வந்தா ராஜாவாத்தான் வருவேன்! அப்படீன்னா வரவே வராதே!!

வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்கிற வீராப்பும், வெட்டிக்கனவுகளும் இங்கே சினிமா ஸ்டார்களுக்கு மட்டுமல்லாது இசுடாலின் உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு இருப்பது தெரிந்த விஷயம் தான்!
சினிமா ஸ்டார்களுடைய வெட்டிச்சலம்பல்களை ரசிகர்களே இப்போதெல்லாம் வாயடைக்கச் செய்து விடுகிறார்கள் என்பது ரொம்ப நல்ல விஷயம்! அதே போல, ஒரு எல்லைக்குமேல் துள்ளிக் கொண்டிருக்கிற மாநிலக்கட்சிகளுக்கு எப்போது சொல்லப் போகிறோம்? 
காங்கிரசின் தமிழ்நாடு பிராஞ்சுக்குப் புதுத்தலைவர்!
Cheatஅம்பரத்தின் தீவீரவிசுவாசி!புதிதாக என்ன சொல்லி விடப்போகிறார்? செகுலர் அலங்கார அடைமொழிகளோடு ராவுல் பாபாவைப் பிரதமராக ஆக்குவதுதான் தன்னுடைய அஜெண்டாவாகச் சொல்கிறார். ஐமுகூட்டணி ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளில் ராவுல்பாபாவுடைய அரசியல் செயல்பாடுகள் எப்படியிருந்தது, 2014 முதல் எப்படி என்பதைக் கொஞ்சம் கவனித்தால், திமுக நீங்கலாக, மாநிலக்கட்சிகள் எதுவுமே, ராவுல் பாபாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும் புரியும்.  
                  
Senkottai Sriram,முகநூலில் இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல புரிந்துகொள்ள எளிய வழி.

எந்த பிரச்னையானாலும் வீரமணி / திருமா / வைகோ / ச்டாலின் என்ன சொல்றாங்கன்னு பாருங்க

நியாயம் நேர்மாறா இருக்கும்....

அந்த வரிசையில 24 மணி நேர நியூஸ் சேனல்களயும் சேத்துக்குங்க

இவ்ளோ ஈசியா அரசியலைப் புரிஞ்சுக்க முடியுமா? கொஞ்சம் முயற்சித்துத்தான் பாருங்களேன்! 

Raja Sankar 
வாஜ்பாயியை எப்படி தோற்கடித்தார்கள் என நண்பர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
நொடியிலே பொய்யாக்கிவிடுவார்கள் என தெரிந்தும் 2019 இல் இப்படி செய்கிறதுகளே 15 வருடங்களுக்கு முன்பு இணையம் இல்லாத காலகட்டத்திலே டிவி பொட்டி தான் மக்களை அடையும் ஒரே வழியாக இருந்த காலகட்டத்திலே எப்படி எல்லாம் அவதூறை வாரி தூற்றியிருப்பார்கள் என யோசித்து பாருங்கள்.
வாஜ்பாயி மீது மிகவும் அசிங்கமாக சொல்ல நா கூசும் அளவுக்கான அவதூறுகளை வீசினார்கள். அதையெல்லாம் புத்தகமாகவே போட்டார்கள்.
வாஜ்பாயி முன்மொழிந்தார் என்பதற்காகவே அப்துல் கலாமை மோசமாக வசை பாடினார்கள்.
இன்றைக்கு மோடி மீது குற்றசாட்டுகளையே வீசமுடியவில்லையே அப்படியே பொய்ச்செய்தி பரப்பினாலும் உடனே அதை பொய் என காட்டிவிடுகிறார்களே என்பது தான் இந்த மானங்கெட்ட ஊடகங்கள் சமூக வலைத்தளங்களை எதிர்க்க காரணம்.
அதை விட இன்றைக்கு ஜியோ வராமல் இருந்திருந்து முன்பு போலவே ஏர்டெல் கொள்ளையடித்து கொண்டிருந்தால் என்பதையும் யோசித்து பாருங்கள்?
அம்பானி அதானி என கூவும் காரணமே இது தான். இருந்ததும் போச்சே என.
பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கியது அப்போது வேண்டுமானால் நடந்திருக்கலாம். இப்போது நடக்குமா?


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!