Showing posts with label மெய்ப்பொருள் காண்பதறிவு. Show all posts
Showing posts with label மெய்ப்பொருள் காண்பதறிவு. Show all posts

இப்போது வாசிக்க விரும்பும் புத்தகம்::: Jugalbandi: The BJP Before Modi

வினய் சீதாபதி எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கிற புத்தகம் : Jugalbandi: The BJP Before Modi பெங்குவின் வெளியீடாக நவம்பர் 23 அன்று வெளியான இந்தப் புத்தகம், இதுவரை வெளியான விமரிசனங்களை, தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களில் இது முதலிடத்தில் இருக்கிறது.


RSS, ஜனசங்கம்,பிஜேபியைப் பற்றி நமக்கு எவ்வளவு அல்லது என்ன தெரியும்? இங்கே திராவிடர் கழகம் பரப்புரைப் புத்தக வெளியீடுகளில் சொல்லப்படுகிற மாதிரி நாக்பூர் பார்பான்களுடைய ஆதிக்கம் நிறைந்த பழமைவாத பிற்போக்கு ஹிந்துத்துவ சக்தியா? RSS ஒரு பாசிச இயக்கமா? வினய் சீதாபதி இந்தமாதிரி பூச்சாண்டி காட்டுகிற வேலைகளை அடியோடு , நிராகரித்து இன்றைக்கு நரேந்திர மோடி அமித் ஷா என்கிற இரட்டை எஞ்சின்களால் இயக்கப்படுகிற இயக்கம் எப்படி ஒரு ஜுகல்பந்தியாக (பிரிக்கமுடியாத இரட்டையாக) முதலில் தீன் தயாள் உபாத்யாயா -- சியாமப்ரசாத் முகர்ஜி, அடுத்து அடல் பிஹாரி வாஜ்பேயி--லால் கிஷன் அத்வானி இப்போது நரேந்திர மோடி --அமித் ஷா என்று தொடர்கிற அதிசயத்தைச் சொல்கிற புத்தகமாக இருக்கும் எனத்தோன்றுகிறது.


நூலாசிரியர் தன்னுடைய புத்தகத்தைப்  வீடியோ 43 நிமிடம் அதேபோல பர்கா தத்துடன் உரையாடுகிற இன்னொரு வீடியோ இங்கே   இந்த வீடியோவின் துவக்கத்திலேயே வினய் சீதாபதி, #திக  மண்டூகங்களின் கற்பனையான நாக்பூர் பார்ப்பான்களுடைய ஆதிக்க இயக்கம், பாசிச இயக்கம் என்பது எவ்வளவு தவறானது  எனத் தெளிவாக நிராகரிக்கிறார்.  

Narendra Modi has been a hundred years in the making. Vinay Sitapati's Jugalbandi provides this backstory to his current dominance in Indian politics. It begins with the creation of Hindu nationalism as a response to British-induced elections in the 1920s, moves on to the formation of the Bharatiya Janata Party (BJP) in 1980, and ends with its first national government, from 1998 to 2004. And it follows this journey through the entangled lives of its founding jugalbandi: Atal Bihari Vajpayee and Lal Krishna Advani.

Over their six-decade-long relationship, Vajpayee and Advani worked as a team despite differences in personality and beliefs. What kept them together was fraternal love and professional synergy, of course, but also, above all, an ideology that stressed on unity. Their partnership explains what the BJP before Modi was, and why it won.

In supporting roles are a cast of characters-from the warden's wife who made room for Vajpayee in her family to the billionaire grandson of Pakistan's founder who happened to be a major early funder of the BJP. Based on private papers, party documents, newspapers and over two hundred interviews, this is a must-read for those interested in the ideology that now rules India. இது இங்கே இணையத்தில் புத்தக அறிமுகமாகக் கிடைக்கிற தகவல்.

நூலாசிரியர் இங்கே சில கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.  

நரசிம்மராவ் பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை வினய் சீதாபதி ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருப்பதையும்  நண்பர்கள் அறிந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

2020 ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தப்புத்தகத்தை வாசித்து விட உத்தேசித்திருக்கிறேன்.

மீண்டும் சிந்திப்போம்.    

போகும் திசை மறந்து போச்சு!

2009 ஆம் ஆண்டிலேயே இரண்டு முறை போகும் திசை மறந்து போனதா என்று என்னை நானே விசாரித்துக் கொண்டு பதிவுகள் எழுதினேன். இன்றும் கூட அந்த விசாரணையை என்னிடம் நடத்திக் கொண்டுதான் ஆக வேண்டும் போல இருக்கிறது என்பதனால் இது ஒரு மீள்பதிவு தான்  

போகும் திசை மறந்து போச்சு-இங்கே

பொய்யே வேதமுன்னு ஆச்!சு

வைரமுத்துநீர்த்துப்போய்விடாமல் கவிதையை கவிதையாகவும்லட்சியக் கனவுகளோடும் எழுதின நாட்களில் இளைய ராஜா இசையமைப்பில் உருவான பாடல் இதுகண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில்இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்த ஸ்ரீதர்ராஜன் என்ற இளம் இயக்குனரின் படைப்புக்காகஇளையராஜாவைரமுத்துவின் வரிகள் வெற்று வரிகளாகவே போய் விடாமல் கவிதை வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்த பாடல் இது.

ஸ்ரீதர் ராஜனுடைய நண்பர்கள் இருவர் எனக்கும் நட்பான நாட்களில்இந்தப் படத்தின் பாடல் ஒலிப்பேழையை சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த நாட்கள்அப்படியே ஸ்ரீதர் ராஜனை ஓரிருதடவை சந்திக்கிற சந்தர்ப்பமும்கிடைத்தது.......இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்ஸ்ரீதர் ராஜன்பின்னாட்களில் ஜெமினி கணேசனுடைய மாப்பிள்ளையாகிப் போனார்அவர் பேசின லட்சியம்கம்யூனிசம் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதும் நினைவுக்கு வரும்போது சிரிப்புத் தான் வருகிறது.ஜெமினிக்கு மாப்பிள்ளை ஜெமினி மாதிரியேபெண்ணுக்கு அடிமையாகத் தானே இருக்க முடியும்இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா?

ஜெமினி கணேசனைப் பற்றி பேசும்போது வேறொன்றும் வேடிக்கையாக நினைவுக்கு வருகிறதுமனிதனைப் பற்றிப் பெரிய காதல் மன்னன்பெண் பித்தன்இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையாஉண்மையில்ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன்! ஜெமினியின் சரிதம் எழுத நிறையப்பேர் இருப்பதால், அந்த வேலையை அவர்களே தொடரட்டும்!

