Showing posts with label ஞானாலயா. Show all posts
Showing posts with label ஞானாலயா. Show all posts

வரலாறும் முக்கியமே! MM பிறந்தநாள்! The Magician!

ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும்  அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால்,  கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!) என்று இங்கே எழுதி  இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை1 நாம் தமிழர் கட்சி ஆசாமிகள் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்கள்!
  
  
இங்கே இன்றைக்கிருக்கிற  மதுரை பழைய பாண்டியர்களுடைய காலத்து மதுரை அல்ல, நாயக்கர்கள் காலத்து மதுரையின் எச்சம் என்பது கூடத் தெரியாமல் பேசுகிறார் சாட்டை துரைமுருகன்!வரலாற்றைத் திரித்துப் பேசுவது தமிழ் தேசியம் என்பது தெரிந்ததுதானே! உதியஞ்சேரல் பரத காலத்தவனா என்றொரு சிறுநூலைப் பள்ளி நாட்களில் படித்துச் சிரித்ததுண்டு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநூலாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த சப்ஜெக்ட் மீனாட்சி புத்தக  நிலைய வெளியீடாக வந்ததாக நினைவு. காசுக்காகக் கூவுகிற தமிழ்ப்புலவர்களில்   யாரோ ஒருத்தர் சேரமன்னன் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இருபக்கத்துச் சேனைகளுக்கும் சோறு கொடுத்தான் என்று ஒரு பாடலை எழுதிவிட்டுப்போக அதை வைத்து ஒரு வெட்டி ஆராய்ச்சி செய்து தீசிஸ் சமர்ப்பித்து டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் நூலாசிரியர்  என்பது  கொசுறு செய்தி.  பாடல் எழுதியவரின்  சமகாலத்துப் புலவர்களாக அறியப் பட்டவர்களை வைத்து, அந்த சேரமன்னன் பெயரை வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பாரதப்போர் நடந்த காலத்துக்கும் அந்த மன்னனுக்கும் தொடர்பு கிடையாது, வேண்டுமானால் பாரதப் போரில் உயிர்நீத்த இருபக்கத்துக்கும் திதி வேண்டுமானால் கொடுத்து சோற்றுப்பிண்டம் வைத்திருக்கலாம் என்று முடிகிற இந்த ஆராய்ச்சி (?) நூலைப் பற்றிய நினைவு வருகிறது. , 


கூடவே,          தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞையே கிடையாது என்று வேறொரு context இல் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவி நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொன்னதும்  சேர்ந்து நினைவுக்கு வருகிறது!  
                                                            

அட! நம்ம மண்ணு மோகனருக்கு இன்னைக்குப் பொறந்த நாளாமே!  

Good News For People Who Love Bad News In a Twist, Netanyahu Wins a Chance to Keep His Job
மறுபடியும் மொதல்ல இருந்தா?  சமீபத்தைய இஸ்ரேல் தேர்தல்களில் பிரதமர் நேத்தன்யாஹூ எதிர்பார்த்தபடி அவருடைய லிகுட் கட்சிக்குப் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் மீண்டும் ஆட்சியமைக்க நேத்தன்யாஹூவுக்கே அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தற்போதைய செய்தி! But by Wednesday, in a surprise twist, Mr. Netanyahu — long called “the magician” for his political survival skills — was back on center stage. President Reuven Rivlin chose him to try to cobble together a coalition, opening the door to a continued shift to the right for Israel and offering a potential political lifeline to Mr. Netanyahu, who faces a looming indictment for corruption என்கிறது நியூயார்க் டைம்ஸ். லிகுட் கட்சியும் ஆதரவுக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமுள்ள 120 இடங்களில் 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஒரு working majority என்பதற்கு இன்னமும் 6 இடங்கள் வேண்டிய நிலையில் நேத்தன்யாஹூ தாக்குப் பிடிப்பாரா? கஷ்டம் தான் ஆனால் அவரால் முடியாதது இல்லை! இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரியான சூழ்நிலைகளை சமாளித்திருக்கிற மந்திரவாதி அவர் என்று ஒரு அரசியல் விஞ்ஞானி சொல்கிறாராம்!
 
Mr. Netanyahu’s chances of success are “not good but not impossible,” said Gadi Wolfsfeld, a political scientist at the Interdisciplinary Center Herzliya. “He’s pulled rabbits out of the hat before.”  
                                                                              
இன்றைக்கு செய்திகளின் ரவுண்டப் போதுமா?

