Pareto ப்ரின்சிபிளும் ‘Pandrah’ vs ‘Pacchassi’ கணக்குகளும்!

Pareto principle என்று 80:20 விகிதமாக சில விஷயங்களைச் சொல்லக் கேட்டதுண்டு. அதிசயமாக இன்றைக்கு அதேபோல ஒரு தேர்தல் ஹேஷ்யத்தை பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் சொன்னதாக இன்றைக்கு செய்திகளில் பார்த்த போது கொஞ்சமல்ல நிறையவே ஆச்சரியமாக இருந்தது. காரணம் அதிலிருந்த ஓட்டை லாஜிக், தப்புக்கணக்குகள் தான்! சாதாரணமாக 2+2=4  என்று கூட்டுவதுபோல, ஒரு கூட்டணிக்குக் கிடைக்கும் வாக்குகள்,  அதில் உள்ள கட்சிகள் முந்தைய தேர்தலில் தனியாக வாங்கிய வாக்கு சதவீதத்தை  அப்படியே கூட்டிவருவதுபோலக் கிடைக்கும் என்று கணக்கிடுவது எவ்வளவு முட்டாள் தனமானது என்பதை முந்தைய தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தாலே தெரிவதுதான்.
.    
 
அதென்ன கன்ஷிராம் கணக்கு? 1993 இல் சமாஜ்வாதி கட்சி கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் கூட்டணி சேர்ந்த சமயத்தில் கன்ஷிராம் சொன்னாராம்: ‘yeh ladai pandrah aur pacchassi ke beech mein hai’ (This is a fight between the 15% and the 85%) இங்கே பச்சாஸ்சி என்று 85% ஆகச்  சொல்லப் படுவது ஏழை மக்கள்,தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை உள்ளடக்கியது. எதிரே 15% என்பது     வசதி படைத்தவர்கள், பெரும் பணக்காரர்களை உள்ளடக்கியது. இங்கே கன்ஷிராம் பேசுகிற கணக்கு கொஞ்சம் வித்தியாசமானது. நம்மூர் விசிக, திராவிடங்கள் பேசுகிற சமூக நீதி சமநீதிப் புரட்டுகளைப் போன்றதல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். 

   
2014 தேர்தல்களில் தனித்தனியாக நின்ற சமாஜ்வாதி 5 எம்பி சீட்டுகளில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி பூஜ்யம் என்ற ரிசல்ட் 26 வருடங்களாகப் பிரிந்து இருதுருவங்களாக இருந்த கட்சிகளை பிழைத்திருப்பதன் பொருட்டு ஒன்று சேர்த்திருக்கிறது என்று சொல்லும்போதே 1993 கூட்டணி என்ன ஆயிற்று எதனால் இருதுருவங்களானது என்று பார்க்க வேண்டாமா? 

1993 இல் கூட்டணி சேர்ந்தது எதனால்?    அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே பிரிந்ததும் எதனால்? பாபரி மசூதி இடிக்கப் பட்டு அதன் காரணமாக பிஜேபி தீண்டத்தகாத கட்சியாக ஆனதில் 1992 இல் தனிக்கடை விரித்த முலாயம் சிங் யாதவும், முன்னாலேயே கடை விரித்திருந்தாலும் சட்டசபைக்கு 12 இடங்கள் மட்டுமே ஜெயிக்க முடிந்த கன்ஷிராமும் கூட்டணி சேர்ந்ததில் 1993 தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஜாக்பாட் அடித்தார்கள். அந்தத்தேர்தலில் பிஜேபி தனித்து 177/425 என்று ஜெயித்தும் ஆட்சி அமைக்கிற வாய்ப்பை இழந்தது. 109 சீட் கெலித்த சமாஜ்வாதியும் 67 சீட் மட்டுமே கெலித்த BSP யும் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தன. மதவாதத்துக்கெதிரான மதச்சார்பின்மை என்று ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான். அது  அல்பாயுசாகவே போனது ஏன்? செகுலர் என்றால் விட்டுக்கொடுத்தல் இல்லையா?  1995 இல் மாநில விருந்தினர் விடுதியில் மாயாவதி மீது  சமாஜ்வாதி கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்த முயன்றதே கூட்டணி முறிந்த காரணம் என்று சொல்லப்பட்டது.
   
Barbs were exchanged, CDs were circulated and FIRs were lodged by both the parties. Mayawati later even demanded a public apology from Mulayam for the state guest house incident and said, “had he run the coalition government properly, there would have been no need for the BSP to join hands with the BJP or for Mulayam to run from pillar to post in quest of power.” இது மாயாவதியின் கூற்று, ஆனால் அதன் மறுபக்கமாக,

In fact, while Mulayam was the CM, Mayawati was the ‘super CM’. Both she and Kanshi Ram used to call the shots holding fortnightly monitoring of the government’s performance that culminated with the public humiliation of Mulayam. என்பது தான் கூட்டணி முறிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது, அப்படியானால் மதவாதத்துக்கெதிராக ஒன்று சேர்ந்த செகுலர்கள் என்று தம்பட்டமடித்ததெல்லாம்? தம்பட்டங்களை உண்மையென்று நம்புகிற அப்பாவியா நீங்கள்? உங்களை அந்த ஆண்டவன் கூடக்  காப்பாற்ற முடியாதே, என்ன செய்ய?

இப்போது கன்ஷிராம் உயிரோடு இல்லை. முலாயம் சிங் யாதவும் கட்சியில் ஓரம்கட்டப்பட்டு அகிலேஷ் யாதவ் கைக்கு கட்சி வந்தாயிற்று. 2017 சட்டமன்றத் தேர்தல்களில் கேவலமாகத் தோற்றபிறகு இப்போது மாயாவதியும் அகிலேஷ் யாதவும் மறுபடி கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்பதில் கன்ஷிராம் சொன்ன ‘yeh ladai pandrah aur pacchassi ke beech mein hai’  அதாவது 15% வெர்சஸ் 85% யுத்தம் எங்கே இருக்கிறது சொல்லுங்கள்! இப்போதும் கூட தேர்தலுக்குப் பிறகு இவர்கள் ஒருவரை ஒருவர் முதுகில் குத்திக்கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? 

இங்கே கூட்டணிகள் அமைத்துக்கொள்வது கொள்கை, மக்கள் நலனுக்காக அல்ல, கட்சிகளின் பரஸ்பரம் முதுகு சொறிந்து கொள்கிற சௌகரியத்துக்காகத்தான் என்பதை இந்திய தேர்தல் களமும் முடிவுகளும் தொடர்ந்து சொல்லி வருகின்றன   



  • See how people came out in large numbers on the streets of Purulia. The writing on the wall is clear, West Bengal is set to choose BJP!

    கொஞ்சம் யோசியுங்கள்! மீண்டும் சந்திப்போம்!  
                       
      

    No comments:

    Post a Comment

    ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!