ஊடகங்களைப் பற்றி என்னவென்று சொல்வது? என்ன சொன்னாலும் அவர்களும் திருந்துவதாயில்லை! நாமும் அதைப் பற்றிக் கவலைப்படுவதாயில்லை! என்னதான் செய்வதாம், சொல்லுங்கள்! மோகனசுந்தரம் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறார்.
ஊடகங்கள் ஒரேசெய்தியை ஒவ்வொருவிதமாகத் தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி, திரித்துச் சொல்வதை நிறையவே பார்த்திருக்கிறோம். முதலாளிகளுடைய அரசியல் என்பதையும் தாண்டி, விவாதங்களில் பங்கேற்கிறவர்களுடைய அரசியலும் நெறியாளர் அரசியலும் சேர்ந்து ஒரு கலவையான குழப்பமே விவாதங்களில் வெளிப்படுவது இங்கே சர்வசாதாரணம்.
இந்த விவாதத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்! இதற்கு அடிப்படையாக இருப்பது 400+ சீட்டுகளில் ஜெயித்த ராஜீவ் காந்திக்கே ஒரு சந்தேகம் வர, அப்போது கொண்டுவரப்பட்ட கட்சித்தாவல் தடைச்சட்டம். அடுத்தது அரசியல் சாசனப்படி சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம், சட்ட சபைகளின் அதிகாரவரம்பு என்ன என்பது. நீதிமன்றங்களுடைய அதிகார வரம்பு, இயற்றப்பட்ட சட்டம் அரசியல் சாசன அடிப்படைக்கோட்பாடுகளுக்கு முரண்படாத நிலையில், சட்டத்திற்கு உட்பட்டு தீர்ப்பளிப்பது மட்டும்தான்! அருணாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த ஒரு தீர்ப்பு தான் இப்போதைய விவகாரத்திலும் முன்னுதாரணமாக இருக்கிறது. இதில் பங்குகொண்ட வழக்கறிஞ்ர் எம் ரவி ஒருவர்தான் கொஞ்சம் நிதானமாக, உள்ள நிலவரத்தை விவாதிக்கிறார். அந்தநாட்களில் கே ஏ மதியழகன் சபாநாயகராக இருந்த நாட்களில் சட்டசபைக்குள்ளேயே போட்டி சட்டசபைக்கூட்டம் நடத்திய திமுகவின் ஜனநாயகப்போராட்டம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் வெளியான வீடியோ இது. போதிலும் கூட தொடரும் போட்டு முடித்திருப்பது, அதிமுக ஆட்சியையா அல்லது கவிழ்ப்பு முயற்சிகள் என்று நடக்கும் காமெடிகளா என்பதைத் தெளிவாகச் சொல்லாமல், அதிலும் ஒரு சஸ்பென்ஸ்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!