இந்த ஒரு தகுதிக்காகவேஜெமினிக்குத் தபால் தலையும் வெளியிட்டுஇந்திய அரசு கவுரவப் படுத்தியது போலிருக்கிறதுபெண்ணடிமைத்தனம் என்று பேசுபவர்கள்பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள்பாவம்!!

காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்குத் தபால் தலைதமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு இல்லையா என்று ஒருத்தர் குமுறியதையும் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பேசியிருக்கிறோம்! சுத்தானந்த பாரதியார் என்ற தலைப்பில் தேடுங்கள்கிடைக்கும்!

ஆங்...எதற்காக இப்போது இதைப் பேச ஆரம்பித்தோம்போகும் திசை மறந்து போச்சுபோச்சாஇல்லியான்னு கொஞ்சம் என்னையே விசாரிச்சுக்கத் தான்


கோவி கண்ணன்அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டங்களில்என்னுடைய ப்ரொபைலைப் பார்த்துவிட்டுவயதுவிவரங்களையும் பார்த்து விட்டுகொடி பிடிப்பதைப் பற்றி எழுதினதில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார்அதுவும்...........

இன்னொரு நண்பர் கபீரன்பன் என்ற பெயரில்கபீர்தாசருடைய ஈரடிக் கவிதைகளை எளிய தமிழில்அவருடைய அனுபவத்தில் அறிந்ததையும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்இந்த மாதிரி முயற்சிகளில் தான்சிந்தனை,ஒரு குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டுவிரிந்துபறந்து ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறதுஎன்னுடைய ஒரு பதிவை ரீடரில் படித்து விட்டுவேறொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதினார்எனக்கு ஒரு விஷயத்தை மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிற மாதிரி எழுதியிருந்ததிலும்.........

போகும் திசை என்ன என்பதைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டி வந்ததுமுதலில் சொன்ன மாதிரி போகும் திசை நெசமாவே மறந்து போச்சா என்னஅப்படியும் போய்விடுமா என்ன என்ற கேள்வியேஇந்தப் பாடலை நினைவுபடுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பித்தது!

"தற்போது தான் (2009இல்) உங்கள் புரொபைல் பார்த்தேன்வயது 55 என்றிருந்ததுஇளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயதுவயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது."

//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடிஅதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்ததுநபர்களின் மீது அல்ல.//

அதையும் படித்தேன்சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்திகர்கள் ஆகிவிடுங்கஅப்போது தான் உலகம் நிலையல்லஉடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)

இது கோவி கண்ணன் சொன்னதுகாயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போலஉலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போலஅவர் சொல்கிற மாதிரி இல்லை?!



கபீரன்பன் சொல்லாமல் சொன்னது வேறு மாதிரி இருக்கிறது!

ரொம்ப போரடிக்கிறது-என்ன செய்யலாம்? என்ற பதிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இப்படிச் சொல்லியிருந்தேன்:

இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போதுஅது சிலநிமிடங்களோசில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: " ஒருமுகப்படுத்திக் கொள்ளவும்ஒன்று சேர்த்துக் கொள்ளவும்என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும்உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது."


கபீரன்பன் said...
August 17, 2009 9:09 AM

//உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //

மிகவும் பொருள் பொதிந்த சத்தியம்அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.

சிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...
August 17, 2009 9:19 AM

ஒரு சராசரி மனிதனாக இருந்துஇதைஉணர்வதும் கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயேஅதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.

"அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது!

வருகைக்கும்என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி!

கபீரன்பன் சொல்லாமல் சொன்னதென்ன என்பதை அவரவர்கள் அனுபவம்அறிவுக்குத் தகுந்தபடி தாங்களே தெரிந்துகொள்ளட்டும் என்பதைமுதலில் ஒரு தனிப்பதிவாக அன்றைக்கு எழுத ஆரம்பித்துஅப்படியே நிறுத்திக் கொண்டேன்.

Evolution என்ற குறியீட்டுச் சொல்லுடன் தேடினால்,இந்தப் பதிவில் ஆறு இடுகைகளில்மேலே சொன்ன முரண்பட்ட இரண்டு கருத்துக்களைப் பற்றி முன்னமேயே பேசியிருப்பது தான் என்பது தெரியும்.

என்னுடைய சொந்த அனுபவங்களைப்பற்றி ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தலைப்பில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

நடைமுறை வாழ்க்கையில்பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்குகொஞ்சம் சிரமப் பட்டுத் தான்வெளியே வர வேண்டியிருக்கிறதுஇந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவுஎன்ற சொல் எப்படி இன்றைக்குஅதன் உண்மையான பொருளில் இல்லாமல்வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோஅது மாதிரி ஆகி விடும்நடைமுறை வாழ்க்கையில்இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவதுசேரிடம் அறியாமலேயே சேர்ந்துஅதிலேயே சிக்கிக் கொள்வதுதான்ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்துகற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வதுஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போலசாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பதுஉயிர்மையின் ஒரு அடையாளமேஇந்த 'இன்னும்இன்னும்' தான்!

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”

பகுத்தறிவுபகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான்இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லைஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதைஅதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறதுதேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள்படிப்பினைகள் என்று நம்மைநமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறதுவிளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையைஅதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

அன்று பார்த்த சாரதியாக வந்தவனேநமக்கும் ஆத்ம சாரதியாக இருந்து கொண்டு நம்மையும்நமக்குத் தெரிந்தோதெரியாமலோநம்முடைய சம்மதத்துடனோஇல்லாமலோவழிநடத்திக் கொண்டிருக்கிறான்.

அவனையே பற்றிக் கொள்கிற தருணமும் வரும்காலைப் பற்றிக் கொள்கிற குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கிற தாயைப்போல அவன் நமக்காகக் காத்திருக்கிறான்!

அப்புறம் வேறென்ன வேண்டும்!




ஸ்ரீராம நவமி! பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி ராமாயணம்

இன்று ஸ்ரீராம நவமி! பத்ராசலத்தில் சீதாராம கல்யாணம் SVBC தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இங்கே வலைப்பதிவில் நேரலையில் ஒளிபரப்புகிற வசதி இவனிடத்தில் இல்லையென்றால் என்ன? பெரியவாச்சான் பிள்ளை என்கிற வைணவ ஆசாரியர் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இருந்து வரிகளை எடுத்து பாசுரப்படி ராமாயணம் என்று முழு ராமாயணக்கதையையும் 9 நிமிடங்களுக்குள் பாராயணம் செய்துவிட முடிகிற படி பரம கருணையோடு அருளிச்செய்திருக்கிறார்! கேட்டுப்பாருங்கள்!