மீண்டும் சந்திப்போம். 

 

அக்கப்போர்களில் கவனம்! கொஞ்சம் உலகப் பார்வையும் வேண்டாமோ?

ந்தப்பக்கங்களில் A Wednesday  என்று தேடிப்பார்த்தால் உள்ளூர் அக்கப்போர்களே பெரும்பாலான பதிவுகளில் இடம் பிடித்திருப்பதைப் பார்க்க முடியும்! A Wednesday ஹிந்திப்படத்தை கமல்ஹாஸன் ரீமேக் செய்து உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்தபோது இங்கே தமிழ் வலைப்பதிவர்கள் ரொம்பவுமே பொங்கித் தீர்த்தார்கள்! கொஞ்ச காலத்துக்குப் பின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் சொல்லிவைத்தாற் போல தங்களுடைய பொங்கல், பதிவுகளை நீக்கிக் கொண்டார்கள்! 127 பதிவர்கள் இப்படிப் பொங்கித் தீர்த்ததாக நண்பர் உண்மைத்தமிழன் தொகுத்து வைத்திருப்பது இங்கே   அங்கே போய்ப் பார்த்தால் பொங்கல் வைத்து அப்புறம் நீக்கிக் கொண்டவர்கள் யார் என்பது தெரியும்! என்று எழுதிய இந்தப்பதிவும் கூட அதில் அடக்கம் தான்!  எத்தனை நாட்களுக்குத் தான் கிணற்றுத் தவளைகளாக இதுபோல உள்ளூர் அக்கப்போர்களிலேயே நம்முடைய கவனத்தை வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 


த்தியகிழக்கு நாடுகளின் அரசியல், எதிர்காலத்  தலையெழுத்தை நிர்ணயிக்கக்  கூடிய ஒரு தேர்தலாகவே கூட நேற்றைக்கு நடந்து முடிந்திருக்கும் இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இருக்கலாம் என்பதால் முந்தைய பதிவில் இஸ்ரேல் தேர்தல்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதான தாக்குதல் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை பாதியாகக் குறைத்திருப்பதில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று பேசத் தெரிகிறது. ஆனால் மத்தியகிழக்கில் அமைதியைப் பாதிக்கக் கூடிய ஒரு தேர்தலைப் பற்றியும் பேசுகிறோமா? என்னதான் இங்கே அரசியல் உள்ளூர் அக்கப் போர்களால் ஆனது என்றாலும், அதைவிட அதிகமாகப் பாதிக்கிற விஷயங்களிலும் கொஞ்சம் அக்கறை வேண்டாமோ என்பது என்னுடைய நீண்டநாள் ஆதங்கம்! சரி, இஸ்ரேல் தேர்தல்களில் மே மாதம் நடந்த பொதுத்தேர்தல் மாதிரியே பிரதான கட்சிகள் இரண்டுமே மெஜாரிட்டியைத் தொடமுடியாது, மீண்டும் உதிரிகளோடு கூட்டணி வைத்தால் தான் ஆட்சி அமைக்கமுடியும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்  கணிப்புக்கள் சொல்வதாகத் தற்போதைய செய்தி. நீண்ட காலமாக (13 ஆண்டுகள்) ஆட்சியில் இருந்த பிரதமர் நேத்தன்யாஹூவுக்கு  பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள்.


ள்ளூர் அக்கப்போர்கள் அவ்வளவு சகித்துக் கொள்கிற மாதிரியாகவா இருக்கின்றன? இந்த 23 நிமிட விவாதத்தையே கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்! அமித் ஷா என்ன பேசினாலும் அதை நெகடிவாக, சர்ச்சையாக்க வேண்டுமென்றே கங்கணம் கட்டிக் கொண்டு ஊடகங்களும் எதிர்த்தரப்பும் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு செயல் படுகிறமாதிரித் தான் இருக்கிறது! இல்லையென்று மறுக்கும் நண்பர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் காரணங்களோடு சொல்லுங்களேன்! 

