சண்டேன்னா மூணு! ராஜினாமா நாடகம் இரண்டு! ஓடமுயன்ற ராபர்ட்வாத்ரா!

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் உடனடி விளைவாக சோனியா காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய காமெடி சீன்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன! படுதோல்விக்காக ராகுல் காண்டி ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் காரியகமிட்டி ஒருமனதாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் நேற்று அரங்கேறிய நாடகத்தை சுர்ஜீவாலா பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். 2014 இலும் கூட இதே மாதிரி ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்ததும், நிராகரிக்கப்பட்டதுமான காட்சி அரங்கேறியதே!

  
காங்கிரசிலிருந்து பிரிந்தாலும்  திரிணாமுல் காங்கிரஸ் என்றே பெயர் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வரும் மம்தா பானெர்ஜியும் கூட காங்கிரஸ் கட்சிமாதிரியே டிராமா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார் என்பது இந்தத் தேர்தலின் புதுசு கண்ணா புதுசு ரகம்!



முதல்வர் பதவி வேண்டாமாம்! கட்சித்தலைவர் பதவியே போதுமாம்! மம்தா   பானெர்ஜி ஆங்கிலத்திலேயே சொல்கிறார். 


மம்தா பானெர்ஜியின் ராஜினாமா நாடகத்தை பிஜேபி கேலிசெய்ததில் தவறிருப்பதாகத்  தெரியவில்லை. 

ஆக காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு பிராக்டிகல் அர்த்தமாக ட்ராமா பார்ட்டி என்பது மட்டும் தானென்று  இந்தத்தேர்தலில் தெளிவாக நிரூபணம் ஆகியிருக்கிறதே! நாடகங்களைக் கவனிக்கிறீர்களா? 


தோல்விக்கு சொந்தங்கள் இல்லை! மத்திய பிரதேச முதல்வர் பதவி தனக்கே கிடைக்குமென்று ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கொண்டிருந்தபோது கிழட்டுப் பெருச்சாளி கமல்நாத் இடையில் புகுந்து தட்டிப்பறித்துக் கொண்டார்! 2019 தோல்விகள் மறுபடியும் சிந்தியா தரப்பு கலகக் குரல் எழுப்ப வாய்ப்பளித்திருக்கிறது. ஆக கமல்நாத்தும் ராஜினாமா நாடகம் ஆடுகிறாரோ?    

இது இப்படியென்றால் சோனியாவுக்கு வாய்த்த மணியான மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா மட்டும் கேணத்தனத்தில் குறைந்தவரா என்ன?


எக்சிட் கணிப்புகளில் காங்கிரஸ் பலத்த அடிவாங்குமென்ற செய்தி வந்ததுமே சோனியாவின் மணியான மாப்பிள்ளை தன் அரசியல் கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓட முயன்றாராம்! அதுவும் நீதிமன்ற அனுமதியுடன்!

இதேமாதிரி இந்திரா 1977 தேர்தலில் படுதோல்வி அடைந்தவுடன் இன்று தியாகசிகரமாகச் வர்ணிக்கப் படுகிற சோனியா G  புருஷன் ராஜீவ், குழந்தைகள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு இத்தாலியிலேயே குடியேற விரும்பினார் என்ற வீர சரித்திரம் சொல்லப்பட்டதால் சிவப்புச் சேலைவாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)  என்ற புத்தகத்தையே இந்தியாவில் தடைசெய்தார்களே!

சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!  இங்கே முழுதாய்ப் படிக்கலாம். 


மீண்டும் சந்திப்போம். 

  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!