Showing posts with label யோம் கிப்பூர். Show all posts
Showing posts with label யோம் கிப்பூர். Show all posts

சுட்டும் விரல் சொல்லுதே! சுட்டும் விரல் சொல்லுதே!



பேசும்போது,சுட்டுவிரலை நீட்டிப் பேசுவது என்னிடத்தில் இருக்கும் கெட்ட பழக்கம். கொஞ்சம் ஊன்றிப்பார்த்த பிறகுதான் உறைக்கிறது, என்னுடைய எதிரிகளில் 99 சதம் சுட்டுவிரலை நீட்டிப் பேசினதில் உருவானவர்கள்தான் என்பது!

ஆள்காட்டிவிரலை நீட்டி ஒருவரைப் பற்றிப் பேசுகிறோம்; கட்டை விரல் தவிர்த்த மற்ற மூன்று விரல்கள் நம்மையே சுட்டிக் காட்டுவதை நாம் உணருவதே இல்லை.இந்த வேடிக்கையான இயல்பைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்கிறார்:

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறது, உதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோ, ஏதோ ஒன்று தவறாகவோ, அல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம், அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால், அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்! அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோ, வியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!

அதே கேலிக்குரிய பழக்கம், தவறு, அல்லது அரைகுறையான விஷயம்
மற்றவர்களிடத்தில் பார்க்கும்போது, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.
நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல், அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்ன! இவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆக, நம்மிடம் இருக்கும் அழுக்குடன், அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கை, பேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போது, கேலி செய்யத் தோன்றும்போது, "என்ன! அவர் அப்படி இருக்கிறாரா? அப்படி நடந்து கொண்டாரா? அப்படிச் சொன்னாரா? அப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போது, உங்களுக்குள்ளேயே சொல்லிப்பாருங்கள்!

" நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயே, அப்படித் தான் செய்கிறேனோ என்னவோ? அவரை விமரிசிப்பதற்கு முன்னால், என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு "அதிர்ச்சியடையும் " ஒவ்வொரு தடவையும், இதே மாதிரி நல்ல விதமாகவும், புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப்போலஇருப்பதைக் காணமுடியும்! நமக்குள் இருக்கும் அழுக்கு, பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப்[ பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பதுதான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான். நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!

இந்தமாதிரி நினைத்துப்பழகிப்பாருங்கள்! உங்களை மாற்றிக்கொள்ளப் பெரிதும் உதவியாக இருப்பதைக் காண்பீர்கள். அதே நேரம், இளங்காலைக் கதிரவன் மாதிரி, அடுத்தவர்களுடனான உறவில் ஒரு சகிப்புத் தன்மையும், புரிந்துகொள்வதில் விளையும் நல்ல எண்ணமும் ஏற்படும்போது, முழுக்க முழுக்க ஒரு உபயோகமுமில்லாத சண்டை, சச்சரவுகளுமே முடிவுக்கு வந்து விடும்!.

சண்டை சச்சரவுகளில்லாமலேயே வாழ முடியும். ! ஜனங்களுடைய பிரதானமான வேலையே, நேரடியாகவோ மறைமுகமாகவோ சண்டை போடுவது தான், அது தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்கு, இப்படிச் சொல்வதே கூட வியப்பாகக் கூட இருக்கும்!

தடித்த வார்த்தைகளோ, அடிதடிகளோ கூட வேண்டாம்! நமக்குள் நாம் விரும்புகிற மாற்றம், அது எவ்வளவு கடினமானது என்பது நமக்கே தெரிய வருகிறபோது ஏற்படுகிற எரிச்சல்,ஆனால் அடுத்தவர்களிடம் மட்டும் அப்படிப்பட்ட மாற்றம், முழுமை இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பது எளிதாகத் தான் இருக்கும், இல்லையா?

"அவர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?" என்று நினைக்கத் தொடங்கும் போதே, நாமும் அப்படித்தானே இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது,


'அப்படி இல்லாமல்' இருப்பதற்கு எவ்வளவு பிரயாசைப் பட வேண்டியிருக்கிறது என்பதைக் கூட மறந்து விடுகிறோம்.

முயற்சித்துப் பார்த்தால் தானே, புரிய வரும்!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி, ஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்" என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்து, ஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி.
அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 
Either do not give the name of knowledge to your beliefs only and of error, ignorance or charlatanism to the beliefs of others; or do not rail at the dogmas of the sects and their intolerance.”

