானவர் யார் என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்று சவடாலாகப் பேசிய சில நாட்களிலேயே மாவோயிஸ்டுகள் எழுபத்தாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரைக் கொடூரமாகக் காவு வாங்கியதும், தனக்குப் பொறுப்பு இருப்பதாகவும், பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாகவும் ஒரு நாடகம் நடந்தது. இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா!?
ஏற்றுக் கொள்ளப் பட்டுவிடும் என்பது தெரிந்தால் அரசியல் வாதிகள் எவரும் ராஜினாமா கொடுத்திருக்கவே மாட்டார்கள் என்பது ஜனங்களுக்கும் நன்றாகவே தெரிந்திருந்ததால், இந்தக் கூத்தை ஒரு சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நம்பர் பத்து, ஜன்பாத் சாலையில் இருந்து உத்தரவு, பானா சீனாவிடம் மன்னிப்புக் கேட்டு, சொன்னதை மறுத்து அறிக்கையும் விடவேண்டுமென்று வந்ததும், வேறு வழியில்லாமல் அப்படியே செய்து விட்டு திக்விஜய் சிங் மேடம் தரிசனத்துக்காகப் பத்து நாட்கள், ஜன்பாத் சாலை வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்தார். ஊருக்கெல்லாம் அன்னையாகச் சித்தரிக்கப் படுகிறவர், காத்துக் கிடந்தவரைச் சந்திக்க மறுத்த விவரமும் செய்திகளில் கசிந்து, காங்கிரஸ் கட்சி, அரசு, அமைச்சர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள், முதிர்ச்சியோ தெளிவோ இல்லாத அரசியல் நிலைபாடுகள் வெளியே ஈயென்று இளித்துக் கொண்டு அம்பலமாகித்தான் நின்றது.
இப்போது ஜெயராம் ரமேஷ்! சுற்றுச் சூழல் விவகாரத்தில், கோபென்ஹேகனில் நடந்த மாநாட்டில் இந்திய அரசின் நிலையைத் திறம்படக் கையாண்டவர் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், இங்கே உள்ளூர் அரசியல் சூழ்நிலைகள், திறமைகளை மதிப்பதில்லை. சீனா உள்ளிட்ட இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை பற்றி ஜெயராம் ரமேஷ் ஏற்கெனெவே சீனச் சார்பு நிலை எடுத்துப் பேசியவர்தான் என்று இப்போது செய்திகள் வருகின்றன.
ஒரு அரசின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத் தான் வெளியுறவுக் கொள்கையுமே இருக்க முடியும்! அப்படித்தான், மற்றெல்லா நாடுகளிலும் இருந்து வருகின்றன. எந்த ஒரு தேசமும், தன்னுடைய அரசியல், பொருளாதாரம் , பாதுகாப்பு குறித்தான சில அடிப்படை விஷயங்களை முடிவு செய்து கொண்ட பிறகே அதற்குத் தகுந்த மாதிரிக் குறுகியகால மற்றும் நீண்டகாலக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன.
ஆனால், இங்கே இந்தியாவில் நிலைமையே தலைகீழாகத் தான் ஆரம்பித்தது. ஒரு முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை இருந்ததா என்றால் இல்லை! உள்நாட்டுக் கொள்கை என்று ஒன்றாவது இருந்ததா என்றால் அதுவும் இல்லை. நேரு காலத்தில் இருந்து தொடங்கிய இந்தக் குழப்பங்களின் உச்சத்தைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நேரு, தலைமைப் பண்பு, சாஸ்திரி என்று குறியீட்டுச் சொற்களில் தேடினீர்களானால், இது குறித்த பழைய பதிவுகள் சிலவற்றைப் பார்க்க முடியும்.
ஏற்கெனெவே சீனா அறுபது, சீனப் பெருமிதம் என்ற தலைப்புக்களிலும், பொருளாதாரம் குறித்து எழுதிய சில பதிவுகளிலும் கூட சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, சீனப் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச வேண்டியது இல்லை, சீனர்களுடைய அணுகுமுறை எப்படி இந்த முப்பது ஆண்டுகளில் மாறியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஜெயராம் ரமேஷ் சொல்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. சீனப் பூச்சாண்டி என்று பழைய கதையையே நினைத்துப் பயந்து கொண்டு ஒதுங்கி இருக்க முடியாது. அதே நேரம், முன்னெச்சரிக்கையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டிய பொறுப்பு அரசு, அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. ஓவர் ரியாக்ஷன் என்பது, எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அரசியல்வாதிகளாகவே, ஊழல் செய்வதில் மட்டும் திறமை காட்டுகிறவர்கள், கொஞ்சம் ஒரு படி முன்னேறி ராஜதந்திரிகளாகவும், நாட்டு நலன்களைப் பாதுகாக்கிறவர்களாகவும் வர மாட்டேன் என்று நேரு காலத்தில் இருந்தே தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்வின் பரிதாபமான பாடம்!
