தலைப்பைப்பார்த்தவுடன் கமல் காசர் மாநிலக் கட்சி கூட இல்லையா என்ற கேள்வி எழலாம்! அவர் இன்னும் பார்ட் டைம் அரசியல், பார்ட் டைம் பிக் பாஸ் சினிமா என்று தான் இருக்கிறார், ஆனால் இந்து தமிழ்திசை மட்டும் வேறுமாதிரி நினைப்பதாகத் தோன்றுகிறதே! அவரவர் ஆசை அவரவர் முடிவு தானே!
இன்று 59 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 7வது கட்டமாகத் தேர்தல், தமிழகத்தில் 4 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், 13 வாக்குக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்று அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மிக சுறுசுறுப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மறுபடியும் ஏற்படுத்தப் பாடாத பாட்டெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார். முதல்முறையாக, இடதுசாரிகள் முன்னெடுக்காத மூன்றாவது அணி அமைக்க சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
என்ன நம்பிக்கையில் மாநிலக் கட்சிகள் இப்படித் தவ்விக் கொண்டிருக்கிறார்கள்?
1984 க்குப் பிறகு 2014 இல் தான் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. இடையில் மாநிலக்கட்சிகள் தயவில்தான் மத்திய ஆட்சி அமைக்க முடிந்தது. 2019 இலும் காங்கிரசோ பிஜேபியோ தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று மாநிலக் கட்சித் தலைவர்கள் சிலர் நம்புவதுதான், இப்படித் தவ்விக் கொண்டு இருப்பதற்கான காரணம். அவர்கள் அப்படி நம்புவதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா என்று எவருமே தெளிவான பதிலைச் சொல்லவில்லை. உதார் விடுவதற்கெல்லாம் காரணம் சொல்லியே ஆகவேண்டுமா என்ன?
‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உளவுத்துறை வட்டாரம் கூறும்போது, ‘‘மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அமர்வது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அவமானம் ஆகும்.
ஏனெனில், கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பிருந்தும் தங்களுக்குள் ஒற்றுமையின்மையால் அது ஏற்படவில்லை.
பொதுமக்களிடம் இதற்கு பதில்சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதை திசைதிருப்பி சமாளிக்க, இவிஎம்-கள் உதவியால் பாஜக வெற்றி பெற்றதாகக் கூறி நாடு முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர். என்கிறது செய்தி!
ஏனெனில், கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பிருந்தும் தங்களுக்குள் ஒற்றுமையின்மையால் அது ஏற்படவில்லை.
பொதுமக்களிடம் இதற்கு பதில்சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதை திசைதிருப்பி சமாளிக்க, இவிஎம்-கள் உதவியால் பாஜக வெற்றி பெற்றதாகக் கூறி நாடு முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர். என்கிறது செய்தி!
நமக்கெழுகிற சந்தேகம் எல்லாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சோனியா G கூட்டுவது, சந்திரபாபு நாயுடு பறந்து பறந்து எதிர்க்கட்சித்தலைவர்களை சந்திப்பது, ஆட்சி அமைப்பதற்கா இல்லை கலவரம், ரகளை என்று கிளப்பிவிடுவதற்கா?
என்னை மாதிரி, குமுதம் வாங்குவதை வாசிப்பதை நிறுத்தி விட்ட நண்பர்களுக்கு உதவியாக, ரங்கராஜ் பாண்டேவின் கேள்வி பதில்களை சாணக்யா யூட்யூப் சேனலில் வலையேற்றி வருகிறார். கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
கரண் தாப்பர் கமல் காசருடன் நடத்திய பேட்டியின் இந்தப்பகுதி வீடியோவைப்பார்க்க இங்கே
மீண்டும் சந்திப்போம்.
கமலின் இந்த பேட்டி பற்றியும் அவருடைய மய்யம் கு யாரோ கிறித்துவ அமைப்பு நிதி தருவதாகவும் இன்னும் ஏதேதோ இன்று மதியம் ஒரு பேஸ்புக் ஸ்டேட்டஸில் கூடப் படித்தேன்.
ReplyDeleteகமலுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பார்க்க வேண்டாமே என்று தான் இருந்தோம்! ஆனால் மனிதர் ஒரு விதமான உள்நோக்கத்தோடு தொடர்ந்து செயல்படும்போது பழைய விவகாரங்கள் எல்லாம் கிளறப் படுவது தவிர்க்க முடியாதே! மய்யம் அமைப்பே கேமன்ஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கிறித்தவ நிறுவனமாகவம் கமல் காசர் அதில் இயக்குனராகவும் இருக்கிற சில ஆவணங்கள் சிலகாலத்துக்கு முன்னால் அம்பலத்துக்கு வந்தன ஸ்ரீராம்!
Delete