Showing posts with label கொஞ்சம் சிரிப்பு. Show all posts
Showing posts with label கொஞ்சம் சிரிப்பு. Show all posts

இட்லி வடை பொங்கல்! #43 கொஞ்சம் சிரிக்க! சிந்திக்க! அரசியல்!

சால்வை அழகராக வெளியே எப்போதும் சிரித்த முகத்துடனும் பொருளாதாரப் புளி போர்வையிலும் வலம் வந்த ஜாமீன் வாரிசு சீனாதானாவை காலம் எப்படி ஒரு புரட்டுப் புரட்டிப் போய்விட்டது என்பதைப் பார்க்கும்போது ஒருநாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் என்று நிலையாமையைக் குறித்த ஒரு அற்புதமான ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வருகிறது.  


ஒரு கதை சொல்வார்கள்! ஒரு செல்வந்தனிடம் உதவிகேட்டுப் போன ஒருத்தரிடம் காசா லேசா என்று எள்ளிச் சிரித்தானாம்! மனம் நொந்து காசாலே சா  என்று சொல்லித் திரும்பினார் என்ற கதையாக காசு காசு என்றே அலைந்தவர்  இன்று ஊரே கைகொட்டிச் சிரிக்கிற நிலைக்கு ஆளாகியிருக்கிறார். கர்மா தியரி பொய்யென்று யார் சொன்னது? அதே மாதிரி கர்நாடக காங்கிரசில் கொஞ்சம் வித்தியாசமான KDசகோதரர்கள்! 


DK சிவகுமாருக்காவது ஒக்கலிகர் ஜாதி சப்போர்ட் இருக்கிறது. கொஞ்சம் ஆர்ப்பாட்டம், ரகளை என்று கெத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். இங்கே தமிழகத்தில் செட்டியாருக்கு ஜாதி சப்போர்ட்டும் காணோம், கட்சி சப்போர்ட்டும் காணோம்! உள்ளூர் KDbrothers நிலைமை என்ன? கற்பனை செய்யவே சும்மா ஜாலியாக இருக்கிறதா?

நிருபர் ;) உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் என்னங்க வித்தியாசம்? ஸ்டாலின் ;) எங்கப்பா தமிழனை சாவடிச்சார்.! நான் தமிழை சாவடிக்கிறேன்..
10:44 AM · Sep 13, 2019     ச்சும்மா ஒரு இசுடாலின் காமெடி!

இன்று படித்ததில் பிடித்ததாக     




இந்திய அளவிலான ஒரு பிரச்னைக்கு எதிராக அம்பேத்கர் - பெரியார் மட்டுமே போராடினார்கள் என்ற அடையாளத்தைக் கொடுப்பது தவறான போக்கு!
விகடன் கேள்வி; "சாதி - மத மோதல்கள் அதிகரித்துவரும் இவ் வேளையில், பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளை இன்னும் வீரியமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நீங்களே, அக்கொள்கைகள் காலாவதியாகி விட்டன என்று சொல்வது சரிதானா?’’
பதில்; இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்ட போதே சட்டரீதியாகத் தீண்டாமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் நடை முறையில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை எனும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடரத்தான் செய்கின்றன. அவற்றை சட்டத்தின் துணை கொண்டு ஒழிக்கவேண்டும். அதை விடுத்து, எந்த ஒரு கொள்கைக்கும் யாராவது ஒருவரைக் கொண்டுவந்து இணைக்கும் போக்கு என்பது தவறானது. இந்திய அரசியல் சட்டம்தான் நமக்கெல்லாம் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, வேறு எந்தத் தனிப்பட்ட நபரும் அல்ல.’’
கேள்வி; சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவத்தை மலரவைக்க அம்பேத்கர் - பெரியார் கொள்கைகள் தேவையில்லை என்கிறீர்களா?’’
பதில்; ஏன் மீண்டும் அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளையே நினைக்கிறீர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக மாற்றத்துக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். இந்திய அளவிலான ஒரு பிரச்னைக்கு எதிராக இந்த இரண்டு தலைவர்கள் மட்டுமே போராடினார்கள் என்ற அடையாளத்தைக் கொடுப்பது தவறான போக்கு.
1930-ல் இருந்த இந்தியா இப்போது இல்லை. கல்வி, சுகாதாரம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறது. காலத்தால் நிகழ்ந்த இந்த மாற்றங்களைப்போல், தீண்டாமை ஒழிப்பும் நிகழ்த்தப்படும்! அம்பேத்கர், பெரியார் என இருபெரும் தலைவர்களும் அவரவர் காலகட்டத்தில் அவர்களால் முடிந்ததைச் செய்திருக்கிறார்கள். அந்தவகையில், ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற சட்ட வழிமுறையை முழுமையடையச் செய்வதற்கான போராட்டங்களை இப்போது நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்!’’
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் நேர்காணல் முழுமையாக இங்கே விகடன் தளத்தில் 