Sri Aurobindo
Thoughts and Aphorsims – Jnaana Aphorism 8
பழைய காயங்களையே திரும்பத் திரும்பக் கீறிவிட்டுக் கொண்டிருக்கும் சில பதிவுகளைப் படித்தபோது, ஒருவிதமான ஆற்றாமையோடு ஸ்ரீ அன்னையின்  உரையாடல்களைப் படிக்க அமர்ந்த போது மொழியாக்கம் செய்தது. யோம் கிப்பூர்,  இந்த வார்த்தை, அதன் உண்மையான பொருளில், எல்லோருக்கும் அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்!


நினைப்பதெல்லாம் நடந்து விடும், எப்போது?


நண்பர் திருமூர்த்தி வாசுதேவன், தன்னுடைய வலைப் பதிவில் ஜடபரதருடைய கதையைக் கொஞ்சம் சொல்லியிருந்தார். ஒருவன் தன அந்திம காலத்தில் எதைப் பற்றிய நினைவுடன் இருக்கிறானோ, அதுவாகவே மறுபடி பிறக்கிறான் என்பதைச் சொல்லும் கதை இது. பகவத் கீதையிலும், இந்த நுட்பத்தைச் சொல்லும் ஸ்லோகம் ஒன்று உண்டு.

பிரகதாரண்யக உபநிஷத்திலும் இதே கருத்து, கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லப் பட்டிருக்கிறது.
You are
what your deep, driving desire is.
As
your desire is, so is your will.
As
your will is, so is your deed.
As
your deed is, so is your destiny. “
(Brihadaranyaka Upanishad, 4.4.5)

"மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.”

இப்படி, ஸ்ரீ அரவிந்தர் பரிணாமத்தை அது வளர்ந்து கொண்டு போகும் விதத்தைப் பற்றிச் சொன்னதை முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருக்கிறோம்.
தன் தவறுகளை உணர்தல், மன்னிப்புக் கோருதல், பரிகாரம் செய்ய முனைதல், திரும்ப அதே தவறைச் செய்யாதிருத்தல் இப்படிப் படிப்படியாக உள்ளொளியைக் காண முயலும் ஒரு பிரார்த்தனையை அனேகமாக, உயிர்ப்புள்ள எல்லா சமய நம்பிக்கைகளுமே ஏதோ ஒரு விதத்தில் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. சொல்லிய சொல்லின் பொருள் உணர்ந்து செய்யாமல், வெறும் சடங்குகள் என்று மட்டுமே ஆகிவிடும் போது தான் எல்லாவிதமான குழப்பங்களும், பிரச்சினைகளின் தோற்றுவாயாகவும் மாறி விடுகின்றன.

முன்னமே இட்டிருந்த அந்தப் பதிவு, யூதர்களின் யோம் கிப்பூர் என்ற day of atonement தவறுகளை உணர்தல், பரிகாரம் தேடுதலைப் பற்றியது. பெயரில் மட்டுமே அது day of atonement, மற்றபடி அது ஒரு விடுமுறைநாளாக, மக்கள் கூடிக் களிக்கிற அல்லது கழிக்கிற நாளாகவே மட்டும் இன்றைக்கு இருக்கிறது.
அதே மாதிரி, நம் பக்கத்தில் அந்தணர்கள் எல்லோரும் கூடி ஆவணி அவிட்டம் என்ற சடங்கைச் செய்வது தெரிந்தது தான். பூணூல் அணிந்து கொள்வதற்கு முன்னால், காமோ கார்ஷீத் மந்த்ர ஜபம் செய்வார்கள்.

'காமோ கார்ஷீத், மன்யுர கார்ஷீத் நமோ நம:"

"ஆசை என்னை இந்தத் தவறைச் செய்யத் தூண்டியது, குரோதம் என்னை இந்தத் தவறைச் செய்யத் தூண்டியது" என்ற பொருளில் செய்யப் படும் சடங்கு அது. சொல்வதன் பொருளை உணர்ந்து உண்மையிலேயே, ஆசை என்னென்ன தவற்றையெல்லாம் செய்யத் தூண்டியது, குரோதம் என்னென்ன தவற்றையெல்லாம் செய்யத் தூண்டியது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தால், அதனுடைய பலனே தனித்தவொரு பேரனுபவமாகத்தான் இருக்கும்!

