Amethi Election Results 2019 Live Updates: Smriti Irani Leads Over Rahul Gandhi by 19000 Votes at 4:24 PM என்கிறது CNN News 18 அனேகமாக நேரு பரம்பரையின் மப்பைக் குறைக்கிற தேர்தலாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் இருக்கலாம். இருக்கவேண்டுமென்பதே என்னுடைய பிரார்த்தனை.
வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுகிற முன்னோட்டமாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமையவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று எழுதும் போதே என் அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா இப்படிக் கலகக் குரல் எழுப்புகிறார்.
Looks like five more years of Achche Din for cartoonists! 😁
அடுத்த 2 மணிநேரத்தில் இவர் இப்படியும் படம் வரைந்தார்.
PGurus தளத்தில் அக்ஷய் சந்தர் எதிர்க்கட்சிகளுடைய EVM பூச்சாண்டியை நக்கலாக இப்படி வரைந்திருந்தார். அருமை!
சதீஷ் ஆசார்யா போன்ற கார்டூனிஸ்டுகளுக்கு சண்டியர்த் தனம் செய்கிற காங்கிரஸ், மம்தா, இடதுசாரிகள் பற்றி ஒரு கவலையும் இல்லை. நினைப்பெல்லாம் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பு மீதுமட்டும் தான் என்றால் என்ன சொல்வது? என்ன செய்வதாம்?
முகநூலில் பிஜேபியின் K T ராகவன் EVM என்றால் என்ன என்பதாக ஒரு கார்டூனைப் பகிர்ந்திருந்தார். வரைந்தவர் பெயர் சரியாகப் புலப்படவில்லை. மோர்காரியாவா...??
a SOLID SLAP on my face ..as More ABUSE..TROLL..and HUMILIATION come my way..I WILL STAND MY GROUND ..My RESOLVE to FIGHT for SECULAR INDIA will continue..A TOUGH JOURNEY AHEAD HAS JUST BEGUN ..THANK YOU EVERYONE WHO WERE WITH ME IN THIS JOURNEY. .... JAI HIND
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு செம அடிவிழுந்தது என்ற சொரணையாவது இருக்கிறதென்பது புரிகிறது. ஆனால் மய்யம் கமல் காசருக்கு அதெல்லாம் இருக்குமா என்பது ஒரு 9ரூபாய் நோட்டு மாதிரியான கேள்வி.
சுமந்த் சி ராமன் பொதிகையில் Sports Quiz நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இருந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்! அரசியல் விமரிசகர் ஆனது கூடத் தவறில்லை! வட இந்திய அரசியலைக் கரைத்துக் குடித்த பண்டிதர்போல உபி, மே.வங்க வாக்காளர் மனநிலையை கணிக்கமுயன்று கோமாளிப்பட்டம் வாங்கிக் கொண்டிருக்க வேண்டாம்!
பிம்பிலிக்கு பியாப்பி....!!!
இந்த மேதாவி பேசிய காணொளி ஒன்றைப் பதிவில் போட்டு விட்டு எங்கள் ஸ்ரீராம் வந்து சுமந்த் ரொம்ப நீ .......ளமாகப் பேசுகிறார் என்று கமெண்டியிருந்தார்! இங்கே இயக்குனர் ராம் கோபால் வர்மா தெலுகு தேசக் கட்சிக்கு முடிவுரையே எழுதிவிட்டார். சந்திரபாபு நாயுடு ஊரறிந்த பிசாசு என்பதனாலேயே ஜெகன் மோகன் ரெட்டி தேவதையாகி விட மாட்டார்! மேலதிக விவரங்களுக்கு யாத்ரா திரைப்பட விமரிசனம் பார்க்கவும்.
Name: TDP
Born : 29th March 1982
Died : 23rd May 2019
Causes of death : Lies , Back Stabbings , Corruption , Incompetence , Y S Jagan and Nara Lokesh
The lead in #Amethi has now crossed 30,000. #SmritiIrani . It's becoming clear
is creating history in #Amethi . #VijayiBharat
நடப்புச் செய்திகள் என்னவென்று ஒரு ரவுண்ட் வந்தாயிற்று.
மீண்டும் சந்திப்போம்.
தற்கொலை செய்துகொள்வேன் என்று ஒருவர் சென்ற எலெக்ஷனில் கர்னாடகாவில் சபதம் போட்டு பின்பு அசடுவழிந்தார். சித்து கதையும் அப்படித்தான். ராகுல்தான் அடுத்த பிரதமர் என்று சொன்ன ஸ்டாலின் என்ன செய்வாரோ? ஒருவேளை, தலைநகருக்கு தன்னைப்போல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளிநடப்பு செய்ய ஒரு தலைவரை தயார் செய்து அனுப்புவாரோ?
ReplyDeleteஇசுடாலின் என்ன செய்வார் என்பது ரெண்டு முருகன் வகையறாவுக்கே தெரியுமோ என்னவோ? நீங்களானால் என்னைக் கேட்கிறீர்கள்!!
Delete//My RESOLVE to FIGHT for SECULAR INDIA will continue..// - அடடே.... பிரகாஷ்ராஜுக்குத்தான் செக்யூலர் இந்தியா மேல எவ்வளவு பாசம்.... சொந்த வீட்டிலேயே செக்யூலாரிசத்தைப் பின்பற்ற முடியாதவர்.... ஊருக்கு உபதேசம்... கொஞ்சம் புகழ் வந்துவிட்டால் இந்த சினிமாக்காரங்களுக்கு தாங்கள் பிரதமர் பதவிக்கு லாயக்கு என்ற மமதை வந்துவிடுகிறது...
ReplyDeleteஇந்தக்கிறுக்கு வெளிப்படையாகவே கௌரி லங்கேஷ் விவகாரத்திலிருந்து தன்னுடைய மூக்கை எல்லாத் திக்குகளிலும் நுழைத்துக் கொண்டிருக்கிறது. அளவுக்கு மீறிய #கருத்துசுதந்திரம் இப்படி விருதாப்பேச்சாகத் தான் முடியும் போல!
Deleteபிரகாஷ் ராஜ் ட்வீட் நேற்றே பார்த்தேன்.
ReplyDeleteஇந்தப்பதிவே நேற்றைக்கு எழுதியதுதானே ஸ்ரீராம்!
Delete