கேட்கிறபோதே பாசுரப்படி ராமாயணத்தை நாமும் சேர்ந்தே சொல்வதற்கு வசதியாக வரி வடிவில் இருந்தால் இன்னும் கொஞ்சம்  வசதியாக இருக்கும் இல்லையா?


ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் அருளிச் செய்த பாசுரப்படி ஸ்ரீராமாயணம்

பால காண்டம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம்இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன்
அலைநீர்க் கடலுள் அழுந்தும் நாவாய்போல்
ஆவார் ஆர்துணை என்று துளங்கும்
நல் அமரர் துயர்தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
மண்உய்ய மண்உலகில் மனிசர் உய்ய
அயோத்தி என்னும் அணிநகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்விளக்காய்க்
கௌசலைதன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம்திகழ் கொண்டலாய்
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து,
வல்அரக்கர் உயிர்உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்
காரார்திண் சிலைஇறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து,
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழுவாளேந்தி வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றிகொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று,
அம்பொன்நெடு மணிமாட அயோத்திஎய்தி
அரியணைமேல் மன்னன் ஆவான் நிற்க;

அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு
கொடிய கைகேயி வரம்வேண்ட
கொடியவள் வாய்க் கடிய சொற்கேட்டு
மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா, காடுறையப் போஎன்று விடை கொடுப்ப
இருநிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து
மைவாய களிறெழிந்து மாஒழிந்து தேர்ஒழிந்து
கலன் அணியாதே காமர்எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகுமாறி
மான் அமரும் மெல்நோக்கி வைதேகி இன்துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டுபின் செல்லக்
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக் குகன்கடத்தக் கங்கைதன்னைக் கடந்து
வனம் போய்ப் புக்குக் காயோடுநீடு கனிஉண்டு
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயின்று
சித்திர கூடத்து இருப்ப, தயரதன் தான்
'நின் மகன்மேல் பழிவிளைத்திட்டு
என்னையும் நீள் வானில்போக்க
என்பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்'
என்று வான்ஏறத்
தேன் அமரும் பொழில்சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணிகொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணியத்
தம்பிக்கு மரவடியை வான்பணையம் வைத்துக் குவலயமும்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடைகொடுத்துத்
திருவிடை திசைக்கருமம் திருந்தப் போய்த்
தண்டகாரண்யம் புகுந்து

ஆரணிய காண்டம்

தயங்கு மறை முனிவர்க்கு
'அஞ்சேன்மின்' என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல் விராதன்உக வில் குனித்து,
வண் தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி,
புலர்ந்து எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்கு நேராவன் என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்த வாளால் ஈராவிடுத்துக்
கரனேடு தூடணன்தன் உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப்புக,
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலைமலி வேற்கண்ணாளை அகல்விப்பான்
ஓர்உருவு ஆய மானை அமைத்து, சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில் தனி இருப்பில்
கனிவாய்த் திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடுபோந்து
வம்புலாம கடிகாவில் சிறையா வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச்சொற்று
அலைமலிவேற் கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றிக்
கங்குலும் பகலும் கண்தியில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கனை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரிதந்த கனிஉவந்து,

கிஷ்கிந்தா காண்டம்

வன்மருவு கவிஅரசன் தன்னோடு காதல் கொண்டு
மராமரங்கள் ஏழும் எய்து
உருந்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர்முடி அரசு அளித்து
வானரக்கோன் உடன் இருந்து வைதேகி தனைத்தேட
விடுத்த திசைக் கருமம் திருத்தித்
திறல்விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செய்ய;

சுந்தர காண்டம்

சீராரும் திறல் அநுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்,
வாராரும் முலைமடவாள் வைதேகி தனைக்கண்டு,
'நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்,
இடவகையில் எல்லி அம்போது இனி இருக்க
மல்லிகைமாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;
கலக்கியமா மனத்தினளாய் மன்னவனும் மறாதொழியக்
'குலக்குமரா, காடு உறையப்போ' என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்,
கூர் அணிந்து வேல்வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்;
சித்திரகூடத்து இருப்பப் பரதநம்பி பணிந்ததுவும்;
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகம் திரிந்துஓடி
'வித்தகனை, ராமவோ, நின் அபயம் ' என்ன
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததுவும்;
பொன்ஒத்த மான்ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
'அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;
ஈது அவன்கை மோதிரமே' என்று
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு,
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்,
இலங்கையர்கோன் மாக்கடிகாவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினம் அழித்து, மீண்டு, அன்பினால்,
அயோத்தியர்கோன் தளிர்புரையும் அடிஇணை பணிய;

யுத்த காண்டம்

கான எண்கும் குரங்கும் முச்வும்
படையாக் கொடியோன் இலங்கை புகலுற்று
அலையார் கடற்கரை வீற்றிருந்து
செல்வ வீடணற்கு நல்லவனாய்
வரிநீர் இலங்கை அருளிச்
சரண்புக குரைகடலை அடலம்பால் மறுக எய்து,
கொல்லை விலங்கு பணிசெய்ய
மலையதனால் அணைகட்டி மறுகரையை ஏறி
சிலைமலி செஞ்சரங்கன் செல உய்த்துக்
கும்பனொடு நிகும்பனும்பட
இந்திரசித் தழியக் கும்பகர்ணன்பட
அரக்கர் ஆவி மாள, அரக்கர்
கூத்தர்போலக் குழமணி தூரம்ஆட,
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள்இரு பதும்போய் உதிரச்
சிலைவளைத்துச் சரமழை பொழிந்து
வென்றிகொண்ட செருக்களத்துக்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
மற்றுமள்ள வானவர் மலர்மழை பொழிந்து
மணிமுடி பணிதர அடியிணை வணங்கக்
கோலத்திருமா மகளோடு
செல்வவீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேர் ஏறிச்
சீரணிந்த குகனொடு கூடி
அங்கண்நெடு மதிள்புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்தித்
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டுநன் மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனோடு இரவும் நண்பகலும்
வடிவிணை இல்லாச் சங்குதங்கு முன்கைநங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்தருளினார்"

|| ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ||

எதுவும் முடியவில்லையா? ராம கோவிந்த ஹரி என்றே  சொல்லிக் கொண்டாவது இருக்கலாமே! கபீர் தாசர் பாடலை எனக்கு கபீரன்பன் என்கிற திரு. உமேஷ் அறிமுகம் செய்துவைத்தார். பாடல் முழுவதும் மனப்பாடம் ஆகவில்லை. ராம கோவிந்த ஹரி என்ற நாமமே மனதில் தங்கிவிட்டது. 