வெறுமனே, புரோகிதர் ஒரு நூத்தெட்டு, அல்லது ஆயிரத்தெட்டு ஜபம் பண்ணுங்கோ என்று சொன்னவுடன் கொஞ்சநேரம் கண்ணை மூடிக் கொண்டு ஜபம் என்ற பெயரில் வேறேதோ செய்து கொண்டிருந்தால், பிரம்ம தேஜஸ் தெரியுமா என்ன?

"கடவுள் தன சாயலில் மனிதனைப் படைத்தார்" என்கிறது, விவிலியம். 

நாத்திகனோ,"மனிதன் தன் சாயலில் கடவுளைப் படைத்துக் கொண்டான்" என்கிறார். கொஞ்சம், யோசித்துப் பார்த்தால், நாத்திகருடைய கூற்றில் உண்மை இருப்பது விளங்கும்.


கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வார்கள், "கடவுளுடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால், நீ அதிர்ச்சி அடைவாய். எனென்றால், அது உனக்கு ரொம்பவுமே பரிச்சயமானதாகத் தான் இருக்கும்." 

உண்மைதான்! தன் முகத்தையே பார்க்கும் தேடலின் முடிவு, அதிர்ச்சி அளிக்காமல் வேறென்ன செய்யும்?!


ஒரு மனிதனுக்கு, மனித வடிவத்தில் கடவுளைப் பார்ப்பது தான் கொஞ்சம் ஸௌகரியமாக இருந்திருக்கிறது.. ஆதி காலத்தில், தான் கண்டு பயந்த எல்லா வடிவங்களையுமே, மனிதன் கடவுளாக வணங்கியிருக்கிறான் என்பது கூடுதல் சுவாரசியம். பாம்பு, பல்லி, தேள், எலி இப்படி இந்த பயமுறுத்தும் தெய்வங்கள் பட்டியல் கொஞ்சம் பெரிது. பயம் தெளிந்த பிறகு, வழிபடத் தொடங்கியதெல்லாம், தன் சாயலில் என்பது வரை, நாத்திகர் கூற்றில் உண்மை இருக்கிறது.


ஒரு மனிதன்,தன் சாயலில் கடவுளைக் கண்ட மாதிரி, மற்ற உயிர் இனங்களுமே, தங்களுடைய சாயலில் தான் கடவுளை, அல்லது தங்களை ரட்சிக்கும், வழி நடத்தும் தலைவர்களைக் கண்டு கொண்டிருக்க முடியும் என்பதும் எளிதில் ஊகிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிற உண்மைதான்.


ஆகக் கடவுள், என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது, [நாம் கடந்து வந்த] பரிணாம நிலையின் கடந்த படி, தற்போதைய நிலை இவற்றைப் பொறுத்தே அமைகிறது. 

இப்படிச் சொல்லும் போதே, எந்த ஒரு இரு நபர்களுக்கும், இந்தப் புரிதல், ஒரே மாதிரி இருப்பதில்லை, இருக்க வேண்டிய அவசியம் இல்லை, என்பதும் சொல்லாமலேயே விளங்கும். இந்த விஷயத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அரவிந்த அன்னையும் எப்படி விளக்குகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.


"The mind's door of entry to the conception of him [the Divine] must necessarily vary according to the past evolution and the present nature. .. "

SRI AUROBINDO, 
 
The Synthesis of Yoga ‘

இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதையும் கொஞ்சம் பார்ப்போமா?

That is, the evolution in former lives and the present nature, that is, the nature of the present body, determine one's approach to the Divine.



We can take a very. ...over-simple example. If one is born in any particular religion, quite naturally the first effort to approach the Divine will be within that religion; or else if in former lives one has passed through a certain number of experiences which determined the necessity of another kind of experiences, quite naturally one will follow the path which leads to those experiences.



You see, the life of the psychic being is made up of successive experiences in successive physical existences. So, it may be put a little childishly or romantically: you have a psychic which for some reason or other has incarnated so as to be able to have all the experiences which royalty gives -for instance, supreme power.  


After it has had its experience, has had what it wanted, it can, before leaving the body, decide that in the next life it will take birth in obscure conditions, because it needs to have experiences which can be had in a modest condition, and with the freedom one feels when he has no responsibilities, you see, responsibilities like those the heads of states have, for instance.

So quite naturally, in its next life it will be born in certain conditions which fulfil its need. And it is in accordance with this experience that it will approach the Divine.



