Showing posts with label விமரிசனம். Show all posts
Showing posts with label விமரிசனம். Show all posts

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! வரணே அவஸ்யமுண்டு

மலையாளத்திரைப்படங்களின் மிகப்பெரிய பலமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்துவிட முடிவதுதான்! ஏதோ ஒருகதை! அதையே கொஞ்சம் வித்தியாசமாகப் படமாக்குகிற வித்தை மலையாளிகளுக்கு இயல்பாகவே தெரிந்திருக்கிறது. சமீபத்தில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களைத் தகவலாகத் தருகிற ஒருதளத்தில் இருந்து தான், வெறும் நாலரைக்கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட வரணே அவஸ்யமுண்டு படம் கடந்த இருமாதங்களில் 32 கோடி ரூபாய்அளவுக்கு வசூலைக் குவித்திருக்கிறது என்ற தகவலைத் தெரிந்து கொண்டேன். படத்தைப்பார்க்கிற ஆவலையும் தூண்டிவிட்டது.


துல்கர் சல்மான் இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் முதன்முறையாக ஆகி இருக்கிறார் என்பது தவிர கொஞ்ச வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் சுரேஷ் கோபியும், ஷோபனாவும் இந்தப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருப்பது கூடுதல் விசேஷம். கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகநடிகையாகவே தெரியாதபடி அப்படி ஒரு இயல்பான நடிப்பு! அது போக மீரா கிருஷ்ணன், ஊர்வசி, என்று பரிச்சயமான முகங்கள். சத்யன் அந்திக்காடின் மகன் அனூப் சத்யன் இந்தப்படத்தின் வழியாக இயக்குனராக ஆகியிருக்கிறார். ஒரு நல்ல டீம் ஒன்றுசேர்ந்து இருப்பதில் ஒரு சுமாரான கதையையும், சுவாரசியமாகக் காட்சிப்படுத்தி இருப்பதில் சுமார் இரண்டரை மணிநேரம் அலுப்புத்தட்டாமல் படம் நகர்கிறது.


சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டைவீட்டுக்காரர்களாக கதாபாத்திரங்கள் ஒவ்வொரு செட்டாக அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். பிபீஷ் என்கிற   fraud ஆக துல்கர் சல்மான்,  சென்னையில் தன்னுடைய நிகிதா என்கிற மகளுடன் (கல்யாணி ப்ரியதர்ஷன்)  குடியேறும் ஆசிரியை நீனா (ஷோபனா), அதே குடியிருப்பில் திருமணமாகாத பட்டாளக்காரராக (சுரேஷ் கோபி) மேஜர் உன்னிகிருஷ்ணன் இவர்கள் தான் கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள். மற்றவர்கள் இந்த முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவு காதலாக முகிழ்ப்பதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது கதைச்சுருக்கம். காட்சிகளைக் கோர்வையாகச் சொல்லிக்கொண்டே போகிற விதம் இந்த அரதப்பழசான கதையைக் கூட மிக நேர்த்தியான கதைக்களமாக மாற்றிவிடுகிறது. 


துல்கர் சல்மானுக்கு இது ஒரு வெற்றிப்படமாகவும் ஆகியிருக்கிறது. கதையைத் தேடாமல், லாஜிக் மீறல்கள் இருக்கிறதா என்ற நோண்டல்கள் இல்லாமல் இருந்தால், பொழுதுபோக்க ஒரு நல்ல படம் என்றே சொல்லலாம். Netlix இல் கிடைக்கிறது. 

என்னுடைய ரேட்டிங் 7.5 / 10 

மீண்டும் சந்திப்போம்.  
      

சண்டேன்னா மூணு! #அரசியல் #விமரிசனங்கள் #யெஸ்பேங்க்

இந்த ஞாயிற்றுக் கிழமை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முதல் செய்தியாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது இருக்கிறது.  இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பற்றி மட்டுமல்ல, சமீபநாட்களில் வெளிநாட்டு ஊடகங்கள், மற்றும் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியா மீது தொடர்ந்து கக்கும் வன்மம் கலந்த விமரிசனங்களுக்கு தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பது இதன் மீதான ஒன்லைனர்.

    வீடியோ 32 நிமிடம் 

குளோபல் பிசினெஸ் சம்மிட் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கம். சர்வதேச அரங்கில் நம்முடைய நண்பர்களை இழந்து வருகிறோமா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் மிக ஆழமானது. "Maybe we are getting to know who our friends really are." ஒருவேளை நம்முடைய நண்பர்கள் யாரென்று தெரிந்து கொள்ளப் போகிறோமோ? முந்தைய நாட்களில் ஒதுங்கியிருப்பதே உலக விவகாரங்களை எதிர்கொள்வதற்கான வழி என்று இருந்தது இனிமேலும் அப்படியே தொடர முடியாது. உலகத்தின் 5வது பெரிய பொருளாதாரமான இந்தியா விரைவிலேயே மூன்றாவது இடத்தைப் பிடிக்க இருக்கிற தருணத்தில் எல்லோருடனும் புழங்கத்தான் வேண்டும்! தீர்வுகளையும் கண்டாக வேண்டும் என்று வெளியுறவு விவகாரங்களைக் கையாளுவதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சொன்னார்.

CAA பற்றி நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி 
நாலே நிமிடம்!  

CAA குறித்து வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் கூட  எழும் விமரிசனங்கள் கண்டனங்களுக்கு ஜெய்சங்கர் அளித்த பதில் நெற்றிப்பொட்டில் அறைகிற மாதிரி! எல்லோரையும் இருகரம் நீட்டி வரவேற்கிற எந்த ஒருநாடாவது உண்டா? "Everybody, when they look at citizenship, has a context and has a criterion. Show me a country in the world which says everybody in the world is welcome. Nobody does that. Look at America. Look at the Europeans. I can give you example of every European country. There is some social criterion," நாடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்த சட்டத்திருத்தத்தின் வழியாக முயற்சி செய்திருக்கிறோம். அப்படிச் செய்ததிலும் கூட நமக்கே பெரும் தலைவலியாக மாறிவிடாதபடி செய்திருக்கிறோம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஐநா மனித உரிமை ஆணையம் செலெக்டிவாக இந்த விஷயத்தில் குறுக்கிட்டதையும் கண்டித்திருக்கிறார்.  

உண்மையில், நமக்கு , நம்மைத் தவிர யாரும் இல்லை என்பது தான் உண்மை. அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் தான் நாம் உறவுகளை பேனுகிறோம்...அம்மா கூட நம்முடன் இல்லை...இந்த புரிதல் தான் இந்த வாழ்வின் விடுதலை உணர்வாக இருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.
பொதுவாய் உறவுகளை பேணுவதில் நான் மிக பலவீனமானவள். எந்த உறவையும் கையாளத் தெரியாது..யாரையும் ஈர்க்கவோ, இருத்தி வைத்துக் கொள்ளவோ கூடிய வசீகரம் கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக உறவுகளை தேடுகிற
மெனக்கெடல் சுத்தமாக இல்லை.அதனாலேயே என் நட்பு வட்டம சிறு வயதிலிருந்தே ஒன்றிரண்டோடு மட்டுமே இருந்து கொண்டிருக்கும்...அது தான் இப்போது வரையிலும் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்துக்கு முன்பு வரை, என் எது ஒன்றுக்கும், வார்த்தைகளின் அரவணைப்பு தேடி நான் அங்கு தான் போய் விழுவேன்...
ஒருமுறை கனவு ஒன்றில் என் சிநேகிதி மறைந்து போன பிறகு , ஏதோ ஒரு நிகழ்வில் நான் கலந்து கொள்ள நேரிடுகிறது..அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலகலத்து பேசிக் கொண்டிருக்க , நான் என் சிநேகிதியை தேடுகிறேன்..அவள் மறைந்து போனது மறந்த நிலையில்.
பிறகு சட்டென உறைக்க , அந்த தருணத்தின் அனாதைத்தனம் இன்னுமே நினைவில் இருக்கிறது...எனக்கு இந்த உலகத்தில் பேச எதுவுமற்று , யாருமற்று. ..மொழி அறியாத கிரகத்தில் இனி காலத்துக்கும் தனித்து விடப்பட்டதை போல..அப்போது அந்த நிலையை தாங்கவே முடியாது மூச்சு முட்டியது..
இப்போதெல்லாம், பேசுவதற்கு எனக்கு நான் இருக்கிறேன் என்கிற இடத்தில், நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது.. 