ஸ்ரீராமன் நம் அனைவருக்கும் மங்களத்தை அருள்வானாக. மீண்டும் சந்திப்போம்.  

காரணத்தில் காரியம்! காரியத்தில் காரணம்! நிறைந்திருக்கும் பூரணம்!

காரண காரியத்தில் நிறைந்திருக்கும் பூரணத்தைத் தெரிந்து கொள்வது எப்போதாம்?

Our mind is a house haunted by the slain past,
Ideas soon mummified, ghosts of old truths,
God's spontaneties tied with formal strings
And packed into drawers of reason's trim bureau,

Sri Aurobindo, 
Savitri Bk. II, Canto. XIII, P. 285

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்சில நாட்கள்  மிக விசேஷம்! திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப்படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பிப்ரவரியில்   ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருப்பதால்  பிப்ரவரி 29 ஆம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது. ஆக இந்த வருட பிப்ரவரியில் நாளை பிப்ரவரி 21 ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும், அடுத்து 29 ஆம் தேதி Golden Day என்றும் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், அடியவர்கள் ஹ்ருதயங்களிலும் ஒரு ஆனந்த பரவசம் பெருகுகிற நாட்களாக வருகின்றன. 


இதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. கூடுதல் சிறப்பாக வருகிற ஏப்ரல் 24, புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்த அன்னை நிலையாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு நிகழ்வாகவும் இருக்கிறது என்பது அடுத்தடுத்து வரும் தரிசன நாட்களைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்.

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, 1910 இல் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 பிப்ரவரி 21 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்த , மிரா அல்ஃபாஸா   சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார்.

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார்.

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு நிலையாகத் தங்குவதற்குத் திரும்பிய நாள் ஏப்ரல் 24. அதற்குப் பிறகு 1973 இல் மகாசமாதி ஆகிற வரை ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்ச்சேரியிலேயே இருந்தார்.

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்த போது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும்.


ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை கொஞ்சம்போல ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாமா?

The sadhana of inner concentration consist in:

1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இன்றைய நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்வதோடு  உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

கண்ணன் வந்தான்! கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்!


தேடலின் முந்தையபகுதி இங்கே 

இந்தச் சின்னப் பையன் என்ன என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகிறானே,இத்தனை வயதாகியும் எனக்கு இதெல்லாம் ஒன்று கூடப் புரியவில்லையே என்று எண்ணிக் கொண்டே ஹரி மோகனுக்குக் கண்ணன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.கண்ணனையே ஆர்வம் ததும்பியவனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதைப் புரிந்துகொள் ஹரி மோகன்எந்த ஒரு செயலையும் மேலோட்டமாகவே பார்த்தால் அதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாதுநல்ல செயல்கள்நல்ல பழக்கங்கள் என்று செய்து வந்திருக்கிறாய்அதனால் புண்ணியம் கிட்டும் என்கிற நம்பிக்கை-ஆனால்அதை ஒரு வரட்டுத்தன்மையோடு கூடிய பழக்கமாகவே செய்து வந்ததால்,உண்மையை விலக்கி விட்டு வெறும் சடங்கு என்ற அளவோடு நிறுத்திக் கொள்வதால் வரும் பின் விளைவு இது.உயிரில்லாத சடங்கு என்ன தரும்உனக்கு மகிழ்ச்சி இல்லைஉன்னுடைய செயல்களினால் விளையும் உணர்ச்சிகளின் சக்தியைத் தடுக்க உன்னால் முடியவில்லைஉன்னுடைய இந்த சிறிய அகங்காரத்தைக் கூட உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லை."

"அதே மாதிரி இந்த செல்வரங்கமும் கூட எந்த தீய செய்கைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று செய்தானோ,அவைகளாலும் சந்தோஷமடையவில்லைமாறாகபழக்கங்களின் அடிமையாகவே இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல்இந்த வாழ்க்கையிலேயே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்"

"இது தான் நல்வினைதீவினை என்கிற இருவிதமான தளைகள்அறியாமையோடு கூடிய எண்ணப் பதிவுகளே இப்படிப் பந்த பாசம் ஆகிய விலங்குகளாக ஒருவனைக் கட்டிப் போட்டு வைக்கிறதுவேதனைப் பட வைக்கிறது.ஆனால் இதுவும் வேண்டியதேசெல்வரங்கத்தைப் பார்இந்த பயங்கரமான வேதனை தான்எது உண்மையான உறவுஎது நிலையானதுஉண்மையானது என்பதைத் தேடச் சொல்லிக் கொடுக்கும்இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் ஒரு நேரம் வரும் போது சொல்லிக் கொடுக்கும்."

ஹரிமோகன் ஒரு பெருமூச்சுடன் சொன்னான்: "கண்ணாநீ அழகாகத்தான் பேசுகிறாய்கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறதுஆனாலும்உன்னை நிஜமாக நம்ப முடியவில்லைசுகமும் துக்கமும்மனதின் ஒருவிதமான நிலைதான் என்கிறாய்இருக்கலாம்ஆனால் வெளிச் சூழ்நிலைகள் தானே அதற்குக் காரணமாய் இருக்கிறதுபட்டினியோடு இருப்பவன் மனது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்நோயாலும்வலியாலும் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால் எப்படிஅதை மறந்துஉன்னைத்தான் நினைக்க முடியுமா? "

"முடியும் ஹரிமோகன்முடியும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உனக்குக் காட்டுவதற்காகத்தானே இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்இங்கே பார்என்றான் கண்ணன்.ஹரிமோகனுடைய கண் முன்னால் காட்சி மாறியதுசெல்வரங்கத்தின் வீட்டில் அவன் இப்போது இல்லைஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு யோகி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பதைப் பார்த்தான்அவருடைய காலடியில்ஒரு பெரிய புலி அமைதியாகக் காவலுக்கிருப்பதைப் போலகாத்திருப்பதையும் பார்த்தவுடன்ஹரிமோகனுடைய உடல் நடுங்க ஆரம்பித்ததுபுலியைப் பார்த்தவுடன்யோகியைப் பற்றியோபின்னணியில் தெரிந்த அழக்கான மலைச் சிகரம்,சுகமான தென்றல் வீசும் இனிய சூழல் எதுவும் ஹரிமோகனுக்குப் புலப்படவில்லைதிரும்பி ஓடி விடலாம் என்று திமிறியவனைகண்ணன் சிரித்துக் கொண்டே யோகியின் அருகாமையில் இழுத்துச் சென்றான்.