Then, in addition, it is the product of the union of two physical natures, you know, and sometimes of two vital natures. The result of this is more or less a kind of mixture of these natures; but it brings about a tendency, what is called a character. Well, this character will make it fit for a certain field, a certain category of experiences. So with what has been determined, decided in former lives or in a former life, and then the environment in which it is born -that is, the conditions in which its present body has been formed -its approach to and search for the Divine will be in accordance with a definite line which is its own, and which, naturally, is not at all the same as that of its neighbour or any other being.



I said a while ago: 

 
Each individual is a special manifestation in the universe, therefore his true path must be an absolutely unique path. There are similarities, there are resemblances, there are categories, families, churches, ideals also, that is, a certain collective way of approaching the Divine, which creates a kind of church, not materialised but in a more subtle world -there are all these things -but for the details of the path, the details of yoga, it will be different according to each individual, necessarily, and conditioned physically by his present bodily structure, and vitally, mentally and psychically, of course, by former lives.”

The Mother

கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், புரியும்.

ஒருவன் தன்னுடைய விதியைத் தானே முடிவு செய்து கொள்கிறான்.
எங்கேயோ ஒரு எமதர்மன், அவனுடைய கணக்குப் பிள்ளை சித்திர குப்தன் எழுதி வைத்திருக்கிற பாவ புண்ணியக் கணக்கை கூட்டிக் கழித்து, எண்ணெய்க் கொப்பரையா, சுவர்க்க அனுபவமா என்றெல்லாம் முடிவு செய்வதில்லை. ஆத்மா, ஒரு சரீரத்தை விடும் போதே, அடுத்து என்ன அனுபவத்திற்கு தயாராக வேண்டும் என்பதை தானே முடிவெடுத்து, அதற்கேற்பப் பிறவி எடுக்கிறது. இறைவனது சித்தமே அங்கே வழி நடத்தும் ஒளியாக இருக்கிறது.
விதி என்பதும் ஸ்வாதந்தர்யம் என்றும் சொல்லப்படுவதெல்லாம் [Fate and Free Will] ஒரு அனுமானமே என்றாகிறதில்லையா?  

கொஞ்சம் இன்றைய சிந்தனைக்கு, இதை எடுத்துக் கொள்வோமே!

"கடவுளின் சாபமும்" திரு.டோண்டு ராகவனின் 'யோம் கிப்பூர்' பதிவுகளும்!


"இஸ்ரேலே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவசரமாக தனது வீட்டில் கூட்டப் படும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கோல்டா மெயர் அமைதியாக அதே நேரத்தில் குமுறும் கொந்தளிப்புடனும் கோபத்துடனும் மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர் பேசும் வசனங்கள்தான். அந்த இடத்தை பல முறை ரீ வைண் செய்து பார்த்திருப்பேன்.

சுய மரியாதையும், தேச நலனில் அக்கறையின்மையும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும், ஊழலும், கையாலாகத்தனமும், பேடித்தனமும், போலித்தனமும், போலி மதச்சார்பின்மையும், ஒழுங்கீனமும், பேராசையும், லஞ்ச லாவண்யமும், ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக, பிரதமராக, ஜனாதிபதிகளாக, முதலமைச்சர்களாக, அதிகாரிகளாக, அமைச்சர்களாக, பெறப்பற்ற ஒரு சபிக்கப் பட்ட தேசத்தின் குடிமகன் என்ற முறையில் , எனக்கு கோல்டா மெயர் பேசுவதாக வரும் அந்தக் காட்சிகள் கடுமையான பொறாமை உணர்வையும்., கழிவிரக்கத்தையும், சுய வெறுப்பையும், ஆத்திரத்தையும், கோபத்தையும், ஆற்றாமையும், விரக்தியையும் ஒருங்கே ஏற்படுத்தின.

நாம் என்ன பாவம் செய்தோம் கீழ்த்தரமான பிறவிகளை நம் தலைவர்களாகப் பெற ? இந்தியாவுக்கு ஏன் இந்த சாபம் ?
சதிகாரர்களையும், தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும், வெளிநாட்டினரையும் நம் தலைவர்களாகப் பெற்றிருப்பது யார் போட்ட சாபம் ? “

26/11 மும்பை நகரின் மீது பாகிஸ்தானி தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப் பற்றி இணையத்தில் செய்திகளை, வலைப் பதிவர்களின் கோபத்துடன் வெளிப்பட்ட குமுறல்களைப் படித்து வந்த போது தான் வஜ்ரா என்கிற புனைபெயரில் எழுதி வரும் வலைப்பதிவரின் இந்த பதிவு February 4, 2007இல் வெளியான ஒரு திரைப்பட விமரிசனத்தைப் படிக்க நேர்ந்தது.

