துக்ளக் 50! கும்பகோணம் சிறப்புக் கூட்டம்!

துக்ளக் இதழை 1970 இல் சோ ஆரம்பித்த காலம் முதல் தொடர்ந்து வாசித்து வருகிறவன் நான். அது என்னவோ துக்ளக்  அதை வாசித்தவர்களுடைய நெஞ்சோடு ஒட்டிக் கொண்ட  நெருங்கிய உறவாக ஆகிப்போனது யாருமே எதிர்பாராத அதிசயம். சோ இன்றைக்கு இல்லை. ஆனால் துக்ளக் இன்னமும் துடிப்போடு இருக்கிறது. அடுத்த மாதம் துக்ளக் தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டி தமிழகத்தின் பல நகரங்களிலும் துக்ளக் 50 சிறப்புக் கூட்டம் நடத்த முடிவு செய்து முதலில் கும்பகோணத்தில் இருந்து தொடங்கினார்கள். அடுத்து திருச்சி! ஆடிட்டர் குருமூர்த்தி போகிறபோக்கில் சொன்ன ஒருவிஷயத்தால் கொஞ்சம் பரபரப்பாகிப் போனது.


பொன்விழா கூட்டங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த கும்பகோணம் நிகழ்வின் முழுக் காணொளியும் இங்கே. வீடியோ 179 நிமிடம். ஒரு முழு நீளத் திரைப்படம் பார்க்கிற நேரம். ஆனால் படத்தை விட அருமையாகப் பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவு செய்ய மனமுடையோர் அவசியம் பார்க்கலாம்.
     

64 வயதாகும் R சந்திரசேகரனுக்கு துக்ளக் இன்னுமொரு பத்திரிகை அல்ல. அதையும் தாண்டியாம்! துக்ளக் ஆரம்பித்த நாள் முதல் அத்தனை இதழ்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்ற ஒரு செய்தியைத் தருகிறது ஹிந்து ஆங்கில நாளிதழ்.           

நேற்று (812/2019) மதுரையில் துக்ளக் 50 சிறப்புக் கூட்டம் நடந்திருக்கிறது. நிகழ்ச்சியின் காணொளி கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம்.      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!