ஜெயராம் ரமேஷின் ராஜ்ய சபை உறுப்பினர் பதவி வருகிற ஜூன் மாதத்தோடு முடிகிறது. மந்திரியாகத் தொடரவும், ராஜ்ய சபா உறுப்பினராக மறுபடி தேர்ந்தெடுக்கப் படவும் காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம்.
போதாக்குறைக்கு, புதுப்பிக்கப்படும் அல்லது மாற்று எரிசக்தித் துறையில் இந்தியா சீனாவை விட இந்த இருபத்தைந்து முப்பதாண்டுகளில் மிகவும் பின் தங்கிவிட்டதாகவும், உள்நாட்டில் மிகக் கடுமையான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் பேசியது இன்னொரு சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. அது என்னவாகப் போகிறதோ தெரியவில்லை!
ஆனால், ஜெயராம் ரமேஷ் பேசியது ஒரு சிறிய சறுக்கல் என்றால், மஞ்சள் துண்டு மாதிரி ஏதேதோ கலரில் சால்வை அணிந்து கொண்டு சால்வை அழகராய்க் காட்சி தரும் சால்வை அழகர் பானாசீனாவைத் திருப்திப் படுத்துவதற்காக, அவரைப் பகிரங்கமாகக் கண்டித்திருப்பதும், நடந்து முடிந்த, நடக்கப் போகிற கூத்துக்களும் இந்திய சீன உறவுகளில் ஒரு முள்ளாய் உறுத்தப் போகிறது என்பது மட்டும் உறுதி. அங்கே தான், எப்படிப் பட்ட கோமாளிகளிடம் இந்த தேசம் சிக்கிக் கொண்டு பாடாய்ப் படுகிறது என்பதை நினைக்கும்போதே பகீரென்கிறது.
முகமது பின் துக்ளக் படத்தில் வருகிற மாதிரி, பிரதம மந்திரி ஒருவரிடத்திலேயே அத்தனை இலாகாக்களும், மற்ற எல்லா அமைச்சர்களும் இலாகாப் பொறுப்பில்லாத அமைச்சர்கள் என்று இருந்தால் தான் மன்மோகன் சிங் நிம்மதியாகத் தூங்கவே முடியும் போல இருக்கிறது!
இல்லை, மதுரைக்கார அமைச்சர் மாதிரிப் பாராளுமன்றத்துப் பக்கமே வராமல், வந்தாலும் தனக்கு வேண்டியதை மட்டும் பார்த்துக் கொண்டு வேறு எதையும் பேசாமல் இருந்து விட்டால் கூட நிம்மதி தான்!
ஐயோ பாவம் காங்கிரஸ், ஐயோ பாவம் மன்மோகன் சிங் என்று அனுதாபப் பட முடியவில்லை!
பரிதாபத்துக்குரியவர்கள் நாம் தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?
சின்னச் சின்னச் செய்திகள்! கொஞ்சம் சிந்திக்க, நிறையவே கொதிக்க...!
இந்திய அரசின், அரசியல்வாதிகளின் சுறுசுறுப்பு, செயல்பாடு யோக்கியதை எப்படியிருக்கிறது என்பதை எத்தனை தரம் அவர்களே நிரூபித்தாலுமே கூட ஜனங்களுக்கு இதைக் குறித்த விழிப்புணர்வோ, என்ன செய்வது என்பதில் தெளிவோ இல்லை என்பதைப் பார்க்கும்போது, இந்த நாட்டின் குடிமகனாக வருத்தப் படத்தான் முடிகிறது! நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று ஒதுங்கிப் போய்க் கொண்டே இருந்தோமானால், சுதந்திரம் என்பதும், வளர்ச்சி, பாதுகாப்பு என்பதும் வெறும் கனவாக மட்டும் தான் இருக்க முடியும்!
முதல் செய்தி! அதிலும் இரண்டு விதமாக!
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அரசுமுறைப் பயணமாகச் சீனாவிற்குச் சென்றிருக்கிறார்!
இந்த விஜயத்தால் இந்திய சீன உறவுகளில் எந்த ஒரு அபிவிருத்தியும் எதிர்பார்ப்பதற்கில்லை என்று செய்திகள் சொல்கின்றன.இந்திய அமைச்சர் விஜயம் செய்கிற தருனமாகப் பார்த்து, சீனா பாகிஸ்தானுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறது.
இந்தியாவைக் குறித்து என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாள்வது என்பதிலேயே சீனாவுக்கு இரண்டுவிதமான கருத்துக்கள் இருக்கின்றன.சீன ராணுவம், கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான மக்கள் தினசரி உள்ளிட்ட ஒரு தரப்பு, இந்தியாவை நம்ப முடியாத ஒரு தரப்பாக, சீனாவுக்கு அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் நாடாகப் பார்க்கிறது. இந்தியாவிடம் கடுமையான அணுகுமுறையைக் கையாளவேண்டும் என்று அந்தத் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஜப்பான் தொடங்கி இந்தியா வரை பிறை வடிவிலான ஒருகூட்டணியை அமெரிக்கா சீனாவுக்கு எதிராகத் தூண்டி வருகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கும் செய்திக் கட்டுரையைப் படிக்க!
சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம் என்ற தலைப்பில் ஏற்கெனெவே இந்திய சீன உறவில் உள்ள சில சிக்கல்களை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! சீனா பூச்சாண்டி காட்டுகிறதென்றால், அதற்கு இந்திய அரசின் கையாலாகாத் தனம் தான் முழுக் காரணம் என்பதையும் பார்த்திருக்கிறோம்! நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி, இந்திய அரசின் மெத்தனத்தை இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
இதையும் பிரம்மசெலானி தன்னுடைய ட்விட்டர் பகிர்வில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்! அமெரிக்க-கனடிய கணினி வல்லுனர்கள், சீனா எப்படியெல்லாம் கணினி வழியாக உளவுபார்ப்பது, ஹேக் செய்வது என்பதில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகப் பின்தொடர்ந்து ஆராய்ந்து அதன் ஒரு பகுதி ஐம்பத்தெட்டுப் பக்க அறிக்கையாக ஸ்க்ரிப்ட் டாட் காமில் தரவிறக்கம் செய்து கொள்கிற மாதிரி வெளியிட்டிருக்கிறார்கள்.அதில், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மிக ரகசியமான கோப்புக்களில் எப்படிப் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
The Toronto spy hunters not only learned what kinds of material had been stolen, but were able to see some of the documents, including classified assessments about security in several Indian states, and confidential embassy documents about India’s relationships in West Africa, Russia and the Middle East. The intruders breached the systems of independent analysts, taking reports on several Indian missile systems. They also obtained a year’s worth of the Dalai Lama’s personal e-mail messages.
இரண்டாவது செய்தி!
பிரச்சினை தானாகவே செத்துப் போகிற வரை அல்லது காணாமல் போகும் வரை அலட்சியம் காட்டு!ஜவ்வாக இழுத்துக் கொண்டே போ!
இது தான் இந்திய அரசின், இந்திய அரசியல்வாதிகளின் கைகண்ட செயல்பாடாக இருந்து வருகிறது! பிரச்சினை முற்றிப் போனால்,அதிக பட்சம் ஒரு கமிஷன் வைப்பார்கள், அதன் பதவிக் காலத்தை ஜவ்வாக நீட்டிக் கொண்டே போவார்கள்! கமிஷன் அறிக்கை வெளிவருகிற நேரம், பெரும்பாலும் அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்கள் காணாமலேயே போயிருப்பார்கள்! தீர்ந்தது பிரச்சினை!
சென்ற மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளிவந்த செய்தி! இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள், பார்த்திருந்தாலும் என்ன செய்திருப்பார்கள் என்பது கொஞ்சம் ஆயாசப் படுத்துகிற கேள்விதான்!
முப்பது வருடங்களாக இந்தியாவுக்கும், வங்காள தேசத்துக்கும் ஒரு உரிமைப் பிரச்சினை! வங்காள விரிகுடாவில் நியூ மூர் தீவு என்ற ஒரு சிறு தீவு, வெறும் மூன்றரைக்கு மூன்று என்ற அளவில் ஒன்பதரை சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தான்! இது எங்களுக்குத் தான் சொந்தம் என்று இந்தியாவுக்கும் வங்காள தேசத்திற்கும் முப்பது வருடங்களாக தாவா தீராமலேயே இருந்தது!
செய்தியை இங்கே பார்க்கலாம்.
மூன்றாவதாக ஒரு செய்தி!
பிரம்ம செலானி எழுதிய இந்தச் செய்திக் கட்டுரை, பாராளுமன்ற ஜனநாயகம் என்பது எப்படி வெறும் கேலிக் கூத்தாகவே இருக்கிறது என்பதைச் சொல்கிறது. அமெரிக்கா தான் நினைத்ததை சாதித்துக் கொண்டு விட்டது.
இன்னொரு செய்தி! சமீபத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மசோதா நிறைவேற்றப் பட்டதாக அறிவிக்கப் பட்ட தருணத்தில் மாநிலங்கள் அவையில் வெறும் ஐம்பத்துநான்கு உறுப்பினர்களே இருந்தார்களாம்! மக்களுடைய பிரச்சினையை பேசுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்த்தால், அதிலும் ஆயாசம் தான் வருகிறது. எந்த ஒரு மசோதாவைப் பற்றியும், சுயமாகச் சிந்தித்து, மக்களுடைய கருத்தை எடுத்துச் சொல்லி, விவாதித்து, ஒரு தெளிவான முடிவை எடுக்கும் அமைப்புத் தான் பாராளுமன்றம், சட்ட சபை என்பதைப் பற்றிய ஞானமோ கவலையோ எத்தனை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பாராளுமன்ற, சட்ட மன்ற நடவடிக்கைகளைக் கொஞ்ச நேரம் தொலைக் காட்சியில் பார்த்தாலே புரிந்து விடுகிற விஷயம் தான்! மக்களுடைய பிரதிநிதியாகச் சரியாகச் செயல்படவில்லை என்றால், அந்த நபரைத் திருப்பியழைக்கும் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது!