கூகிள் ப்ளஸ் காலங்களில் நட்பாக இருந்து இப்போது விடுபட்டுப்போன பிரபா இன்றைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் முகநூல் பகிர்வில் கண்ணில் பட்டார். முகநூல் பக்கங்களில் புழங்குவதில்லை என்பதால் மகளிர் தின சிறப்பு விருந்தாளியாக அவருடைய நாலுநாள் முந்தைய பகிர்வு. இதுவே கூகிள் பிளஸ்சாக இருந்திருந்தால், ஏனம்மா சண்டைபோடவும் சமாதானமாகப் போகவும் நாங்களெல்லாம் இல்லையா என்று தலையில் ஒரு கொட்டும் வைத்திருக்கலாம்!

    
ஏற்கெனெவே ஒரு ரவுண்டு வந்த மேட்டர்தான்! ஆனால் #தமிழேண்டா குரூப்புகள் திருந்துகிற வரை இன்னும் பலரவுண்ட் வரலாம்! #வரலாம்வரலாம்வா  


மார்ஜின் கால் படத்தின் ஒரு சுவாரசியமான கட்டம் 

YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது கண் முன்னே Margin Call படம் வந்து செல்கிறது.
அந்தப்படத்தில் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் புகழ்பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் திடீரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து சில பணியாளர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். அதில் அந்த வங்கியில் நீண்டகாலமாக பணிபுரிந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரையும் கிளப்புவார்கள். அப்போது அவர் சொல்வார் "வங்கியின் நிதி நிலை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள்" என்று கேட்பார். "அதை அடுத்து வரும் உங்கள் ஜூனியர் பார்த்துக்கொள்வார். நீங்கள் கிளம்பலாம்" என்று ரொம்ப எகத்தாளமாக வெளியே அனுப்புவார் வங்கியின் மனித வளத்துறை அதிகாரி.
அவர் எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு கிளம்பும்போது லிப்டில் வைத்து ஒரு பென்-டிரைவில் கொடுத்து "இது ரொம்ப முக்கியம் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.
அந்த ஜூனியர் அன்று இரவே தனது மேலதிகாரிக்கு இதை தெரியப்படுத்துவான். முதலில் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். இல்லை இப்போது கவனிக்காவிட்டால் வங்கி திவாலாகி விடும் என்று சொல்லவும் அலுவலகத்திற்கு ஓடி வருவார். அங்கிருந்து கதையின் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்த மேலதிகாரி அவருக்கு மேலுள்ள அதிகாரிக்கு அழைத்து சொல்வார். இதில் முடிவெடுக்க அவராலும் முடியாது. அவர் வங்கியின் CEOக்கு போன் போடுவார். அவர் நேரில் வந்து பார்த்து திகைத்துப்போய் வங்கியின் போர்டு மெம்பர்கள் அனைவரையும் அழைப்பார். இறுதியில் வங்கியின் சேர்மன் வந்து கேட்பார். இதெல்லாம் ஓர் இரவிற்குள் நடக்கும்.
எல்லா வகைகளிலும் தீரவிசாரித்தாலும் வங்கி திவாலாகி போவதை தடுக்க முடியாது என்றுதான் வரும். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்கும் வழிகள் எதுவும் கிடையாது என்று தெரியவரும்போது இரவு மூன்று மணி ஆகிவிடும். அப்போது இவர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். வங்கியின் அனைத்து பங்குகளையும், சொத்துக்களையும் கிடைத்த விலைக்கு விற்று வெளியேறுவது என்று முடிவெடுப்பார்கள்.
இது அநியாயம், நம்மை நம்பி இந்த வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இதனால் ஒரே நாளில் ஏமாற்றப்படுவார்கள். அவர்களின் முதலீடுகள் முற்றிலுமாக காணாமல் போகும் என்று விற்பனைத் துறை மேலதிகாரி கத்துவார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அதைப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னாவது? இருப்பதை விற்பனை செய் உன்னுடைய ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள் என்பார். வேறுவழியின்றி அவரும் மனசாட்சிக்கு விரோதமாக ஃபயர் சேல் செய்வார்.
மொத்தத்தில் வங்கியின் மேல்அடுக்கில் உள்ள அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு வங்கியை, அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு செல்வார்கள்.
அந்தப்படத்தில் ஒருநாளில் செய்ததை எஸ் பேங்க் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடம் செய்திருக்கிறார்கள். வங்கியின் ஆரம்பகட்ட புரமோட்டர்கள் அனைவரும் நல்ல விலைக்கு தங்கள் பங்குகளை விற்றுவிட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்கள். ஆர்பிஐ இப்பொழுது பாவத்தை சுமக்கிறது.
- Karthikeyan   

மீண்டும் சந்திப்போம்.   

மகா இழுபறி! ஆட்சி அமைப்பதற்கு முன்னும்! அமைத்த பின்னும்!

மகா இழுபறி முடிந்துவிட்டதென்று தானே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்கும் இங்கே ஒருமுறை வாசித்துப் பார்த்து விடுங்கள்! ஆர்னாப் கோஸ்வாமி வெளியேறிய பிறகு TimesNow சேனலைப் பார்ப்பது அறவே குறைந்துவிட்டதென்று தான் சொல்ல வேண்டும்! அதனால் Republic TVயை தினசரி பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. செய்திகளை பல இடங்களிலிருந்தும் சேகரிக்கிறேன், புரிந்துகொள்ள இன்னும் பல இடங்களில் போய்ப் பார்க்கிறேன். அதன்பிறகே என் விமரிசனக்கருத்தாக இந்தப்பக்கங்களில் எழுதுகிறேன் என்பதை நண்பர்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.


இது நேற்று முன்தினம் இரவு  9 மணிக்கு Times Now TVயில் நடந்த The News  Hour விவாதம். வீடியோ 43 நிமிடம்.  சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியது போல மகா இழுபறி இப்போதுதான் நிஜமாக ஆரம்பித்திருக்கிறது. ஒரே சிந்தனையோ ஒத்துப் போகும் இயல்போ இல்லாத மூன்று கட்சிகள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கூட்டு சேர்ந்திருக்கும் போது அவர்களுடைய CMP காமன் மினிமம் ப்ரோக்ராம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானது அல்ல. புலிகள் (சிவசேனா) புல்லும் தின்பார்கள் என்பதற்கேற்ப செகுலர் வேஷம் போடவும்  சோனியாவின் தலைமையை ஏற்கவும் தயாராகிவிட்டது நன்றாகவே தெரிகிறது. தலைவர்கள் மட்டத்தில் வேஷத்தை எளிதாக மாற்றிக் கொண்டுவிடலாம்! ஆனால் தொண்டர்கள்? The common minimum programme (CMP) worked out between the Shiv Sena, NCP and Congress talks about immediate loan waiver to Maharashtra’s farmers; a new law to ensure 80 per cent reservation in jobs for locals; Re 1 heath clinics in all talukas; and a Rs 10 thali to provide affordable food to people என்றெல்லாம் செய்தி வந்திருக்கிறதே! அதெல்லாம் ஜனங்களை நம்ப வைப்பதற்கான லுலுலாயி!