எந்த இடம் கிடைத்தாலும் மேக்கப் பிடித்து உரையாற்றுகிற திராவிடங்களின் கெட்ட வழக்கம் இங்கே சேனல்களுக்கும் தொற்றிக் கொண்டிருப்பது, அந்த சேனல்களுக்கே பெரும் சாபக்கேடு.  வீடியோ 22 நிமிடம் சுபஸ்ரீயில் ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றுகிற இந்த அரட்டையில் கிடைக்காத விடை இந்த இரு நிமிட வாசிப்பில்  
1970 களில் எழுதப்பட்டது. - இந்திரா பார்த்தசாரதி
மிஸ்ரா, ஒரு டெல்லி அரசியல்வாதி, தமிழ் நாட்டிற்கு வருகிறார்.
மிஸ்ரா : போஸ்டரில் என்ன எழுதியிருக்கிறது?
முகுந்தன் : தலைவர் மலேசியா சென்று திரும்பி வந்திருக்கிறார். " மலேசியாவை வென்று வாகை சூடி வரும் தலைவரே! " என்று எழுதி இருக்கிறது.
மிஸ்ரா : மலேசியா விற்கும் இந்தியாவுக்கும் சண்டையா?
***************************
இந்தக் கேவலமான போஸ்டர் கலாசாரம், தன்னைத்தானே வெட்கமின்றி புகழ்ந்து கொள்ளுதல், கூலிப் படைகளை வைத்து போஸ்டர் அடித்து புகழ சொல்லுதல் போன்றவை திராவிட அரசியலின் எச்சங்கள்.
எம்.ஜி.ஆருக்கு கிடைத்த போஸ்டர் புகழ் தனக்குக் கிடைக்கவில்லையே என்று சில பல தலைவர்களின் பொறாமையால் வளர்ந்தது இந்த கேடு கெட்ட கலாசாரம்.
இதனைத் தடுக்க ஜெ ஒருவரால் தான் செய்ய முடிந்தது இருக்கும். அரசியலுக்கு முன்பே பொது ஜனப் புகழ் அவருக்கு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரும் இதையே செய்தார்.
இன்று அது வார்டு கவுன்சிலர் அளவில் வந்து நிற்கிறது.
லித்தோ பிரஸ் எளிமையானதும்,
1. திண்ணையில் வைத்து அலுமினிய தட்டில் சோறு வைத்து பார்க்கப்பட்ட கிழவன் கிழவி எல்லாம் செத்ததும் " இமயம் சரிந்தது" லெவலில்....
2. அரசியல் செல்வாக்கைக் காட்ட ஒரு பெண் குழந்தையின் வாழ்வில் அழகான தருணத்தையும் வியாபாரம் ஆக்கி...
3. அரைப் படம் நடித்த சொங்கிப் பயல்கள் " வருங்கால முதல்வரே! " என்றாகி
பொறாமையி லும் பொய்யிலும் பிறந்து, ஆடம்பர்த்திலும் பகட்டிலும், வெற்றுப் பேச்சால் வளர்ந்த ஒரு கலாச்சாரம் , உயிரை வாங்காது, வளர்க்குமா?
மீண்டும் சந்திப்போம்.    

வந்தா ராஜாவாத்தான் வருவேன்! அப்படீன்னா வரவே வராதே!!

வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்கிற வீராப்பும், வெட்டிக்கனவுகளும் இங்கே சினிமா ஸ்டார்களுக்கு மட்டுமல்லாது இசுடாலின் உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு இருப்பது தெரிந்த விஷயம் தான்!
சினிமா ஸ்டார்களுடைய வெட்டிச்சலம்பல்களை ரசிகர்களே இப்போதெல்லாம் வாயடைக்கச் செய்து விடுகிறார்கள் என்பது ரொம்ப நல்ல விஷயம்! அதே போல, ஒரு எல்லைக்குமேல் துள்ளிக் கொண்டிருக்கிற மாநிலக்கட்சிகளுக்கு எப்போது சொல்லப் போகிறோம்? 
காங்கிரசின் தமிழ்நாடு பிராஞ்சுக்குப் புதுத்தலைவர்!
Cheatஅம்பரத்தின் தீவீரவிசுவாசி!புதிதாக என்ன சொல்லி விடப்போகிறார்? செகுலர் அலங்கார அடைமொழிகளோடு ராவுல் பாபாவைப் பிரதமராக ஆக்குவதுதான் தன்னுடைய அஜெண்டாவாகச் சொல்கிறார். ஐமுகூட்டணி ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளில் ராவுல்பாபாவுடைய அரசியல் செயல்பாடுகள் எப்படியிருந்தது, 2014 முதல் எப்படி என்பதைக் கொஞ்சம் கவனித்தால், திமுக நீங்கலாக, மாநிலக்கட்சிகள் எதுவுமே, ராவுல் பாபாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும் புரியும்.  
                  
