சால்வை அழகராக வெளியே எப்போதும் சிரித்த முகத்துடனும் பொருளாதாரப் புளி போர்வையிலும் வலம் வந்த ஜாமீன் வாரிசு சீனாதானாவை காலம் எப்படி ஒரு புரட்டுப் புரட்டிப் போய்விட்டது என்பதைப் பார்க்கும்போது ஒருநாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் என்று நிலையாமையைக் குறித்த ஒரு அற்புதமான ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வருகிறது.
ஒரு கதை சொல்வார்கள்! ஒரு செல்வந்தனிடம் உதவிகேட்டுப் போன ஒருத்தரிடம் காசா லேசா என்று எள்ளிச் சிரித்தானாம்! மனம் நொந்து காசாலே சா என்று சொல்லித் திரும்பினார் என்ற கதையாக காசு காசு என்றே அலைந்தவர் இன்று ஊரே கைகொட்டிச் சிரிக்கிற நிலைக்கு ஆளாகியிருக்கிறார். கர்மா தியரி பொய்யென்று யார் சொன்னது? அதே மாதிரி கர்நாடக காங்கிரசில் கொஞ்சம் வித்தியாசமான KDசகோதரர்கள்!
DK சிவகுமாருக்காவது ஒக்கலிகர் ஜாதி சப்போர்ட் இருக்கிறது. கொஞ்சம் ஆர்ப்பாட்டம், ரகளை என்று கெத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். இங்கே தமிழகத்தில் செட்டியாருக்கு ஜாதி சப்போர்ட்டும் காணோம், கட்சி சப்போர்ட்டும் காணோம்! உள்ளூர் KDbrothers நிலைமை என்ன? கற்பனை செய்யவே சும்மா ஜாலியாக இருக்கிறதா?
நிருபர் ;) உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் என்னங்க வித்தியாசம்?
ஸ்டாலின் ;) எங்கப்பா தமிழனை சாவடிச்சார்.!
நான் தமிழை சாவடிக்கிறேன்..
Translate Tweet
10:44 AM · Sep 13, 2019 ச்சும்மா ஒரு இசுடாலின் காமெடி!
இன்று படித்ததில் பிடித்ததாக
இந்திய அளவிலான ஒரு பிரச்னைக்கு எதிராக அம்பேத்கர் - பெரியார் மட்டுமே போராடினார்கள் என்ற அடையாளத்தைக் கொடுப்பது தவறான போக்கு!
விகடன் கேள்வி; "சாதி - மத மோதல்கள் அதிகரித்துவரும் இவ் வேளையில், பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளை இன்னும் வீரியமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நீங்களே, அக்கொள்கைகள் காலாவதியாகி விட்டன என்று சொல்வது சரிதானா?’’
பதில்; இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட போதே சட்டரீதியாகத் தீண்டாமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் நடை முறையில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை எனும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடரத்தான் செய்கின்றன. அவற்றை சட்டத்தின் துணை கொண்டு ஒழிக்கவேண்டும். அதை விடுத்து, எந்த ஒரு கொள்கைக்கும் யாராவது ஒருவரைக் கொண்டுவந்து இணைக்கும் போக்கு என்பது தவறானது. இந்திய அரசியல் சட்டம்தான் நமக்கெல்லாம் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, வேறு எந்தத் தனிப்பட்ட நபரும் அல்ல.’’
கேள்வி; சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவத்தை மலரவைக்க அம்பேத்கர் - பெரியார் கொள்கைகள் தேவையில்லை என்கிறீர்களா?’’
பதில்; ஏன் மீண்டும் அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளையே நினைக்கிறீர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக மாற்றத்துக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். இந்திய அளவிலான ஒரு பிரச்னைக்கு எதிராக இந்த இரண்டு தலைவர்கள் மட்டுமே போராடினார்கள் என்ற அடையாளத்தைக் கொடுப்பது தவறான போக்கு.
1930-ல் இருந்த இந்தியா இப்போது இல்லை. கல்வி, சுகாதாரம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறது. காலத்தால் நிகழ்ந்த இந்த மாற்றங்களைப்போல், தீண்டாமை ஒழிப்பும் நிகழ்த்தப்படும்! அம்பேத்கர், பெரியார் என இருபெரும் தலைவர்களும் அவரவர் காலகட்டத்தில் அவர்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள். அந்தவகையில், ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற சட்ட வழிமுறையை முழுமையடையச் செய்வதற்கான போராட்டங்களை இப்போது நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்!’’