கோட்ஸேவை தேசபக்தர் என்று உளறியதற்காக பிஜேபியின் பிரக்யா தாக்குர் தலையைச் சீவவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்றத்தில் கூவிக் கொண்டிருக்கையில் அதைவிட மோசமாகப் பலமுறை பேசியிருக்கிற    சிவசேனாவின் செகுலர் வேஷத்தை ட்வீட்டரில் கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. At a time when BJP MP Pragya Thakur has come under fire for her controversial remarks glorifying Mahatma Gandhi’s assassin Nathuram Godse in Parliament, a Congress MLA in Madhya Pradesh kicked up a row. Congress’ Govardhan Dangi courted controversy during a protest in Rajgarh by saying he would "burn not only Pragya Thakur’s effigy, but her too" if she sets foot in Madhya Pradesh. டூப்ளிகேட் காந்திகளுக்கு ஒரிஜினல் காந்திமீது பாசம் வந்து விட்டதோ என்றெல்லாம் அனாவசியமாகச் சந்தேகப்படாதீர்கள்! 


ஆனால் சரத் பவாரின் NCP  ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வருகிற ஷைலக் பாத்திரம் மாதிரி சிவசேனாவிடம் தனக்குச் சேர வேண்டிய நெஞ்சுக்கறியை எதிர் பார்த்துக் கத்தியுடன் காத்துக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர், நிதி, உள்துறை இவைகளைக் குறி வைத்திருக்கிறது. காங்கிரஸ் தனது பங்குக்கு சபாநாயகர் பதவியோடு கொஞ்சம் வசதி வாய்ப்பை  கொள்கிற துறைகளை எதிர்பார்க்கிறது. இவ்விரு கட்சிகளும் கேட்பதைக் கொடுத்துவிட்டு சிவசேனா என்ன செய்யப்போகிறது? இந்த வேடிக்கையைக் காண டிசம்பர் 3 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறவரை காத்திருந்தாக வேண்டும்!

அரசியல் விளையாட்டுக்கள் மிக விபரீதமான சர்க்கஸ் என்பதைப் புரிந்துகொண்டால், நடந்து கொண்டிருப்பவை குறித்து ஆச்சரியப்பட மாட்டீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்.                
  

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தான்! வேறென்ன?!

வெற்றி பெற்ற எந்த ஒரு அரசியல்  தலைவருடைய மிக முக்கியமான துணாதிசயமாகப் பார்த்தாலும்  ஜனங்களுடைய நாடித் துடிப்பை அறிந்து, அதற்கேற்ற மாதிரிக் கொஞ்சம், தங்களுடைய அரசியல் கொள்கையில்  ஒரு தொலை நோக்குப்  பார்வையுடன் கொஞ்சம் என்று ஒரு பக்குவமான கலவையில் ஜனங்களுக்குத் தலைமை தாங்கி நடத்துவதும் தான் என்று சொல்ல முடியும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதைத் தாண்டி ராஜதந்திரி (statesmanship) என்ற நிலைக்கு உயர்கிற தருணம்,  இந்திய அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இங்கே வாய்த்திருக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கள்!


    ட்ரம்ப் பேசுகிறார் 25 நிமிடம் 

நேற்று ஹூஸ்டனில்  நடந்த Howdy Modi நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சராசரி அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு தேர்ந்த ராஜதந்திரியாக உயர்ந்து வருவது தெளிவாகவே வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்! டொனால்ட் ட்ரம்ப் ஒரு சராசரி அரசியல்வாதியாக, அமெரிக்கஇந்தியர்கள் வாக்குவங்கியைக் குறிவைத்தே இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வார் என்பதுகூடப் பொது வெளியில் தெரிந்த விஷயம்தான்! ஆனால் ஒரு ரெண்டுங் கெட்டான் அமெரிக்க அதிபரை அடுத்த ஆண்டு வரவிருக்கும் அதிபர்  தேர்தலிலும் வழிமொழிகிற மாதிரிப் பேசியிருக்க வேண்டுமா? இந்த ஒரு உறுத்தல் எனக்கும் முதலில் பார்த்த போது தோன்றினாலும், அமெரிக்க அரசியலில் ட்ரம்ப்பின் Republican Party எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுத்ததில்லை. டெமாக்ரட்டுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை என்பதைவிட பாகிஸ்தான் அவர்களுடைய செல்லமாக இருந்தது, இன்னமும் இருக்கிறது என்பதை டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பெர்னி சாண்டர்ஸ் மறுபடி நிரூபித்திருக்கிறார்! டெமாக்ரட்டுகளுடைய பரிதாப நிலைமையைப் பார்த்தால் 2020 தேர்தல்களில் ஜெயிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்பதில் டொனால்ட் ட்ரம்பைக் குளிர்விக்கிற மாதிரி  மோடி பேசியது  தவறாகப் படவில்லை. அவரா அங்கே வாக்களிக்கப் போகிறார்? 
      

இன்று காலை காங்கிரசின் இடைக்காலத்தலைவர் சோனியாவும் , மன்மோகன் சிங்கும் திஹார் சிறைக்குப் போய் சீனாதானவை சந்தித்துவிட்டுத் திரும்பிய போது இந்தியன் எக்ஸ்பிரெசுக்காக எடுத்த படமாம் இது! After the meeting, Chidambaram expressed his gratitude towards both the leaders. Through his Twitter handle, which is being handled by his family on his behalf, Chidambaram said, “I am honoured that Smt. Sonia Gandhi and Dr Manmohan Singh called on me today. As long as the Congress party is strong and brave, I will also be strong and brave.” என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. 


காங்கிரசின் முக்கியமான பணத் தூண்களில் இருவர் சிறையில் அடைக்கப் பட்டதால், காங்கிரஸ் கட்சி மொத்தமுமே ஊழல்கறை படிந்த கட்சியாக பிஜேபி சித்தரிக்க முயல்வதற்கு மாற்றுச் சித்திரமாக இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்கிறார்கள்!  ஊழல் கறை போய்விடுமா என்ன? 

மேலே உள்ள இரண்டு செய்திகளையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒரு பக்கம் அரசியல் தலைவர் என்பதிலிருந்து உயர்ந்து ஒரு நல்லத்தலைவராக, சிறந்த ராஜதந்திரியாகவும் வளர்ந்து கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடி! உலகின் எந்தப் பகுதிக்குப் போனாலும் மதிக்கப்படுகிறார்! அவர் பேசுவது கூர்ந்து கவனிக்கப் படுகிறது! ராஜீய உறவுகளை மேம்படுத்த அவர் முனைவதில் ஒவ்வொரு நாடும் மகிழ்வோடு பங்கேற்கிறது! 

இன்னொரு பக்கம் தேசத்தை நீண்ட காலம் ஆண்ட ஒரு கட்சி! 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் அதன் அப்போதைய தலைவரான சோனியா மற்றும் செலெக்டிவாக சீனாதானா  மாதிரியான கைத்தடிகள், கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சி என்று செயல்பட்டதும், திமுக மாதிரியான மாநிலக்கட்சிகளுடன்  கூட்டணி தர்மம் என்பது கூட்டுக கொள்ளை அடிப்பதற்காகவே என்றானதையும் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியுமா? விதைத்ததை அறுவடை செய்தே ஆகவேண்டிய நேரமும் இப்போது வந்திருக்கிறது என்பதில் இப்போது பார்க்கப் போனவர்களும் கூட ஏதோ ஒரு கட்டத்தில் சிறைக்குள் தள்ளப் பட வேண்டிய நபர்களே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன!!


