கருவேப்பிலங்குறிச்சி திலகவதி ஒருதலைக்காதல் வெறியில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திருமா கண்டனம் தெரிவித்தே ஆகவேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார் போல. நல்ல காலம் பிறந்துவிட்டதோ என்று திகைக்காதீர்கள்!
இதே திலகவதி விவகாரத்தில் திருமாவளவன் முதலில் எப்படிப் பேசினார் என்பதைக் கேட்டால்தானே வித்தியாசம் என்ன என்று புரியும்?
கமல் காசர் அரசியலுக்கு வந்து என்னவோ பெரிய மாற்றம் கொண்டுவந்துவிடுவார் என்று முட்டாள்தனமாக நம்புகிற இளைஞர்களைப் பார்க்கும்போது பகீரென்று அடிவயிற்றைப் பிசைகிறது.
அதிமுக அமைச்சர்கள் பேச்சையெல்லாம் ஒருபொருட்டாக இந்தப்பக்கங்களில் எடுத்துப்போட்டதில்லை. அதிமுகவை ஒரு அரசியல்கட்சியாகவே நான் மதித்ததில்லை. ஏனென்றால் அது திமுகவின் மட்டமான கார்பன் காப்பி என்பதுதான் காரணம். அதேபோல கமல் காசர் பற்றியும் கூட உயர்வான மதிப்பீடு எதுவும் இருந்ததில்லை. ஆனால் அரசியலில் இவர்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பதிவுகளில் பேசவேண்டியிருக்கிறதே என்ற வருத்தம் எனக்கிருக்கிறது.
சீரியசாவே பேசிக் கொண்டிருந்தால் எப்படியாம்? கொஞ்சம் சிரிப்பதற்காகவும் எழுதவேண்டாமா? ஓசிச்சோறு வீரமணிக்கு கோபாலபுரம் யுனெஸ்கோ மன்றத்தின் சார்பாக ஒரு சரியான விருதை வழங்கியிருக்கிறார்களாம்! கற்பனை றெக்கை கட்டிப் பறக்கிறதோ?
ராஜேந்திர பாலாஜியை ஓவர் நைட்டில் ஹீரோ ஆக்கிய பெருமை கமல் காசருக்கே என்றாலும் ஆதரித்துப் பேசியதில் ஓசிச்சோறு வீரமணிக்கும் ஒரு பட்டம் கிடைத்தாயிற்று!
மீண்டும் சந்திப்போம்.
//கமல் காசர் அரசியலுக்கு வந்து என்னவோ பெரிய மாற்றம் கொண்டுவந்துவிடுவார் என்று முட்டாள்தனமாக நம்புகிற இளைஞர்களைப் பார்க்கும்போது பகீரென்று அடிவயிற்றைப் பிசைகிறது.
ReplyDelete//
எனக்கும் இதே போல தோன்றியது. கைது நடவடிக்கைக்கு அவர் எப்படி பயந்திருக்கிறார் என்பது அவரின் நேற்றைய பேச்சில் தெரிகிறது!
பயந்துவிட்டார் என்று சொல்ல முடியாது ஸ்ரீராம்! பராசரன் உள்ளிட வக்கீல் பெருந்தலைகள் எல்லாம் அவருக்குப் பக்க பலமாக இருக்கும்போது என்ன பயம்?
Delete