சண்டேன்னா மூணு! ராகுல் கரண்டி! ராமசந்திர குகா! ஞானாலயா!

ராகுல் கரண்டி, நாடாளுமன்றத்  தேர்தல் தோல்விக்குத் தங்கள் தரப்பில் என்ன காரணங்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கத் துப்பில்லாமல் மறுபடியும் பிரதமர் நரேந்திர மோடி மீது ஒரு வெறுப்புப் பிரசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்பதில் காங்கிரசுக்கு வேறு அஜெண்டா எதுவுமில்லை, காங்கிரஸ் ஒரு கட்சியாகத் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்த இடத்தில் பேசியவிதம் புலப்படுத்துகிறது.


நான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு ராமசந்திர குஹா! ஐம்பத்து நான்கே வயதான இந்த ஐ ஐ எம் பட்டதாரிநேரு மீது அளவு கடந்த மரியாதை அபிமானம் வைத்திருப்பவர் நேரு மீதுகாங்கிரஸ் கட்சி மீது  ஒரு மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனாலும் கூட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது விமரிசிக்கும்போது தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறவர் என்பதால் நம்பகத்தன்மை உள்ளவர். இவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் கூட இவரைப் புறக்கணித்து விட முடியாதபடி எழுதுகிறவர் என்ற அறிமுகத்தோடு 2013 ஜனவரியில் இவரைப்பற்றி ஒரு சிறு அறிமுகக் குறிப்போடு ஒரு பதிவை எழுதியிருந்தேன். 


News laundry தளத்துக்காக மது ட்ரெஹானுடன் ராமசந்திர குகா 2012 நவம்பரில் நடத்திய நேர்காணல் இது.ராமசந்திர குகா அந்த நாட்களில் இருந்தே ஒருவிஷயத்தில் தெளிவாகத்தான் இருந்துவருகிறார். இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெறமேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குகா  சொல்வது இதுதான்:

முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி ருப்பதில் இருந்து வெளிவரவிடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள்அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்  

இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியுமானால் முந்தைய பதிவில் அரேபிய சிந்தனையாளர் இபின் கால்தூனை சாக்கு வைத்து ராகுல் காண்டி அரசியலில் ஜெயிக்க முடியாது, தாக்கு பிடித்து நிற்க முடியாது என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் என்பதும் புரியும்.


அஸ்லாம் ஷேர் கான்! காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கத் தயாராம்! ராகுல் காண்டி என்ன செய்யப் போகிறார்?  

  
இந்தப்பக்கங்களில் அரசியல் உள்ளிட்டு எத்தனையோ விஷயங்களைக் குறித்து எழுதிக் கொண்டிருந்ததில்சென்ற ஆண்டுவேண்டுமென்றே ஒரு பெருத்த இடைவெளி. சுமார் ஏழுமாதங்கள்பதிவுகளை எழுவதில் ஏகப்பட்ட இடைவெளி.வெறுமனே பதிவுகளைஎழுதிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்நேரடியாகக் களம் இறங்கிச் செயல் படுகிறமாதிரி வருமாஎன்னுள் உறுத்திக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது சரி என்று முடிவெடுத்தேன். தொழிற்சங்கம்அரசியல் என்று முப்பதுண்டுகளுக்கும்  மேலாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தவன் வேறு மாதிரி முடிவெடுக்க முடியாதே!

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர்மன்னன் 
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதிய ஒரு வேண்டுகோள் களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்குத் தோதாக வந்து சேர்ந்து கொண்டது. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்ற செய்தியை கூகிள் ப்ளஸ் முதலான தளங்களில்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.சென்ற அக்டோபர் கடைசி வரை,தொடர்ச்சியாக பொதுவெளியில் ஒரு இயக்கமாகவே நடத்திவந்தது,  கடந்த இருமாதங்களாகக் குறைந்தும் போனது கிடைத்த அனுபவங்கள் அப்படி! அனுபவங்களைப்பரிசீலனை செய்தத்தில் கிடைத்த தகவல்கள்அப்படியே பொதுவெளியில்பகிர்ந்துகொள்ள முடியாதவையும் கூட!
ஞானாலயா ஆய்வு நூலகம்  மாதிரியான புத்தக சேகரங்கள் பாது காக்கப்பட வேண்டியவை.கௌரவிக்கப்பட வேண்டியவை.இந்த விஷயத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றுவதைஇந்தச் சுட்டிகளில் இருக்கும் செய்திகளைப் பார்த்து விட்டு நேரடியாக புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கே அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறேன்.  

இதுவும் கூட 2013 ஜனவரி 11 அன்று எழுதிய பதிவின் ஒரு பகுதிதான்! ஞானாலயா ஆய்வு நூலகம் என்றொரு ஆலமரத்தைத் தங்களுடைய சொந்தக்குழந்தையைப் போல பராமரித்துவரும் ஞானாலயா தம்பதியினர் பா.கிருஷ்ண மூர்த்தி டோரதி இருவரைப் பற்றியும் இங்கே நண்பர்களுக்கு மீள் அறிமுகம் செய்ய விரும்புகிறேன். புதுக்கோட்டையில் இந்த நூலகத்தை ஆரம்பிக்க வேண்டிய காரணமென்ன என்பதை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்க     

மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!