வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! பதில் சொல்வாரைத் தான் காணோம்!

எங்கள் கிரியேஷன்ஸ் blog இல் கௌதமன் செய்தியைச் சுடச்சுட சிறுகதையாக்கி விட்டார்! அதே நேரம்  சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்கிறார் சைபராபாத் போலீஸ் கமிஷனர் V C சஜ்ஜனார்! திஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 26 வயதான கால்நடை மருத்துவர் சில கயவர்களால் சிதைக்கப் பட்டு, அதன் பின் உயிருடன் எரித்துக் கொலை செய்யப் பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டதைக் குறித்து நிருபர்களிடம் விளக்கியபோது சொன்ன வார்த்தைகள் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. நாடாளு மன்றத்திலும் இந்த விவகாரம் ஒருமாதிரி ரகளையை உண்டாக்கியதென்றே சொல்லவேண்டும்.   


மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானியைப் பேசவிடாமல் பாய்ந்து அடிக்க வருகிற மாதிரி காங்கிரஸ் உறுப்பினர் TN பிரதாபன் தன்னுடைய பிரதாபத்தைக் காண்பித்து இருக்கிறார். தெலுகு சினிமா நட்சத்திரங்கள் நாகார்ஜுனா, ராகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் தெலங்கானா போலீசை வாழ்த்தியதோடு JUSTICE SERVED! என்று ட்வீட்டரில் செய்தி சொல்லியிருக்கிறார்கள். சட்டம், வழக்கு விசாரணை, நீதிபதிகள் எல்லாம் இனிமேற் கொண்டு வேண்டாம் போல இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் இப்படிப் புகழஞ்சலிகள் நிறைய வரும்! ஒரு வேலை வெட்டியில்லாத ஆசாமி ஜெயா பச்சனுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார்.  




கொலைகாரர்களைத் தப்புவிப்பதில் காங்கிரஸ் செம கில்லாடி. 1984 இல் என்ன நடந்தது என்று கொஞ்சம் கேளுங்கள்!

  
என்னென்னமோ சொல்லியிருப்பதில் கேள்விகளைக் காணோமே என்று திகைக்கிறீர்களா? பின்னூட்டத்தில் கேளுங்கள்! கேள்விகளைக்  கேட்கிறேன்! பதில் சொல்ல ரெடியா? 

மீண்டும் சந்திப்போம்.   

8 comments:

  1. என்னுடைய கதையைக் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கௌதமன் சார்! கதை எழுதவும் ஒரு தனி சாமர்த்தியம் வேண்டும்! உங்களிடம் அது நிறைய இருக்கிறது!

      Delete
    2. நன்றி. ஒரே நிகழ்வை பலரும் பல கோணங்களில் காணலாம். என் கதை ஒரு கோணம்.

      Delete
    3. மேலிடத்தில் சொன்னார்கள் செய்துவிட்டோம் என்ற முக்கியமான கோணம் மிஸ்ஸிங்! ஒரு நினைவூட்டலுக்காக!

      Delete
  2. எதிர்க்கட்சிகளுக்கு எதையாவது வைத்து அரசியல் செய்யவேண்டும். அவ்வளவுதான். நாடாளுமன்ற விவகாரத்தைச் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தற்போது எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருப்பது அரசியலா அடாவடியா என்பதுதானே இங்கே கேள்வியே!

      Delete
    2. அரசியல் என்றுதான் காங்கிரஸ் நினைத்துக்கொண்டு இருக்கிறது. India has become rapists capital of the world என்ற கமெண்ட்டுக்கு இதைத்தான் நினைக்க முடியும்.
      Congress made India, capital of the world in corruption.

      Delete
    3. ராகுல் காண்டி உளறுவதையெல்லாம் அரசியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டிய துரதிர்ஷ்ட வசமான நிலைமையில் இருக்கிறோமா கௌதமன் சார்? :-((((

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!