இந்தத் தேர்தல் போனால் என்ன? 2024 இல் பார்த்துக் கொள்வோம் !

இந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....! என்று சிலநாட்களுக்கு முன் Quora தளத்தில் ராஜகோபாலன் கே சூரியநாராயணன் சொல்லியிருந்த அனுமானங்கள் அனேகமாக அப்படியே பலித்திருப்பதை நேற்றைய exit polls அவை மீதான poll of polls இரண்டும் மெய்ப்பித்திருக்கின்றன. இங்கே தமிழ்நாட்டில் மட்டும் திமுக ஒரு கண்ணியமான வெற்றியைப் பெறவிருப்பதாக வரும் செய்திகள் இந்தத் தேர்தலின் ஏழு அதிசயங்களில் ஒன்று என்கிறது Quint தளம்.


   
எதிர்பார்த்தபடி ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேசரிவாலும் மண்ணைக் கவ்வியிருக்கிறார்கள். அடுத்து NTR மருமகன் சந்திரபாபு நாயுடுவும் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறார். மாநில ஆட்சியையும் அனேகமாக ஜெகன் மோகன் ரெட்டியிடம்  இழந்துவிடுவாரென்றுதான் தோன்றுகிறது. அடுத்து மூன்றாவதாக மம்தா பானர்ஜியின் மமதையும் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

நான்காவதாக, மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு அவமானகரமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. போன தேர்தலில் ஜெயித்த 44 சீட்டுகளை விடக்  கொஞ்சம்  கூடுதலாக ஜெயிக்க வாய்ப்பிருந்தாலும், ஒரு கட்சியாக, காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குரியதாக ஆகியிருக்கிறது. நரேந்திர மோடி versus Who என்ற கேள்விக்கு விடையை எதிர்க்கட்சிகளால் சொல்ல முடியவில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

 
கொஞ்சம் கவனித்துக் கேட்க வேண்டிய விவாதம் இது. எக்சிட் கருத்துக் கணிப்புகள் எங்கே என்னென்ன அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறதாம்? ஒரு சாம்பிள் பார்ப்போமா?  

. Actually they CAN all be wrong, as Australia (a much smaller and less diverse country than India) showed us last weekend. But you're right that we are all better off waiting for the 23rd than wasting our time in empty debate about these imaginary numbers.


 • 2014ல் மோடியின் பக்கம் நிற்காத மேற்கு வங்கம் இம்முறையில் நிற்கும். சரி. ஆனால், கடந்தமுறை மோடியை ஏற்காத தமிழகம் மட்டும் இம்முறையும் மோடியை ஏற்காது என்கிறார்கள். இதெப்படி? மே 23. #நகைச்சுவை #வம்பு

  இந்திய சூழ்நிலை என்பது முற்றிலும் வேறானது என்கிற அடிப்படையில் ..கருத்து கணிப்புகளை எப்போதும் ஒரு வித எச்சரிக்கையுடன் நிதானமாக பொறுமையுடன் அணுகவேண்டும் என்பதே ...கருத்து கணிப்புகள் குறித்த என்னுடைய நிரந்தர நிலை.
  அரசியல் களத்தில் ..இது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் என்ன ?
  இன்று சோனியாவை டெல்லியில் மாயாவதி சந்திப்பதாக இருந்த நிலையில்.. இன்றைக்கு மாயாவதிக்கு டெல்லியில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று அக் கட்சியின் அறிவிப்பு கூறி இருக்கிறது.
  மஹாகட்பந்தன் அதற்குள் பந்தத்தை கட் செய்ய பார்க்கிறது

     
  எக்சிட் கருத்துக் கணிப்புகள் அப்படியே ரிசல்ட்டாக வெளிப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் வாக்காளர் மனநிலை என்னவாக இருந்தது, ஒட்டுமொத்தமாக என்னதிசையில் தேர்தல்முடிவுகள் போகும் என்பதைக் கணிக்க முடிவது  exit polls சொல்லுகிற விஷயம். 

  மீண்டும் சந்திப்போம்.

     
                                                              

  6 comments:

  1. As per exit pole observations: (TIMES NOW VMR)

   அப்படியே நடக்குமானால், என் முதல் வாழ்த்து உங்களுக்குத் தான் உரித்தாகும்..

   ReplyDelete
   Replies
   1. இதில் எனக்கு வாழ்த்துச் சொல்ல என்ன இருக்கிறது ஜீவி சார்? நான் ஒரு முன்னாள் disenchanted left பிஜேபி கட்சிக்காரனோ ஆதரவாளனோ இல்லை. செய்திகளைப்படித்து சொல்ல விடுபட்டவைகளையும் சேர்த்துப் பார்க்கிறவன். அவ்வளவுதான்!

    Delete
   2. நிறைய இருக்கிறது. உங்கள் உழைப்பும், எங்கெங்கிலாமோ இருந்து செய்திகளை கோர்த்தெடுத்து வரிசை படுத்தி முக்கியப்படுத்த வேண்டியவற்றை முக்கியப்படுத்தி வழங்கிய தோரணை -- மறக்க முடியாது. அதற்காகத் தான் இந்த வாழ்த்து.

    Delete
  2. எல்லா சானல் ரிசல்ட்டுகளுமே பி ஜெ பியின் முன்னிலையையே சொல்வதுதான் ஆச்சர்யம்.

   ReplyDelete
   Replies
   1. exit polls பொதுவாக வாக்காளர் மனவோட்டம் எந்தத் திசையில் போகிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லும் என்பதோடு நிறுத்திக் கொள்வோம் ஸ்ரீராம்! இங்கே கருத்துக் கணிப்புகள் சரியாக நடத்தப்படுவதில்லை என்ற குறை எனக்குண்டு.

    Delete

  ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!