சின்னக் கண்ணனுக்கு இத்தனை பலமா?

சிறுவனின் பலத்தை வியந்து கொண்டேஅவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்த ஹரிமோகனுக்கு சிலீரென்று ஒரு புதிய அனுபவம்..அந்த யோகியின் மனம் ஒரு புத்தகம் போலத் தன் முன் விரிவதைக் கண்டான்எங்கு பார்த்தாலும் கிருஷ்ணாகோவிந்தாஹே மாதவா என்று நாம ஜபமாகவே இருக்கக் கண்டான்ஒரு பரபரப்புமில்லாமல்அன்புமயமான சூழலில் கண்ணனையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனுபவம்,தனக்குள்ளும் ஊடுருவுவதைக் கண்டான்இத்தனைக்கும்அந்த யோகி பல நாட்களாகப் பட்டினி கிடப்பதாகத் தெரிந்ததுஉடல் வெளுத்துச் சோர்வாகத் தென்பட்டாலும்யோகியின் மனதில் எந்த அலுப்பும் குறையும் இல்லாமல் இருப்பதையும் கண்டான்.

"கிருஷ்ணாஇது என்னஇவர் சாப்பிட்டு பலநாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதேஇவருக்கு யார் உணவளிப்பார்கள்இவரோ அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே?"

"ஏன்நானில்லையாபொறுப்பை என்னிடம் விட்டு விட்டான்அதுதான் கவலையில்லாமல் இருக்கிறான்."

"நன்றாயிருக்கிறது நீ பொறுப்புடன் கவனித்துக் கொள்ளும் விதம்புலிகள்மிருகங்கள் நடமாடும் காட்டில் குடிக்கத் தண்ணீரோபசிக்கு உணவோ இல்லாமல் இங்கே ஒருவன் தவித்துக் கொண்டிருக்கிறான்நீயோ சர்வ சாதாரணமாக அந்தப் பொறுப்பு என்னுடையது என்று சொல்கிறாய்..ஆனாலும் ஒன்றுமே செய்யாமலிருக்கிறாய்கிருஷ்ணாநீ மிகவும் கொடியவன்."

ஹரிமோகன் உணர்ச்சி மேலிடப் பேசுவதைக் குறுஞ்சிரிப்புடன் கேட்ட கிருஷ்ணன், "ஹரிமோகன்இப்போது ஒரு வேடிக்கையைப் பார்க்கிறாயா?" என்றான்அவன் பதில் சொல்வதற்கு முன்னமேயோகியின் காலடியில் சாதுவாக அமர்ந்திருந்த புலி திடீரென்று எழுந்து தன்னுடைய வாலைச் சுழற்றியதில்பக்கத்தில் இருந்த எறும்புப் புற்று உடைந்துஆயிரக்கணக்கில் எறும்புகள்யோகியின் உடல் மீது பரவினபுற்று உடைக்கப் பட்டதில் கிளர்ச்சியடைந்து,அவை யோகியைப் பல இடங்களிலும் கடிக்க ஆரம்பித்தன.

திடீரென்று ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஹரிமோகன் அதிர்ச்சியடைந்தான்ஆனால் அந்த யோகியோ,எறும்புகள் கடிப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல்நிஷ்டையில் இருந்தார். "ப்ரியமானவனேநண்பாஎன்று அவர் காதில் விழும் படி அந்த சிறுவன்மென்மையாக அழைத்தான்அந்தக் குரல்பிருந்தாவனத்தில் கோபிகைகளிடம்ராதையிடம் அன்பொழுகப் பேசுவது போலவே யோகியின் மனம் முழுதும் எதிரொலிப்பதை ஹரிமோகன் ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தான்நிஷ்டை களைந்துயோகி தன்னுணர்வு பெற்ற போதும் கூட,எறும்புகள் கடிப்பதைப் பற்றியோசுரீர் சுரீரென்று வலி உடலில் பரவுவதைப் பற்றியோ கவலைப்படாமல் இப்படி நினைப்பதை ஹரிமோகன் கண்டான்.

"இது என்ன புதிய அனுபவமாக இருக்கிறதேஎன்னுடைய கிருஷ்ணன் ப்ரியமானவனே என்றழைப்பதைக் கேட்டேன்.எறும்பு கடித்தால் இப்படிக் கூட ஆனந்தமயமான அனுபவம் கிடைக்குமா என்ன!" யோகியின் நினைவு பரவசமாகிஉடல் ஆனந்த மிகுதியால் துள்ளஉடல் மேல் ஊர்ந்துகொண்டிருந்த எறும்புகள் தூரப் போய் விழுந்தன.
சில வினாடிகளில்அங்கே ஒரு எறும்பு கூட இல்லையோகியோஏற்கெனெவே பட்ட ஒவ்வொரு கடியும்ஆனந்த பரவசத்தை ஏற்படுத்தக் கை கொட்டி ஆடுவதையும் சிரிப்பதையும் ஹரிமோகன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கிருஷ்ணாஎன்ன மந்திரம் போட்டாய்இது என்ன மாயம்?"

ச்யாமசுந்தரனான ஸ்ரீ கிருஷ்ணன் கை கொட்டி சிரித்துக் கொண்டேசொன்னான், "ஆமாம்இது மாயம் தான்.என்னைவிடப் பெரிய மாயக் காரனோமந்திரவாதியோ எவருமில்லை.நானே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே மந்திரவாதி.இது சொன்னால் உனக்குப் புரியாதுஇது பரம ரகசியம்பார்த்தாயல்லவாஇந்த யோகியை எறும்புகள் கடித்த வேதனையை உடல் முழுவதும் அனுபவித்த நிலையில் கூடஎவ்வளவு சந்தோஷமாக இருந்தார்ஏதேதோ சொன்னாயேபசிதாகம்களைப்பு என்றுஅதையெல்லாம் அவர் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை என்பதையும் நன்றாகப் பார்த்தாயாஇன்னமும் கவனித்துப் பார்என்ன நடக்கிறதென்று."

யோகி மறுபடியும் நிஷ்டையில் அமர்ந்து விட்டார்அவரது உடல்பசி தாகத்தினால் வாடியிருந்தாலும்அவரை அது ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை ஹரிமோகன் கண்டான்.