அப்படி ஒன்று பல நாடுகளில் இருப்பதையாவது அறிந்திருப்போமா?
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?!
நேற்று வரை எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, தானே முன்வந்து சீன அரசுடன் ஒத்துழைக்கிற விதத்தில், சீன அரசுக்குப் பிடிக்காத அலெர்ஜியான செய்திகளை முந்தித் தணிக்கை செய்து கொண்டிருந்தார்கள்.
எதிர்பார்த்த அளவுக்கு, அங்கே மார்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அதனால் கூகுளுக்கு இப்போது திடீரென்று மனித உரிமைகள் மீது அக்கறை பிறந்து விட்டதாம்! இனிமேல் சீனச் செய்திகளைத் தணிக்கை செய்து கொள்ளப் போவது இல்லையாம், கூகிள் ஹாங்காங் தளத்துக்குத் திருப்பி விடப் போகிறதாம்!
நிக்சன் காலத்தில் இருந்து சீனாவுடன் இழையோ இழை என்று இழைந்து கொண்டிருந்த இத்தனை நாளில் உதார் விடுவதையாவது ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருக்கலாம்! பாவம் அமெரிக்கா! உலகத்துக்கே தாங்கள் தான் கற்றுக் கொடுக்கப் பிறந்தவர்கள் என்ற நினைப்பு, மமதை, சீன உதார் முன்னால் எடுபடாமல் பிசுபிசுத்துப் போய்ப் பரிதாபமாக, அடுத்தது என்ன என்பது கூடத் தெரியாமல் முழியோ முழி என்று முழித்துக் கொண்டிருக்கிற பரிதாபம் ஆரம்பித்து விட்டது.
மேற்கத்திய ஊடகங்கள், சீன இணையப் பயனர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன. கூகிள் வெளியேறி விட்டால், சீன இணையத்தில் இருட்டு மட்டுமே மிஞ்சும் என்ற அளவுக்கு, நாற்பது கோடி இணையப் பயனாளர்கள் கொண்ட சீனச் சந்தைக்கும், உலகத்திலேயே மிகப் பெரிய தேடு பொறியாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் கூகுளுக்கும் ஒரு மல்லுக்கட்டு யுத்தம் ஆரம்பித்திருக்கும் இந்தத் தருணத்தில், ஊடகங்கள் கிளி ஜோசியம், குறி சொல்வது போல கூகுளுக்குச் சாதகமாகவே பேசிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் நிலைமையை கவனித்துக் கொண்டிருப்பவர்கள் கூகிள், தனது மமதையை அளவுக்கு அதிகமாகவே இந்த விஷயத்தில் வெளிக் காட்டிவிட்டு, தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏற்கெனெவே ஜனவரி மாதம் இந்தப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?
கூகிள் தேடல் சீனாவைப் பொறுத்தவரை சீன அரசு நினைத்து நினைத்து சென்சார் செய்யப் படவேண்டியவை எவை என்பதைப் பொறுத்து மட்டுமே இருக்கவேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டதாக, பச்சையாகச் சொல்வதானால் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே தான் சீனாவுக்குள் நுழைந்தது.
இன்னும் தோலுரித்துச் சொல்ல வேண்டுமானால், சீனாவுக்குள், மனித உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் எவர் தேடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை சீன அரசு அறிந்துகொள்ளத் தோதாகத் திறவு கோல்களைக் கொடுத்ததே கூகிள் தான்!
திறவுகோல்கள், கூகிளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்து விடும் அளவுக்கு, கூகிளின் செர்வர்களுக்குள் உளவறியும் நிரலிகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தது. எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்த கூகிள், சீன அரசு இதன் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த பிறகு, சீனாவுக்கென்று பிரத்தியேகமான தணிக்கை செய்து கொடுக்கும் தேடுபொறி வசதியை நிறுத்திக் கொள்வது என்ற முடிவையும், சீனாவில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது.
இந்தச் செய்தியை பாருங்கள்!
/ Google has “evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists,” according to a posting by the company’s Chief Legal Officer David Drummond on Jan. 12. He said Google now plans to stop censoring results at its Chinese search engine, a move that may lead to the company shuttering its local Web site and offices, pending talks with the government. /
இன்னும் கொஞ்சம் விரிவாகவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தது:
கூகிள் ஆண்டவர், அங்கே வெறும் முப்பது சதவீதம் தான் உபயோகத்தில் உள்ளார்! முதலிடத்தைப் பிடிக்க முடியாது , இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற ஒரு விஷயமே கூட, சீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கூகுளின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் iResearch என்கிற சீன ஆராய்ச்சி நிறுவனம் சொல்கிறது!