பிஜேபி ஆதரவாளனாக என்னைச் சிலர் தொடர்ந்து முத்திரை குத்திக் கொண்டிருந்தாலும்  தமிழக பிஜேபியைக் குறித்து எனக்குத் தெரிந்தது மிகச் சொற்பம் தான்! அதுவும் கூட வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி நல்ல அபிப்பிராயமும் இல்லை! அவரும் நானும் என்கிற இந்த நிகழ்ச்சியின் வழியாக தமிழிசையைப் பற்றி, ஏதோ கொஞ்சம் நல்லபடியாகச் சொல்கிற மாதிரி ஒரு வீடியோவை பார்த்து, இந்தப் பக்கங்களில் கூட பகிர்ந்திருப்பதாக நினைவு! வானதி சீனிவாசனைப் பற்றியும் கூட எனக்கு அதிகம் தெரியாது! இந்த நிகழ்ச்சி வழியாக அவரை அவரது குடும்பத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரிந்துகொள்கிற மாதிரி இருந்தது அவ்வளவுதான்! 

அபிப்பிராயம்? நான் தனிப்பட்ட குடும்பம், சொந்த விஷயத்தை வைத்து எவர்மீதும் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதில்லை என்பதால், தனி கோஷ்டியாகச் செயல்படுகிறார் என்ற அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளும் அவசியமே எழவில்லை.

மீண்டும் சந்திப்போம்.              

கொஞ்சம் போலப் படம்! செய்தி! விமரிசனம்!

பாகிஸ்தானும் சோனியாG  காங்கிரசும் நம்பிய மாதிரி  ஆர்டிகிள் 370 தூக்கப்பட்டதில் காஷ்மீர் ஒன்றும் கொந்தளித்துப் பொங்கவில்லை என்பதில் காம்ரேடுகள் சிலருக்கு ரொம்பவே வருத்தம் போல! அதெப்படி ஒரு கல்லெறி ஒரு துப்பாக்கிச்சூடு இல்லாமல் இருக்கலாம் என நினைத்தோ என்னவோ இடது சீதாராம் யெச்சூரியும் வலது D ராஜாவும் ஸ்ரீநகருக்குப் போனார்களாம்! 

சாயம்போன இடதும் வலதுமாக 

"Both of us had written to the J&K governor requesting him that there should be no hurdles for our visit. Despite that we have been detained. I wanted to meet my ailing colleague and our comrades who are here," Yechury said. கவர்னருக்கு கடுதாசி எழுதினாங்களாம்! வாங்க அப்படீன்னு அவர் சொன்னாராமா? ஸ்ரீநகரிலேய தடுத்து நிறுத்தப்பட்டு டில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.  இடதும் வலதுமாக உடைந்து கிடப்பவர்கள், கடிதம் எழுதுவதில் மட்டும் ஒன்று சேர்ந்தார்களா? அதிசயம் தான்!  


ஐக்கிய நாடுகள் சபை ஏதோ முதல் உலகப்போருக்குப் பின் தோன்றிக் காலாவதியான League of Nations மாதிரி ஆகிவிடாமல் தருமத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காஷ்மீர் பஞ்சாயத்து என்று கேட்டுக்கேட்டு காதுபுளித்த்துப் போய்க்கிடக்கிறவர்கள் என்னசெய்வார்களாம்? மீண்டும் பஞ்சாயத்தைக்கூட்டு என்று பாகிஸ்தான் காஷ்மீர் விஷயம் எடுத்துக்கொண்டுபோனதில் நிராகரித்து விட்டார்களாம்!


நாங்கள் சொன்னால் தாலிபான்கள் கேட்பார்கள் என்று பாகிஸ்தான் ISI யும் ராணுவமும் அமெரிக்காவிடம் கித்தாப்பு காட்டிக்கொண்டிருக்கும்  நேரம் பார்த்து, தாலிபான்கள் வேறு மாதிரி பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.காஷமீர் விவகாரத்தோடு ஆப்கானிஸ்தான் பிரச்சினையை முடிச்சுப் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்!


தயாநிதி மாறன்! ஒருமாதிரி  கையைநீட்டி அல்லது   ஆட்டிப் பேசுவதைப் பார்ப்பதே செம காமெடி! கவனியுங்கள், பேச்சைக் கேட்பதில் அல்ல! நவரசம்! 5 நிமிட nonstop comedy! 

போனவெள்ளிக்கிழமைதான் Jallianwala Bagh National Memorial (Amendment) Bill, 2019 குரல் வாக்கெடுப்பிலேயே நிறைவேற்றப் படுவதற்குமுன் மூன்றுமணிநேர காரசார விவாதத்தின் போதுதான் இந்தக் கெஞ்சல், சரித்திரம் படித்ததாகச் சொல்லிக் கொண்ட தயாநிதியிடமிருந்து! இந்தச் சட்டத்திருத்தம் எதற்காக? Jallianwala Bagh National Memorial Act, 1951 இன் படி ஒரு தேசிய நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஒரு ட்ரஸ்ட் அமைக்கப்படும்.  இந்த ட்ரஸ்டின் தலைவராக பிரதம மந்திரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், கலாசாரத்துறை மந்திரி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், பஞ்சாப் ஆளுநர் பஞ்சாப் முதலமைச்சர், அப்புறம் மத்திய அரசால் நியமனம் செய்யப் படுகிற மூன்று உறுப்பினர்கள் ஆகியோர் இருப்பார்கள் என்றிருந்ததில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித்தலைவரை  பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வழி செய்கிற திருத்தம் தான் சென்ற ஜூலையில் சபையில் அறிமுகம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2 அன்று நிறைவேறியது.

அய்யய்யோ!ட்ரஸ்டிகள் பட்டியலில் இருந்து  காங்கிரசை நீக்கலாமா? வரலாற்றைத் திருத்தலாமா? என்று கூக்குரல்கள்! 1951 இல் இருந்த அந்த காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1984 இல் இந்திரா இறந்தபோது சீக்கியர்களைத் தேடித்தேடி படுகொலை செய்ததில் இறந்தவர்களை விட ஜாலியன் வாலாபாகில் இறந்தவர் எண்ணிக்கை மிகவும் கம்மிதான்! இன்றைக்கிருப்பது இந்திய தேசிய காங்கிரசல்ல! இது வெறும் சோனியாG காங்கிரஸ் தானே!

மீண்டும் சந்திப்போம்.
                
         

எட்கர் ஆலன் போ! Stonehearst Asylum! அதிரன்!

குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் விசு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே.............. என்று ஆரம்பித்து கேட்கிற கேள்வி அந்தநாட்களில் ரொம்பவுமே பிரபலம்!  நினைவு இருக்கிறதா? விசு பேசுகிற  அதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் எட்கார் ஆலன் போ என்கிற  ஒரு அமெரிக்கக் கதாசிரியர் "The System of Dr. Tarr and Prof. Fether" என்றொரு கதை எழுதியிருப்பது Stonehearst Asylum என்கிற திரைப் படத்தைப் பார்க்கிற வரை தெரியாது. 1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும் பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை.



Netlix இல் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகக் கிடைக்கிறது . எதற்கு அது வேண்டாமே என்றால்  இணையத்திலேயே பார்க்கவும் இங்கே கிடைக்கிறது. 

1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும்  பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை. No one is what they seem!என்ற catchphrase உடன் தொடங்குகிற படம் 112 நிமிடங்கள், கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாமல் போகிறது.  

