எல்லாப் புகழுமே இசுடாலினுக்குத்தானா? அட போங்கப்பா !

வெற்றிக்கு சொந்தம் கொண்டாட ஆயிரம் பேர் இருந்தாலும் தோல்விக்கு சொந்தம் கொண்டாட எவருமில்லை என்பதை 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்திய மாதிரி வேறெந்தத் தேர்தலிலாவது நடந்திருக்குமா என்பது சந்தேகமே! இடதுசாரிகளின் சரிவைப் பலமுறை இங்கேயும் இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிவந்தாலும், நண்பர்கள் எவரும் இடதுசாரிகளைப் பொருட்படுத்தாத மாதிரியே அந்தப் பதிவுகளையும் பொருட்படுத்தாத மாதிரித்தான் தெரிகிறதோ?  


  
வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் இங்கே உரையாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்! போராட்டங்களே வாழ்க்கை என்றிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒருசிலர் சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று ஒதுங்கிய கதையை,
இடதுசாரி இயக்கம் சீரழிய ஆரம்பித்த விதத்தை ஒருவாறாக அனுமானிக்க முடிகிற ஒரு பேச்சு. ஏன் நல்லகண்ணு ஒருவர் தாண்டி இன்னொரு நல்ல இடதுசாரியை வலதுகம்யூனிஸ்ட் கட்சியில் காணமுடியவில்லை என்பதைக் கூட உங்களால் புரிந்துகொள்ள முடியலாம்! இசுடாலின் உபயத்தில் இரண்டு எம்பி சீட் ஜெயித்துவிட்ட பெருமிதத்தில், கம்யூனிஸ்டுகளால் சாதிக்க முடியாததை இசுடாலின் சாதித்துவிட்டார் என்கிறார் தா. பாண்டியன்! அப்படி என்ன சாதித்துவிட்டார் இசுடாலின்?

‪திமுகவின் வெற்றியால் எந்த பயனும் இல்லை என்று சொல்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கும் ஜனநாயத்திற்கும் எதிரானது ‬
‪- கே. பாலகிருஷ்ணன் சிபிஎம் ‬

‪ஷோல்டரை இறக்குங்க தோழரே. இவ்வளவு பெரிய வெற்றியால எந்த பயனும் திமுகவுக்கு இல்லைனுதானே சொல்றோம்
இப்படியெல்லாம் எல்லாப்புகழும் இசுடாலினுக்கே என்று சொல்லிக் கொண்டிருப்பதாலோ என்னவோ ராகுல் காண்டி முருங்கை மரத்திலிருந்து இறங்க மறுக்கிறார் போல! மீண்டும் காங்கிரஸ் கமிட்டி கூடித்தான் பஞ்சாயத்தை முடிக்க வேண்டுமோ?! 

      

இன்றைய சிறந்த கருத்துக் படமாக 

மீண்டும் சந்திப்போம். 
     

5 comments:

 1. பாவம் தா.பாண்டியன் அவர்கள். முன்பு அதிமுகவுக்கு அடித்த ஜால்ராவை இப்போது திமுகவுக்கு அடிக்கவேண்டிய நிலைமை. அவர் 'திமுக கட்சிக் கறை' போட்ட வேஷ்டியா உடுத்தியிருக்கிறார்?

  இன்னொன்று, மதம், சாதி கிடையாது என்று சொல்பவர்கள், தாங்கள் ஒரு மதத்தில் இருப்பதும், தன் சாதி ஆட்களையே பதவிக்கு வரவைப்பதும் மட்டும் சரியா?

  ஸ்டாலின் ஒரு சீட் கொடுத்திருந்தாலும் இவர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.கொஞ்சம் அதிகமாக தானம் செய்தார் என்பதனால் ஸ்டாலினை இப்போது புகழ்கிறார் தா.பா அவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. கம்யூனிஸ்ட்டுகள் சீரழிந்தது எப்படி என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் தா பாண்டியன்

   Delete
 2. 'மந்திரி பதவிக்காக சக்கர நாற்காலியில் தில்லியில் காத்திருந்தது', 'திகார் ஜெயில் முன்பு கருணாநிதி மகளைப் பார்க்க காத்திருந்தது", "கடற்கரையில் இணை துணையுடன் ஏர் கூலர் துணையாக படுத்திருந்தது","3 பேர் மதுரை தினகரன் பத்திரிகை ஆபீஸில் கொளை செய்யப்பட்டதற்கு திமுக பதில் சொல்லியே ஆகவேண்டும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்" என்று கலாநிதி மாறன் கர்ஜித்த காணொளி, ராஜபக்‌ஷேவிடம் பல்லிளித்து பரிசில் பெற்ற கனிமொழி, திருமாவளவன் படம், 'திமுகவையும் ஸ்டாலினையும் கேவலமாக விமர்சித்த வை.கோ காணொளிகள்" இவையெல்லாம் காலம் உள்ளளவும் இவர்களின் யோக்கியதையைச் சொல்லிக்கொண்டே இருக்கும். ஹாஹா

  ReplyDelete
  Replies
  1. நாம் என்ன சொன்னால் என்ன? திமுகவில் உள்ளவர்கள் வெட்கப்பட்டுத் திருந்தப்போகிறார்களா என்ன? ஊடகப் பொய்களில் வெற்றியை ஈட்டிவிடலாம் என்று திட்டமிட்டே சாதித்திருக்கிறார்கள். தமிழேண்டா ஜனங்களும் ஏமாந்து வாக்களித்திருக்கிறார்கள்.

   Delete
 3. Deva Gowda and Tejaswi Yadhav are not there. Already dried and ironed ?

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!