தகவல்களைத் தேடத் தேடு போறியா,அல்லது பொழுதுபோக்கத் தேடு போறியா என்ற கேள்வியில், பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!
பைடு தளம் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது இது:
இன்றைய எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் இந்த செய்தி, சீனா டைலி என்ற சீனப் பத்திரிகையை மேற்கோள் காட்டி, கூகுளின் மமதையை எகத்தாளம் செய்திருக்கிறது. அதே செய்தியில் கொலம்பியா ப்ராட்காஸ்டிங் கார்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த எட் பர்னெட் கூகுளின் இந்த முடிவு பரிதாபகரமானது தவிர்த்திருக்கப் பட வேண்டியது என்று சொல்கிறார். மேலும் அவர் சொல்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்!
He also believes that it is "arrogant thinking to assume that we know what's best for China, and our values can still work well in that very different culture; and it's an ignorant idea to believe threats and ultimatums can bring positive results, especially from such proud and sufficient people."
இரண்டு வாரங்களாகவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஒரு இழுபறி யுத்தம் வலுவாக நடந்துகொண்டிருக்கிறது. சீனக் கரன்சி ஈன ரென்மின்பி அல்லது யுவானின் மதிப்பை மார்கெட் நிலவரத்திற்குத் தகுந்த மாதிரி உயர்த்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருவதை சீனா நிராகரித்துக் கொண்டே வருகிறது.
சீனக் கரன்சியின் மதிப்பு உயர்ந்தால், சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி உயரும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது. ஆனால், சீனாவோ, தன்னுடைய நாணய விகிதத்தைக் குறைந்த நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறது. சீனா மறுத்தால், வரிவிதிப்புக்களை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க காங்கிரஸ் (நம்மூர் ராஜ்ய சபா மாதிரி) பயமுறுத்திக் கொண்டிருப்பதற்கெல்லாம் சீனா அசருகிற மாதிரி இல்லை.
இது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள !
சென்ற ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சீன வர்த்தகத் துறை அமைச்சர் அளித்த பேட்டியில், அப்படி ஒரு வர்த்தகப் போர் மூளுமானால், அமெரிக்க மக்களும், அமெரிக்க நிறுவனங்களும் பெருத்த கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். சீன வர்த்தகத்தின் உபரி மதிப்பு, சீனாவின் முதலீடாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி டாலர்கள் அமெரிக்க முதலீடுகளாகச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது, மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி, கடன்பட்டவன் கலங்குவது போல, அமெரிக்கா, சீனா விடுகிற உதார் வேற்று உதாரா, வெடி வைக்கும் உதாரா என்று தெரியாமல் கலங்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது.
சீனாவும், இந்தியாவும், ஏறத்தாழ ஒரே சமயத்தில் தான் விடுதலை அடைந்து, பல்வேறு இடைஞ்சல்களைச் சமாளித்து முன்னேறி வர வேண்டியிருந்தது. நம்மை விட, சீனர்களுக்கு இருந்த தடைகள், மிக அதிகம். நம்மை விட அதிகமான ஜனத்தொகை, விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள், நவீனக் கல்வியறிவோ, தொழில் நுட்பமோ, உதவிகளோ கிடைக்காமல் நம்மைவிடப் பின்தங்கியிருந்த நிலையில் இருந்து, குறிப்பாகக் கடந்த முப்பதே ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசாக ஆகியிருப்பதோடு, தற்சமயம் இரண்டாமிடத்தில் இருக்கும் ஜப்பானை இந்த வருடக் கடைசிக்குள்ளாகவே முந்தி விடுவார்களென்றும் மதிப்பிடப் பட்டிருக்கிறது.
அங்கேயும் ஊழல் உண்டு.உள்ளூர் அரசியலில் ஏகப்பட்ட குளறுபடிகள், கோளாறுகள் உண்டு.ஆனாலும் சீன அரசியல் தலைவர்கள், தங்களுடைய நாட்டு நலனை மறந்து செயல் பட்டதில்லை. அந்நியனைத் தலைக்கு மேல் உட்கார்த்தி வைத்து, அவனுக்கு அடிமைகளாக இன்னமும் கைகட்டி ஒருபோதும் நின்றதில்லை. அமெரிக்காவோ, வேறு எந்த மேற்கத்திய நாகரிக கனவான்களும் வந்து நாகரீகத்தை உபதேசிக்கும் அளவுக்குத் தங்களைச் சிறுமைப் படுத்திக் கொண்டதில்லை. அமெரிக்கா உலகம் முழுவதும் சண்டியர்த்தனம் செய்து வரும் நேரத்தில், சண்டியர் பாச்சா சீனர்களிடம் பலிக்கவில்லை.