ஒரு வகுப்பறையில் மனநலம் பிறழ்ந்தவர்கள் பற்றியான லெக்சருடன் திரைப்படம் தொடங்குகிறது. எலைசா கிரேவ் என்கிற புத்திசுவாதீனமற்ற இளம் பெண்ணை வகுப்பறைக்கு அழைத்து வந்து அவளுடைய கேஸ் விவரிக்கப் படுகிற நேரத்திலேயே அவள் தனக்கு ஒன்றுமில்லை, காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஒருவிதமான வலிப்புடன் அவள் மயக்கமுற பிரெண்டன் க்ளீசன் (நடிகர்)  அந்த நோயாளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்வதுடன் காட்சி முடிகிறது.

கிறிஸ்துமசை ஒட்டி பனிப்பொழிவில் ஸ்டோன்ஹெர்ஸ்ட்  அசைலம் அடுத்த காட்சியாக விரிகிறது. எட்வர்ட் நியூகேட் என்கிற மருத்துவர்  வசதி படைத்தவர்களுக்கான இந்த மனநலக்காப்பகத்தை நடத்தி வரும் டாக்டரிடம் அவருடைய சிகிச்சை முறைகளைத் தெரிந்து கொள்வதற்காக வந்து சேர்கிறார். முதல் காட்சியில் அறிமுகமான எலைசா கிரேவ் அங்கே இருக்கிறார். டாக்டர் சிலாஸ் லாம்ப் கொஞ்சம் புரட்சிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார். தன்னை ஒரு குதிரையாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வசதி படைத்தவர், உறவினர்களுக்கோ சங்கடம் ஆனால் இந்தக்காப்பகத்தில் அப்படியே இருக்கும் சுதந்திரம். கதாநாயகியின் கதையும் அதே போலத்தான். எலைசா கிரேவுக்கு பியானோ வாசிப்பதில் ஈடுபாடு, எவ்வளவு நேரம்ஆனாலும் வாசித்துக் கொண்டிருக்க அனுமதிக்கப் படுகிறார். இப்படியே ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் இஷ்டப்படியே நடந்து கொள்ள சுதந்திரம்! மருத்துவர் எட்வர்ட் நியூகேட் நோயாளி எலைசா கிரேவ் மீது மையல் கொள்கிறார்.

அடுத்து முதல் திருப்பமாக முதலில் டாக்டர் சால்ட் வசமிருந்த அந்தக் காப்பகம் டாக்டர் சிலாஸ் லாம்ப் வசமாகிவிட்டதும் டாக்டர் சால்ட் உட்பட அவருடைய உதவியாளர்கள் எல்லோருமே கீழே பாதாள கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் எட்வர்டுக்குத் தெரிய வருகிறது. டாக்டர் சிலாஸ் லாம்ப் அங்கே சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி என்பதும் தெரிய வருகிறது.கீழே அடைபட்டிருப்பவர்களை விடுவிக்க எட்வர்ட் உதவுவதாக முடிவு செய்து எலைசாவிடம் அவளுடைய ஒத்துழைப்பையும் கேட்கிறார்.  முதலில் அவரை நம்ப மறுக்கும் எலைசாவிடம்  எட்வர்ட் அவளிடம் காதலில் விழுந்தே தேடி வந்ததாகச் சொல்கிற கட்டம் நன்றாக இருக்கிறது.

இதற்கிடையே கீழே அடைப்பட்டிருந்தவர்களில் இருவர் வெளியே தப்பித்துச் செல்கையில் டாக்டர் சிலாஸ் லாம்பின் ஆட்கள் ஒருவரை சாகவிட்டு, இன்னொருவரைத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். கதாநாயகன் எட்வர்டும் வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டுக்குத் தயார் செய்யப்படுகையில் கதாநாயகியின் உதவியோடு தப்புகிறார் டாக்டர் சால்ட் ஆக இதுவரை  இருந்த சிலாஸ் லாம்ப்  பழையபடியே மனநோயாளியாக!

இப்போது, க்ளைமாக்சில் எதிர்பாராத அடுத்த திருப்பம்!. இந்தக் காப்பகத்தை பரிசோதிக்க டாக்டர் எட்வர்ட் நியூகேட் என்று சொல்லிக்கொண்டு ஒரு உதவியாளருடன் இன்னொருத்தர் வந்து சேர்கிறார் அப்படியானால்,முதலில் வந்த எட்வர்ட் நியூகேட் யார்,கதாநாயகியை முதன்முதலில்  எங்கே எப்படிப் பார்த்தார் எப்படிக் கண்டவுடன் காதல் வந்து தேடிக்கொண்டு வந்தார் என்பது ரொம்பவும் சுவாரசியமாகச சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஒரு சுவாரசியமான திருப்பத்துக்காகவே இந்தத் திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்று நினைக்கிறேன் படத்தைப்  பார்த்துவிட்டு அது சரிதானா என்பதை நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்!  என்று சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியது 2010 ஏப்ரலில்!

இப்போது எதற்கு அந்தப் பழைய கதை, பதிவு பற்றி எல்லாம்?

  
அதிரன் என்ற பெயரில் ஃபகத் ஃபாசில், சாயி பல்லவி, சீனிவாசன் நடித்து  Stonehearst Asylum படத்தைக் காப்பியடித்து  ஒரு மலையாளக் காவியத்தை நேற்றுத்தான் பார்த்தேன். யூட்யூபிலேயே முழுப்படமும் காணக்  கிடைக்கிறது. கதையை localise செய்வதற்காக சாயி பல்லவியை ஆட்டிசம் பாதித்த  பெண்ணாக, தந்தையால் களரிப் பயிற்சி அளிக்கப்பட்டவளாக, எலைசா கிரேவ் பாத்திரத்தில்! டாக்டர் சிலாஸ் லாம்ப் பாத்திரத்தில் அதுல் குல்கர்னி, (ஒரிஜினல் படத்தில் இருந்த மாதிரி நோயாளியே டாக்டரைச் சிறையில் வைத்து தான்  டாக்டராக மாறிவிடுகிற மாதிரி எல்லாம் இல்லை) என்று கொஞ்சம் கொஞ்சம் மாற்றி எடுத்திருந்தாலும் மலையாளிகள் இப்படியெல்லாம் சுயமாக சிந்தித்துத் திரைக்கதை எழுதுகிறவர்கள் இல்லையே என்று சொல்வதற்காகவா இந்தப்பதிவு? இல்லை!

2018 நவம்பரில் போட்டோஷூட் ஆரம்பித்து 55 நாட்களில் படத்தை எடுத்துவிட்டார்கள்! அதுவும் நமக்குத் தெரியுமே, பார்த்திருக்கிறோமே என்றெல்லாம் குறை சொல்ல விடாமல் ஊட்டியிலேயே ஒரு thriller படத்துக்குண்டான கெத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத படப்பிடிப்பு.. ஜனவரி 2019 இல் படப்பிடிப்பு முடிந்தாலும்    , ரிலீசானதென்னவோ ஏப்ரலில்தானாம்!

சாயி பல்லவி! இந்த இளம் நடிகை, படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டிக் கொண்டே வருகிறார் என்பது இதிலும் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. உடலை வில்லாக வளைக்கிறார்! மாரி 2 இல் பாடல் ஆட்சிக்காக என்றால் இந்தப் படத்தில் களரிப் பயிற்சி பெறுபவராக! ஆட்டிச பாதிப்பைக் கொஞ்சமும் மறக்காத உடல்மொழி என்பதையும் சேர்த்துப்பார்த்தால், இந்தப்படத்தில் நம்பர் 1  
ஆக சாயி பல்லவி! 

