மம்தா பானெர்ஜி! கான் மார்க்கெட் #ஊடகவிபசாரம்

அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வலுவான நியாயங்களும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானெர்ஜியின் அதீத மமதையும்  கிறுக்குத் தனமும்  எந்த அளவுக்கு முற்றிப்போய் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்! மம்தா வீழ்ச்சியை சந்திக்க 2021 சட்டமன்றத் தேர்தல்கள் வரைகூடக் காத்திருக்கவேண்டாம் போலத் தான் தெரிகிறது.


தமிழக ஊடகங்களுடைய அராஜகமான திரிசமன் வேலைகள் இன்னும் ஓயவில்லை. அதிமுகவுக்கு மந்திரிசபையில் இடம் இல்லை என்பது உண்மையிலேயே இவர்களுடைய கவலையா என்ன? எதையாவது கொளுத்திப் போடவேண்டியது, அது         நமத்துப் போனதும் வெட்கமே இல்லாமல் இன்னொன்றைக் கொளுத்திப் போடவேண்டியது Presstitutes என்ற கேவலமான அடைமொழிக்குப் பொருத்தமானவர்கள்தான் இவர்கள்!


ஆனந்த விகடன் உட்பட இங்கே பெரும்பாலான ஊடகங்கள் யோக்கியதை இதுதான்! #ஊடகவிபசாரம் 

#தில்லி #லட்யன்ஸ் #கும்பல் - அறிமுகம், விளக்கம்
( துக்ளக் 5-6-2019 இதழின் தலையங்கத்திலிருந்து )
------------------------------------------
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் நரேந்திர மோடி , - ' நான் டெல்லி கான் மார்க்கெட் கும்பல் ( Khan Market Gang ) உருவாக்கிய தலைவன் அல்ல ' என்று கூறியபோது , பலருக்கு - குறிப்பாக தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
டெல்லியில் பத்திரிகைகள், அறிவு ஜீவிகள் , இடைத்தரகர்கள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டம்தான் டெல்லியில் பழம் தின்று கொட்டை போடும் கான் மார்க்கெட் கும்பல் என்பது. இந்தக் கும்பலுக்கு 'லட்யன்ஸ் டெல்லி கும்பல் ' என்கிற அடைமொழியும் உண்டு.
புதுடெல்லியை உருவாக்கிய எட்வின் லட்யன் என்கிற ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளரின் பெயரை வைத்து, புதுடெல்லியை லட்யன் தில்லி என்று அழைக்கிறார்கள். அதுவே இந்தக் கும்பலுக்கும் அடைமொழிப் பெயராக இருக்கிறது. உலக மயமாக்கல் காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் , வெளிநாட்டு அரசுகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்களும் இந்தக் கும்பலில் இணைந்தனர்.
புதுடெல்லியின் மையத்தில் இருக்கும் கான் மார்க்கெட் உணவகங்களில் அமர்ந்து, மணிக்கணக்கில் அரட்டை அடித்து, அக்கப்போர் செய்து, உண்மையும் பொய்யும் கலந்த வதந்திகளைப் பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றது அந்தக் கும்பல். அது மத்திய அரசுக்கும் , பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் , ஏன் நீதிபதிகளுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்களை உருவாக்க வல்ல , செல்வாக்கும், அறிவுக்கூர்மையும் கொண்ட கூட்டம் அது.
அந்தக் கும்பல் அக்கப்போர்களையும், வதந்திகளையும் டெல்லியில் உருவாக்கி , அதை செய்தியாக மாற்றி , நாடு முழுதும் பரப்புவதற்கு , அதனுடன் இணைந்த பிரபல பத்திரிக்கையாளர்களை அது பயன்படுத்துகிறது. அவர்களை குஷிப்படுத்தாத யாரும் நிம்மதியாக இருக்க முடியாது.
பிரதமர்களும், அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் சிபாரிசு செய்பவர்களையும் சந்திக்க வேண்டும். அதைக் கண்டு அஞ்சாத அரசோ, பிரதமரோ, அரசியல் கட்சியோ, தலைவரோ, அதிகாரியோ, ஏன் நீதிபதியோ கூடக் கிடையாது.
லட்யன்ஸ் கும்பலின் வாயில் புகாமல் இருக்கவே அனைவரும் முயற்சிப்பார்கள். இப்படிப்பட்ட வர்க்கத்தை அப்படியே ஓரம் கட்டினார் மோடி. அவர்களுக்கு இருந்த எல்லாச் சலுகைகளையும் நீக்கினார். பெரிய பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அரசாங்க செலவில் வெளிநாடுகளுக்கு சொகுசுப் பயணம் செல்வதை நிறுத்தினார். அவர்களை சந்திப்பதை அறவே தவிர்த்தார். அதனால் அவர்களின் மவுசு குறைந்தது. ஆத்திரம் அடைந்த அவர்கள் , மோடிக்கு எதிராக நாடு முழுவதும் செய்திகளை பரப்பினர்.
மோடியின் சாதனைகளை மறைத்து, அவரைப் பற்றி அவதூறு கூறி, அங்கும் இங்குமாக நடந்த சிறு சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தினர். நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு, அதன் சகிப்புத்தன்மை குறைந்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோய் நாடே மாறிவிட்டது என்றெல்லாம் கூறி , மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முழுவதும் அவர்கள் அக்கப்போர் செய்து வந்தனர். வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து உலக அளவில் நாட்டையே தலைகுனிய வைத்தனர். அந்த லட்யன்ஸ் கும்பலைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள்தான் '2019 தேர்தலில் மோடி தோற்றுவிடுவார் ' என்கிற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.
எதிர்க்கட்சிகளும் அதை நம்பி , அப்படியே பகற்கனவு கண்டனர். முடிவில் , தோற்றது எதிர்கட்சிகள் மட்டுமல்ல, லட்யன்ஸ் கும்பலும்தான். 