இன்னும் எத்தனை நாள் அந்நியர்களிடம் தன்னை சிறுமைப் படுத்திக் கொள்ளும் காங்கிரஸ்காரர்களிடம் சிக்கி இந்த தேசம் முழுமைக்கும் சிறுமைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முடிவு செய்ய நமக்கு இருக்கும் அவகாசம் மிகவும் குறைவு!
அடிமைத் தளையில் இருந்து இந்த தேசம் விடுதலை பெற வேண்டும் என்று போராடிய பகத் சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டு, உயிர்த் தியாகம் செய்த எழுபத்தொன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று!
படத்திற்கு மாலை அணிவித்து, வெறுமனே அஞ்சலி செய்வதில் ஒரு பயனும் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட ஒவ்வொரு தியாகியையும் நினைவு கூர்வது, அவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து, அதைப் பாதுகாத்துக் கொள்வதில்,மட்டுமே இருக்கிறது.
பொழுதுபோக்க சில நல்ல விஷயங்கள்!
பொழுது போகவேண்டுமென்றால் நாத்திகம் பேசி, பார்ப்பனீயத்தைத் திட்டுவது ஒன்று தான் வழி என்று நினைக்கிறீர்களா? பொழுதுபோக்க நாத்திகம் பேசாமல், பார்ப்பனீயத்தைப் பேசியே வீணாய்ப் போகாமல், பயனுள்ள வழிகளும் நிறைய இருக்கிறதே, கொஞ்சம் பார்க்கலாமா?
சீனப் பூச்சாண்டி,சீனப் பெருமிதம், சீனா அறுபது, என்ற தலைப்புக்களிலும், தலைமைப் பண்பைப் பற்றிப் பேசும்போது, நேருவிடம் இல்லாத, அதே நேரம் லால்பஹதூர் சாஸ்திரியிடம் இருந்த நிர்வாகத் திறனைப் பற்றியும் இங்கே பல பதிவுகளாகப் பார்த்திருக்கிறோம். சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் கொஞ்சம் பேசியிருக்கிறோம். அப்படி என்ன சீனாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்திருந்து பார்த்தது தான் மிச்சம்!
சீனப் பூச்சாண்டி எப்படிப் பட்டது என்பதை இந்த ஒரு நிமிட வீடியோவில் இருந்து கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்! சும்மா வேடிக்கைக்கு! கொஞ்சம் சீரியசாய் விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இங்கே ஒரு செய்தி.
இந்த வீடியோ கொஞ்சம் தமாஷாகச் சொன்னாலும், சீனர்கள் விடும் வெட்டி உதார், அவர்களுடைய நிஜமான வலிமையைப் போல பல்லாயிரம் மடங்கு அதிகமானது! வீடியோவின் கடைசியில் ஒருவர் செய்கிறார் பாருங்கள், நாமும் அதைச் செய்யத் தயாரானால், உதார் விடும் சண்டியர் என்ன ஆவார் என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே!
இங்கேயானால், சப்பைப் படங்களை விழுந்து விழுந்து பார்க்கிறார்கள்! நித்தி-ரஞ்சி லீலைகளை, சீடி கிடைக்குமானால் ஐநூறு முதல் எண்ணூறு ரூபாய் வரை கொடுத்துத் தெரிந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்! இப்படி விவகாரம் சிக்காத தருணங்களில் பகுத்தறிவைப் பற்றி, பார்ப்பனீயத்தை எழுத்துக்களிலேயே குத்திக் குதறிஎடுத்து எழுதப்படும் பதிவுகளைப் படிக்கிறார்கள். பிடித்ததா, ஆதரவு ஓட்டுக் குத்துகிறார்கள்! பதில் சொல்லப் பிடிக்காத பதிவுகளுக்கு நெகடிவ் ஓட்டுக் குத்தி, அந்த மட்டிலாவது குத்த முடிந்ததே என்று திருப்திப் படுவதுடன் பதிவுலகக் கடமை, யோசனை, சிந்தனையின் விரிவு, பகுத்தறிவு எல்லாமே முடிந்தும் போய் விடுகிறது!
பக்திமான்களுக்கோ வேறு கவலை! நம்பிக்கையை நித்தி மாதிரி ஆசாமிகள்தான் தாங்கிப் பிடிக்கிற மாதிரிப் பின்னாலேயே திரிவார்கள்! மாட்டிக் கொண்டு ரஞ்சிதாவோடு அல்லது வேறு கோடம்பாக்கம் எக்ஸ்ட்ராவோடு வீடியோ வெளியே வந்து விட்டால், நம்பிக்கையைக் கெடுத்தவனைக் கைது செய், சொத்துக்களைப் பறிமுதல் செய் என்று கூச்சல், கோஷம், வேலை வெட்டி இல்லாத நேரங்களில், கேசும் போடுவார்கள்!
