#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!

இரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று  பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏமாற்றங்கள் என இந்தப் பதவியேற்பு விழா நடந்து முடிந்திருக்கிறது. தமிழக மக்கள் பிஜேபிக்கு வாக்களிக்காவிட்டாலும், இரண்டு தமிழர்கள், திருமதி நிர்மலா சீதாராமன், திரு D ஜெய்சங்கர் கேபினெட் அமைச்சர்களாகப் பதவியற்றிருக்கிறார்கள்  என்பதை இங்கே எவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இருவருக்குமே திருச்சிதான் பூர்வீகம். விகடன் தளம் கூட  `போச்சே.. போச்சே.. !' - ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை என்று விஷமத்துடன் செய்தி வெளியிடுகிறதே தவிர கண்முன் தெரிகிற ஒன்றை, நிதர்சனத்தை மறைத்துத்தான் எழுதுகிறார்கள்.  


பிரதமர் உள்ளிட்டு 25 கேபினெட் அமைச்சர்கள், 24 ராஜாங்க அமைச்சர்கள்  மற்றும் 9 தனிப்பொறுப்புடன் ராஜாங்க அமைச்சர்கள் என்று 58 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றிருக்கிறது என்பதில் முக்கியமாக  இந்திரா குடும்ப வாரிசு, சஞ்சய் காண்டியின் மனைவி மனேகா காண்டி பெயர் இடம்பெறவில்லை என்பதை நிறையப் பேர் கவனிக்கத் தவறியிருப்பார்கள். காண்டி வாரிசுகளுடைய தேவை காங்கிரசுக்கு இருக்கிறதோ இல்லையோ, பிஜேபிக்கு இனி தேவையில்லை என்றாகி இருப்பது என்பது  மிகவும் நல்ல விஷயம். 


இந்த விவாதம் கூட  புளித்துப்போன ராகுல் காண்டி ராஜினாமா பற்றித்தான் என்றாலும், இதுவரை விவாதங்களில் பங்கேற்பாளராக மட்டுமே பார்த்து வந்த பானு கோம்ஸ் இதில் விவாதக்களத்தை முன்னெடுக்கும் நெறியாளராகவும்! எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 
  

உபிக்கள் தம்பட்டமடித்தபடி ஜூன் 3 அன்று முதல்வர் பதவியில் இசுடாலின் என்பது பொய்யாகிப்போனது என்பதில் ரொம்பவுமே அப்செட் ஆகியிருக்கிறவருக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமா? 

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!   

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

 1. இந்த பலூன்கள் சாதித்தது, காவிரி நீருக்காக பாஜகவை குறை சொல்லமுடியாத நிலைமையைத்தான்.

  தமிழக திமுக+காங்கிரஸ் கூட்டணி, கர்நாடகாவின் காங்கிரஸ் அரசோடு பேசி அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல், காவிரி ஆணையம் கூறுகிறபடி தண்ணீரைக் கொண்டுவருவதுதான். இதை எடப்பாடி அரசு செய்யவேண்டும் என்று நினைத்தால், அது மெதுவாத்தான் நடக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பலூன்களை ஊதி ஊதிப் பெரிதாக்கியும் பலன் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சிலருக்கு இப்படி வெறுப்பை விதைத்ததில் நல்ல வரும்படி கிடைத்திருக்கலாம். உண்மை பொய் பிரித்துப் பார்க்காத தெரியாத ஜனங்கள் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!