இங்கே தமிழகத்திலும் ஒரு கும்பல் லட்யன்ஸ் கும்பல் மாதிரியே செயல்படுகிறது. கொட்டம் அடக்கப்பட  வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கிறதா? 


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் எந்த ஊரு என்ன சாதி என்றெல்லாம் கேள்விகேட்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார். இதே மாதிரி சிலவாரங்கள் முன்பு அன்புமணி ராமதாசும், பிரேமலதா விஜய்காந்தும் சிலநிருபர்களுடைய விஷமத்தனமான கேள்விகளை எதிர் கொள்ள வேண்டிவந்தது நினைவிருக்கலாம். 
      உண்மையைத் திசைதிருப்பும் ஊடகங்களைக் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. 

மீண்டும் சந்திப்போம் 

6 comments:

 1. காவிரி தண்ணீர் இப்போதைக்கு வரப்போவதில்லை (மழை பெய்தால் ஒழிய). அதுக்கு பாஜக மண்டையை உருட்டணும் என்பதற்காகத்தான் அழகிரி, பாஜகவுக்கு மந்திரி பதவி கொடுக்கணும்னு ஒப்பாரி வைக்கிறார்.

  தமிழக ஊடகங்களுக்கும் திமுக பத்திரிகையான விகடனுக்கும் வேற வேலை கிடையாது. தமிழகத்தில் கூட்டணி சார்பாக ஒருவர்தான் வெற்றி பெற்றார். பாஜக யாரும் வெற்றி பெறலை. அதுனால ஒருத்தருக்கும் அமைச்சர் பதவி இல்லை.

  தமிழகத்தைப் புறக்கணிக்காமல், தமிழக தொடர்பு உள்ள இருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கார். அம்புடுதான்.

  'வடவர்' 'பொடவர்' என்று உளறிய திமுக, இப்போது வடவரான மன்மோகன் சிங்கை ராஜ்ஜிய சபாவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பும்போது அவங்களோட உண்மை நிறம் பல்லிளிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நெல்லை! அரசியலில் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஒரு guest blog இங்கேயும் எழுதலாமே!

   Delete
 2. தமிழகத்தில் இருந்து யாரும் பிஜேபி யிலிருந்து ஜெயிக்கவில்லை. பிஜேபி தனிப் பெரும்பான்மையை ஆட்சியை பிடித்திருக்கிறது. வேறு யாருக்கும் மந்திரி பதவி கொடுக்கத் தேவையில்லை. அப்படி இருக்கும்போது, தமிழகத்தை ஒதுக்கி விட்டார்கள் என்று புலம்புவதில் என்ன அர்த்தம் உள்ளது? ஒரு வேளை கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்கவேண்டும் என்று கேட்கிறார்களோ?

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பந்து! தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற உண்மையான அக்கறையில் தானா குற்றம் சொல்கிறார்கள்? மந்திரிசபையில் இடம் என்பதற்கு கழகங்களுடைய அகராதியில் வேறு அர்த்தம் என்பதை ஐமுகூட்டணி அரசுகள் நிரூபித்தனவே!

   அமைச்சராகத் தகுதி இருப்பதைப்பற்றி இவர்கள் பேசமாட்டார்கள். கீழ்த்தரமான அரசியல் இது.

   Delete
 3. எனக்கென்னவோ வைத்திலிங்கம் தனக்கு வேண்டும் என்று சொன்னது என்பதனையும் மீறி ஒபிஎஸ் மகன் பள்றி ஐபி ரிப்போர்ட் எந்த அளவுக்கு இருந்துருக்கும் என்று நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உளவுத்துறை அறிக்கையை வைத்துத் தான் இங்கே மந்திரிகள் முடிவு செய்யப்படுகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள் ஜோதிஜி? ஓபிஎஸ்சுக்கு டில்லியில் செல்வாக்கு என்பது அதிமுகவுக்குள் நடந்த உள்ளடி வேலைகளால் இல்லை என்றாகி இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது எது நிஜம் எது பொய் என்பதும் வெளிப்பட்டுவிடும். .

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!