இப்படி அக்கப்போர்களில் கவனம் செலுத்துகிற அளவுக்கு, நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிற விஷயங்களையும் கொஞ்சமாவது கவனிக்கிறோமா?
அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால், வெளிநாட்டு நிறுவனங்கள் நஷ்டஈடு தருவதைச் சுருக்க இந்திய அரசு வலிய வந்து ஒரு சட்ட முன்வரைவை மசோதாவாகத் தாக்கல் செய்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இழப்பீடு தருவதற்கு உச்சவரம்பு வைத்து, மிச்சத்தை இந்திய மக்களின் மீதே, அவர்களின் வரிப்பணத்தில் இருந்தே, தலையில் கட்டுகிற அயோக்கியத்தனத்தைப் பற்றிப் பதிவர்களோ, பதிவைப் படிக்க வருபவர்களோ கவலை கொள்ளக் காணோம்! இந்த அசமந்தப் போக்கு நல்லது தானா?
இது விஷயமாக, இங்கே ஒரு சின்னக் கணக்கை, ஒரு வழக்கறிஞருடைய பார்வையில் பார்க்க.
அமெரிக்க பகாசுர நிறுவனங்களிடம் இங்கே இந்திய அரசியல்வாதிகளும், இந்திய அரசும் மண்டியிட்டு, ஐயா நீங்கள் நீட்டிய இடத்தில் கச் சாத்துப் போட்டுவிட்டுக் கையையும் வாயையும் பொத்திக் கொண்டு நிற்கிறேன் ஐயா என்று நிற்கிற போது, சீனா எப்படி அமெரிக்க மிரட்டல்களை, அமெரிக்காவின் சண்டியர்த்தனத்தை வெற்றிகரமாக இதுவரை சமாளித்து வந்திருக்கிறது, சமாளித்து நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதிலிருந்து கொஞ்சம் பாடம் கற்றுக் கொள்ளவும் வேண்டாமா? சீனா அறுபது, சீனப் பெருமிதம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, சில பதிவுகளில் டெங் சியாவோ பிங் மாதிரி சீன அரசியல் தலைவர்களால் எப்படி நவீன சீனத்தை நிறுவ முடிந்தது என்பதை அங்கே உள்ள சுட்டிகளில் இருந்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும்!
சுருக்கமாகவோ, அல்லது நீளமாகவோ எப்படி இருந்தாலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்களைத் தொட்டு எழுதுவது என்பது இந்தப் பக்கங்களின் உள்ளடக்கமாக இருந்து வருகிறது. கொஞ்சம் துணுக்குச் செய்தி மாதிரியோ, அல்லது அந்தந்த நேரத்துத் தலைப்புச் செய்திகளைத் தொட்டு, நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கும், அல்லது நிர்ணயிக்கப் போகும் நிகழ்வுகளையும் தொட்டு எழுதுவது மட்டுமே எனக்குப் பிடித்தமான பணியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களுடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்.
பொழுதுபோக்கு நாத்திகம், பொழுது போக்கப் பதிவுகள் என்று இருப்பவர்கள் அவர்கள் இயல்பிலேயே இருந்துவிட்டுப் போகட்டும்!
அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?
உஷ்..ஷ்.! சீனப் பூச்சாண்டி!
குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் என்ற நிறுவனம் செய்திகளைத் தரம்பிரித்து, ஒரு அல்கோரிதம் (கணக்கிடும் முறை) வழியாக ஆராய்ந்ததில், அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள், மற்றும் இணையத்தில் புழங்கப்பட்ட, தேடப்பட்ட வார்த்தைகளை வைத்து, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் மீது தெரிய வந்த ஆர்வம், அக்கறையை வைத்து, தனது ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவித்திருக்கிறது.
இந்தப் பத்தாண்டில் மிக அதிகமாகப் படிக்கப் பட்ட செய்தி, ஈராக்குடனான போர், எட்டு வருடங்களுக்கு முன்னாள் செப்டம்பர் 11 அன்று, நியூ யார்க் நகரில் இரட்டைக் கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல் இப்படிப் பரபரப்பான செய்திகளையெல்லாம் தாண்டி முதல் இடத்தைப் பிடித்த செய்தி, சீனா, ஒரு சூப்பர் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கிற செய்தி தான்!
"சீனா இப்படி சூப்பர் பொருளாதார வல்லரசாக வளர்ந்திருப்பது இப்போதுள்ள சர்வதேசச் சூழலைப் புரட்டிப் போட்டிருக்கிறது! இனிவருங்காலத்திலும் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும்" என்கிறார் பால் ஜே ஜே பயக். குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் என்ற அமைப்பின் தலைவர் இவர்.
