Showing posts with label ஊழலுக்கெதிரான இந்தியா. Show all posts
Showing posts with label ஊழலுக்கெதிரான இந்தியா. Show all posts

எது பொருளோ அதைப்பேசுவோம்! அரசியல் இன்று!

எல்லாப் புகழுமே இசுடாலினுக்குத்தானா? அட போங்கப்பா ! இப்படி எழுதியதை மெய்ப்பிக்கிற மாதிரியே நேற்று உதயநிதி தன்னுடைய பேச்சைக்கேட்டு (?) வாக்களித்த ஜனங்களுக்கு நன்றி சொன்ன காமெடியைப் பார்க்காமல் எப்படி, என்ன அரசியல் பேச ஆரம்பிப்பது?  


,

ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கூட்டத்தில் இருந்து எழுகிற குரல்களை ரசித்து  இடையில் நிறுத்தி நிறுத்திச் சிரிக்கிறார் பாருங்கள், நடிகர் உதயநிதிக்கு நடிப்பு வரவில்லை என்றாலும் standup comedy நன்றாகவே இந்த உரையில் வந்து பொருந்தியிருக்கிறது! 

 
எனக்கு வெறும் காமெடியாக மட்டுமே தெரிந்த இந்தப் பேச்சில் சர்ச்சை ஏதாவது இருந்ததா என்ன? புதிய தலைமுறை சேனலுக்கு மட்டும் அது தெரிந்து, மனுஷ்ய புத்திரனை அழைத்து புதுப்புது அர்த்தமெல்லாம் சொல்ல வைத்திருக்கிறார்கள் என்பது சேனல்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறதோ என்ற கேள்வியின் அடையாளம்! நியாயமாக திருநாவுக்கரசரை அல்லவா அழைத்து நாங்குநேரி தொகுதியை விட்டுக் கொடுப்பது பற்றி உதயநிதி பேசியதற்கு விளக்கம், விவாதம் நடத்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பதே அதிகப்படி. 

முக ஸ்டாலின் எனும் நான் என்று முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்கிற கனவை  உதயநிதி பேசினாலும் பாமக நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு முகநூலில் நக்கலாக இப்படி ஒரு உரையாடலில் கேலி செய்திருக்கிறார்.  
 
Dr. S. Ramadoss 18 மணி நேரம் 
சீதா பாட்டி, ராதாப்பாட்டி (10.06.2019)

‘‘இளமை எல்லாம் வெறும் கனவு மயம் - இதில் 
மறைந்தது சில காலம் மயங்குது எதிர் காலம்’’

ராதா பாட்டி: மாலைப்பொழுதின் மயக்கத்திலே ஒரு கனவு கண்டேன் தோழி...

சீதா பாட்டி: என்னடி... பாட்டெல்லாம் பயங்கரமா இருக்கு?

ராதா பாட்டி: அட நீ வேற அக்கா. பாட்டெல்லாம் இனிமையான பாட்டு தான். ஆனால், நான் கண்ட கனவில் வந்த விஷயம் தான் பயங்கரமானது.

சீதா பாட்டி: என்ன ராதா உளறி கொட்டுற. அப்படி என்ன பயங்கரம் கனவில் வந்தது. ஏதாவது பூகம்பம், சுனாமி வர்றது போன்று கனவு கண்டியா?

ராதா பாட்டி: இல்லை அக்கா. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது போலவும், அதில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது போலவும் கனவு கண்டேன்க்கா.

சீதா பாட்டி: அடப்போடி பைத்தியக்காரி. இது பயங்கரமான கனவு இல்லேடி. பயங்கரமான காமெடி.

ராதா பாட்டி: என்னக்கா சொல்ற...

சீதா பாட்டி: ஆமான்டி... கனவு என்பதே நிஜத்தில் நடக்காதது தான்டி. அதிலும் பார்த்துக்க நீ மாலைப்பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை ஸ்டாலின் பகலில் கண்டாரு, பின்னர் இரவில் கண்டாரு, இப்போது 24 மணி நேரமா கண்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, அவருக்கு அவரே கண்ட கனவே பலிக்கல. இப்போது நீ கனவு கண்டா பலிக்கப் போகிறது. அப்படி ஒரு கொடுமை தமிழகத்தில் நடந்துடாது. பயப்படாதே.

ராதா பாட்டி: இல்லக்கா.... அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியாவது ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போறதா அவங்க கட்சி ஆளுங்களே சொல்லிட்டு திரியுறாங்களே.