Senkottai Sriram,முகநூலில் இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல புரிந்துகொள்ள எளிய வழி.

எந்த பிரச்னையானாலும் வீரமணி / திருமா / வைகோ / ச்டாலின் என்ன சொல்றாங்கன்னு பாருங்க

நியாயம் நேர்மாறா இருக்கும்....

அந்த வரிசையில 24 மணி நேர நியூஸ் சேனல்களயும் சேத்துக்குங்க

இவ்ளோ ஈசியா அரசியலைப் புரிஞ்சுக்க முடியுமா? கொஞ்சம் முயற்சித்துத்தான் பாருங்களேன்! 

Raja Sankar 
வாஜ்பாயியை எப்படி தோற்கடித்தார்கள் என நண்பர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
நொடியிலே பொய்யாக்கிவிடுவார்கள் என தெரிந்தும் 2019 இல் இப்படி செய்கிறதுகளே 15 வருடங்களுக்கு முன்பு இணையம் இல்லாத காலகட்டத்திலே டிவி பொட்டி தான் மக்களை அடையும் ஒரே வழியாக இருந்த காலகட்டத்திலே எப்படி எல்லாம் அவதூறை வாரி தூற்றியிருப்பார்கள் என யோசித்து பாருங்கள்.
வாஜ்பாயி மீது மிகவும் அசிங்கமாக சொல்ல நா கூசும் அளவுக்கான அவதூறுகளை வீசினார்கள். அதையெல்லாம் புத்தகமாகவே போட்டார்கள்.
வாஜ்பாயி முன்மொழிந்தார் என்பதற்காகவே அப்துல் கலாமை மோசமாக வசை பாடினார்கள்.
இன்றைக்கு மோடி மீது குற்றசாட்டுகளையே வீசமுடியவில்லையே அப்படியே பொய்ச்செய்தி பரப்பினாலும் உடனே அதை பொய் என காட்டிவிடுகிறார்களே என்பது தான் இந்த மானங்கெட்ட ஊடகங்கள் சமூக வலைத்தளங்களை எதிர்க்க காரணம்.
அதை விட இன்றைக்கு ஜியோ வராமல் இருந்திருந்து முன்பு போலவே ஏர்டெல் கொள்ளையடித்து கொண்டிருந்தால் என்பதையும் யோசித்து பாருங்கள்?
அம்பானி அதானி என கூவும் காரணமே இது தான். இருந்ததும் போச்சே என.
பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கியது அப்போது வேண்டுமானால் நடந்திருக்கலாம். இப்போது நடக்குமா?


கீசு கீசென்று twitter கீச்சுகளில் அரசியல்! தமாஷா

கண்ணில் பட்ட twitterகீச்சுகள் இவை! காங்கிரஸ் தமாஷா!

8:23 PM - 17 Jan 2019

அடுத்ததும் காங்கிரஸ் தொடர்புள்ளதுதான்! உச்ச நீதி மன்றத்தின் சீனியர் வழக்கறிஞர்கள் என்ற இடத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து மோசடிப் புகார்களில் சிக்கியும் கூட, சீனியர் அட்வகேட்டுகளாக #பானாசீனா தம்பதியர்  உலாவருவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ஓர் புகாராக!

Filed a complaint to Chief Justice of India regarding misuse of Senior Advocate Designation by Mr&Mrs. Chidambaram, seeking suspension of Senior Advocate title, citing that they are now Accused in many cases.Also sought yearly monitoring of Senior Advocate title holding persons

1:18 AM - 16 Jan 2019 

திருட்டுப்பூனைகளுக்கு யாராவது மணிகட்ட வேண்டும் இல்லையா? அதைத்தான் The Pioneer இதழின் சீனியர் நிருபர் கோபிகிருஷ்ணன் ஆரம்பித்து வைத்திருக்கிறார்!

இத்தனை சொல்லிவிட்டு கழகத்தை மறந்தால் எப்படி?

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான அவர்கள், வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கிறார்!
4:17 AM - 16 Jan 2019

இன்றைக்கு இசுடாலின் கொல்கத்தா புறப்பட்டு விட்டார்!  ராகுலுக்கு கொடுத்தது மாதிரியே மம்தா பானெர்ஜிக்கும் வீர வாள் கொடுப்பாரா? கொடுத்த அதே ராசி தொடருமா என்று நாளை தெரிந்துவிடும்!