கடவுளின் கோபம்

தீவீரவாதிகள் ஏற்படுத்திய சேதத்தை விட முதுகெலும்பில்லாத இந்திய அரசியல் வியாதிகளும். அவர்களுக்கு சலாம் போட்டே தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்ளும் அதிகார வர்கமும் ஏற்படுத்தியிருக்கிற சேதம் மிக அதிகம்.

மிகுந்த வருத்தத்தோடும், ஆற்றாமையோடும் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தமிழில் வலைப்பதிவர்கள் சிலர் மும்பை சம்பவங்களுக்கு இந்து தீவீர வாதிகள் தான் காரணம் என்று கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்-தேசத்தின் தலைவிதியை நொந்து கொண்டே செய்திகளை, வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது தான், மேலே சொன்ன வலைப்பதிவு கண்ணில் பட்டது.

இந்த வலைப்பதிவர் யூதர்களின் சில சமய சடங்குகளைப் பற்றியும் சில பதிவுகள் இட்டிருப்பதை திரு டோண்டு ராகவன் அவர்களின் யோம் கிப்பூர் என்ற தலைப்பிலான பதிவுகளில் தெரிந்து கொண்டு அவற்றையும் படித்ததில், எழுந்த எண்ணங்கள் இவை.

யோம் கிப்பூர்- யூதர்களின் சடங்கு பற்றி வஜ்ரா வின் வலைப்பதிவு இங்கே

"....In the seventh month, on the tenth day of the month, you shall afflict your souls, and you shall not do any work ... For on that day he shall provide atonement for you to cleanse you from all your sins before the LORD.
-Leviticus 16:29-30

யோம் கிப்பூர் என்பது மன்னிப்புக் கேட்கும் நாள் (day of attonement) என்று ஹீப்ரூவில் அர்த்தம். அது ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் அக்டோபர் மாத காலத்தில் (ஹீப்ரூ நாட்காட்டியில் டிஷிரி 10 ம் நாள்) வரும்.
இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும்"

குற்ற உணர்வு, தவறுகளுக்குப் பரிகாரம் தேடுதல், இவையெல்லாம் குரங்கிலிருந்து மனிதன் ஆன பின்பு ஏற்படுகிற பரிணாம மாற்றங்கள். பொத்தாம்பொதுவாக மனம் என்றும், கொஞ்சம் வேதங்கள் உபநிஷத்கள் துணையோடு பார்த்தோமேயானால் வெறுமனே மனம் என்று சொல்வது பல படித்தரங்களுடையதாக இருப்பதை அறிய முடியும்.

யோம் கிப்பூர் மாதிரியே, வெவ்வேறு மத நம்பிக்கைகளில், இப்படி தன்னுடைய குற்றங்களை உணர்ந்து, தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சிகள், சடங்குகளாக இருப்பதைப் பார்க்க முடியும். இந்தியாவில், அந்தணர்கள் ஆவணி அவிட்டம் என்று பூணூல் அணிகிற சடங்கில் ஒரு பகுதியாக காமோகார்ஷீத் மந்திர ஜபம் இருக்கும்.
.
வேதம் விதித்த சடங்குகளைச் செய்வதற்குத் தகுதியுள்ளவனாக பூணூல் அணியும் சடங்கு இருக்கிறது. அதற்கும் பூர்வாங்கமாக, தன்னுடைய தவறுகளை உணர்ந்து, காமம் என்னை இந்த தவறைச் செய்யத் தூண்டியது, குரோதம் இந்த தவறைச் செய்யத் தூண்டியது என்ற பொருளில் வரும் இந்த மந்திர ஜபம், வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் பொருளுணர்ந்து செய்தால், உள்ளார்ந்த அனுபவத்தைப் பெறுவதற்குத் துணையாக இருக்கும். இல்லையென்றால், வஜ்ரா அவர்கள் தன் வலைப் பதிவில் சொல்லுகிற மாதிரி வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். இங்கே தமிழ் நாட்டில், ஏதாவது ஒரு பண்டிகை, விடுமுறை என்று வந்து விட்டால், தொலைக்காட்சியின் முன் அமர்ந்து, "நாள் முழுவதும் எங்கள் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்....பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்" என்று கூவிக் கூவி முட்டாளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களே அது போல ஆகி விடும்.