சீதா பாட்டி: அட நீ ஒருத்திடி. அவங்க இதை மட்டும் தானா சொன்னாங்க. நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிச்சி ராகுல்காந்தி பிரதமர் ஆகிட்டாருன்னா, ஸ்டாலின் துணை பிரதமர் ஆவாரு, ஒருவேளை ராகுல் பிரதமராக மறுத்து விட்டால் ஸ்டாலினே பிரதமர் ஆகிடுவாருன்னே சொன்னாங்களே. அதையெல்லாம் கேட்டுக் கொண்டே நாங்க ஸ்டடியா இருக்கோம். நீ சாதாரண முதலமைச்சர் கனவை கண்டுவிட்டு இப்படி அலறுகிறாயே!

ராதா பாட்டி: அக்கா.... அப்படின்னா அந்த துயரம் நடந்துடாதே?

சீதா பாட்டி: அட... எவடி இவ. எடப்பாடி பழனிச்சாமி அரசை ஸ்டாலின் கவிழ்த்து விடுவார் என்றால் அதை ஸ்டாலினே நம்ப மாட்டாரே. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டன. கிட்டத்தட்ட 29 மாதங்களில் 29 முறையாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், நாம முதலமைச்சராக வேண்டும்னு ஸ்டாலின் துடிச்சிருப்பாரு. ஆனால், பாருங்க அவரது யோசனையை அவரு கூட எப்போதும் இருக்கும் துரைமுருகனே ஆதரிச்சதில்லையாம்.

ராதா பாட்டி: ஏன்க்கா.

சீதா பாட்டி: என்னடி... இது கூடவா உனக்கு தெரியாது. திமுக எம்.எல்.ஏக்கள் எல்லாம் குலுக்கல் சீட்டில் வெற்றி பெற்றா எம்.எல்.ஏ ஆனார்கள்? 2016ல் திமுக ஆட்சிக்கு வந்து விடும். எப்படியாவது எம்.எல்.ஏ ஆகிவிட்டால் அமைச்சர் பதவி/வாரியத்தலைவர் பதவி வாங்கி கோடிகளை குவிக்கலாம் என்ற எண்ணத்தில் பல கோடி செலவு செய்து வெற்றி பெற்றவர்கள் தான் திமுகவினர். ஆனால், திமுகவால் ஆட்சிக்கு வர முடியாத நிலையில், முழு பதவிக்காலமும் எம்.எல்.ஏ ஆகவாவது இருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆட்சியைக் கலைக்க நினைத்து சட்டமன்றமே கலைக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற பீதியில் தான் அவர்களே இருக்கிறார்கள். அவங்க எப்படிடி ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்வாங்க?

ராதா பாட்டி: அப்ப இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாதா அக்கா?

சீதா பாட்டி: அடியே... அவருக்கு குடியரசு நாளும் தெரியல.... சுதந்திர நாளும் தெரியல. எந்த நாள் எந்த மாதத்தில் வரும் என்பதும் தெரியல. பழமொழியை சரியாக சொல்லத் தெரியல. அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டம் அவரிடம் வந்து ‘‘தளபதி... அடுத்த மாதம் நீங்க தான் முதலமைச்சர்’’ என்று சொன்னால் அதை அப்படியே நம்புறவர் தான் ஸ்டாலின். புரிஞ்சுதா?

ராதா பாட்டி: அடக்கடவுளே.... இப்படிப்பட்ட ஒருவர் ரசிகர் மன்றத்துக்கே தலைவராக இருக்க முடியாதே? 50 வருஷமா கலைஞர் தலைவராக இருந்த திமுகவுக்கு இவரா தலைவர்? என்ன கொடுமை இராதாக்கா?

சீதா பாட்டி: அதுக்கு நாம என்னடி செய்ய முடியும். அது திமுககாரங்க தலையெழுத்து. வரலாறு தெரிந்தவன் இதை நினைத்து வருந்துறான். பொழைக்கத் தெரிந்தவன் தளபதி நீங்க தான் அடுத்த முதல்வர்னு சொல்லி காரியம் சாதிச்சிகிறான்.

ராதா பாட்டி: திமுகவை நினைச்சா பாவமாத் தான் அக்கா இருக்கு

சீதா பாட்டி: சரி... அது இருக்கட்டும். முதல்வர் கனவை வைத்து பாட்டு பாடி தான் இந்த உரையாடலை தொடங்கினோம். இப்ப ஸ்டாலினின் உண்மையான நிலையை விளக்கும் வகையில் அதே பாடலில் உள்ள கடைசி வரியை பாடு. நாம் கலைந்து செல்வோம்.

