வரலாறும் முக்கியமே! MM பிறந்தநாள்! The Magician!

ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும்  அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால்,  கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!) என்று இங்கே எழுதி  இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை1 நாம் தமிழர் கட்சி ஆசாமிகள் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்கள்!
  
  
இங்கே இன்றைக்கிருக்கிற  மதுரை பழைய பாண்டியர்களுடைய காலத்து மதுரை அல்ல, நாயக்கர்கள் காலத்து மதுரையின் எச்சம் என்பது கூடத் தெரியாமல் பேசுகிறார் சாட்டை துரைமுருகன்!வரலாற்றைத் திரித்துப் பேசுவது தமிழ் தேசியம் என்பது தெரிந்ததுதானே! உதியஞ்சேரல் பரத காலத்தவனா என்றொரு சிறுநூலைப் பள்ளி நாட்களில் படித்துச் சிரித்ததுண்டு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநூலாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த சப்ஜெக்ட் மீனாட்சி புத்தக  நிலைய வெளியீடாக வந்ததாக நினைவு. காசுக்காகக் கூவுகிற தமிழ்ப்புலவர்களில்   யாரோ ஒருத்தர் சேரமன்னன் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இருபக்கத்துச் சேனைகளுக்கும் சோறு கொடுத்தான் என்று ஒரு பாடலை எழுதிவிட்டுப்போக அதை வைத்து ஒரு வெட்டி ஆராய்ச்சி செய்து தீசிஸ் சமர்ப்பித்து டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் நூலாசிரியர்  என்பது  கொசுறு செய்தி.  பாடல் எழுதியவரின்  சமகாலத்துப் புலவர்களாக அறியப் பட்டவர்களை வைத்து, அந்த சேரமன்னன் பெயரை வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பாரதப்போர் நடந்த காலத்துக்கும் அந்த மன்னனுக்கும் தொடர்பு கிடையாது, வேண்டுமானால் பாரதப் போரில் உயிர்நீத்த இருபக்கத்துக்கும் திதி வேண்டுமானால் கொடுத்து சோற்றுப்பிண்டம் வைத்திருக்கலாம் என்று முடிகிற இந்த ஆராய்ச்சி (?) நூலைப் பற்றிய நினைவு வருகிறது. , 


கூடவே,          தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞையே கிடையாது என்று வேறொரு context இல் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவி நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொன்னதும்  சேர்ந்து நினைவுக்கு வருகிறது!  
                                                            

அட! நம்ம மண்ணு மோகனருக்கு இன்னைக்குப் பொறந்த நாளாமே!  

Good News For People Who Love Bad News In a Twist, Netanyahu Wins a Chance to Keep His Job
மறுபடியும் மொதல்ல இருந்தா?  சமீபத்தைய இஸ்ரேல் தேர்தல்களில் பிரதமர் நேத்தன்யாஹூ எதிர்பார்த்தபடி அவருடைய லிகுட் கட்சிக்குப் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் மீண்டும் ஆட்சியமைக்க நேத்தன்யாஹூவுக்கே அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தற்போதைய செய்தி! But by Wednesday, in a surprise twist, Mr. Netanyahu — long called “the magician” for his political survival skills — was back on center stage. President Reuven Rivlin chose him to try to cobble together a coalition, opening the door to a continued shift to the right for Israel and offering a potential political lifeline to Mr. Netanyahu, who faces a looming indictment for corruption என்கிறது நியூயார்க் டைம்ஸ். லிகுட் கட்சியும் ஆதரவுக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமுள்ள 120 இடங்களில் 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஒரு working majority என்பதற்கு இன்னமும் 6 இடங்கள் வேண்டிய நிலையில் நேத்தன்யாஹூ தாக்குப் பிடிப்பாரா? கஷ்டம் தான் ஆனால் அவரால் முடியாதது இல்லை! இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரியான சூழ்நிலைகளை சமாளித்திருக்கிற மந்திரவாதி அவர் என்று ஒரு அரசியல் விஞ்ஞானி சொல்கிறாராம்!
 
Mr. Netanyahu’s chances of success are “not good but not impossible,” said Gadi Wolfsfeld, a political scientist at the Interdisciplinary Center Herzliya. “He’s pulled rabbits out of the hat before.”  
                                                                              
இன்றைக்கு செய்திகளின் ரவுண்டப் போதுமா?

மீண்டும் சந்திப்போம். 

 

2 comments:

  1. பதினாறடி வேங்கை கதை தெரியுமா உங்களுக்கு.
    ஒருத்தன் சொன்னானாம் காலயில் பல் தேக்கப் போனபோது எட்டடி வேங்கையைப் பார்த்தேன் என்று. அவனை விட ஆகாசப் புளுகன் சொன்னானாம். ஓ அந்த வேங்கையா நான் கூட உமிழ்ந்தேன் அது முகத்தில்.
    இன்னோருத்தன் அது எட்டடி இல்லைப்பா பதினாறடி. நாந்தான் அதன் முகத்தை தொட்டேனே
    ஈரமாத்தான் இருந்தது. சேன்னு கையைக் கழுவிக்கொண்டேன் என்று."))

    எங்கள் மாமனார், ஒரு பொய்யருக்கு வைத்த பெயர் பதினாறடி வேங்கை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!
      அந்தக் கதை தெரியாது! ஆனால் நம்மூரில் அண்டப்புளுகன் ஆகாசப் புளுகன்களுக்கெல்லாம் பொத்தாம் பொதுவாக தமிழ்ப்புலவர்கள் அல்லது கவிஞர்கள் என்றுதான் அர்த்தம் சொல்லுவார்கள்! கவிதைக்குப் பொய்யழகு என்று சமீபத்தில் ஒரு புளுகன் எழுதியிருக்கிறானே! இதில் எட்டடி என்ன பதினாறடி என்ன?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!