சீன டிராகன் இப்போது நெருப்பைக் கக்க ஆரம்பித்திருக்கிறது! வழக்கம் போல வெறும் உதார் தானா அல்லது சீண்டிவிட்டு வலுச்சண்டைக்கு அழைப்பது போலவா, நிஜமாகவே சண்டை வருமா,என்ன ஆகும் என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
2008 இல் அமெரிக்க வங்கித்துறை, நிதித்துறைகளில் ஏற்பட்ட சரிவு, சரியாகிவிட்டது போல ஒரு தோற்றம் சென்ற அக்டோபரில் இருந்தே செய்திகளாக வெளியிடப் பட்டு வந்தது. ஆனால், உண்மையில் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீளவில்லை என்றே நடப்புச் செய்திகள் காட்டுகின்றன.
ஆயுத விற்பனையை மட்டுமே தனது முக்கியத் தொழிலாக வைத்திருக்கும் அமெரிக்கா, தைவானுக்கு நவீன ஆயுதங்களை விற்பதற்கு முடிவு செய்தது. சீன டிராகன் உடனே சிலிர்க்க ஆரம்பித்தது! உறவுகள் சீர்கேடும் என்று எச்சரித்தது.
அடுத்து, தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசவிருக்கும் செய்தி வெளியானதும், சீன டிராகன் இன்னும் அதிக நெருப்பைக் கக்க ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் மாளிகைச் செய்தி, ஒபாமா தலாய் லாமா சந்திப்பு, அதிகாரப்பூர்வமான ஓவல் அறையில் நடக்காது, ஒபாமாவின் தனியறையில் நடக்கும் என்று அறிவித்திருக்கிறது! அதாவது, கொஞ்சம் அமுக்கியே வாசிக்கிற மாதிரி!
இந்த செய்தியை பாருங்கள்! சீன மக்கள் ராணுவத்தின் அதிகாரிகள், தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்க முடிவுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் விதத்தில், சீன அரசு முதலீடு செய்திருக்கும் அமெரிக்க அரசுக் கடன் பத்திரங்களை விற்று மூக்கில் ஒரு குத்து விடும்படி யோசனை சொன்ன மாதிரி இருக்கிறது!
சீன அரசு, அமெரிக்க் அரசின் கடன்பத்திரங்களைச் சந்தையில் விற்று வருகிறது! இதுவரை சுமார் 3450 கோடி டாலர் மதிப்புக்குப் பத்திரங்களை விற்றிருப்பதாகவும், தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னாலேயே இந்த விற்பனை வேலை ஆரம்பித்து விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
அதாவது போன செப்டெம்பர் மாத வாக்கிலேயே இந்த வேலை ஆரம்பித்து விட்டது! உதார், மிரட்டல்கள் எல்லாம் அப்புறம் தான் வருகிறது! சீனப் பூச்சாண்டியின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு, அவர்கள் என்ன சொல்கிறார்கள், ஏன் சொல்கிறார்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து விடும்!
நான் நினைக்கிறபடி நீ இல்லையானால், நீ எனக்கு எதிரி! அவ்வளவுதான், அதற்கு மேல் சீனாவைப் புரிந்துகொள்ள ரொம்பப் பிரமாதமான சரித்திர ஞானம் எல்லாம் வேண்டாம்! சிறுவயதில் வெ. சாமிநாத சர்மா எழுதிய சீனாவின் வரலாறு புத்தகம் படித்ததை எல்லாம் இப்போது நினைவில் வைத்துக் கொண்டு பயனில்லை!
இரண்டுலட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர்கள் வணிக உபரி மதிப்பை வைத்திருக்கும் சீனா, அதில் முக்கால் பங்கை அமெரிக்க டாலர்களில் தான் முதலீடு செய்திருக்கிறது. சீனப் பணமான யுவான் மதிப்பை செயற்கையாகக் குறைத்து வைத்திருக்கிறது, தங்களுடைய ஏற்றுமதிக்குச் சாதகமாக இப்படி செய்வதை சீனா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற அமெரிக்க நிலையை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரம், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக, சில தினங்களுக்கு முன்னால், வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை சீன அரசு உயர்த்தியிருக்கிறது.
இங்கே இந்தியாவில் கூட ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்னால், வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை முக்கால் சதவீதம் கூட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கி என்ன உத்தேசத்தில் இந்த முடிவை மேற்கொண்டது, அல்லது இந்த முடிவு என்ன சாதித்து விடும் என்பது தெளிவாக்கப் படவில்லை.
தமிழில் தினசரிப் பத்திரிகைகளில், விற்பனை எண்ணிக்கை குறைந்து போனால் கூட, தரம் தாழ்ந்துபோகாத தினசரி தினமணி ஒன்று தான்! உருப்படியான தலையங்கங்கள், கட்டுரைகளைப் படிக்க முடிவதும் கூட இங்கே தான்!
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முடிவுகளைப் பற்றிய தினமணிக் கட்டுரைகள் ஒன்று ! இரண்டு !