மித் ஷா என்ன context இல் எப்படிச் சொன்னார் என்பதைப் பேசுவதற்கு முன்னால், இங்கே இந்திய ஜனநாயகத்தில் இருக்கிற மாதிரி  உதிரிக்கட்சிகளுடைய ஆட்டம் உலகத்தில் வேறெந்த ஜனநாயகத்திலாவது இருக்கிறதா? அரை, முக்கால் சதவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியாத உதிரிக்கட்சிகள் சாதித்ததென்ன  என்று கொஞ்சம் யோசித்திருக்கிறோமா? உதிரிக் கட்சிகளோடு ஒட்டிக் கொண்டுதான் இங்கே திமுக மாதிரி பெரிய கட்சியே இருக்க முடியுமென்றால் அர்த்தம் இருக்கிறதா? 1977 இல் ஜனதாக் கட்சி எக்ஸ்பெரிமென்ட் முதற் கொண்டு ஏகப்பட்ட பரிசோதனைகள் இந்திய அரசியலில் நடந்து முடிந்திருக்கின்றன. அவைகளிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்? எப்போதாவது இவைகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறோமா?

ங்கே பிஜேபி அதிபர் ஆட்சிமுறையை மறைமுகமாக வலியுறுத்துவதாகத் தான் பலகட்சி ஆட்சிமுறை தோற்று விட்டதாக அமித் ஷா பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விசிகவின் வன்னியரசு மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவதை விடுங்கள்! Bihar Movement என்று  இந்தச் சுட்டியிலும் இதே வார்த்தையைக் கொண்டு இணையத்திலும் தேடிப் பாருங்கள்! 1971 நாடாளுமன்றத்தத் தேர்தல்களில் இந்திரா காண்டி அமோக(?) வெற்றியடைந்த பிறகு, அவ்ரதுபோக்கில் நிறைய மாறுதல்கள், எல்லா அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் என்கிற அமெரிக்க அதிபர் முறை மாதிரி ஒரு தேர்தல் முறைக்குத் தயாராகிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்த காலத்தில் பிஹார் இயக்கம் என்று ஊழலுக்கெதிரான மாணவர் போராட்டம் வலுவான தருணத்தில், ஜெயப்ரகாஷ் நாராயணனைத் தமைமைதாங்க அழைத்த தருணம்! தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், பிஹார் இயக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து 47 நாட்கள் தினமணி நாளிதழில், ஜெயப்ரகாஷ் நாராயணன்  இந்திரா காண்டியின் போக்குக்கு எதிராக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதும் இதர விவரங்களுமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது, பின்பு தினமணி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கூகிள் தேடலில் பிஹார் இயக்கம் என்று தேடினால் பிபிசி தளத்தில் வெளியான இந்த ஒரு செய்தி தான் கிடைக்கிறது!  பிஹார் இயக்கம் தினமணி வெளியீடாக வந்த புத்தகம் தற்சமயம் நானறிந்தவரை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது. 

விசிக மாதிரியான உதிரிக் கட்சிகளுக்கு வரலாறும் தெரியாது, போகும் திசை பற்றிய தெளிவும் கிடையாது. ஆனால் இன்னும் எத்தனைநாட்களுக்கு இவர்களைப் போன்ற உதிரிகள் நாட்டாமை செய்வதை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம், சொல்லுங்கள்! இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எத்தனை. அவை எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன, எவ்வளவு வாக்கு (சதவீதத்தில்) வாங்கியிருக்கின்றன என்பதெல்லாமே பொதுவெளியில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இருப்பதுதான்!

திவுகளின் இங்கே  பகிர்வதெல்லாம்  உங்களைக் கொஞ்சம் யோசிக்க வைப்பதற்காக மட்டுமே! ஏன் எங்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரியாதா என்று சண்டைக்கு வருவதற்கு முன்னால், என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.       
              

சண்டேன்னா மூணு! ராகுல் கரண்டி! ராமசந்திர குகா! ஞானாலயா!

ராகுல் கரண்டி, நாடாளுமன்றத்  தேர்தல் தோல்விக்குத் தங்கள் தரப்பில் என்ன காரணங்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கத் துப்பில்லாமல் மறுபடியும் பிரதமர் நரேந்திர மோடி மீது ஒரு வெறுப்புப் பிரசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்பதில் காங்கிரசுக்கு வேறு அஜெண்டா எதுவுமில்லை, காங்கிரஸ் ஒரு கட்சியாகத் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்த இடத்தில் பேசியவிதம் புலப்படுத்துகிறது.


