தமிழக அரசியல்! #லொள்ளுசபா

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுத்து திமுக தலீவர் மிகப்பெரிய  செக் வைத்து விட்டதாக இங்கே ஊடகங்கள் பெரிதாக பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. உண்மை நிலவரம் என்ன?

  
ஆனால் குட்கா விவகாரத்தில் இசுடாலின் உட்பட 22 சமஉக்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்ற நிலையில் முன்னெச்சரிக்கையாக இசுடாலின் முந்திக் கொண்டதாக வரும் தகவல்களை இங்கே எவரும் பேசுவதில்லை என்பதில் ஆச்சரியமா? ஆச்சரியப்பட வேண்டாமே! இங்கே பிரதான ஊடகங்கள் எவர் கையில் என்பதும் வியாபார கொடுக்கல்வாங்கல்கள் விளையாடுவதும் புரிந்தால், சொன்னதை விட, சொல்ல விடுபட்ட கதைகளைப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் என்னவென்று, சற்று ஏறக்கட்டிப் புரிந்து கொள்ள முடியும். 

ஏப்ரல் 18 அன்றே நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. என்றாலும் தமிழகத்தில் மே 19 அன்று மிச்சமுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவிருப்பதில், அதிகக் கவனத்தை ஈர்த்திருப்பது அரவக்குறிச்சி தொகுதிதான்!  


கரூர் மாவட்ட திமுக முச்சூடுமேசெந்தில் பாலாஜிக்கு எதிராக இருக்கும் நிலையில் மாவட்டக் கழகத்தையும் மீறி இசுடாலின் செந்தில்பாலாஜிக்கு முழு ஆதரவளித்துக் கொண்டிருப்பது ஏன் என்பதற்கான காரணத்தை ரவீந்திரன் துரைசாமி கொஞ்சம் விவரிக்கிறார்.

   
எப்போதுமே ஒரே அரசியல் லொள்ளுதானா? வாய்விட்டுச் சிரிக்கிற மாதிரி எதுவுமே  கிடையாதா? உங்கள் மனக்குறை தீர அந்தநாளைய ஒரிஜினல் லொள்ளுசபா! அம்மன் கோவில் கிழக்காலே spoof            

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!