Taming of the shrew ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம். அறிவுடன் சரிக்குச்சமமாகத் திமிரும் பிடித்த கதாநாயகியை அவள் வழியிலேயே அடக்குகிற கதாநாயகன் என்று சுபமாக முடிகிற ஒரு நாடகம். கதைச் சுருக்கமாகப்பார்க்கக் கொஞ்சம் இங்கே
எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதா? எட்டுத் திக்குகளிலும் சென்று கதையைச் சுட்டுப் படம் எடுக்கிற கலைஞர்கள் நிறைந்த நாடல்லவா இது! நீங்கள் எட்டுத்திக்கும் போய் அலையவேண்டாமென்று சுட்டு எடுத்தபடம் தமிழில் அறிவாளி! 1963 இல் சிவாஜி பானுமதி நடித்து வந்தவேகத்திலேயே பெட்டிக்குள் போய்ப் படுத்துக்கொண்ட படம். தங்கவேலு முத்துலட்சுமி காமெடி டிராக் ஒன்றுதான் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது என்றால் மிகையில்லை.
இப்போது இதே கதையைக் கொஞ்சம் உல்டாவாக அரசியல் களத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? மேற்கு வங்க அரசியல் களத்தில் அடங்கமாட்டேன் என்று திமிறிக்கொண்டிருந்த மம்தா பானெர்ஜியை ஒருவார கால மருத்துவர் வேலை நிறுத்தம் தொழுவத்தில் கட்டிப்போட்டுவிட்டது.
TOI infographic நன்றியுடன்
ப்பூ! இத்தனை சிம்பிளாக முடிந்திருக்க வேண்டிய, இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்? வேலைநிறுத்தம்? என்றால் மம்தா பானெர்ஜி மாதிரி மமதை மிகுந்த அரசியல்வாதியை நீங்கள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறீர்கள், அவ்வளவுதான்! சுமந்த் ராமன் தன்னுடைய செய்தியைக் குறித்து வைத்துக் கொள்ளச் சொல்லி கேலிப்பொருளாகி இருக்கிறார்.
மம்தா பானெர்ஜியை உருவாக்கி ஆதிப்பாவம் செய்த காங்கிரஸ் கட்சி இன்று என்ன நிலைமையில் இருக்கிறதாம்?
கரண் தாப்பர் அபிஷேக் மனு சிங்வியுடன் உரையாடுகிறார். கேள்வி கேட்பவர் பதில் சொன்னவர் இருவருமே என்ன கேட்பது என்ன சொல்வது என்று தடுமாற்றத்திலேயே இந்த 26 நிமிடப் பேட்டி நகர்கிறது.
கோஷம் போடுகிற மும்முரத்தில் கையெழுத்துப்
போடவும் மறந்தவர்!
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமுழக்கத்தோடு தான் பதவிப் பிரமாணம் செய்தார்கள். ஆரம்பமே களை கட்டுகிறதே என்று நினைக்க வேண்டாம். வேடிக்கை நிறையக் காத்திருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்!
கசப்பில் மூழ்கிய மனம் இந்தப் பதவி ஏற்புகளை
ReplyDeleteஏற்க மறுக்கிறது.
நீங்கள் சொல்லியது போல என்ன நடக்கிறது என்று
பார்க்கலாம்.
வாரிசு ஊரை விட்டே போய் விட்டதாகச் செய்தி வந்ததே.
கசப்பெதற்கு அம்மா? அதுதான் ஆட்டுக்கு வாலை அளந்துவைத்தாற்போல் ஒரு தேர்தல் முடிவு.
Deleteராகுல் காண்டி லண்டனுக்குப் போய்விட்டு நேற்றே ஊர் திரும்பியாயிற்று. மாலை கேரள எம்பிக்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்கிற நேரம் வரை அவைக்கு வரவே இல்லை. பதவிப் பிரமாணம் செய்து கொள்கிற நேரத்துக்கு வந்துவிட்டாராம், போதாதா?
எப்படியாவது மீடியாவில் செய்தி வரும் வேலையை மட்டும் செய்ய சென்றவர்கள் இந்த திமுக எம்பிக்கள். ஆக்கபூர்வமாக ஒரு புண்ணாக்கும் செய்ய வக்கில்லாதவர்கள்!
ReplyDeleteவாருங்கள் பந்து! நம்மூர் கழகங்களிடம் ஆக்கபூர்வமாக எதையாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதே கொஞ்சம் அதிகப்படி இல்லையோ?
Deleteஅவர்கள் ஊழலில் சம்பாதிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்கள்!!
கரன் தப்பார் கூடவா கேள்வி கேட்கத்தடுமாறுகிறார்? கேள்வி மன்னனாச்சே! (வீடியோ பார்க்கவில்லையா என்று நீங்கள் கேட்பார்கள்!)
ReplyDeleteவீடியோ கொடுப்பதே அதன் மீது விமரிசனமாகச் சொன்னதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் ஸ்ரீராம்! இங்கே கரண் தாப்பர், அபிஷேக் மனு சிங்வி இருவருமே ராகுலுடைய மனவோட்டம் புரியாமல் என்ன கேட்பது, பதில் சொல்வது என்பதில் தடுமாறுகிறார்கள்.
Deleteராகுலும் கையெழுத்துப் போடாமல் கிளம்பினார். இவரும்...! தமிழ் ஆச்சி தங்கா பாண்டியன்! இவர் கோஷம் போடமறந்தாலும், ஜோதிமணி தமிலை வால்த்தி விட்டு சென்றிருக்கிறார்!
ReplyDeleteஜோதிமணியை சகவாச தோஷம் சீக்கிரமாகவே கெடுத்துவிட்டது! கரூர் அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை எதிர்த்துக் குரல்கொடுத்துக் கொண்டிருந்த ஜோதிமணி, இப்போது செந்தில் பாலாஜியுடன் சென்று கரூர் கலெக்டரிடம் மணல் அள்ள மனுக் கொடுக்கிற அளவுக்கு முன்னேறியிருக்கிறார் ஸ்ரீராம்!
Delete