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் நேர்காணல் முழுமையாக இங்கே விகடன் தளத்தில்
எந்த இடம் கிடைத்தாலும் மேக்கப் பிடித்து உரையாற்றுகிற திராவிடங்களின் கெட்ட வழக்கம் இங்கே சேனல்களுக்கும் தொற்றிக் கொண்டிருப்பது, அந்த சேனல்களுக்கே பெரும் சாபக்கேடு. வீடியோ 22 நிமிடம் சுபஸ்ரீயில் ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றுகிற இந்த அரட்டையில் கிடைக்காத விடை இந்த இரு நிமிட வாசிப்பில்
1970 களில் எழுதப்பட்டது. - இந்திரா பார்த்தசாரதி
மிஸ்ரா, ஒரு டெல்லி அரசியல்வாதி, தமிழ் நாட்டிற்கு வருகிறார்.
மிஸ்ரா : போஸ்டரில் என்ன எழுதியிருக்கிறது?
முகுந்தன் : தலைவர் மலேசியா சென்று திரும்பி வந்திருக்கிறார். " மலேசியாவை வென்று வாகை சூடி வரும் தலைவரே! " என்று எழுதி இருக்கிறது.
மிஸ்ரா : மலேசியா விற்கும் இந்தியாவுக்கும் சண்டையா?
***************************
இந்தக் கேவலமான போஸ்டர் கலாசாரம், தன்னைத்தானே வெட்கமின்றி புகழ்ந்து கொள்ளுதல், கூலிப் படைகளை வைத்து போஸ்டர் அடித்து புகழ சொல்லுதல் போன்றவை திராவிட அரசியலின் எச்சங்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிடைத்த போஸ்டர் புகழ் தனக்குக் கிடைக்கவில்லையே என்று சில பல தலைவர்களின் பொறாமையால் வளர்ந்தது இந்த கேடு கெட்ட கலாசாரம்.
இதனைத் தடுக்க ஜெ ஒருவரால் தான் செய்ய முடிந்தது இருக்கும். அரசியலுக்கு முன்பே பொது ஜனப் புகழ் அவருக்கு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரும் இதையே செய்தார்.
இன்று அது வார்டு கவுன்சிலர் அளவில் வந்து நிற்கிறது.
லித்தோ பிரஸ் எளிமையானதும்,
1. திண்ணையில் வைத்து அலுமினிய தட்டில் சோறு வைத்து பார்க்கப்பட்ட கிழவன் கிழவி எல்லாம் செத்ததும் " இமயம் சரிந்தது" லெவலில்....
2. அரசியல் செல்வாக்கைக் காட்ட ஒரு பெண் குழந்தையின் வாழ்வில் அழகான தருணத்தையும் வியாபாரம் ஆக்கி...
3. அரைப் படம் நடித்த சொங்கிப் பயல்கள் " வருங்கால முதல்வரே! " என்றாகி
பொறாமையி லும் பொய்யிலும் பிறந்து, ஆடம்பர்த்திலும் பகட்டிலும், வெற்றுப் பேச்சால் வளர்ந்த ஒரு கலாச்சாரம் , உயிரை வாங்காது, வளர்க்குமா?
மீண்டும் சந்திப்போம்.
>>> திண்ணையில் வைத்து அலுமினிய தட்டில் சோறு வைத்து பார்க்கப்பட்ட ..<<<
ReplyDeleteதிண்ணையில் வைத்து நெளிந்து போன அலுமினிய தட்டில் பழைய சோறு வைத்து எப்போதடா தொலைவான் என்று எதிபார்க்கப்பட்ட கிழவன் கிழவிகள் செத்ததும் சிங்கங்களுக்கு அருகில் நின்று போஸ் கொடுப்பார்கள்!.....
>>> அரைப் படம் நடித்த சொங்கிப் பயல்கள் " வருங்கால முதல்வரே! " என்றாகி.. <<<
அருமை... அருமை...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
ReplyDeleteகழகங்கள் இல்லாத தமிழகம் என்றானால் அதுவும் அருமையாகத்தான் இருக்கும்!