சோனியாG காங்கிரசுக்கு பயமுறுத்துகிற மிகப்பெரிய சவாலாக அக்டோபர் 21 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிற மஹாராஷ்டிரா, ஹரியானா இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களோடு, 64 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்தே அறிவிக்கப் பட்டிருக்கிற இடைத்தேர்தல்களும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சியோடு சோனியாG காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 38 தொகுதிகளை கூட்டணியில் சேரவருகிற உதிரிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும். முந்திக்கொண்டு ஒரு உடன்பாட்டைச் செய்து முடித்துவிட்டது. அதனால் என்ன? ஜனங்கள் காங்கிரசுக்கு உயிர் கொடுத்து விடுவார்களா என்ன?
நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, திமுக கொடுக்குமா? அல்லது தானே போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும், விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.
2014 சட்டசபைத் தேர்தல்களில் பிஜேபியோடு முறுக்கிக் கொண்டு சிவசேனா தனித்தே நின்றதில் வெறும் 63 இடங்களும் பிஜேபிக்கு 122 இடங்களும் கிடைத்த அனுபவத்தில் இந்த முறை சிவசேனா கொஞ்சம் அடக்கி வாசிக்கிற மாதிரித்தான் தெரிகிறது. போதாக்குறைக்கு இரு நாட்களுக்கு முன் நாசிக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே அயோத்தி விவகாரத்தில் சில ஓட்டைவாயர்கள் நாட்டின் உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் என்று மறைமுகமாக சிவசேனாவின் அதீத உபதேசங்களுக்குப் பதில் சொல்கிற மாதிரி இடித்துச் சொன்னதைத்தாண்டி, பெரிதாக தாக்கரேவைக் கண்டுகொள்ளவில்லை. பிஜேபி சிவசேனா தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியவில்லை என்பதோடு உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவைக் களமிறக்கி, துணை முதல்வராக்க வேண்டும் என்கிற கனவு என்னாகுமோ என்ற சஸ்பென்சும் நீடிக்கிறது.
தங்களுடைய ஆட்சி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான விமர்சனம் குறித்து பேசிய மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், ’நான் சாம்னா பத்திரிக்கையை வாசிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சரவையின் சார்பில் எடுக்கப்பட்ட அத்தனை முடிவுகளும் சிவசேனா அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான்’ என்று விளக்கமளித்தார். அடுத்த முறையும் நீங்கள் முதல்வராக பதவியேற்பீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? என்று பதிலளித்தார்
ஹரியானா காங்கிரஸ் கதையைச் சொல்லவே வேண்டாம்! அங்கே காங்கிரஸ் கட்சி, 46% ஜாட் மற்றும் தலித் வாக்குகளை மட்டுமே நம்பிக் களமிறங்க வேண்டிய நிலைமை! அந்த 46% வாக்குகளில் காங்கிரசுக்கு எவ்வளவு தேறும் என்பது கூட அவர்களால் கணிக்க முடியவில்லை.
Replying to
Party (JDS) with 37 seats and outrightly Rejected Party ( CONgress) with 80 seats
Thanks Pappu's of both parties
3:19 PM · Sep 21, 2019
இது கர்நாடகத்தில் 15 அசெம்பிளி இடைத்தேர்தல்களிலும் தனித்தே போட்டி என்று அறிவித்த தேவே கவுடா கட்சியைக் கலாய்த்து வந்த முதல் ட்வீட்! அதற்கு கொஞ்சமும் சளைக்காத இந்தச் செய்திக்கு என்னென்ன எதிர்வினையோ? மூன்றாம் கலீஞர் வீராவேசமாகப் பேசியதெல்லாம் வீண்தானா?
காமெடிச் செய்திகள் வேறெதுவும் சிக்கவில்லை என்பதால் இந்த ஒருமாதப்பழசு!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!