ராதா பாட்டி: இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம்!  

கனவு காண்பதற்கெல்லாமா தடை விதிக்க முடியும்? 


இன்றைக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய செய்தி இதுதான்! வருமானவரித்துறையில் மட்டுமல்ல, ஜம்மு கஷ்மீர் வங்கியில் அரசியல்வாதிகள் ஆசியுடன் நடந்த ஊழல் முறைகேடுகளின் மீதும் நடவடிக்கை சென்ற வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்னும் தொடர்கிறது.  

எது பொருளோ அதைப்பேசுவதைவிட்டுவிட்டு எங்கெங்கோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதை என்று நிறுத்துகிறோமோ அன்றிலிருந்தே நமக்கும் விடிவுகாலம் என்பதை  எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.
   

இந்திய அரசியல்-எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்?



"ஒவ்வொரு துறையிலும் இந்தியா சீர்படுத்த முடியாத அளவு பழுதடைந்து வருகிறது. இந்த மாபெரும் தேசத்தை வழி நடத்தக் கூடிய எந்தவொரு தலைவரோ, கட்சியோ கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை"

என்ற ஆதங்கத்தோடு வெளிவந்த வார்த்தைகள் திரு தேவனுடையது! ப்ளஸ்ஸில் நடந்த ஒரு விவாதத்தின் பின்னூட்டமாக அவர் எழுதிய வார்த்தைகளின் பின்னால் இருந்த ஏமாற்றம் இப்படியும் வெளிப்படுகிறது.

"அதனால்தான் மூழ்கும் ஓட்டைக் கப்பலில் இருந்து கொண்டு அதனை சரிசெய்ய முயற்சி செய்து சக்தியெல்லாம் விரயம் செய்வதைக் காட்டிலும் நமக்கென ஒரு ஒழுங்கான சிறு படகை தயார் செய்ய முடியும் என்ற நோக்கத்தில்தான் தனித் தமிழ்நாடு பற்றி பேசி வருகிறேன்"

இந்தக் கண்ணோட்டம், வலி, வேதனை எந்த அளவுக்கு சரி?ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் தீர்வு கிடைக்குமா இல்லையா என்பதே இருக்கிறது.

ஒரு வழக்கம், அல்லது அமைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! அதை மாற்றுவதென்பது அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவதில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தோம் என்றால், அப்போது வருவது சலிப்பும், சோர்வும் தோல்வி மனப்பான்மையும் தான்!

மாறாக, மாற்றம் என்பது எப்போதும் ஒரு சிறுபுள்ளியாக ஆரம்பித்து, மொத்தத்துக்கும் பரவும் என்பதைப் புரிந்து கொண்டோமானால், நாம் விரும்புகிற மாற்றத்துக்கு நாம் தான் முதலில் விதை நெல்லாக, களமாக இருக்க வேண்டும், மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும், 
இதுவரை பழகிப்போனதை, உதவாததை உதறுவோம் என்ற முடிவுக்கு வருவதிலும் தான் இருக்கிறது என்பதும் புரியும்

தினமணி  தலையங்கம்: ஏமாற்றம்!


எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் திருத்தங்களைச் செய்யாவிட்டால் - ஒவ்வொரு கட்சியும் இருபது, முப்பது திருத்தங்களை கூறியுள்ளன - மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறுவது சாத்தியமே இல்லை என்கின்ற புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களவையில் நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. ஆகவே மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஐந்து மாநிலஙகளின் தேர்தல் 2012 மார்ச் 4-ம் தேதிதான் முடிவடையும் என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக லோக்பால் மசோதா விவாதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.இதைப் பார்க்கும்போது, ஏதோ திட்டமிட்டு, மிகவும் புத்திசாலித்தனமாக, ஆனால் மக்கள் மத்தியில் யாருமே எந்தக் கட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தப்படும் நாடகம்தானோ இது என்று ஒரு குடிமகனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மாநிலங்களவையில் தற்போது 243 பேர் இருக்கின்றனர். 122 பேர் ஆதரித்தால்தான் லோக்பால் மசோதா நிறைவேறும். 