முந்தைய பதிவில் கிழக்கு பதிப்பகம் திரு பத்ரியின் வலைப் பதிவைத் தொட்டு எழுதியதன் தொடர்ச்சியாகப் பார்த்தோமானால், உயிர் தோன்றியது ஒரு தற்செயலான விபத்து அல்ல.மனம் என்பதும் குற்ற உணர்வும் மிருக நிலையில் இல்லை. தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும், இன விருத்திக்காகவும் சில அடிப்படை உணர்வுகள் மட்டுமே மனிதனுக்குக் கீழ் நிலையிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கின்றன. மனிதனாகப் பரிணமித்த பிறகும் கூட, மிருகங்களிலிருந்து சுவீகரித்துக் கொண்ட மிருகவுணர்வுகளில் இருந்து விடுபடுவதில்லை. அங்கே தான் மனம் என்பது, அகங்காரமாக, மிருகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிற கருவியாக, தன்னை ஒரு அடையாளத்தோடு காட்ட ஆரம்பிக்கிறது.

இப்படி மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற "நான்" என்கிற தன்முனைப்பு ஒரு கால கட்டம் வரையில் அவசியமாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், அதுவே வளர்ச்சிக்குத் தடையாகி விடுகிறது. இதை நாத்திகத் தன்மையோடு கூடிய அறிவியல் சிந்தனை புரிந்து கொள்வதே இல்லை.

"மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.”

Evolution என்கிற தலைப்பின் கீழ் ஏற்கெனெவே ஸ்ரீ அரவிந்தர் அருளிய நூலின் சுருக்கமாக
இந்தப் பதிவுகளில் evolution என்கிற தலைப்பில், முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

யோம் கிப்பூர் - இந்தப் பதிவின் தலைப்புக்குப் பொருத்தமாக --
தன் தவறுகளை உணர்தல், மன்னிப்புக் கோருதல், பரிகாரம் செய்ய முனைதல், திரும்ப அதே தவறைச் செய்யாதிருத்தல் இப்படிப் படிப்படியாக உள்ளொளியைக் காண முயலும் ஒரு பிரார்த்தனையை நீண்ட நாட்களுக்கு முன் யாஹூ! 360 பதிவுகளில் குறிப்பிட்டதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

My whole life has been spent practicing this and practicing that
With nothing in my hands to show for it,
No attainment.
From now on, avoiding the miserable path of knowing much,
And missing the one thing I need
Why not go on the path of knowing the one thing that frees all?


மிகுந்த நன்றியோடு இங்கே

முழுமையடைகிற வரை, ஒவ்வொரு நாளுமே யோம் கிப்பூர் தான்! அதன் உண்மையான பொருளில்!

டோண்டு ராகவனின் சில பழைய பதிவுகள்


சில வலைப் பதிவுகள் மேலோட்டமாகப் பார்க்கையில் சாதாரணமாகத் தோன்றினாலும், படிப்பவர் மனதில் ஒரு புதிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்திவிடும். மாற்றத்திற்கான முதல் படியாக இந்த சிந்தனையோட்டமே இருக்கும். அந்த வகையில் திரு.டோண்டு ராகவனின் வலைப்பதிவில் சில பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, யோம் கிப்பூர் என்ற தலைப்பில், தவிர்க்க வேண்டிய நபர்களைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு, அவருடைய சொந்த அனுபவம், யோம் கிப்பூர் என்ற தலைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல், அவருக்கும் ஒரு போலிப் பதிவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஒழிந்து போ என்கிற ரீதியில் 'பெருந்தன்மையாக' இவர் விட்டு விடுவதை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும், என்றாலும் கூட இந்தப் பதிவின் தாக்கத்தில் எனக்குச் சில வெளிச்சக் கீற்றுக்கள் புலப்பட்டன.