ஃபகத் ஃபாசில், சீனிவாசன் நடிப்பைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. ரேணுகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் லீனா  scope  இல்லை என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். கடாரம் கொண்டானில் வெறுமனே வந்துவந்துபோகிற பாத்திரம் மாதிரி இதில் கேவலப் படவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி இன்னமும் மனதை நெருடத்தான் செய்கிறது. ஒரு படம் அல்லது கதையைப் பார்த்து அது கொடுக்கும் உந்துதலில் (inspiration) படம் எடுப்பது ஒருவிதம்! கதையைத் தழுவி உள்ளூர்க் களத்தில் எடுப்பது இன்னொருவிதம்! இந்த இரண்டு விதமாகவும் இல்லாமல் அப்படியே காட்சிக்கு காட்சி காப்பியடித்து, உள்ளூருக்காகத் தயார் செய்வதாக கொஞ்சம் ஏமாற்றுவேலைகளும் செய்வது என்ன மாதிரியான போக்கு?  

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
          

   .         

மண்டேன்னா ஒண்ணு! #செய்திகள்பலவிதம்

நரேந்திர மோடியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளுடைய போதாமை, செக்குமாடுகள் ஒரே இடத்தைச் சுற்றிச்சுற்றி   வருகிற மாதிரியே இருப்பதில் ஊர்போய்ச் சேர முடியுமா? அதேபோலத்தான் சிலபல  பிரபலங்களும்,முந்தைய 5 ஆண்டுகளில் ஆகிவந்த பழைய பல்லவிகளையே மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் போல!   


Intolerence சகிப்புத்தன்மையத்துப்போச்சு கூக்குரலை நடிகை ஷபனா ஆஸ்மி மறுபடியும் ஆரம்பித்து வைத்திருப்பது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இது நரேந்திர மோடிக்கு எதிரானது இல்லை, RSSக்குச் சொன்னதாகவும் கூடச் சொல்கிறார்கள்.மாறுபட்ட கருத்தைச் சொன்னால் தேச விரோதிகள் என்று சொல்கிறார்களாம்!   


முயல் ஆமை இரண்டுக்கும் ஓட்டப்பந்தயம், அதில் நிதானமாக இடைவிடாமல் நடந்தே ஆமை ஜெயித்ததாகச் சின்னவயதில் கதை ஓன்றை எல்லோருமே படித்திருப்போம். இங்கே சதீஷ் அதே கதையைக் காங்கிரசோடு பொருத்திப் பார்த்து முயலாமை, இயலாமை ஆகிவிட்ட பரிதாபத்தை கார்டூனில் சொல்கிறார். காங்கிரசுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்,மிலிந்த் தியோரா, ஜோதிராதித்ய சிந்தியா குதலானவர்களும் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா,   கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசு கலகலத்துக் கொண்டிருக்கிறது,மும்பையில் கடும் மழை ஜனங்களுடைய சிரமங்கள் எதையுமே பொருட்படுத்தாமல், ஆட்களைத் திரட்டி வந்து அதிருப்தி காங்கிரஸ் ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிற Sofitel ஹோட்டலுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்று பலவிதமான கூத்துகளும்  நடந்துகொண்டிருந்த நேரத்தில் ராகுல் காண்டி எங்கே என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது மிகப்பெரிய வேடிக்கை, தமாஷா! 


தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டுக்கு கேட்கிற தருணங்களில் மட்டுமே தொகுதிக்கு வந்துபோகிற ராகுல் காண்டி ஜூலை 10 அன்று அதிசயமாக அமேதி தொகுதிக்கு விஜயம் செய்கிறார் என்று சொல்கிறார்கள். ஏன் தோற்றோம் என்று ஆராய்ச்சி செய்யப் போகிறாராம்! 


வேலை, மூளை இரண்டுமே இல்லாத காங்கிரஸ்காரன்  என்ன செய்வான் என்பதற்கு சரியான உதாரணமாக: சத்தீஸ்கரில் ராகுல் காண்டி கோக்கைய்ன் பயன்படுத்துகிறார் என்று சுப்ரமணியன் சுவாமி சொன்னதாக, அதனால் காங்கிரஸ் தலைவருடைய புகழுக்கு களங்கமும் கட்சிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்துகிற மாதிரி இருக்கிறது என்று FIR பதிவு செய்திருக்கிறார்கள். சுவாமி வெளுத்துக் கட்டி இருக்கிறார். அதிகபட்சம் மானநட்ட வழக்குப் போடவேண்டிய ஒரு விஷயம், காங்கிரஸ் புத்தி சாலிகளால் இன்னமும் அசிங்கத்தை அவர்கள் தலீவர் மீது வரி வீசுவது போல இருப்பது காங்கிரஸ் கட்சியைப் பீடித்திருக்கிற சாபக்கேடு! 


புதைகுழிக்குள் போனதைத் தோண்டியெடுத்து ஒப்பாரி வைப்பது கழகங்களுக்கு கைவந்த கலை. நீட் விவகாரத்தில் மக்களவையில் இன்று வெளிநடப்புச் செய்ததாம் திமுக. வெளிநடப்புச் செய்வதற்காகவே சபைக்குப் போகிற கட்சி திமுக என்பது மாநிலம்தாண்டி அகில இந்திய அளவில் புகழ் சேர்க்கிற விஷயம்! இதற்குமேல் வேறென்ன சொல்வது?

மீண்டும் சந்திப்போம்.
                   

கரண் தாப்பர்! அதிர் ரஞ்சன் சௌதுரி! ராகுல் காண்டி!

இங்கே தமிழ் சேனல்களில் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல் விவகாரங்களையே பேசிக் கொண்டிருக்கிற நேரத்தில் ஆங்கில சேனல்களில் என்னென்ன செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விவாதிக்கிறார்கள் என்பதை ஒரு ரவுண்டு பார்த்து விடலாமா? 

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி வலுவாக இருந்த மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் கொஞ்சம் கூடத் தயங்காமல் மம்தா பானெர்ஜி மாதிரி ஒரு சர்வாதிகாரிக்கு ஒருவார கால வேலைநிறுத்தத்தில் தெளிவான பதிலைத் தந்திருக்கிறார்கள். ஆனால் TMC எம்பி சௌகதா ராய் வேறு மாதிரி சமாளிக்கிறார். நீண்டகாலத்துக்குப் பிறகு, கரண் தாப்பருடைய கூர்மையான கேள்விகளைப் பார்க்கமுடிந்த விவாதம் இது என்பது கூடுதல் சுவாரசியம்!


பொதுவாக வக்கீல்கள், மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதில் அவ்வளவாக உடன்பாடு இல்லாத முன்னாள் தொழிற்சங்கவாதி நான்! இந்த வேலைநிறுத்தத்தையுமே கூட புருவ நெறிப்புடன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவன், இங்கே பதிவுகளிலும் தொடர்ந்து பதிவுசெய்து  கொண்டிருந்தவன் என்பதை அறிவீர்கள். ஆனால் மம்தா பானெர்ஜி இந்த வேலைநிறுத்தத்தைக் கையாண்ட விதம் ஆரம்பத்திலிருந்தே தவறாக இருந்ததை கரண் தாப்பர் சரியாகவே கேள்விகளில் தெளிவுபடுத்தி இருக்கிறார். போராட்டம் வெளியாட்களால் தூண்டப்பட்டது, முஸ்லிம்களுக்கு வைத்தியம் பார்க்கக்கூடாதென்று பிஜேபி தூண்டுகிறது, வங்காளத்துக்கு வருகிறவர்கள் வங்காளத்தில் தான் பேசவேண்டும் என்று திசைதிருப்ப முயன்றதெல்லாம் பலிக்காமல், வெகுஜன அதிருப்தி அதிகமாகிக் கொண்டே வருகிறதென்பது மம்தாவுக்குப் புரிய வைக்கப்பட்ட பிறகுதான் சுருதி இறங்கி மருத்துவர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதன்பிறகே  வேலைநிறுத்தமும் கைவிடப் பட்டது. சௌகதா ராய்  தன்னுடைய கட்சித்தலைவியின் இமேஜை வெகுவாகவே தாங்கிப்பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்!  