"நண்பாபிரியமானவனேஇதோ நான் வந்து விட்டேன்." இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹரிமோகன் தனது பக்கத்தில் அந்த மாயக்காரச் சிறுவன் இருக்கிறானா என்று பார்த்துக் கொண்டான்.சிறுவன் அவனருகிலேயே இருப்பதைக் கண்டான்அவனைப்போலவேஅதே மோகனக் கண்ணன் எதிரே கையில் பெரிய தட்டுகுவளையுடன் வருவதைப் பார்த்தான்யோகியும் கண் விழித்துப் பார்த்துமுகமலர்ச்சியுடன் அவனை வரவேற்பதைக் கண்டான்.

"உன்னை ரொம்ப நேரம் பட்டினி போட்டு விட்டேனாஉனக்கு என மேல் கோபம் ஒன்றும் இல்லையே?'

"உன் மேல் கோபமாஎதற்குநீ வரும் போதுஉன்னுடைய தரிசனமே எனக்கு உணவுமற்ற நேரங்களில்உன்னை நினைத்துக் கொண்டிருப்பதே தாகம் தீர்க்கும் சாதனம்பசி தாகம் தீர்க்க நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?"

"உனக்காக சில விசேஷமான பலகாரங்களைக் கொண்டு வர எண்ணினேன்அதனால் தான் நேரமாகி விட்டதுஇங்கே வந்து பார்என்னென்ன கொண்டு வந்திருக்கிறேனென்று?"

"கண்ணாவாஇருவரும் சேர்ந்தே உண்போம்."

மாயக் கண்ணனும்யோகியும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர்பரிகாசமாய்ப் பல கதைகள் பேசினர்.ஹரிமோகன் இந்தக் கட்சியை மிகுந்த ஆச்சச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்உணவு உண்டு முடித்தவுடன்,அந்த சிறுவன்மறைந்து விட்டான்தன் பக்கத்திலிருந்தவனிடம் ஏதோ கேட்க வாயெடுத்த ஹரிமோகன்பக்கத்தில் சிறுவன் இல்லாததையும்கானகம்மலையோகிபுலி எல்லாம் மறைந்து தான் மட்டும் வேறோர் இடத்தில்,வேறோர் காலத்தில் இருப்பதையும் கண்டான்.

ஹரிமோகனுக்கு வியப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆயிற்றுஏனென்றால்அவன் தன்னுடைய வாழ்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான்அவன்அவனது மனைவி,பிள்ளைகள்உறவினர்கள் நண்பர்களோடு இருந்ததைக் கண்டான்ஒரு இயந்திர கதியில்அவன் சாத்திரங்களில் சொன்னபடிபூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தான்

தான தர்மங்கள்பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதுஉறவினர்களுக்குநண்பர்களுக்குச் செய்ய வேண்டியது இப்படி எதிலும் குறைவில்லைஆனால்அதில் உண்மையான அன்பு இல்லாதிருப்பதையும்செய்யப் பட்டவை எல்லாமே ஒரு சடங்குசம்ப்ரதாயத்திகாகத்தான் என்பதைப் பார்த்தபோது தன்னைப் பார்த்தே அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததுமிகவும் உயர்வான ஆன்மிகம் என்று நினைத்திருந்ததுவெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகக் குறுகிப் போனதையும்உண்மையிலிருந்து விலகி வெகு தூரத்தில் இருந்ததையும் பார்த்த போது ஹரிமோகனுக்கு துக்கம் மேலிட்டதுஅந்த இடத்தை விட்டு விலகி இருந்தால் தேவலை என்று தோன்றியதுஉடல் மட்டும் கீழே விழஅவன் வேறு இடங்களில் அலைவதைப் பார்த்தான்.

மிகவும் தாகமெடுப்பது போலத் தோன்றியதுதண்ணீரைத்தேடி வெகுதூரம் அலைந்த பிறகும் தண்ணீர் கிடைத்தபாடில்லைதண்ணீரை குடிப்பது போலதாகமெடுக்கும் போதெல்லாம் புழுதியையே உண்டுவந்ததைப் பார்த்தான்தாகம் தீர்வதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டே போனதையும் பார்த்தான்எங்கு பார்த்தாலும்ஒரே புழுதிபுழுதிமயம்அடஆண்டவனே குடிக்கத் தண்ணீர் கூடத் தர மாட்டாயா?

அலுப்போடுஅவன் நகரத்தின் வேறொருஇடத்தில் இருப்பதைப் பார்த்தான்ஒரே வாழ்த்துமயமாக அந்த இடம் காட்சி அளித்ததுஅடஅங்கே கம்பீரமாக அமர்ந்திருப்பது யார்செல்வரங்கம்செல்வரங்கமே தான்அவனைச் சுற்றி ஒரு கூட்டமே காத்திருந்ததுஒவ்வொருவருக்கும்கை நிறையப் பணம் அளிப்பதையும்அவர்கள் அவனை மனதார வாழ்த்திச் செல்வதையும் பார்த்த ஹரிமோகனுக்கு ஒரே வியப்புசெல்வரங்கம் எப்போதிலிருந்து கொடை வள்ளல் ஆனான்ஹரிமோகன் வாய் விட்டுஉரக்கச் சிரித்தான்அடக் கடவுளே!

பார்த்துக் கொண்டே இருக்கும் போதேசெல்வரங்கம் மனதில் இருந்த அத்தனையும் ஹரிமோகனுக்குத் தெரிந்தன.புகழுக்காகநான்கு பேர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காககாசினாலே நிறையக் காரியம் கை கூடும் என்பதற்காகவே செல்வரங்கம் பணத்தை அள்ளி இறைத்துக் கொண்டிருப்பதும்அவன் மனதில் பேராசையும்,வஞ்சகமும் மண்டிக் கிடப்பதையும் ஹரிமோகன் பார்த்தான்ஒவ்வொன்றும் அவனுள்ளே பேயாட்டம் ஆடிஇன்னும் கொடுஎங்களுக்கு திருப்தி இல்லைஎங்களைத் திருப்தி செய் என்று தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதையும் பார்த்தான்பார்த்துக் கொண்டே இருக்கும் போது காட்சி மாறுவதை ஹரி மோகன் உணர்ந்தான்.

