இன்றைக்கு பிசினெஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் சில சுவாரசியமான செய்திகளைப் பார்த்தேன். நம்மூர் வங்கிகளில் நடந்துகொண்டிருப்பதென்ன என்பது தெரியாமலேயே இங்கே நிறையப்பேர் வராக்கடன் சுமை கூடிவருவது பற்றிக் கூவிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் இல்லையா?
டூப்ளிகேட்டுகள் உபதேசம் செய்யவந்தால் கிடைக்கிற பதில் என்னவாக இருக்கும்? JMI மாணவர்களோடு சேர்ந்து போராடப்போகலாமே ராகுல்! டில்லிப் போலீஸ் அவர்கள் சேவையைச் செய்யட்டும்! என்கிறார் ஒருத்தர்! தகுதியில்லாத தற்குறிகளுக்கு இப்படித்தான் பதில் கிடைக்கும்.
கொஞ்சம் அலுப்பை மாற்ற
அவர் "என்னைக் கொல்ல சதி!" என்ற பெயரில் தி ஹிந்துவுக்குத் தொடராக எழுதினார்.
அங்கே இட நெருக்கடி ஏற்பட்ட போது
முக நூலில் எழுதினார்.
அங்கே லைக்குகள் விழாதபோது
தன் வீட்டுச் சுவரில் எழுதினார்.
அவர் எழுதி எழுதி பாத் ரூம் சுவரில் ஓட்டை
விழுந்தபோது
வீட்டுக்காரர் வீட்டைக் காலி பண்ணச் சொன்னார்
அவர் 'என்னைக் கொல்ல சதி!"இரண்டாம் பாகத்தை எழுதி புக் பேரில் வெளியிட்டுவிட்டார்.
பொருளாதாரப்புளி பானாசீனா நிதியமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் (என்ற போர்வையில் உள்ளூர்க் கறுப்புப்பணமே) குவிந்ததும் வங்கிகள் ஏகப்பட்ட கடன்களை வாரிவழங்கியதும் இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருந்தது என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம். உதாரணமாக அப்பன் சேர்த்து வைத்த சொத்தில் ராஜபோகம் அனுபவித்ததைத் தவிர, விஜய் மல்லையா என்கிற நபருடைய தொழில் நடத்துகிற சாமர்த்தியம் என்ன? ப்ராண்ட் இமேஜ், வால்யூ என்ன என்பதைச் சரியாக கணிக்க முடியாமல் வெறும் பெயரை மட்டும் வைத்துக் கடன் கொடுத்ததில் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கதை என்ன ஆயிற்று? விஜய் மல்லையாவை ராஜ்யசபா எம்பியாக்கினது எதற்காக? எவர் காலத்தில்? இதையெல்லாம் கேட்கமாட்டோம் ஆனால் லண்டனுக்கு ஓடிப்போகவிட்டது மோடிதான் என்று கூசாமல் சொல்கிற காங்கிரஸ்காரன் பேச்சைக் கேட்போம் என்றால் என்ன அர்த்தம்? அதே நரேந்திர மோடி காலத்தில் தான் வராக்கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன என்பதை அறிந்திருக்கிறோமா? அந்த நடவடிக்கைகளினால் குறுகிய காலத்திலேயே நல்ல பலனும் கிடைத்து வருவதை அறிந்திருக்கிறோமா?
Insolvency and Bankruptcy Code என்று 2016 இல் அறிமுகப் படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இதுவரை 21136 தாவாக்கள் எழுப்பப்பட்டதில் சுமார் 9653 தாவாக்கள் அறிமுக நிலையிலேயே டிஸ்போஸ் செய்யப் பட்டிருக்கிறது, இவை சுமார் 3, 74,931 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இவற்றில் 2838 தாவாக்கள் கார்பரேட் நிறுவனங்கள் மீதானவை. இவற்றில் 306 தாவாக்கள் அப்பீல்/மறுபரிசீலனை/திரும்பப்பெறப்பட்டவை என்ற வகையில் அடங்கும். அதுபோக தீர்வு எட்டப்பட்ட 156 தாவாக்களில் கிடைக்கக் கூடிய தொகை 1,56,814 கோடி ரூபாய்கள் என்று அரசு தகவல் தெரிவித்திருப்பதாக இந்தச்செய்தி சொல்கிறது. சரியாக உள்வாங்கிக் கொள்கிறோமா? சென்ற வாரம் IBC சட்டத்தில் சில கூடுதல் திருத்தங்களை செய்வதற்கான திருத்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்ய முயன்றபோது காங்கிரசின் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக எதிர்த்ததை அறிவீர்களா?
பெயர்க்கொள்ளை ஒரிஜினல் காந்தியின் சம்மதத்துடனே தான் நடந்தது
என்று சொல்பவர்களும் உண்டு
ஆனால் பெயரைத் திருடிப் பின்னிணைப்பாக வைத்துக் கொண்டிருப்பதனாலேயே ராகுல் காண்டிக்கு அஹிம்சை, சத்தியாக்கிரகம் பற்றியெல்லாம் உபதேசம் செய்கிற தகுதியோ புத்தியோ வந்துவிட்டதா?
கொஞ்சம் அலுப்பை மாற்ற
நடனம் ஆடும்போது
நான் மூத்த எழுத்தாளரின் காலை மிதித்துவிட்டேன்.அவர் "என்னைக் கொல்ல சதி!" என்ற பெயரில் தி ஹிந்துவுக்குத் தொடராக எழுதினார்.
அங்கே இட நெருக்கடி ஏற்பட்ட போது
முக நூலில் எழுதினார்.
அங்கே லைக்குகள் விழாதபோது
தன் வீட்டுச் சுவரில் எழுதினார்.
அவர் எழுதி எழுதி பாத் ரூம் சுவரில் ஓட்டை
விழுந்தபோது
வீட்டுக்காரர் வீட்டைக் காலி பண்ணச் சொன்னார்
அவர் 'என்னைக் கொல்ல சதி!"இரண்டாம் பாகத்தை எழுதி புக் பேரில் வெளியிட்டுவிட்டார்.
ஆனால் அரசியல் பிராணியான எனக்கோ அந்த நாட்களில் குடமுருட்டி குண்டு-என்னைக் கொல்ல சதி என்று கருணாநிதி கூவியதும், இசுடாலின் மீது கத்தி வீசப்பட்டதாக ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டதும் தான் நினைவுக்கு வருகிறது. என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!