முன்னாள் நக்சலைட் , இந்நாள் காங்கிரஸ்காரர், மார்க்சிஸ்டுகளையும் மம்தா பானெர்ஜியையும் எதிர்ப்பது ஒன்றைத்தாண்டி வேறொன்றையும் அறியாதவர் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தலைவர்! அதிர் ரஞ்சன் சௌதுரி!  


இன்னொரு சுவாரசியமான விவாதம் மக்களவைக்  காங்கிரஸ் குழுவுக்குத் தலைவராக வங்காளத்திலிருந்து அதிர் ரஞ்சன் சௌதுரியை எதற்காக, எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பது! அவருக்கு மம்தா பானெர்ஜியைப் பிடிக்காது! ஆனால் அவரை மாதிரியே பிடிவாதக்காரர் என்பதெல்லாமா தகுதி? சோனியாG சாய்சுக்கெல்லாம்  காரணம் கண்டுபிடித்து விடமுடியுமா என்ன?


இந்தச் செய்தி மூன்றுநாள் பழசுதான்! 164 இடங்களில் ஜெயித்து விடுவோம் என்று ராகுல் காண்டியை நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டார்களாம்! இசுடாலின் பிரதமராக முன்மொழிந்த போதே சுதாரித்திருக்க வேண்டாமா? 😏😒

மீண்டும் சந்திப்போம்.
  
         

அரசியல் களம் இன்று! செய்தியும் விமரிசனமுமாக!

கமல் காசர் களத்தில் இறங்கி அடித்து விளையாட ஆரம்பித்திருக்கிறார்! அதுவும் திருவாரூரில்! இறங்கி அல்ல, மேடையேறி அடிக்கிறேன் என்று சொல்கிறார்!
திமுகவை விளாசுவதோடு அதிமுகவையும் சேர்த்தே விளாசுகிறார்!  திமுகவினர் BP எக்குத்தப்பாக எகிறப் போவதும், 200 ரூபாய் திமுகவுக்கு அதிகவேலையும் இப்போதே தெரிகிறது!      

மூக்கு மாத்திரம் இளைக்கிற எக்சர்சைஸ் கிடையாது என்று இன்னொரு நடிகருடைய குழப்பமான அரசியல் பற்றியும் பேசுகிறார்! சுவாரசியம்! விசில் அடித்ததா மய்யம்       என்று இங்கே கேட்பதையும் நேரம் இருந்தால் பாருங்கள்!


நேற்று திருநாவுக்கரசர்! இன்று ரஜனி! மாறிமாறி விஜயகாந்தை வீடுதேடி வந்து சந்தித்ததில் அரசியல் துளிக்கூட இல்லையாம்! நம்பமுடிந்தால் நம்புங்கள்! 
விஜயகாந்த் பழைய நினைப்பிலேயே இருந்தால், அதைவிட தற்கொலை அரசியல் வேறு இருக்க முடியாது!
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜேஸ்வரி ப்ரியா, எத்தனைநாளைக்கு ஊடக வெளிச்சத்தில் இருப்பாரென்று தெரியாது! அதனால் இப்போதே பார்த்துவிடுங்கள்! இவரைப் போலவே பிஜேபியிலிருந்து சிலகாலம் முன்பு விலகி இப்போது TTV தினகரன் கட்சியில் சேர்ந்திருக்கும் ஜெமிலா, இதே மாதிரியான இன்னொரு நபர்! 

இவைகளை விடப் பெரிய காமெடி இங்கே!

இதே விஜயகாந்துக்காக பழம் நழுவிப்  பாலில் விழும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார் கருணாநிதி என்கிற பழைய நிகழ்வு கலீஞர் இடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியுமா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது! 
        

யாத்ரா! மம்மூட்டி படமா? YS ஜெகன் தேர்தல் பிரசாரமா?

பிப்ரவரி 8 அன்று மம்மூட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுகு,மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. 2003 இல் அன்றைக்கு தெலுகு தேச சந்திரபாபு நாயுடு ஆட்சியை எதிர்த்து YS ராஜசேகர ரெட்டி பாத யாத்திரை நடத்தி, 2004 தேர்தலில் ஆட்சியையும் பிடித்த தருணத்தை, மம்மூட்டி போல ஒரு மகாகலைஞனை வைத்துப் படமாக்கி இருக்கிறார்கள்!
இங்கே மிகச் சமீப காலத்தைய நிகழ்வுகளே எப்படி ஜிகினா வேலைகளில் சரித்திரமாகிவிடுகிறது என்பதற்கு இந்தப்படம் ஒரு ஆகச் சிறந்த உதாரணம்! தெலுகு திரைப்படங்களில் கதாநாயகி நாயகனை ரேய் ரெட்டி என்று ரௌடித்தனமாகக் கூப்பிடுவது சும்மா லுலுலாயிக்குத்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவனை, இந்த ராஜசேகர ரெட்டியின் நிஜக்கதையை, இந்தப்படம் மீளவும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. படத்தில் ஜெகபதி பாபு, ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டியாக நடித்த்திருக்கிறார். சிறிதுநேரமே வரும் அந்தப் பாத்திரம், நாசரிடம் சிறுவனாக ராஜசேகர ரெட்டியை ஒப்படைத்து, படிப்போடு அரசியலையும் சொல்லிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொள்வது, அரசியலுக்கு வந்தால் தான் ஜனங்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதாக ஒருகாட்சி! ஆனால், நிஜத்தில் நடந்தது அது தானா?
ராஜசேகர ரெட்டியின் குணாதிசயத்தை மிகச் சரியாகத் திரைமொழியில் சொல்லியிருக்கிறார்களா என்றால் ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையில் குறிப்பிட்டு ஒரு தருணத்தை வைத்து மட்டும் படமெடுத்துச் சொல்லிவிட முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அங்கே தான், ப்ரீத்திக்கு நான் காரண்டீ விளம்பரம் மாதிரி,  மம்மூட்டி போனற மகாகலைஞன், ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி ஜிகினாவேலையைச் செய்து, படத்தை தூக்கி நிறுத்திவிட முடிந்திருக்கிறது.  

அப்படியானால் படததில் பொய்சொல்லிவிட்டார்களா? நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. சொன்னதைவிட சொல்லாமல் விடுபட்டவைதான் அந்த மனிதனுடைய நிஜக்கதையாகவும் இருந்திருக்கிறது. 1949 இல் ஒரு சாதாரண கிறித்தவ ரெட்டி குடும்பத்தில் பிறந்த ராஜசேகர ரெட்டி, 1973 இல் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, சொந்த கிராமத்தில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி நடத்தி நிஜத்திலேயே நல்லபெயரும் எடுக்கிறார். 1978 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அசெம்பிளிக்கும் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அஞ்சையா அமைச்சரவையில் ஜுனியர் மினிஸ்டராகவும் ஆகி, ஆந்திர அரசியலில் தனது வேர்களை ஆழமாகப் பதிக்கிறார். நான்குமுறை MPயாகவும் இருந்திருக்கிறார். சஞ்சய் காந்தி, இந்திரா விசுவாசியாக இருந்தாலும் தன்னுடைய ஏரியா செல்வாக்கையும் தொடர்ந்து   தக்கவைத்துக் கொண்ட கடைசி காங்கிரஸ் ஆசாமி என்பது கொஞ்சம் வியப்புத் தருகிற உண்மையை, இந்தத் திரைப்படத்தில் மேலிடத்து விருப்பம், ஆணை என்று பலகாட்சிகளில் பூடகமாகச் சொல்லியிருக்கிறார்கள்! இந்திரா காலத்தில், எந்த ஒரு மாநிலத் தலைவரையும், சொந்தக் செல்வாக்கோடு இருக்கவிட்டதில்லை! மாநிலத்தில் இருந்து, தேசிய அரசியலுக்கு இழுத்து, அங்கேயும்  இங்கேயும் ஜனங்கள் மறந்துபோகிறவரை, வெறும் சக்கைகளாகவே, காலடியில் விழுந்து கிடக்கிற அடிமைகளாக ஆக்கி வைத்திருந்தது  நினைவிருக்கிறதா? இந்த விஷயத்தில் மாமியாரை அப்படியே அச்சு அசலாகப் பின்பற்றுகிற மருமகள் சோனியா என்பதையும் கூடவே நினைவில் வைத்திருங்கள்!

