இந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி! ஒரு பார்வை!

நான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு ராமசந்திர குஹா! அறுபதே  வயதான இந்த ஐ ஐ எம் பட்டதாரிநேரு மீது அளவு கடந்த மரியாதை அபிமானம் வைத்திருப்பவர் நேரு மீதுகாங்கிரஸ் கட்சி மீது  ஒரு மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனாலும் கூட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது விமரிசிக்கும்போது தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறவர் என்பதால் நம்பகத்தன்மை உள்ளவர். இவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் கூட இவரைப் புறக்கணித்து விட முடியாதபடி எழுதுகிறவர்.  

தன்னை  ஒரு வலதுசாரியாகவோ இடதுசாரியாகவோ  முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல்,ஒரு லிபரலாகதன்னுடைய கருத்தை நேர்மையாகவும்  மிக வெளிப்படையாகவும் எல்லாத் தளங்களிலும் பதிவு செய்து வருகிற திரு குஹா மாதிரியான சிந்தனையாளர்களைநாம் மறுக்கலாம்நிராகரிக்கலாம் ஆனால் முற்றிலுமாகப் புறக்கணித்து விட முடியாது என்று இந்தப்பக்கங்களில் எழுதி ஆறுவருடங்களுக்கும் மேலாகிறது. 


இன்றைக்கு ராகுல் காண்டி இவ்வளவு மோசமான தோல்விக்குப் பிறகும் ராஜினாமா செய்யாமலிருப்பது அதிசயமாக இருக்கிறதென்று ட்வீட்டியிருக்கிறார். உடனே அதை எதிர்த்தும் ஆதரித்தும் பதில் ட்வீட்டுகள் நீண்டுகொண்டே போகின்றன,
    


நாளை சனிக்கிழமை காலை 11 மணிக்கு காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் நிறைய ராஜினாமா நாடகங்கள் இருக்குமென்று தெரிகிறது. ராகுல் காண்டியும் தன்னுடைய ராஜினாமாவைத் தருவார் ஆனால் அது ஏற்கப்படாது என்று அப்பட்டமாகவே இந்துதமிழ்    திசை செய்தி சொல்கிறது.

ராமசந்திர குஹா ஆறு வருடங்களுக்கும் முன்பாக இடது சாரிகளுக்கும் ஒரு யோசனையைச் சொல்லியிருந்தார். அது :
தி டெலிகிராப் நாளிதழில் 2012 நவம்பரில் வெளியான திரு ராமச்சந்திர குஹாவின் கட்டுரையில் 2009 பொதுத் தேர்தல்களின் போது முன் வைத்த சில கருத்துக்களை மறுபடியும் முன்வைப்பது போல, ஒரு நான்கு விஷயங்களை, இந்திய அரசியல் மேம்பட உதவும் என்று சொல்கிறார். இந்தக் கட்டுரையை வாசித்து விட்டு எழுதி வைத்த குறிப்புக்கள் என்னுடைய யோசனையில் நாற்பது நாட்களுக்கும் மேலாக, இன்னமும் ஒரு முழுமையான வடிவத்தை எட்டவில்லை என்று மேலே உள்ள லிங்கில் சொல்லியிருந்தேன்.

அந்த நான்கு விஷயங்களில் மூன்றாவதாக இடதுசாரிகள் மாறிவரும் தொழில்நுட்பம், அவசியத்துகேற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். காலாவதியாகிப்போன, ஜனநாயகத்துக்கு முரணான லெனின் ஸ்டாலினிசத்தையே நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இடது, வலது என்று பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று பட வேண்டும்.உதிரிக் குழுக்களாக சிதறுண்டு போயிருக்கும் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகளை வன்முறை தீவீரவாதத்தைக் கைவிடும்படி கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்று ராம சந்திர குஹா சொல்கிறார்.  

சிபிஐ 2 சிபிஎம் 3 என இந்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் பலம் வெறும் ஐந்து என சுருங்கியிருக்கிறது. கேரளாவில் 1, தமிழ்நாட்டில் 4 என்று ஆகியிருக்கிறதே என்று தா பாண்டியனிடம் கேட்டதற்குப் பதிலாக என்ன சொல்கிறார்?


உருப்படியாக ஏதாவது சொல்லியிருப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்தீர்களா என்ன?


The News Minute தளத்தில் இன்று  G Pramod Kumar என்பவர் எழுதியிருக்கிற கட்டுரை The decimation of the CPI(M) in West Bengal and Kerala: A curious case of two different tales

The only saving grace is Tamil Nadu where the CPI(M) and CPI have won two seats each, that too at the mercy of the DMK and the Congress with which it had allied. திமுகவின் தயவில் ஜெயித்தவர்கள் என்ன சாதித்துக் கிழித்துவிடப்போகிறார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு கட்டுரையாளர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்க்கலாமா?

2019 நாடாளுமன்றத் தேர்தல்களின் விசித்திரம் 34 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்குவங்கத்தில் சுத்தமாகத் துடைத்தெறியப் பட்டிருப்பது தான்!

கேரளாவில் ஆளும் கூட்டணியாக இருக்கிற போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 சீட்டுகளில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஜெயிக்க முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுகவோடு ஒட்டிக்கொண்டு மார்க்சிஸ்ட் 2 இடங்களிலும் வலது கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெல்ல முடிந்திருப்பது அதிசயம். திரிபுரா மற்றும் வேறு சில பகுதிகளிலும் சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டதாக இடது சாரி இயக்கம் இருக்கிறது.