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் 92 பேர் உள்ளனர். மீதமுள்ள 30 பேர் ஆதரவைப் பெறுவது, ஆட்சிப் பொறுப்பில் உள்ளதும், அனுபவங்கள் நிறைந்ததுமான காங்கிரஸ் கட்சிக்குக் கடினமொன்றும் அல்ல.தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஒருவரையொருவர் காரசாரமாகத் திட்டிவிட்டு, மாநிலங்களவையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக நின்றால், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்கு திரட்டுவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்த விவகாரத்தைத் தேர்தலுக்கு பின்பு- வெற்றியோ தோல்வியோ எதுவான போதிலும் பார்த்துக்கொள்வோம் என்கின்ற ராஜதந்திரமான முடிவால்தான் இப்போதைக்கு லோக்பால் மசோதா வாக்குவாதத்துடன், தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுத் தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லோக்பால் மசோதாவில் எதற்கு அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை கூறியிருக்கிறார். 

"இரண்டரை மாதங்களாக இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விவாதத்துக்குரியவையாக 23 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன. அதில் இரண்டு விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடு சற்று அதிகம் எனலாம். அவை, மத்தியப் புலனாய்வுத் துறையை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது (ஆதரவு 20, எதிர்ப்பு 10) அரசு ஊழியர்களில் சி, டி பிரிவை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது இரண்டும்தான்'' என்கிறார் அவர். 

இதை வைத்துப் பார்க்கும்போது, இப்போது மாநிலங்களவையில் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படுகின்ற லோக்ஆயுக்தா அமைப்பதைக் கட்டாயமாக்குவது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும் என்கின்ற விவகாரமே நிலைக்குழுவில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்று கூச்சல்போடும் அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகளும் நிலைக்குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். நிலைக்குழுவில் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் 10 பேருக்கும் குறைவு. அப்படியிருக்கையில் நிலைக்குழுவில் அதிகபட்சமாக எதிர்க்கப்பட்ட (13 பேர்) விவகாரம் அரசு ஊழியர்கள் சி, டி பிரிவு குறித்தது தான். மாநிலங்களின் உரிமை, அது இது என்று குரல் கொடுக்கும் உதிரி - எதிர்க்கட்சிகள் அனைத்தும் அறைக்குள் பேசும் போது அனுசரிப்பாக இருக்கிறார்கள். அவையில் மக்கள் அறியப் பேசும்போது, கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்து மீண்டும் கூடும்போது, ஆதரிப்பார்கள் அல்லது வெளியே சென்றுவிடுவார்கள். அவைக்குள் இருக்க மாட்டார்கள்.

தேர்தல்முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது லோக்பாலை கொண்டு வந்து விட்டதாகப் பேச வேண்டும். ஆனால், கொண்டு வந்து விட்டதாகவும் இருக்கக்கூடாது. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்த்தால் எப்படி? எதிர்க்கட்சியைக் காட்டிலும் ரொம்ப எதிரிபோல, தோழமைக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் ரொம்ப ஆவேசமாக எதிர்க்கிறது. ஆளும் காங்கிரசும் நிஜமாகவே பயப்படுவதைப்போல நடுநடுங்குகிறது.  

1968 முதல் லோக்பால் மசோதா விவாதிக்கப்படுகிறதே தவிர, நாடாளு மன்றத்தில் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளிப் போகிறது. இந்த முறை நிலைக்குழு வரை சென்று மக்களவையிலும் நிறைவேறி, மாநிலங்கள் அவையில் விவாதம்வரை சென்று முடக்கப் பட்டிருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் வலுவான லோக்பால் அமைப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்பதுதான் அது.

நமக்குக் கோபம் அரசியல்வாதிகளிடம் வரவில்லை. அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், மக்களின் பேராதரவுடன் எழுச்சியை ஏற்படுத்திய "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பும் அதன் வேகமும் தடம்புரண்டுவிட்டதே என்பது தான்! 

நமது ஆதங்கம், ஆத்திரம் எல்லாமே. அண்ணா ஹசாரே குழுவினர் ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தைக் காங்கிரசுக்கு எதிரான போராட்டம் ஆக்கியதன் விளைவாகத் தங்களது நம்பகத்தன்மையை இழந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான் 

இது.லோக்பாலுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் இன்னொரு எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்? அது நிச்சயமாக அண்ணா ஹசாரேயாக இருக்க முடியாது. நமது அரசியல்கட்சிகளாகவும் இருக்க வழியில்லை. இந்த நிலையில், இந்திய மக்கள் இலவுகாத்த கிளிகளாகக் காத்திருக்க வேண்டியது தானா? 


காங்கிரஸ் என்றால் ஊழல்தான்! கேலிப் படங்கள் சொல்வதும் அதையே தான்!

