#1130 பழ கருப்பையா! புலி பல்டியும் அடிக்கும்! Sit down!

இங்கே பழ கருப்பையா  மாதிரியானவர்களுக்குக் கூட திடீர் திடீரென புத்திக் கொள்முதல் செய்து கொள்கிற நேரம் வாய்த்துவிடுவதைப் பார்க்கையில்  உண்மையிலேயே சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் சீரழிந்து போன அரசியல் சிரிக்க வேண்டிய விஷயம் தானா? ஜனநாயகம் பற்றி பழ. கருப்பையா சொல்கிற சில விஷயங்களை யோசிக்க வேண்டாமா? செந்தில் பாலாஜி போன்றவர்களைப் பற்றி அவர் சொல்வதில் தவறு இருக்கிறதா?


போகிப்பண்டிகை என்று ஆகாவரிகளைக் கழித்துக் கட்டுகிற மாதிரி அரசியலிலும் ஆகாதவைகளைக் கழித்துக் கட்ட ஜனங்களாகிய நாம் உறுதி கொள்கிற போது, ஜனநாயகம் செழித்து வளர்கிற வாய்ப்பும் கூடவே உருவாகிறது. அரசியலில் களைகளின் ஆதிக்கமே மிகுந்திருக்கிறதென்றால்,குற்றம் நம்முடையதே! பழ கருப்பையாவிடம் இருக்கிற பெரிய கோளாறு என்னவென்றால் கொஞ்ச நேரம் பேசவிட்டால், எங்கெங்கேயோ இழுத்துக் கொண்டு போய் ஆளைவிட்டால் போதும் சாமி என்றாக்கி விடுவார். இதை இந்த 29 நிமிட வீடியோவிலேயே அனுபவிக்க முடியும். அனுபவித்துத் தான் உணரலாமே!


புலிகள் (என்று சொல்லிக் கொள்பவர்கள்) பசித்தால் புல்லும் தின்பார்கள்! பூசாரி உடுக்கடித்தால்  தலை கீழாக பல்டியும் அடிப்பார்கள் என்று நக்கலடிக்கிறார் சதீஷ் ஆசார்யா! சரிதானே என்கிறீர்களா? ஆனால் உடுக்கடிப்பவர் யாரென்று சொல்லவில்லையே! 


மக்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, ராஜ்யசபாவில் ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்தார்களாம்! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வேறு, மறுபடியும் ஹிந்துத்வ சக்திகள் ஒன்றுசேரவேண்டும் என்று புதுக்கரடியை ஆரம்பிக்கிறார்.

      
R பிரசாத் வரைந்திருக்கிற இந்த கார்டூனோடு பொருத்திப் பாருங்கள்! சிவசேனா  தமாஷா மிக நன்றாகப் புரியவரலாம்! 


இந்தியா உலகின் கற்பழிப்புத் தலைநகரமாக மாறி விட்டது என்று ராகுல் காண்டி உளறியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அப்படிச் சொன்னதற்காக மன்னிப்புக் கோரவும் போவதில்லை என்று சூளுரை செய்திருக்கிறார். திமுகவின் கனிமொழி வந்து வக்காலத்து வாங்குகிற அளவுக்குப் பரிதாபமான நிலையில் இருக்கிற ஒருத்தருக்கு இத்தனை வீம்பு ஆகாதுதான்! என்ன செய்ய? அதலபாதாளத்தில் விழுந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கிற ஆசாமிகளுக்கு என்ன புத்தி சொல்வது? அதெல்லாம் போகட்டும்! இந்த வீடியோவின் ஆரம்பத்தில் TR பாலு கனிமொழியிடம் உட்காரும்மா என்று சொல்வதும் கனிமொழி அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பேச ஆரம்பித்ததையும் கவனித்தீர்களா?


செய்தியின் முழுப்பரிமாணத்தையும் புரிந்துகொள்ள இந்த 26 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.  

         
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!