நியாயமாக, தலைப்புச் செய்திகளில், சேனல் விவாதங்களில் பிரதான இடம் பிடித்திருக்கவேண்டிய ஒரு விஷயம், இப்படி சாதாரண வாசகர் கருத்துக்குப் படமாகக் குறுகிப் போயிருக்க வேண்டாம்! மூன்றாவது அணிக்கு சான்சே இல்லை என்பது இசுடாலினுக்கே தெரிந்திருக்கும்போது, ஆந்திராவின் ஹைடெக் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்குத் தெரியாமல் போனது ஏனோ?
இந்து வாசகர் கொஞ்சம் பார்வையை வேறுபக்கங்களிலும் திருப்பியிருந்தாரானால், காரணமென்ன என்பதைத் தெளிவாகச் சொல்கிற இந்தக் கார்டூனைப் பார்த்திருக்க முடியும்!
இதுவும் ஹிந்து ஆங்கில நாளிதழில் சுரேந்திரா வரைந்தது தான்! சந்திரபாபு நாயுடுவை lead எடுக்க விடாமல் மம்தா பானெர்ஜி செய்த சாகசம்தான்! அடுத்த பிரதமர் மூன்றாவது அணியிலிருந்து, அதுவும் தென்மாநிலங்களில் இருந்துதான் என்று ஆரம்பித்த கோஷம் வெளியே கேட்பதற்கு முன்னாலேயே, அடங்கிப்போய்விட்டது என்பதும் சேர்ந்தே தெரிகிறது இல்லையா?
சுரேந்திரா வரைந்த இன்னொரு கார்டூன் திமுகவின் அரசியல் இப்படித்தான் என்று தெளிவாகச் சொல்கிறதோ?
ஆனால் கூட்டணி ஹெலிகாப்டரை தானே சரிசெய்வேன் என்று அசட்டுத்துணிச்சலோடு முயற்சித்துக் கொண்டிருக்கிற ராகுல் காண்டியை நம்பினால் ஊர்போய்ச் சேர முடியாதே!
மணிசங்கர் அய்யர் ஒரு பத்திரிகையாளரிடம் **CK OFF என்று கோபப்படுவது beep sound ஆல் மறைக்கப்பட்டாலும் புரியாதா என்ன?! சாம் பிட்ரோடா திடீரென்று காங்கிரசில் முக்கிய ஆளாகப் பார்க்கப்படுவதில் மனிதருக்கு என்ன வருத்தமோ? கட்சியை மறுபடியும் டேமேஜ் செய்வதற்குத் திரும்ப வந்து விட்டார்! அதுவும் எப்படி? அதற்குத்தான் இந்த சாம்பிள் வீடியோ!
காங்கிரஸ் கட்சி எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது. சென்ற டிசம்பரில் ராஜஸ்தான் உள்ளிட்டு மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததும், ஆதரவு ஊடகங்கள் அதுவே 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்ற மாதிரியே கூவிக் கொண்டிருந்தன. நிறைய வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் சாக்குபோக்கு சொல்லி வருகிறது. ஆனால் வரலாற்றைத் திரிப்பது என்பது இடதுசாரிகளோடு சேர்ந்திருந்த அந்த நாட்களிலிருந்தே காங்கிரசுக்கு ஆகி வந்த கலை! இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்களாம்!
வீர சாவர்க்கர் என்றே இதுவரை அறியப்பட்டவரை இனிமேல் ராஜஸ்தான் மாநிலப் பத்தாம் வகுப்பு மாணவர்கள் காங்கிரஸ் பொடிவைத்து சொல்லிக் கொடுக்கிற மாதிரித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமாம்! பெயருக்கு முன்னால் இருக்கிற வீர அடைமொழி இனிமேல் கிடையாதாம்!