ஊழலுக்கெதிரான இந்தியா என்று அண்ணா ஹசாரே மட்டும் தான் இயக்கம் நடத்த முடியுமா?

ஊழலுக்கெதிரான கேலிச்சித்திரங்கள் என்று நாங்களும் நடத்துவோம்ல என்று ஒருத்தர் மிகவும் முனைப்பாக இருக்கிறார் போல! மின்னஞ்சலில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கேலிச் சித்திரங்களில் ஒரு சில என்னுடைய மின்னஞ்சலுக்கும் வந்த
ன. கேலி தானே என்று ஒதுக்கி வைத்துவிட்டுப் போக முடியாதபடி, படங்களில் இருக்கும் சில யதார்த்த நிலைகள் யோசிக்கவும் வைத்தன.
ப்ரஷ்டமேவ ஜயதே! லஞ்சமே ஜெயிக்கும்! 

என்கிறது இந்த முதல் படம்! அசோக ஸ்தூபியில் இருக்கும் சிங்கங்கள், நேர்மைக்கு அடையாளம் என்றால் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு ஓநாய்களைத் தவிர வேறென்ன சரியான பொருத்தமாக இருக்க முடியும்? அப்புறமென்ன!! இப்போது கடைப்பிடித்து வரும் கொள்கையை லஞ்சமே ஜெயிக்கும் என்று வெளிப்படையாகவே பிரகடனப் படுத்தி விட வேண்டியது தானே!


தேசிய விலங்காக டைனசார் காங்கிரசைத் தவிர வேறெது பொருத்தமாக இருக்க முடியும்! 
குல்லா! காங்கிரஸ் கள்ளா!

தேசீயப்பறவையாக, பிணம் தின்னிக் கழுகு!  
சோனி(யா)காங்கிரசுக்கும், அரசுக்கும் இதை விடப் பொருத்தமாக வேறொன்று கிடைக்குமா? போபால் மக்களை சாட்சியம் கேட்டுப் பாருங்கள்!


முதலில் இது சுத்தமாக இருந்தால் அல்லவோ, மற்றதும் சுத்தமாக இருக்கும்! சுத்தம் செய்யப் படவேண்டியது முதலில் இந்தக் கழிப்பறையைத் தான்!

தேசீயக் கழிப்பறை! 

தேசீயப் பாட்டு! 
 ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி!



தேசீய விளையாட்டு!  
வில்லு அம்பு ஓல்ட் பேஷன்!கேடி ப்ரதர்சைக் கூப்பிடுங்க! புதுசா என்ன விளையாட்டுன்னு தெரிஞ்சுக்கலாம்!


ஊழலே உணவாக! ஊழலே சுவாசமாக! அதுதான் காங்கிரஸ்!


தேசீய பானம்! அக்கமாலா, கப்சி கதை கேட்டு என்ன புண்ணியம்?
 
அரசியல் அட்டைகளுக்கு மக்களின் ரத்தம் தான்  தேசீய பானம்!


தேர்தல் தானே தேசீயத் திருவிழா! 
அன்னிக்கு ஒருநாள் மட்டும் ஓட்டுப் போடற மகாஜனங்கள் எல்லாம் இந்நாட்டு மன்னர்! அப்புறம் "வானளாவிய அதிகாரம்" எல்லாம் யாருக்காம்?

போகும் திசை மறந்து போச்சு! - இங்கே
பொய்யே வேதமின்னு ஆச்சு!

பொய்யும் புரட்டும் ஆட்சிக் கட்டிலில்.. இதில் வாய்மையே எங்கிருந்து வெல்லுவது?
 
தேசீய ஜோக்குன்னா அது இதுதான்!

முதுகெலும்பில்லாத காங்கிரஸ்காரனை
ஆட்சிக் கட்டிலில் ஏத்தி வச்சா - தெருவில்
போகிற நாய் கூட காலைத் தூக்கி அசிங்கம் செய்யும்!

கசாப்- தேசீய விருந்தாளி!


 
ஒன்றே சொல்வீர் ! அதையும் உரக்கச் சொல்வீர்!
 

காகிதப்பூக்கள் மணக்காது! காங்கிரஸ் ஆட்சி உதவாது!
 
கவைக்குதவாத காங்கிரசைத் தூக்கி எறிய உறுதி கொள்வீர்! 


சாண் ஏறி முழம் வழுக்கும் கதை!ஊழலும் இந்திய அரசியலும்!