Looking at the numbers, it could be easily surmised that even without the BJP sweep that the country has witnessed, the CPI(M) wouldn’t have done any better because the party has boxed itself into a unique situation where its relevance and ideology - or the lack of it - is under serious threat என்று பிஜேபி அலை இல்லாவிட்டாலுமே கூட மார்க்சிஸ்டுகள் காலாவதியாகிப்போன சித்தாந்தம், வறட்டுத்தனமான கொள்கை முடிவுகளில் தன்னுடைய இருப்புக்கான நியாயத்தைத் தொலைத்துவிட்டார்கள் என்கிறார். இதையே தான் ராமசந்திர குஹாவும் ஆறுவருடங்களுக்கு முன்பே சொன்னார்?!   
    
2004 இல் மார்க்சிஸ்டுகளுக்கு மட்டும் 43 எம்பி சீட்டுகள், இடது முன்னணிக்கு மொத்தமாக 62 இடங்கள் இருந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள  முடியவில்லை. அணு உலை ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகள் நடத்திய வரட்டுத் தனமான போராட்டம், வெறும் 18 எம்பிக்களை மட்டுமே வைத்திருந்த கலீஞர் குடும்ப   ஆதாயத்துக்குத்தான் வித்திட்டது என்பதை எப்போதாவது மறுபரிசீலனை செய்து பார்த்துக் கொண்டார்களா? அப்போதிலிருந்தே இடதுசாரிகள் மீதான நம்பிக்கை, அரசியலில் அவர்களுக்கிருந்த முக்கியத்துவம் குறைய ஆரம்பித்ததும் சீட்டுகள் எண்ணிக்கையிலும் பிரதி பலித்ததை அவர்கள்தான் யோசித்து Course Correcion செய்துகொள்ளவில்லை! நாமும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட முடியுமா?

கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்டுகள் துடைத்து எறியப்பட்டது வேறுவேறு சூழல், காரணங்களில்! A mere glimpse of the tragic low of the CPI(M) and the concomitant rise of the BJP in the state shows how the party has lost the very purpose of its presence in politics. In the last elections, the Trinamool Congress (TMC)  had won 34 seats and the BJP only two. This time, the TMC has lost about 10 of them to the BJP.  In vote share terms, this means that the BJP added more than 20% additional votes to its kitty என்கிறார் ப்ரொமோத் குமார்.

And this was made possible only by the CPI(M) and its ecosystem of cadres, proxies and voters defecting lock, stock and barrel. By the afternoon on Thursday, the BJP’s vote share had risen to about 39% from 17% in 2014 while the CPI(M)’s share fell from about 29 % to a single digit. The BJP simply took over a struggling CPI(M) and made it into a winning entity. And the CPI(M) was too willing to be taken over: at least that’s what leading media organisations had reported ahead of the elections. In some place, the CPI(M) functionaries even worked as BJP’s polling booth agents. இந்த விஷயமும் புதிதல்ல. இந்தப்பக்கங்களிலேயே முன்னர் சொல்லப்பட்டதுதான்! While the CPI(M) at the national level professed a party programme that said it was solely against the BJP, it not only gave up without a fight in West Bengal, but aided the latter’s rise because in the state its only rival is the TMC and Mamata. இதுதான் மார்க்சிஸ்டுகளுடைய சித்தாந்த, கொள்கைப் பிடிப்பின் யோக்கியதை!. மார்க்சீயம் போதிக்கிற class enemey வெறுமே ஒரு தனிநபர் அல்லது லுலுலாயிக்குச்  சொல்லப்படுகிற மதவாத சக்திகள்!  

கேரள நிலைமையே வேறு. இங்கே மார்க்சிஸ்டுகள்  காங்கிரஸ், பிஜேபி இரண்டையுமே எதிர்த்துப் போராட வேண்டி இருந்ததில் கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத தவறு பரிதாபமான முடிவுக்குத் தள்ளிவிட்டது.

The margins of victory of the Congress and its allies in Kerala show that the CPI(M)’s strategy has been comprehensively beaten. Although the party has seen worse defeats (post-Emergency, it couldn’t win even a single seat), this drubbing will hurt more because it betrays an underlying political problem. The numbers show that the Congress and the United Democratic Front which it leads has the overwhelming support of the minorities and also the Hindus. When the final numbers are available, it will most likely show that the Congress has wrested away some of the turfs that it had lost to the BJP in 2014, added more votes and probably even attracted some of those who voted for the CPI(M) earlier. அப்படியானால் ராகுல் காண்டி வயநாடு தொகுதியில் நின்றதை காங்கிரஸ் கட்சி புத்திசாலித்தனமாகப் பயன் படுத்திக் கொண்டு விட்டதா என்ன? சபரிமலா விவகாரம் கூட பிஜேபிக்கு பயன்படாத அளவுக்கு மல்லு ஹிந்துக்கள் காங்கிரஸ் பக்கமே சாய்வது என்று முடிவெடுத்து விட்டார்களா? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இனிமேல் தெரிந்து என்ன ஆகப் போகிறது என்கிறீர்களா?  அதுவும் சரிதான்!!

மீண்டும் சந்திப்போம்.
              
    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!