மே 21 மீட்டிங் என்பதே வெட்டிவேலை. 3 நாளில் ரிசல்ட் வந்த பிறகு சந்தித்தால் அர்த்தம் இருக்கும். மே 21ல் சந்தித்து, நாயுடு, மம்தா, ஸ்டாலின் போன்றவர்களுக்கு சம மரியாதையைக் கொடுத்து, மே 24ல், நாயுடுக்கு 3 சீட், மம்தாவுக்கு 30 சீட், ஸ்டாலினுக்கு 35 சீட் என்று வந்தால், பிறகு நாயுடுக்கு எங்கே மரியாதை கிடைக்கும்?
ReplyDelete//ஸ்டாலினுக்கு 35 சீட்//
Deleteநெல்லை! எனக்கு நல்லாத தெரிஞ்ச திமுக புள்ளிங்க கிட்டக் கூட இல்லாத ஒங்க அதீத நம்பிக்கையைக் கண்டு நெசமாவே வியக்கேன்! :))))
This comment has been removed by the author.
ReplyDeleteமோடிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை ஒருங்கிணைக்க முடியுமென்றால் மூன்றாவது அணி வேண்டாம். காங்கிரஸூக்கு எதிரானவர்களை ஒன்று சேர்க்க முடியாத பட்சத்தில் எப்படியும் மூன்றாவது அணி அமைவது காலத்தின் கட்டாயம். மூன்றாவது அணியாளர்களுக்கு காங்கிரஸின் தலைமையை ஏற்றுக் கொள்வதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. காங்கிரஸின் தலைமையின் கீழ் திரண்டு நாளைக்கு ஒன்றுமே இல்லாது போவதற்கு அவர்கள் தயாரில்லை.
ReplyDeleteஅதே சமயத்தில் மூன்றாவது அணியினரின் சட்டாம்பிள்ளைத் தனத்திற்கு காங்கிரஸால் இணக்கமாக போக முடியாது. இந்த நிலை தற்சமயத்தில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பிஜேபிக்கு சாதகமான அம்சம். கம்யூனிஸ்ட்கள் தற்சமயம் ஒதுங்கக் கிடைத்த ஒரே இடம் மூன்றாவது அணி தான். மூன்றாவது அணி என்று பெயருக்கு வைத்துக் கொண்டு பிஜேபி தலையெடுக்கக் கூடாது என்பதற்காக காங்கிரஸுடன் உறவு என்று சொல்லிக் கொள்வதில் அவர்களுக்கு தற்காலிகமாக சங்கடங்கள் ஏதுமில்லை என்றாலும் அது அவர்களின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும். அதனாலேயே மூன்றாவது அணி அமைவதற்கு கம்யூனிஸ்டுகள் எல்லாவிதங்களிலும் பாடுபடுவார்கள். முடியவில்லை என்றால் மூன்றாவது அணியினரை ஒரு குழுவாக ஒன்றுபட்ட இயக்கம் போலக் காட்டி காங்கிரஸுடன் கைகுலுக்குவார்கள். எந்த நேரத்திலும் கைவிடவும் தயாராக இருப்பார்கள்.
ஜீவி சார்! திங்களன்று எழுதிய பதிவை நீங்கள் வாசிக்கவில்லையோ? https://consenttobenothing.blogspot.com/2019/05/2_13.html உங்களுடைய மதிப்பீடுகளுக்கெல்லாம் அங்கேயே பதில் இருக்கிறதென்று நினைக்கிறேன். மூன்றாவது அணி என்பதே ஒரு அர்த்தமிழந்து போன ஒரு சாங்கியம். இடதுசாரிகள் அதை அர்த்தமிழக்கச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்கள் என்பது சமீபத்தைய வரலாறுதான்!
Deleteசரி, சார். அதனால் என்ன?.. என்ன நடக்கப் போகிறது என்று விஷயங்களை அனாலிஸஸ் தானே செய்கிறோம்?.. என்றைக்கு ராகுல் கேரளாவில் இடதுசாரிகளுக்கு எதிராக களம் இறங்கினாரோ, அன்றைக்கே மூன்றாவது அணிக்கான அச்சாரம் போடப்பட்டு விட்டது.
ReplyDelete