ஓரடி முன்னால், ஈரடி பின்னால்!

லெனினுடைய வார்த்தைகள் இவை!இங்கே நம் பக்கத்தில் சாண்  ஏறி முழம் சறுக்குவது என்போமே அது மாதிரி!

லோக்பால், ஜன லோக்பால் என்று மாற்றி மாற்றிக் குழப்பிக் கொண்டே கடைசியில் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு, ஒரு உப்புக்குச் சப்பாணி மசோதாவைக் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு அரசியல் சாசன அந்தஸ்து தரும் வடிவம் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்கள் அவையில் இன்றைக்கு மதியம் தாக்கல் செய்யப் படுவதாக இருந்த இந்த லோக்பால் மசோதா, நாளை மாநிலங்கள் அவையின் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களின் அவையில் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாத மத்தியில் ஆளும் கூட்டணி அரசு,கேள்விக்குரிய எல்லாவிதமான வழிமுறைகளையும் கையாளத் தீர்மானித்திருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன.இந்த மசோதா மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப் பட்டால், கடைசிக் கட்டமாக, மக்களவை, மாநிலங்கள்அவை இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்கிறதா  இல்லையா என்ற கட்டத்தை நோக்கி மசோதா போய்க் கொண்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அண்ணா ஹசாரே குறைப்பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு வலுவான ஜன லோக்பால் அமைப்பை காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியுமே ஏற்கத்தயாராக இல்லை என்பது மிக வெளிப் படையாகவே தெரிகிறது. அதை மறைப்பதற்கு எந்த அரசியல் வாதியுமே பிரயாசைப் படவில்லை! மாறாக, உன்னாலே உன்னாலே என்று மற்றத் தரப்பைக் கைகாட்டித் தாங்கள் தப்பித்துக் கொள்ளப்பார்ப்பதாகவே, திருத்தங்கள், ஏற்கப்பட்டதும் நிராகரித்ததும் குரல் வாக்கெடுப்பிலேயே அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்ட காட்சியை மக்களவையில் பார்க்கமுடிந்தது. 

இந்த லோக்பால் மசோதாவின் கதி எப்படி இருந்தாலும், ஆளும் ஐ மு கூட்டணிக் குழப்பம் இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நாடாளுமன்றத்துக்கு இன்னொரு இடைத்தேர்தலை விரும்பாத கட்சிகள் அத்தனையும் இப்போதே ஒரு இடைத்தேர்தலை சந்தித்தால்தான் தப்பிப் பிழைக்க முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டனவோ என்றொரு சந்தேகமும் வலுவாக எழ ஆரம்பித்திருக்கிறது.

சென்ற ஆகஸ்ட் நிலவரப்படி, இந்தப்பக்கங்களிலேயே ஏற்கெனெவே பேசியிருந்ததைப் போல, உடனடியாகத் தேர்தல் என்று வந்தால், பிஜேபிக்குத் தான் சாதகமாக இருக்கும் என்றிருந்தது. இப்போது, பாரதீய ஜனதா கட்சியைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை அல்லது அசட்டுத் துணிச்சல் காங்கிரசுக்கும் வந்திருப்பதாகவே செய்திகள் சொல்கின்றன. தவிர, அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சோனியா போயிருந்த தருணங்களில்  அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு எக்கச்சக்கமாகப் பணிந்து போய் விட்டதாகவும், இப்போதாவது நிமிர்ந்து நின்று தேர்தல்களில் அண்ணாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இத்தாலிய மம்மி தைரியமாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

நாடாளுமன்றம் தான் எதையும் முடிவு செய்யும்! நாங்கள் அண்ணா ஹசாரே போராட்டத்தைக் கண்டு ஒன்றும் பயப் படவில்லை என்று காக்க காக்க கனகவேல் காக்க என்று அரண்டவன் கந்தர் ஷஷ்டி கவசத்தைக் குளறித் தடுமாறி ஒப்பிப்பது போல மத்திய அமைச்சர்கள் குழற ஆரம்பித்திருப்பதே அவர்கள் எவ்வளவு பயந்து போயிருக்கிறார்கள் என்று காட்டிக் கொண்டிருக்கிறது. 


