இட்லி வடை பொங்கல்! #54 ஜோதிமணி! ராகுல் காண்டி! மதன் ரவிச்சந்திரன்!

நாடாளுமன்ற விவாதங்களில் பலரும் ஆவேசமாகப் பேசி கவனத்தை ஈர்ப்பார்கள். மிகப்பலர் தூங்கியே நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கெடுப்பார்கள்! அப்படித் தூங்கி, விவாதப்பொருளாக ஆகியிருப்பவர் கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மீது காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி ஆவேசமாகப் பேச ஆரம்பித்த 3வது நிமிடத்திலேயே பின்வரிசையில் ஜோதிமணி ஆனந்தமாகத் தூங்க  ஆரம்பித்து விட்டார்!  இப்போதாவது கவனியுங்களேன்! ஒரு 7நிமிடத்தூக்கம் கலைந்து முழித்துப்பார்த்துவிட்டு மறுபடி தூங்கப் போய்விடுகிறார்! பாவம் மணீஷ் திவாரி! முதுகுப் பக்கம் பார்க்கிற வசதி மட்டும் இருந்திருந்தால் நொந்தே போயிருப்பார்! 


நம்மூர் எம்பிக்களுடைய யோக்கியதை அவ்வளவு தானே! இது என்ன பிரமாதம் என்று போய்விட வேண்டியது தானே?


ஆனால் எழுத்தாளர் மாரிதாசுக்கு அப்படி ஒதுங்கிப்போக விருப்பமில்லையாம்! கரூர் எம்பி ஜோதிமணியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் எப்படி என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் அலசிக் காயப் போடுகிறார். ஒரு சாதாரண அட்டெண்டர் வேலைக்குக் கூடக் குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசத்தில், சட்டம் இயற்றுகிற அதிகாரம் படைத்த நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினருக்கு, அரசியல் சட்டம், சட்டம் இயற்றுவதென்றால் என்ன என்பதைப் பற்றிக் கொஞ்சமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை என்பது எத்தனை பெரிய நகைமுரண்? யோசித்துப் பாருங்களேன்!
     
     

நேருவுடைய வாரிசுகள் எவருமே படிப்பாளிகள் இல்லை! சுத்தமான தறுதலைகள், தற்குறிகள் என்பதை எழுதி எழுதி எனக்கே அலுத்து விட்டது. 


  
பன்றிகளுக்கு முத்தின் அருமை பெருமை எதுவும் புரியாது என்பதுதான் பிபிசிக்காரர்களுக்குச் சொல்ல வேண்டிய சரியான பதிலாக இருக்கும்! சரிதானே!!


இந்திரா வாரிசுகளுக்கு புத்தி அவ்வளவுதான்! இனிமேல் காங்கிரசை அந்த ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. பிஜேபிக்கு சரியான அரசியல் மாற்று இடதுசாரிகளிடமிருந்து தான் வரமுடியும் என்ற நிலையில் இங்கே இடதுகள் திமுகவிடம் அண்டிப்பிழைக்கிற கும்பலாகக் குறுகிப் போய்க்கிடக்கிறதே! 


திமுகவின் தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கு IPac என்ற ஏஜென்சியை நடத்திவரும் பிரசாந்த் கிஷோர் வந்திருப்பது நிறைய சர்ச்சைகளை கட்சிக்குள்ளேயே உருவாக்கி இருக்கிறது. பிரசாந்த் கிஷோரைப் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி, ஜெயிக்கும் என்று தெரிகிற பக்கம் வலுவில் வந்து ஒட்டிக் கொள்கிறவர், இவரிடம் தலையைக் கொடுப்பதில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது முதல் எந்தத் திக்கைப் பார்த்து என்ன பேச வேண்டும் என்பதுவரை பிரசாந்த் கிஷோருடைய தலையீடு நிறைய இருக்கும் என்பதாக. திமுகவுக்கு இது புதிதா என்ன? இசுடாலின் முன்னணிக்கு வர ஆரம்பித்த நாட்களில் இருந்தே மாப்பிள்ளை, கிச்சன் கேபினெட் என்று பலவிதமான ஆதிக்கங்கள் இருந்து வருவது தெரிந்ததுதானே! அந்தவகை லிஸ்டில் இன்னும் ஒன்று சேர்ந்து கொள்கிறது என்று விட்டுவிடாமல் மதன் ரவிச்சந்திரன் ஒரு விவாதம் நடத்துகிறார். வந்தவர்களும் நன்றாக சவுண்டு கிளப்புகிறார்கள்! வீடியோ 56 நிமிடம். பொழுதுபோக்க ஒரு  நல்ல விவாதம்! அதற்குமேலே என்ன சொல்வது?

மீண்டும் சந்திப்போம்.  
           

1 comment:

  1. இன்றைய பதிவு வெகு அருமை.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!