வெவ்வேறு நம்பிக்கைகள்அதன் பின்னே செல்லும் மனிதக் கூட்டங்கள்அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி உருவாக்கி வைத்திருந்த நீதி நெறிகள்தண்டனை முறைகள்ஸ்வர்க்கம்நரகம் இப்படிப் பலவிதமாய்ச் சொல்லப் படுவதையும் ஹரி மோகன் பார்த்தான்யார் யாரோஅவனை இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றதையும்,ஆனால் இந்த இடங்களைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லாமல் விட்டதையும் பார்த்துக் கொண்டே வந்த ஹரிமோகன் பழையபடி தன்னுடைய ஒட்டு வீட்டில்அதே அழுக்குப்பாய்தலையணையில் அமர்ந்திருப்பதை உணர்ந்தான்அப்போதுஇதுவெல்லாம் உண்மையில்லையாவெறும் கனவு தானாஇந்த சந்தேகம் பெரிய கேள்வியாக எழ, "சியாமசுந்தராநான் பார்த்ததெல்லாம் நிஜமா?" என்றான்.

ஷ்யாமசுந்தரன் கருணையோடு அவனைப் பார்த்துவிட்டுச் சொன்னான்,"இப்பொழுதே இரவு அதிக நேரம் ஆகிவிட்டது.இதற்கு மேலும் இங்கே என்னை நிறுத்திக் கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தாயானால்அங்கே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கோள் மூட்டிஎன் அன்னையிடம் தண்டனை வாங்கிக் கொடுக்க ஒரு பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறதுஅனுபவங்களில் தெளிவு தானாகத் தான் வர வேண்டும்.இருந்தாலும்சில உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்கேட்டுக் கொள்.

நீ பார்த்த ஸ்வர்க்கம்நரகம் எல்லாம் கனவுலகைச் சேர்ந்தவைஒரு அனுபவத்திற்கும் அடுத்ததற்கும்இடையில் ஒரு சின்ன இடைவேளைகுட்டித்தூக்கம் அல்லது கனவு மாதிரி.அதைத்தான் ஒரு மனிதன் இறந்தவுடன் ஸ்வர்கத்திற்கோஅல்லது நரகத்திற்கோ சென்று தன்னுடைய கடந்த ஜன்மத்தின் பலன்களை அனுபவிக்கிறான் என்று சொல்கிறார்கள்உனையே எடுத்துக் கொள்உன்னுடைய முற்பிறவியில் சில அறநெறி உயர்வுகளைப் பெற்றிருந்தாய்ஆனால்உன்னுடைய இதயத்தில் அன்புக்கு இடமில்லாமல் போயிற்றுநீ கடவுளையோ,மனிதனையோநேசிக்கவில்லைஅதனால் தான்அந்தப் பிறவி முடிந்ததும்ஒரு இடைவேளை-அதில் உன் மனத்தின் உந்துதல்கள்அதன் விளைவுகளுக்கேற்றவாறு வசித்து வந்தாய்அதுவும் உனக்குப் பிடிக்கவில்லை-எனென்றால் உனது பிராணமய உணர்வு பொறுமையற்றுப் போயிற்று.அடிநாதமான அன்பு எனும் நீருக்காகத் தவித்தாய்புழுதிபடர்ந்த ஒரு நரகத்தில் வசிக்கப் போனாய்.
அதற்கப்புறம்உன்னுடைய புண்ணியங்களை அனுபவித்து முடிந்ததும் மறுபடி பிறந்தாய்அதிலும் கூடஒரு வரட்டுத்தனமான ஆசாரக் கோட்பாடுகளையும்கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்கிற சில தர்மங்களையும் செய்ததைத் தவிரஉதவி கேட்டு வந்த எவருக்கும் உள்ளன்போடு எதுவும் செய்யாமல் போனதன் காரணமாகத்தான்,இந்தப் பிறவியில்உனக்கு இவ்வளவு தேவைகள்மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.இத்தனைக்குப் பிறகும்வழக்கமான புண்ணியங்களை தேடும் செயல்களையே தொடர்ந்து செய்ய விழைவாய் எனில்உன்னுடைய புண்ணிய பாவங்களாகிற இருபெரும் தளைகள்முன்னமே சொன்னேனேஅந்தக் கனவுலக அனுபவத்தால் இன்னமும் வேரோடு அற்றுப் போகவில்லை இன்னும் மீதமிருக்கிறதுமறுபடி மறுபடி கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் அவஸ்தைப் பட்டேயாக வேண்டும்இந்த உலக வாழ்க்கையிலேயேகனவுலகில் அல்லஉன்னுடைய ஆசைகள்ஆர்வத்தின் பலனாலேயே அவை மறைய வேண்டும்.

செல்வரங்கத்தின் கதையைப் பார்முந்தைய பிறவியில் பெரும் கொடையாளியாக இருந்ததால்,ஏராளமானவர்களுடைய இதயபூர்வமான ஆசியினால்கோடிகளுக்கு அதிபதியாய்ப் பிறந்திருக்கிறான்ஆனாலும்,அவனது மனம் இன்னும் பண் படுத்தப் படவில்லைபூர்த்தி செய்யப் படாத கொடிய இயல்புகளைத் திருப்தி செய்யவே,கொடிய எண்ணங்களும்கொடிய செயல்களுடனும் பிறந்திருக்கிறான்மண்ணைக் கொத்திபக்குவப் படுத்துவது போலஇங்கே கொடுமையாகத் தெரிவது கூடப் பக்குவப் படுத்துகிற சாதனம் தான்மண் பக்குவமாய் இருந்தால் தான்விதை முளைக்கும்.அன்பாகிற தண்ணீர் விட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டால் தான்செடி வளரும்பூ பூக்கும்.

இப்போது கர்மவினையின் சட்டங்கள் கொஞ்சமாவது புரிகிறதா?

கர்மவினை என்பது-பரிசுகளோதண்டனையோ அல்ல.

அவரை விதைத்தால் அவரை தான் விளையும்துவரை விதைத்தால் துவரை தான் விளையும்இந்த இயற்கை விதி புரிகிறதல்லவா-அதைப் போலத்தான்நல்ல செயல்களில் இருந்து நன்மை-கொடிய செயல்களில் இருந்து கொடுமை.அது தான் புண்ணியம்-பாவம்இந்த எளிய ஏற்பாடு எதற்காக என்றால்மனமும் இதயமும் சுத்தமாவதற்கும்கொடிய மிருகத்தன்மை அழிவதற்காகவும் இருக்கிறது. பொய்மையிலிருந்து தான் உண்மையைக் கண்டாக வேண்டும்..இருட்டில் இருப்பவன்தான் வெளிச்சத்தைத் தேடியாக வேண்டும்.. பார்த்தாயா ஹரிமோகன்எல்லையற்ற பிரபஞ்ச வெளியில் இந்த பூமிஎனது படைப்பில் ஒரு சிறு பகுதிதான்ஆனாலும் நீங்கள் எல்லோரும் ஒரு உன்னதமான உண்மையைக் கண்டறிவதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள்நன்மை-தீமைபுண்ணிய-பாவம்இப்படி எதிர்மறையான இரட்டைத்தன்மைகளின் பிடியிலிருந்து விடுபடும் போதுதான் கர்மவினை- -அதன் விளைவுகளில் இருந்தும் விடுபட முடியும்.