போதாக்குறைக்கு, ஊடகங்கள் தொடர்ந்து அண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆளே சேரவில்லை, ஜனங்களுடைய ஆதரவு குறைந்து போய் விட்டது என்று ஊதிக் கொண்டிருந்தாலும், சிறை நிரப்பும் போராட்டத்துக்குக் கிட்டத் தட்ட ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்திருப்பதாக வெளி வந்திருக்கும் செய்திகள்  ஜனங்களுடைய மனதில் ஊழலுக்கு எதிரான நெருப்பு கனன்று கொண்டிருப்பதைக் கவனிப்பார் எவருமில்லை. 

இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து திரட்டினாலும் கூட ஒருலட்சம் தன்னார்வலர்களை சிறை நிரப்பும் போராட்டத்துக்குத் தயார் செய்ய முடியாது என்பதை ஏனோ வசதியாக மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள்.

வருகிற மே மாதத்திற்குள் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் காங்கிரசின் அசட்டுத் துணிச்சலை சோதிப்பது மாதிரி நடக்க இருக்கின்றன. அந்த ஐந்திலும் மிக முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் மே மாதம் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் தான் இருக்கும். அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு அதன் பின் யோசிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நினைத்திருக்குமேயானால்,உணவுப்பாதுகாப்புச் சட்டம், இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு, பெயரளவுக்கான லோக்பால் மசோதா இப்படி எல்லாவற்றிலும் அவசரப்பட்டிருக்க வேண்டியதே இல்லை.

கூடா நட்பு என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரசைச் சொன்ன மாதிரி, காங்கிரசும், கூட்டணிக் கட்சிகளின் அதிகரித்து வரும் நிர்பந்தங்களை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. முக்கியமான அமைச்சர்கள் மீது எழுந்திருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்கள், எதிர்க்கட்சிகள் வாயை அடைக்க முடியாமலும், நாடாளு மன்றத்தை நடத்த முடியாமலும் நித்யகண்டம் பூர்ணாயுசு என்று ஐந்து ஆண்டுகளை ஓட்டுவது இனி முடியாது என்று காங்கிரஸ் தத்தளிக்கிறது.

தவிர, ராவுலுக்குப் பட்டம் சூட்ட வேண்டிய வேளை வந்து விட்டது என்று தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இத்தாலிய மம்மி முடிவுக்கு வந்திருக்கலாம்! எது எப்படியானாலும்,பல விசித்திரமான பிராணிகள், திசைக்கொன்றாக ஓடும் ஜந்துக்களை வைத்து வண்டி ஓட்டுவது போல இனிமேலும் கூட்டணி அரசை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார்களானால், அது இயற்கையானது தான்! 

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறதா என்றால், அப்படி ஒரு அறிகுறியும் தெரியவில்லை. இன்றைக்கோ, மே மாதமோ தேர்தல் எப்போது வந்தாலும் மாயாவதியின் பி எஸ் பி கட்சிதான் முன்னால் இருக்கிறது. முலாயம் சிங் யாதவ் அடுத்த இடத்தைப் பிடிக்கலாம்! சரண்சிங்கின் மகன் அஜித் சிங்கை கூட்டணிக்குள் சேர்த்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கியதில். முலாயம் சிங் யாதவுக்கு விழும் வாக்குகளைப் பிரிக்கலாம். அதுபோக மைனாரிடிகளுக்கு இடஒதுக்கீட்டில்உள் ஒதுக்கீடு செய்திருப்பதில் முஸ்லிம் ஓட்டுவங்கியைக் கொஞ்சம் வசப்படுத்தி விடலாம் என்று காங்கிரஸ் போடும் கணக்கு முற்றிலும் தப்புக் கணக்காகவே ஆகி விடுகிற வாய்ப்புத்தான் இப்போதைக்குத் தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியை இந்திய அரசியலில் இருந்து வெளியேற்றினால் ஒழிய இந்த தேசத்துக்கு விடிவு இல்லை! வேறெந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் வெளிப் படையாக இருக்கிறதா, கிழடு தட்டிப் போன தலைமை இல்லாமல் இருக்கிறதா, வாரிசு, குடும்ப அரசியலுக்கு இடம் கொடுக்காததாக இயங்குகிறதா என்ற கேள்விகள், வடிகட்டும் காரணிகளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

தலைவர்கள் வழிகாட்டுவதற்குத்தான்! நம் தலைமேல் ஏறி மிதிப்பதற்கு அல்ல! மக்கள் குரலை செவி மடுத்துக் கேட்கிறவர்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்! ஓட்டுப் போட்ட ஒருநாளுடன் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது முடிந்து விட்டது, வானளாவிய அதிகாரம் எங்களுக்குத்தான் என்று சவடால் பேசும் எவரையும் நிராகரிக்கும் துணிவு, உரிமை வேண்டும்!

