நேற்று முன்தினம் வேலூரில் சிலநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வந்தபோது திமுக அதிமுக புள்ளிகள் போட்டிபோட்டுக் கொண்டு வரவேற்புக் கொடுத்த அதேசமயம், பிஜேபி ஆதரவாளர்கள் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்பியதற்கு பதிலாக திமுக எம்பி கதிர் ஆனந்தின் ஆதரவாளர்கள் பெரியார் வாழ்க என்று எதிர் கோஷம் எழுப்பினார்களாம்! இங்கே ஆவி உட்பட சில ஊடகங்களில் செய்தியாக வந்ததற்கு மேல் அதை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை!
சென்னை ஐஐடியில் பட்டமளிப்பு, பரிசுவழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி தற்போது உரை நிகழ்த்தினார். நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போதுகூட, நாளை சென்னை ஐஐடியில் பேசப் போகிறேன், என்ன பேசலாம் யோசனை சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, நம்மூர் ஊடாகங்களோ அரசியல் கட்சிகளோ யோசனை எல்லாம் சொல்ல மாட்டார்கள்! ஜனங்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் பிரதமரைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. கறுப்பு பலூன்களைப் பறக்கவிட வைகோவோ, கறுப்புக்கொடி காட்ட திமுக, திக ஆசாமிகள் எவருமே களத்தில் இல்லாவிட்டாலும் #GoBackModi என்று ட்வீட்டரில் செய்திபோட 200ரூபாய் உபிக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும்சேர்ந்து கொண்டிருப்பதாக twitter trends இல் தகவல் தெரிகிறது. புதிய தலைமுறை உட்பட சேனல்கள், மோடி வெறுப்பை முன்னிலைப் படுத்துகிற விவாதங்களை நேற்றிலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்! வைகோ, திமுக, திக, சுபவீ உதிரி ஆசாமிகள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. புதிய தலைமுறை விவாதத்தில் இன்று காலை கோலாகல ஸ்ரீனிவாஸ் சொன்ன மாதிரி மோடி மீதான பயத்தை வெளிக்காட்டும் மோடி எதிர்ப்பு மோடி எதிர்ப்புக்கெல்லாம் இப்போது அவசியம் இல்லை, தேர்தல்கள் எதுவும் நெருக்கத்தில் இல்லையே!
ஐநா-வில்
இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்துக்களான விடுதலை புலிகள் தான் காரணம் என்றார், அதே சபையில் நம் பாரத பிரதமர்
ஜி தமிழின் தொன்மையை கணியன் பூங்குன்றனார் பாடலை மேற்கோள் காட்டினார்.
Go Back Modi என்றவர்களை நினைத்தால் தான் பரிதாபம்...
Translate Tweet
7:05 PM · Sep 28, 2019
ஆனாலும் H ராஜாவுக்கு ட்வீட்டரில் பதில் சொல்வதற்கு நிறையப் பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இந்தக் கீச்சுக்கு வந்திருக்கிற எதிர்க்கீச்சுக்களில் இருந்து தெரிகிறது.
காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லாவை மீட்கப்போன தமிழ்ப் புலி வைகோவின் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுவை இன்றைக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, புலி வேஷத்தைக் கலைத்து விட்டது என்பது இப்போதைய செய்தி.
மதிமுகவின் செப்டெம்பர் 15 மாநாட்டுக்கு அழைக்கவேண்டும், இருக்குமிடம் தெரியவில்லை கண்டிபிடித்துத் தாருங்கள் என்பது வைகோவின் மனு, நினைவு இருக்கிறதா? இது விசாரணைக்கு வந்த தேதி இன்று செப்டெம்பர் 30!
டாக்டர் யக்கோவிடமிருந்து ஒருவழியாகத் தமிழ்நாட்டு அரசியல் விடுபட்டுவிட்டது என்று நினைத்தால், இல்லையாமே! இந்த 32 நிமிட வீடியோவைப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. இதுல வீடியோவுக்கு பாரதி வரிகளைத் தலைப்பாக வேறு வைத்து!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!