இட்லி வடை பொங்கல்! #28 சனிக்கிழமை ஸ்பெஷல்

சுமந்த் சி ராமன்! தூர்தர்ஷனில் Sports Quiz நடத்திக் கொண்டிருந்து ஏதோ ஒரு நாளில் அரசியல் விமரிசகரும் ஆகி தொலைகாட்சி விவாதங்களில் தன் பாண்டித்தியத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அதற்கும் ஆர்னாப் கோஸ்வாமி ஆப்பு வைத்துவிட்டார் போல இருக்கிறது!  


இந்த அர்னாபு ரிபப்ளிக் டிவி வாடா விவாதத்துக்குன்னு கூப்ட்டான். நம்பி போனேண்டா...அங்க ஒரு 12 பேர்... மூத்திர சந்துக்குள்ள விட்டு கதறக் கதற அடிச்சானுக...நானும் அடிச்சுட்டு போங்கடான்னு விட்டுட்டேன்...அர்னாபு ஒருத்தனுக்கு போன் போட்டு கூப்பிட்டான். வாடா ஒரு நல்ல பீஸ் கெடச்சுருக்குன்னு. அவன் சொன்னான். இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா... நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது ? அவ்வ்வ்வ் இன்று காலையில் வாய்விட்டுச் சிரிக்க வைத்த முகநூல் பகிர்வு இது. சுமந்த் ராமன் என்றில்லை, இங்கே சேனல்களில் தங்களைப் பெரிய அரசியல் பண்டிதர்களாக நினைத்துக் கொண்டு கூத்தாடும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், விவாதக் களத்தில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று விஷத்தைக் கக்கும் பங்கேற்பாளர்களுக்கும் இதே மாதிரிப் பாடம் கற்பித்துத் தெறிக்க விடும் நன்னாள் என்று வருமோ என  எண்ண வைத்த பகிர்வும் கூட.


மந்திரிசபையில் யாரைச் சேர்ப்பது என்பது பிரதமருடைய தனிப்பட்ட உரிமை என்று அரசியல் சாசனம் தெளிவாகவே வரையறுத்திருக்கிறது. ஆளும் தரப்பில் உள்ள பலம் வாய்ந்த நபர்கள், கோஷ்டிகளுக்கு இடம் கொடுக்கப்படுவது பிரதமரின் சாதுர்யம் அல்லது பலவீனமாகவே பார்க்கப்படும் என்பது கூட இங்கே நடைமுறையில் பார்த்ததுதான். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட விஷயம் கூட இங்கே பெரும்பாலான தருணங்களில் காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? இந்த விவாதமுமே கூட, சிறப்பாக இருந்தது என்பதற்காக அல்ல, தமிழகத்தில் நம்முடைய அரசியல் அறிவு எப்படி இவர்களால் தொடர்ந்து மழுங்க அடிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.
         

நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும் உள்ள காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டத்தில் சேர்பெர்சனாக சோனியா G முன் மொழியப்பட்டு, தலையாட்டும் கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல் படுவதற்கு நேற்று (மே 31)  காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஆலோசனைக்கு அழைத்திருந்தது. Licking the wound என்பார்களே அதைப்போல, ஏன் தோற்றோம் என்பதிலேயே கவனமாக இருக்கும் இதர கட்சிகள் காங்கிரஸ் அழைப்பைக் கண்டுகொள்ளாததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது. 

இட்லி வடை பொங்கல் என்று தலைப்பு வைத்துவிட்டு அதென்ன பொங்கல் என்று கேட்கிறீர்களா? பதிவின் தொடக்கத்தில் கொஞ்சம் கிண்டலோடு ஆரம்பித்ததில்  சுமந்த் ராமன் இனிமேல் ரிபப்லிக் டிவி பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன் என்று சொன்னார் அல்லவா? அப்படியென்ன நடந்துவிட்டதென்று தெரிந்துகொள்ள வேண்டாமா?

   
முழுவிவாதத்தையும் பார்க்கமுடிந்தால் சிறப்பு! மிளகுப் பொங்கலாக இந்தவிவாதத்தில் மிளகு மட்டுமே வேண்டும் என்று கேட்டீர்களானால் 29வது நிமிடத்திலிருந்து கிடைக்கும்! கேள்விகளின் உக்கிரம் தாங்க முடியாமல் விவாதத்தில் இருந்து walk out செய்து ஓடிவிட்ட காட்சி அடுத்த நான்கு நிமிடங்களில்!   

 மிளகுக்காரம் குறைய நிறையவே சிரிப்பு 

  
மீண்டும் சந்திப்போம்.

9 comments:

 1. தமிழக அரசியல் விமரிசகர்கள் பெரும்பான்மையோருக்கு உள்ள ஒரு மைனஸ் பாயிண்ட் - அவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்னும் பிடிவாத நோக்குதான். எதையாவது ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு சந்தைக்கடை இரைச்சல் போட்டு, உணர்ச்சிபூர்வமாக கோஷம் எழுப்பினால் தான் ஒரு ஹீரோ என்னும் நினைப்பு. சாமானிய மக்களும் இதில் ஏமாந்து கை தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். அரசியல், அரசாங்கம் எல்லாம் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு ஆகிவிட்டது. விழித்துக்கொள்வோர் எல்லாம் பிழைத்துக்கொள்வர். மற்றவர்களின் எதிர்காலம் பற்றி நினைக்க மனது சங்கடமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கௌதமன் சார்! இங்கே நிறையப்பேருக்கு ஒருபக்கச்சார்பாகவே அரசியல் விமரிசனம் செய்வது பிழைப்பாகவே போய்விட்டது!

   Delete
  2. கௌதமன் சொன்னது முற்றிலும் உண்மை. தமிழக அரசியல் விமரிசகர்கள் பெரும்பான்மையோருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் உள்ள ஒரு மைனஸ் பாயிண்ட் ஒருவரை கண்மூடித்தனமாக எதிர்பார்கள் அல்லது ஒருவரை கண்மூடிதனமாக போற்றி புகழ்வார்கள்.

   Delete
 2. எத்தனையோபேர் எத்தனையோ சபதம் செஞ்சுட்டாங்க. சபதம் செஞ்சவங்கதான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட மாதிரி தெரியுதே தவிர... மோடி அதனால பாதிப்படைந்ததாகத் தெரியலை.

  ReplyDelete
  Replies
  1. அப்படியானால் கூடிய விரைவிலேயே தமிழ்நாட்டு இனமானசிங்கங்களும் கூட்டாளிகளுடன் மோடியிடம் மண்டியிடுவார்கள் என்கிறீர்கள்! அப்படித்தானே !?

   Delete
 3. I could not see Sumanth in NDTV and Tiranga. why ?

  ReplyDelete
  Replies
  1. லட்யன்ஸ் கும்பலில் சேர்கிற அளவுக்கு சுமந்த் வளரவில்லையோ என்னமோ? :-))) அவர் தகுதிக்கு இங்கே புதியதலைமுறை, தந்திடிவி இவைகளே போதுமானவை என்பது கூடாக காரணமாக இருக்கலாம்!

   Delete
 4. கம்பளின்னு நெனைச்சு கரடியப் புடிச்சாச்சு..

  கரடியை கை விட்டாலும் கரடி கை விடாது!...

  ReplyDelete
  Replies
  1. துரைராஜு சார்! உவமை புதுசு! இங்கே கம்பளி எது கரடி யார்?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!