உரிமையும் சுதந்திரமும் இலவசங்களில் கிடைக்காது, தானாகவும் வராது!

எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்? 


எப்போது விழித்துக் கொள்ளப்போகிறோம்?


சண்டேன்னா மூணு! ஊழலுக்கெதிரான இந்தியாவும் சால்வை அழகரும்!



சென்னையில் அண்ணா ஹசாரே கூட்டத்துக்குத் திரளாக வந்திருந்த கூட்டம் இது. புகைப்படத்துக்கு நன்றி: ஹிந்து நாளிதழ் 


உறுதியான லோக்பால் அமைப்பு இருக்குமேயானால் சிதம்பரம் ஜெயிலுக்குள் இருந்திருப்பார் என்றார் அண்ணா.

 ஊழலுக்கெதிரான இந்தியா! 

இது அண்ணா ஹசாரே, அவரைப் பின்பற்றுகிறவர்களுடைய முழக்கம்
நம்மால் என்ன செய்ய முடியும் என்று சோம்பிக் கிடக்கிறவர்கள் மத்தியில் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று அண்ணா ஹசாரே போன்றவர்கள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கி போராட்டங்களை நடத்தி வரும் அன்னா ஹசாரே, சென்னைக்கு வந்த போது, பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று காலை பெங்களுருவிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., மே 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தன. ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி என்றும், இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று பெரியார் தி.க.வினர் குற்றம்சாட்டினர்.

அர்த்தமிழந்து போன  வார்த்தைகள் வெற்றுக் கோஷங்களிலேயே இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த மாதிரியான அமைப்புக்கள், ஆசாமிகள்  கிளம்பிக் கொண்டிருப்பார்கள்?

எனக்கு மலையாளம் தெரியாது!இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மலையாளம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உண்டோ!
 
சால்வை அழகர் பானா சீனா விவகாரம் நாளொரு பூதம் பொழுதொரு வதந்திகளால் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது,  ராசா மட்டுமே இவ்வளவு பெரிய ஊழலைத் தனியொரு ஆளாகச் செய்திருக்க முடியுமா என்று கருணாநிதி ஆரம்ப நாட்களில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதை இப்போது அவரே மறந்திருப்பார்!! ஆனால் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆராசாவும் சிதம்பரமும் கூட்டாகத்தான் இந்த விவகாரங்களில் ஈடு பட்டிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறார். நிதித்துறையில் இருந்து ஒருவர், சிபிஐ அதிகாரி ஒருவர் ஆக இருவரை சாட்சிகளாக அழைக்கக் கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கறிஞராக தன்னுடைய கட்சிக்காரர் ஒருவர் மீது உள்துறை மந்திரியாகவும் இருந்து அதீதக் கரிசனம் காட்டியதாக ஒரு தகவல் கசிந்து நாடாளுமன்றத்தில் ஏகத்துக்கும் அமளி. வேடிக்கை என்னவென்றால், இந்த விவகாரத்தில், இதைக் கசிய விட்டதே சிதம்பரத்தின் மீது அதீதமான அன்பு கொண்ட இன்னொரு அமைச்சர் சகா தான் என்றும் தகவல்கள் சொல்கின்றன.


தேக்குமரம் வளர்ப்பு, பாக்குமரம் வளர்ப்பு என்று அனுபவம் மிக்க நடேசன்கள் ஜனங்களிடமிருந்து பணத்தை சுருட்டி, சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும்  கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!

தன்னுடைய செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக, வருகிற 26 ஆம் தேதி சென்னைவருகிற பிரதமரை, அன்று மாலையே காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள ஏற்பாடும் செய்திருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொட்டவர்கள் ஒவ்வொருவரையும் படா
த பாடு படுத்திக் கொண்டிருக்கிறது.அவ்வளவு ராசியான ஊழல்!

கேடி பிரதர்ஸ் மட்டும் தான் இது வரை திருட்டுப் பூனைகள் மாதிரி, எந்த செய்தியும் வெளிவராதபடி, கமுக்கமாகக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதுவும் கூட ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றே தோன்றுகிறது.பானா சீனா உள்ளே போக வேண்டுமென்றால் முதலில் போகவேண்டியது தயாநிதி! 


போகிற போக்கைப் பார்த்தால், அப்படி ஒன்றும் அவசியமில்லாத படிக்கு, சால்வை அழகர் தானே முந்திக் கொள்வார் போல இருக்கிறதே!