இருவேறு விவாதங்கள்! புரிந்துகொள்வதென்ன?

நேற்றைக்கு இங்கே சென்னையில் திமுக +உதிரிகள் பேரணி(போரணி?)  ஒன்றை நடத்தி முடித்து விட்டார்கள். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சிறிது கோஷங்கள் போடப்பட்டன. மேடையில் இருந்த பானாசீனா, வீரமணி, வைகோ உள்ளிட்ட பிரமுகர்கள் எவரும் வீரவுரை ஆற்ற அழைக்கப்படவில்லை. மிகக் குறுகிய நேரத்திலேயே இசுடாலின் நன்றி உரையோடு பேரணி முடித்துவைக்கப்பட்டது. மேம்போக்காகப் பார்க்கையில் திமுகவுக்கு இது அரசியல் ரீதியாக இன்னொரு பிரசாரம், அவ்வளவுதான்! 


வின் நியூஸ் சேனலில் நேற்றிரவே மதன் ரவிச்சந்திரன் திமுக பேரணி தோல்வியா? அலுங்காத சென்னை அதிராத டெல்லி என்ற தலைப்பில் ஒருமணிநேர விவாதத்தை சுறுசுறுப்பாக  நடத்தி முடித்துவிட்டார் என்பதற்கு மேல் சொல்வதற்கு வேறு ஏதாவது இருக்கிறதா?


ஒரு சட்டமசோதாவில் சொல்லப்படாத விஷயங்களைத் திரித்து ஒரு குறிப்பிட்டபகுதியினரிடையே அச்சத்தைத் தூண்டமுடியுமா? முடியும் என்பதை குடியுரிமை சட்டத் திருத்தம் மீது கிளப்பிவிடப்பட்ட புரளிகள், பொய்கள் அதைத் தொடர்ந்த கலவரங்கள் என்று நன்றாகவே நிரூபித்துக் காட்டப்பட்டிருக்கிறது. திருமதி நிர்மலா சீதாராமன் நிதானமாக இந்த 41 நிமிட நேர்காணலில் விளக்குகிறார்.

ஒரே விஷயம் தான்! இருவேறு கோணங்களில் பார்க்க உதவியாக இருவேறு விவாதங்கள்.

மீண்டும் சந்திப்போம்.            

2 comments:

  1. நிர்மலா சீதாராமன் மிக அழகாக தெளிவாக நிதானமாக பேசியிருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை திருமதி நிர்மலா சீதாராமன் நிதானமாக விளக்கி முடிப்பதற்கு முன்னால் பொய்கள்.விஷமத்தனமான திரித்தல்கள், இஸ்லாமியரிடையே ஒரு காரணமில்லாத அச்சத்தை ஏற்படுத்துதல் என்கிற அஜெண்டாவை இங்கே ஊடகங்கள் பலமுறை செய்து முடித்துவிட்டனவே! ஜோதிஜி! அதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!