நான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு ராமசந்திர குஹா! ஐம்பத்து நான்கே வயதான இந்த ஐ ஐ எம் பட்டதாரிநேரு மீது அளவு கடந்த மரியாதை அபிமானம் வைத்திருப்பவர் நேரு மீதுகாங்கிரஸ் கட்சி மீது  ஒரு மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனாலும் கூட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது விமரிசிக்கும்போது தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறவர் என்பதால் நம்பகத்தன்மை உள்ளவர். இவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் கூட இவரைப் புறக்கணித்து விட முடியாதபடி எழுதுகிறவர் என்ற அறிமுகத்தோடு 2013 ஜனவரியில் இவரைப்பற்றி ஒரு சிறு அறிமுகக் குறிப்போடு ஒரு பதிவை எழுதியிருந்தேன். 


News laundry தளத்துக்காக மது ட்ரெஹானுடன் ராமசந்திர குகா 2012 நவம்பரில் நடத்திய நேர்காணல் இது.ராமசந்திர குகா அந்த நாட்களில் இருந்தே ஒருவிஷயத்தில் தெளிவாகத்தான் இருந்துவருகிறார். இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெறமேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குகா  சொல்வது இதுதான்:

முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி ருப்பதில் இருந்து வெளிவரவிடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள்அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்  

இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியுமானால் முந்தைய பதிவில் அரேபிய சிந்தனையாளர் இபின் கால்தூனை சாக்கு வைத்து ராகுல் காண்டி அரசியலில் ஜெயிக்க முடியாது, தாக்கு பிடித்து நிற்க முடியாது என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் என்பதும் புரியும்.


அஸ்லாம் ஷேர் கான்! காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கத் தயாராம்! ராகுல் காண்டி என்ன செய்யப் போகிறார்?  

  
இந்தப்பக்கங்களில் அரசியல் உள்ளிட்டு எத்தனையோ விஷயங்களைக் குறித்து எழுதிக் கொண்டிருந்ததில்சென்ற ஆண்டுவேண்டுமென்றே ஒரு பெருத்த இடைவெளி. சுமார் ஏழுமாதங்கள்பதிவுகளை எழுவதில் ஏகப்பட்ட இடைவெளி.வெறுமனே பதிவுகளைஎழுதிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்நேரடியாகக் களம் இறங்கிச் செயல் படுகிறமாதிரி வருமாஎன்னுள் உறுத்திக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது சரி என்று முடிவெடுத்தேன். தொழிற்சங்கம்அரசியல் என்று முப்பதுண்டுகளுக்கும்  மேலாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தவன் வேறு மாதிரி முடிவெடுக்க முடியாதே!

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர்மன்னன் 
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதிய ஒரு வேண்டுகோள் களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்குத் தோதாக வந்து சேர்ந்து கொண்டது. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்ற செய்தியை கூகிள் ப்ளஸ் முதலான தளங்களில்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.சென்ற அக்டோபர் கடைசி வரை,தொடர்ச்சியாக பொதுவெளியில் ஒரு இயக்கமாகவே நடத்திவந்தது,  கடந்த இருமாதங்களாகக் குறைந்தும் போனது கிடைத்த அனுபவங்கள் அப்படி! அனுபவங்களைப்பரிசீலனை செய்தத்தில் கிடைத்த தகவல்கள்அப்படியே பொதுவெளியில்பகிர்ந்துகொள்ள முடியாதவையும் கூட!
ஞானாலயா ஆய்வு நூலகம்  மாதிரியான புத்தக சேகரங்கள் பாது காக்கப்பட வேண்டியவை.கௌரவிக்கப்பட வேண்டியவை.இந்த விஷயத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றுவதைஇந்தச் சுட்டிகளில் இருக்கும் செய்திகளைப் பார்த்து விட்டு நேரடியாக புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கே அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறேன்.  

இதுவும் கூட 2013 ஜனவரி 11 அன்று எழுதிய பதிவின் ஒரு பகுதிதான்! ஞானாலயா ஆய்வு நூலகம் என்றொரு ஆலமரத்தைத் தங்களுடைய சொந்தக்குழந்தையைப் போல பராமரித்துவரும் ஞானாலயா தம்பதியினர் பா.கிருஷ்ண மூர்த்தி டோரதி இருவரைப் பற்றியும் இங்கே நண்பர்களுக்கு மீள் அறிமுகம் செய்ய விரும்புகிறேன். புதுக்கோட்டையில் இந்த நூலகத்தை ஆரம்பிக்க வேண்டிய காரணமென்ன என்பதை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்க     

மீண்டும் சந்திப்போம்.