நீயும் கூட இந்த விடுதலையை நோக்கித்தான் உன்னை அறியாமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறாய்இந்த முயற்சியில்உனக்கு உறுதுணையாக தெய்வீகம் துணையிருக்கும்இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் தான்நீ என் தோழனாக ஆக முடியும்விளையாட்டிலிருந்து விலகிக் கொள்கிறேன்எனக்கு விடுதலை இப்பொழுதே கொடு என்றெல்லாம் கேட்கக் கூடாது.

என்னசம்மதமா?”

ஹரிமோகன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்அவனுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்ததுஎப்படிச் சொல்வதுஎன்ன சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணன்,அவனுடைய இனம்புரியாத யோசனையிலிருந்து எழுப்பினான்: "என்ன ஹரிமோகன்ஏதாவது புரிந்ததா?"

"புரியாமல் என்னகிருஷ்ணாநீ ஏதேதோ பேசி என்னை நன்றாக மயக்கி விட்டாய்இப்போது எனக்குஉன்னை மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும், என்னிடத்திலும் அன்பிருக்கிறது, அது உனக்காகத்தான் அதை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொரு ஆசை இல்லை." இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன்,திடீரென்று ஒரு யோசனை கிளம்ப, "அடப் பொல்லாத பயலேமறுபடியும் நீ என்னை ஏமாற்றி விட்டாய்.என்னென்னவெல்லாமோ சொன்னாயேதீயதை ஏன் படைத்தாய் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல் விட்டு விட்டாயே?" இப்படிக் கேட்டுக் கொண்டே சிறுவனின் கரங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.

சிறுவனோ வெகுலாவகமாகத் தன் கைகளை விடுவித்துக் கொண்டுசற்றே எட்டி நின்று கொண்டான்ஒரு கள்ளச் சிரிப்புடன், "பார்த்தாயாகொஞ்சம் இறங்கி வந்து உனக்குப் புரிய வைக்க வந்தால்ஒரே மணி நேரத்தில் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டு விடலாம் என்று பார்க்கிறாயே! "

"அப்படி இல்லை கிருஷ்ணா......" ஹரிமோகன் சிறுவனை நோக்கி நகர்ந்து வந்தான்.
சிறுவனது முகத்தில் பொய்க்கோபம்அதையும் மீறிய சிரிப்புடன் சொன்னான்:
நகர்ந்து போ ஹரி மோகன்உன்னை எனக்குத் தெரியாதாகொஞ்ச நேரம் முன்பு வரைஇந்தப் பயல் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்கட்டி வைத்து உதைக்கிறேன் என்று கருவிக் கொண்டிருந்தவன் தானே நீஉனக்கே அது மறந்து போய் விட்டதா என்னஅதற்கு பயந்து கொண்டுதானேநான் உன்னிடத்திலிருந்து ஒரு நாலடி தள்ளியே நின்று கொண்டிருந்தேன்?"

ஹரிமோகன் இருட்டில் கைகளைத் துழாவியபடிதேடி வந்துகொண்டிருந்தான்சிறுவனோ இன்னமும் தள்ளியே நின்று கொண்டு சொன்னான்:" இல்லை இல்லைஇந்த திருப்திவிளையாட்டெல்லாம்உனக்கு அடுத்த பிறவியில் தான்."

இப்படிச்சொல்லிக் கொண்டேநீண்ட இருட்டில் சிறுவன் ஓடி மறைந்து விட்டான்.
ஹரிமோகனுக்கு நடந்ததெல்லாம் கனவாநிஜமா என்ற சந்தேகம் எழத் தனக்குத் தானே பேசிக் கொள்ளலானான்.

"அந்த வசீகரமான முகம்புன்சிரிப்புஇது எதுவுமே கனவில்லைநிஜம் தான் என்று தோன்றியதுசின்னப் பையனாக இருந்தாலும்என்ன அழகாகச் சொன்னான்தன் முந்தின பிறவிஸ்வர்க்கம்-நரகம் இரட்டையைப் பார்த்தது இது எல்லாம் வெறும் கனவாக இருக்கவே முடியாது.

என்னுடைய ஷ்யாமசுந்தரன் என்னைத் தேடி வந்தான்என்னுடன் பேசினான்.ஐயோநான் தான் அவனிடத்தில் மரியாதை இல்லாமல் பேசினேன்...அவனைக் கட்டி வைக்கப் போகிறேன் என்றேன்அடிப்பேன் என்றேன்அவனைப் பொய்யன்பித்தலாட்டக்காரன் என்றெல்லாம் ஏசினேன்அது தெரிந்தும் என் பிரபு என்னைத் தேடி வந்தான்,என்னோடு சமமாகப் பேசினான்சிரித்தான்பொய்க்கோபம் காட்டினான்கேள்விகளைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே,என் பிரபு என் கேள்வியிலேயே பதிலாக வந்து விட்டான்கிருஷ்ணாகிருஷ்ணா!"

ஹரிமோகனுடைய மொத்தமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருந்தது

கோவிந்தாஎன் பிரபோஉன்னை மறுபடி காண்பது எப்போது?"

ஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மாத இதழான அகில இந்திய இதழில், [ஏப்ரல் 2002] ஒரு கனவு என்ற தலைப்பில் டாக்டர் மீரா ஷர்மா தமிழில் மொழிபெயர்த்து வெளியான ஒரு வங்க மொழிக் கதையைத் தழுவியது. ஆசிரியர் விவரம் தெரியவில்லை. எப்போதோ படித்தது..மறுபடி கிடைத்தது, இதில் வரும் ஹரிமோகன் நான் தானோ என்ற சந்தேகம் கூட வந்தது. நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே கதையை வாசித்து முடித்தபின் வந்தது. இது 2009 இல் எழுதியதன் மீள்பதிவுதான் நான் ஏன் பிறந்தேன் என்ற தேடலில் மறுவாசிப்புக்காக  

*****