இங்கே படிக்கலாம்

பழக்கங்களின் அடிமையாகவே இருக்கும் போது, மாற்றம் என்கிற சொல் காதில் விழுந்தாலே நமக்கு அடிவயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் பிரபஞ்ச சக்தி நம்மைச் சும்மா விடுவதில்லை. கன்றுக்குட்டி வரமாட்டேனென்று நான்கு கால்களையும் விறைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் போது, உடையவன் ஒரு குச்சியினால் கொஞ்சம் அடி, கொஞ்சம் கொஞ்சல் இப்படி தாஜாபண்ணுகிறார் போலேயும், செம அடி கிடைக்கும் என்று பயம் காட்டுகிறார் போலேயும், கூட்டிச் செல்வது போல, நம்முடைய பகுத்தறிவு, விதண்டாவாதங்கள். கோழைத்தனங்கள், வீர தீர சாகசங்கள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு செல் என்கிற நிலையிலிருந்து, இன்றைக்கு ஆறறிவு படைத்த, பகுத்தறியும் தன்மை உடையதாய் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ,

மாற்றம் என்பது ஏன் பல பேருக்குக் கசக்கிறது என்று யோசிக்கையில் தான், நிறைய விஷயங்கள் புலனாகின்றன.

முதலில் பயம்- ஏற்படப்போகும் மாற்றம் எப்படியிருக்குமோ, நம்மை என்ன செய்யுமோ என்கிற பயம்.

அடுத்து பழக்கங்களின் பிடியில் சிக்கி ஒரு மாதிரி அடிமைத்தனத்திற்குப் பழக்கப் பட்டு விட்ட நிலையில், நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்கிற மாதிரி சோம்பேறித்தனம்- நான் ஏன் மாற வேண்டும் நான் மாறவே மாட்டேன் என்கிற பிடிவாதமாக மாறுகிற நிலை.

அதற்கும் அடுத்து, மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், அதை எதிர்த்தே தீருவேன் என்கிற பிடிவாதத்தின் உச்சகட்டம்.இடையில் எத்தனை எத்தனையோ படி நிலைகள்.அத்தனைக்குள்ளிருந்தும், பிரபஞ்ச சக்தி நம்மை ஒரு உறுதியான திருவுரு மாற்றத்திற்குத் தயார் செய்து கொண்டே இருக்கிறது.

முப்பது வருடங்கள் ஒரு பொதுத்துறை வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஏகப்பட்ட முரண்பாடுகளை, மாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத மன நிலைகளை, நிர்வாகத்தின் தலை முதல் கால் வரையில் பார்த்து சலித்து, ஒரு கட்டத்தில் இங்கே வேலை செய்வதை விட மாடு மேய்க்கிற வேலை கிடைத்தாலும் அதுவே சொர்க்கம் என்று முடிவெடுத்து வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கையில் தான், மாற்றம் என்பது இருமுனையிலும் கூர்மையான கத்தி, எவரெவரோ,எது எதுவோ மாறவில்லை என்று போராடிக் கொண்டிருந்த போது,தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞையை இழந்து நிராயுதபாணியாய் நின்றது புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, வெற்றிகளை விட தோல்விகளே மாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும்.

அன்னையைத் தேடி என்கிற தலைப்பில் [In Search of the Mother] யாஹூ மடலாடற்குழு மிக அருமையான ஆன்மீகப் பணி ஆற்றி வருகிறது.
வேலை என்று ஏதோ இன்னதென்று தெரியாமலே நாம் செய்து வருவது எப்படிப் பட்டதாக இருந்தால் நலம் பயக்கும் என்பதற்கான வழிமுறையை ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரது உரையாடல்களிலி இருந்து மேற்கோள் காட்டி இன்று வந்திருந்த மடல்களில் இருந்து இன்றைய சிந்தனைக்கு:

WORK AS A TEST

Yes, obviously, that is one great utility of work that it tests the nature and puts the sadhak in front of the defects of his outer being which might otherwise escape him

- Sri Aurobindo

"There is no bad work - there are only bad workers. All work is good when you know how to do it in the right way. Everything. And it is a kind of communion. If you are fortunate enough to be conscious of an inner light, you will see that in your manual work, it is as if you called the Divine down into things; then the communion becomes very concrete, there is a whole world to be discovered, it is marvellous."

- The Mother

மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே இருக்கிறது.
நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ?
எத்தகைய சூழ்நிலை, வேலை என்பதல்ல-அதை எப்படிப் பட்ட மனோபாவத்துடன் நாம் செய்கிறோம் என்பதே வேலையின் உண்மையான பயனை தீர்மானிக்கிறது. குப்பை அள்ளுவதானாலும், அரசாட்சி செய்வதானாலும் மாற்றத்தின் அடிப்படை விதி இது தான்.
இந்த ஞானம் வந்த பிறகு வேறென்ன வேண்டும்?