கூடவே இன்னொரு செய்தியும் ஞாபகத்துக்கு வருகிறது! ஒரு devout கிறித்தவராக பெத்லஹேம் போய் வந்தவர் ராஜசேகர ரெட்டி! அடிக்கடி திருப்பதி திருமலைக்கும் போனவர்! திருப்பதி வெங்கடேசனுக்கு மூன்று மலைகள் போதுமே! மிச்சமிருப்பவைகளில் செகுலர் கொள்கை நிலைநாட்டப்பட இதரமதங்களுக்கும் கொடுத்துவிடலாமென்று சொன்னதாக ஒரு செய்தி கூட உண்டு!        

2003 இல் ராஜசேகர ரெட்டி மேற்கொண்ட பாதயாத்திரை ஒன்றை மட்டும் யாத்ரா திரைப்படம், கதைக்களமாக எடுத்துக் கொண்டு, மக்களுடைய குரலைக் காதுகொடுத்துக் கேட்ட தலைவராக நம்முன்னால் காட்சிப்படுத்துகிறது.

அதற்கு முன்னால், தந்தை ராஜா ரெட்டி!

The Supreme Court verdict upholding the High Court judgement of life sentence to 11 accused in the sensational murder case of Yeduguri Sandinti Raja Reddy, father of Chief Minister Y.S. Rajasekhara Reddy, comes exactly 17 days before Raja Reddy’s 11th death anniversary.Sixteen persons were accused in the brutal murder of Raja Reddy after waylaying him near a culvert in Vemula town in Pulivendula Assembly constituency and hurling a bomb from a close range causing his instant death on May 23, 1998, during Telugu Desam Party rule. என்கிறது மே 2009 செய்தி ஒன்று. 
Quora தளத்தில் இன்னொரு செய்தியும் கிடைக்கிறது.  
I have never seen YSR going to church till he became CM of AP. Probably political rewards made him more a Christian than a reddy under the influence of Madam Sonia. The family was not a well to do family. Mr. Raja Reddy was a contractor doing small railway contracts. இப்படிச் சொல்லிவிட்டு இன்னொரு செய்தியையும்! அப்பா ராஜா ரெட்டி, ஒரு பிராமண ஆசிரியர் வைத்திருந்த கனிமச் சுரங்க லைசன்ஸ், இடத்தில் கூட்டாளியாக சேர்ந்து,  மூத்த மகன் ஜார்ஜ் ரெட்டியோடு நடத்திவந்த நேரம். மூத்தமகனுக்கு அரசியல் நாட்டமில்லை என்பதால் மருத்துவராக சொந்த ஊர், சுற்றுவட்டாரத்தில் நல்லபெயரோடு இருந்த ராஜசேகர ரெட்டியை அரசியலுக்கு அழைத்து வந்தார் என்பதையும் சொல்கிறது. அரசியல் பாதைக்குள் வந்துவிட்டால், மக்கள் நலன் பற்றி மூச்சுக்கு மூச்சு பேச்சு மட்டும் முதலில் வரும்! அடுத்து சம்பாதிக்க என்னென்ன வழி என்பதைத் தேடும்! இந்திய அரசியலின் டெம்ப்ளேட்டாக ஊழல் மட்டுமே இருப்பது, சேராமல் இருக்குமா?
மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் ராஜசேகர ரெட்டி அடித்த கொள்ளைகளை அந்த நாட்களில் விக்கி லீக்ஸ் India Cables தலைப்பில் அமெரிக்க தூதரகம் தங்களுடைய அரசோடு பரிமாறிக் கொண்ட தகவல்கள் சொன்னது இப்படி!  
In the name of social programmes targeted at the common man, the YSR government had engaged in corruption which was beyond the norm for India, whistleblower website WikiLeaks said, quoting the cable.The YSR government's flagship programmes - construction of irrigation projects and houses for weaker sections - were beset with corruption even as Mr Reddy used the populist spending programmes to great political effect, the cable said. 
தனக்கிருக்கும் நிலம் எவ்வளவு? சொந்தப்பெயரில் 600 சொச்சம் ஏக்கர்கள் தந்தை ராஜா ரெட்டி வாங்கிய பதிவுசெய்யப்படாத 1000ஏக்கர்கள் இன்னும் கடப்பாவில் உள்ள நிலங்கள் என்று சட்டசபையில் ராஜசேகர ரெட்டி ஒப்புக்கொண்டது இது 
படத்தில் ஒரு ஏழைச் சிறுமி ராஜசேகர ரெட்டியை ஒத்த ரூபா டாக்டராகவே இருந்திடுங்க என்கிறாள்!
என்ன ஒரு நகைமுரண்? !!
   

தாலிபான்களும் இந்திய வெளியுறவுக்கொள்கையும்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என  ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான  வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய்   தாலிபான்களுக்கு எல்லாமுமாக  இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

அமெரிக்கர்களை அலுப்படைய வைத்திருக்கிற 17 ஆண்டுகாலமாய்த் தொடரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களோடு நடக்கும் போர் முடிகிற அறிகுறி தெரிவதாக பிபிசி செய்தி இன்று சொல்கிறது.
US and Taliban negotiators have agreed on a draft framework for a peace deal that would put an end to the 17-year conflict in Afghanistan, Washington's top negotiator has said.
US negotiators held six days of talks with the Taliban in Qatar, last week.The Taliban have so far refused to hold direct talks with Afghan officials, whom they dismiss as "puppets". இதென்ன புதிய செய்தியா? இல்லை! இப்படியாகுமென்று 2014 இலிருந்தே அமெரிக்கர்களுடைய தளர்ச்சியும், ராணுவக் கூட்டாளிகள் ஒவ்வொருவராக, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டபோதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன என்பதை World Economic Forum மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி சுட்டிக் காட்டி இருக்கிறார்.        
Briefed President last night on the progress we've made. Peace is America's highest priority in , a goal we believe all Afghans share.
அமெரிக்கர்கள் நினைப்பது போல அமைதியோ, அமைதிப் பேச்சுவார்த்தைகளோ உறுதியான ஒரு வடிவத்தை எட்டப் போவதில்லை என்று விஷயம் தெரிந்த வல்லுநர்கள் அபிப்பிராயப்படுவதாக பிபிசி இன்னொரு செய்திக் கட்டுரையில் சொல்கிறது.
இது சென்ற அக்டோபரில் எழுதியதுதான்! ஆப்கன் நிலவரம் என்ன என்பதைக் கொஞ்சம் பரிச்சயம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்!  
அக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள், என்று இங்கே ஒரு புதிய வலைப்பக்கத்தில் தொடர்ந்து படித்துப் பார்த்து அபிப்பிராயம் என்னவென்றுதான் சொல்லுங்களேன்!

அக்கம் பக்கம்! என்ன சேதி!